வாசிப்பும், யோசிப்பும் 7: வெ.சா.வின் ‘க.நா.சு.வும் நானும் 3’ பற்றிய சில குறிப்புகள்…

வாசிப்பும் யோசிப்பும்!பதிவுகள் இணைய இதழில் வெளியாகியிருக்கும் மதிப்பிற்குரிய திரு. வெ.சா. அவர்களின் க.நா.சுவும் நானும் கட்டுரையின் இறுதிப்பகுதியில் கலாநிதி கைலாசபதி பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதைப் படித்தபொழுது சிறிது திகைப்பும், வருத்தமும் ஏற்பட்டன. அதிலவர் கலாநிதி கைலாசபதி பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:

1. “ஆனால் இலங்கையில் பெரிய சட்டாம்பிள்ளையாக வலம் வந்த ஒரு பேராசிரியர், பர்மிங்ஹாமில் ஜார்ஜ் தாம்ப்சனின் கீழ் ஆராய்ச்சி செய்தவர், இலங்கையில் தம்மை அண்டியவர்களுக்கெல்லாம் இலக்கிய தீக்ஷை அளித்து தம் பக்தர் கூட்டத்தை பெருக்கிக் கொண்டவர், ஏன் க.நா.சு.வைக் கண்டு எரிச்சல் பட வேண்டும்?”

Continue Reading →

க.நா.சு நூற்றாண்டு நினைவு தினக் கட்டுரை: க.நா.சு.வும் நானும் (3)

க.நா.சு- வெங்கட் சாமிநாதன் -1956 – தான் அவரது விமர்சனப் பயணத் தொடக்கமாக எனக்குத் தெரிய வந்த வருஷம். அதிலிருந்து அவர் கடைசி மூச்சு பிரியும் வரை அவர் விமர்சகராகவே  முத்திரை குத்தப் பட்டு ஒதுக்கப் பட்டு விட்டார்.  நாவல், சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு என எல்லா வடிவங்களிலும் அவர் தொடர்ந்து எழுதி வந்தார். பெரிய மனிதன், ஆட்கொல்லி, ஏழு பேர், அசுர கணம், நளினி, மயன் கவிதைகள், சமூக சித்திரம், அவரவர் பாடு மாதவி,  வள்ளுவரும் தாமஸ் வந்தார்,, அவதூதர்,. தெய்வ ஜனனம், அழகி, என நிறையவே அவருடைய நாவல்கள் கவிதைகள், சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்தன, அவரை விமர்சகராகவே உலகம் சுருக்கி விட்ட காலத்தில். இத்தோடு நான் பார்க்க அவர் ஜார்ஜ் ஆர்வெல்லின் மிருகங்களின் பண்ணை,, நட் ஹாம்சனின், நிலவளம், பாரபாஸ், ஜாக் லண்டன் உள்ளடக்கிய பலரின் சிறுகதைகள். இவை தவிர தமிழ் எழுத்தாளர் பலரின் நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள். பின் கிறித்துவ மிஷனரிகளைப் பற்றிய ஒரு ஆங்கில புத்தகம், இப்படி நான் சொல்லிக் கொண்டே போகலாம்.

Continue Reading →