டொராண்டோ, கனடா: ஜீவநதி சஞ்சிகையின் கனடாச் சிறப்பிதழ் பற்றிய கலந்துரையாடல்!

அன்புடையீர், ஜீவநதி சஞ்சிகையின் கனடாச் சிறப்பிதழ் பற்றிய கலந்துரையாடக்கு உங்களின் வருகையை நாம் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். அத்துடன் அந்தக் கலந்துரையாடலை ஆரம்பிக்க உதவும் முகமாக உங்களின் கருத்துக்களைச்…

Continue Reading →

கோவை இலக்கியச் சந்திப்பு

கோவை இலக்கியச் சந்திப்புகாலம்:  25/11/2012  ஞாயிறு காலை 10 மணி , நரசிம்ம நாயுடு உயர்நிலைப்பள்ளி, மரக்கடை, கோவை

இவ்வாண்டின் சிறந்த நாவலாசிரியருக்கான கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின்  “இரங்கம்மாள் விருது“  பெற்ற  “தமிழ் மகனின் படைப்புலகம்“ : ஆய்வரங்கம்

பங்கு பெறுவோர்: கோவை ஞானி, சுப்ரபாரதிமணியன், நித்திலன், சி.ஆர். ரவீந்திரன், எம்.கோபாலகிருஸ்ணன், இளஞ்சேரல்,பொன் இளவேனில், யாழி, தியாகு. அனைவரும்  வருக! வருக! வருக!

Continue Reading →

சிறுகதைத் தொகுதி: சுப்ரபாரதிமணியனின் ”ஓலைக்கீற்று“

சிறுகதைத் தொகுதி: சுப்ரபாரதிமணியனின் ”ஓலைக்கீற்று“சிறுகதை என்னும் அற்புத வடிவத்தை சுப்ரபாரதிமணியன் கையாளும் நோக்கம் ‘ஓலைக்கீற்று’ என்னும் இந்தத் தொகுதி மூலம் மீண்டும் ஒரு முறை மெய்ப்பிக்கப்படுகிறது. சுப்ரபாரதிமணியனின் சிறுகதை உலகம் பெரும்பாலும் சிதைந்து வரும் மனித மனத்தையும் உடலையும் பற்றியதே. சிதைவுக்குக் காரணமாக அவர் என்றுமே தனிநபர்களைக் காரணமாய்க் காட்டியதில்லை. தவிர்க்க முடியா தொழில் வளர்ச்சி எவ்விதம் நகரங்களை விரிவு படுத்தி சுற்றுச் சுழலில் தன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் உயர் தொழில் நுட்பங்கள் எவ்விதம் மனிதனின் மனஉடல் கூறுகளில் ஆதிக்கம் செலுத்தி மனித வளத்தை ஊனப்படுத்துகிறது என்பதையும் தீராத வேதனையோடு தொடர்ந்து தன் படைப்புகளின் வாயிலாக வெளிப்படுத்தி வந்துள்ளார். இந்தத் தொகுப்பும் அவ்வித வேதனைகளை முன்வைக்கும் கதைகளின் கூட்டமே.  இத்தொகுப்பின் சகல கதைகளும் வெவ்வேறு அனுபவங்களை நம்முள் நிகழ்த்தும் திறன் படைத்தவையெனினும் சிறந்த கதையாகத் தெரிவு செய்து கொண்டு நான் கொண்டாடுபவற்றைப் பற்றி இங்கு பகிர விருப்பமெனக்கு. அவ்வகையில் ‘முன் பதிவு’ என்றொரு கதையை எதிர்கால சமூக அமைப்பை முன்நுணர்ந்தறிவிக்கும் தீர்க்கம் கொண்டவை என்று கொள்ளலாம். இன்றைய கால கட்டத்தில் சேவை அமைப்புகள் வெகுவாக மனிதனின் அன்றாட நிகழ்வுகளில் தன் பரவலைத் துரிதப்படுத்தியுள்ளன. முன் காலங்களில் திருமணம் என்னும் நிகழ்வு உறவுகளின் ஒற்றுமையைப் பேணவும் உறவுகளுக்குள் இருக்கும் பேதங்களை களைவதற்குமான ஒரு வாய்ப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். திருமணம் என்பது ஒரு மிகப் பெரிய திட்டமிடலாக உறவுகளின் துணை கொண்டு நிகழ்த்தப்பட்ட காலம் மெல்ல அருகி, இன்று பத்திரிகை அச்சாக்கத்திலிருந்து முதலிரவுக்கான படுக்கை அறையைத் தயார் செய்வது வரை சேவை நிறுவனங்களையே நாம் சார்ந்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. மேல்தட்டு மக்களிடம் ஆரம்பித்த இந்தக் கலாச்சாரம் மெல்ல அனைத்து நிலைகளிலும் பரவிக் கொண்டு வருகிறது. இது திருமணம் என்ற நிலையிலிருந்து விரிந்து இன்று வீடு மாற்றுவது, பிறந்த நாள் கொண்டாட்டங்கள், அலுவலகப் பார்ட்டிகள், வியாபாரச் சந்திப்புகளுக்கான ஏற்பாடுகள் என்று தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் இன்னொரு படியான மரணத்தின் இறுதிச் சடங்குகளையும் சேவை நிறுவனத்தின் துணையுடனேயே செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை இன்றைய உறவுமுறைச் சிக்கல்கள் நமக்கு விதிக்கக்கூடும் நிலை வெகு தொலைவில் இல்லை என்பதை ‘முன்பதிவு’ கதை நம் புத்தியில் ஏற்றுகிறது.

Continue Reading →

பி.பி.சி. செய்திகள் (தெற்காசியா) : இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க ஐநா தவறியது; ஐநா ஆய்வு

ஐநா அதிகாரிகளின் தகுதி, அனுபவம் போதவில்லை

இலங்கையில் முன்றரை ஆண்டுக்கு முன் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களை அழிவிலிருந்து பாதுகாக்க ஐநா மன்றம் மோசமாகத் தவறியுள்ளது என்று ஐநாவுக்குள் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை ஒன்று கூறுகிறது. ஐநாவுக்குள் உள்ளளவில் நடத்தப்பட்ட ஆய்வுடைய அறிக்கையின் வரைவு பிரதி ஒன்று பிபிசியிடம் கசியவிடப்பட்டுள்ளது. தாங்கள் பாதுகாக்க வேண்டிய மக்களை ஐநா கைவிட்டிருந்தது என்று இந்த அறிக்கை முடிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் ஐநா ஆற்றிவந்த பணியின் நோக்கம் யுத்தத்தை தடுப்பது என்பதல்ல, மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கச்செய்வதுதான் அவர்களுடைய வேலை. ஆனால் இலங்கைத் தலைநகர் கொழும்பில் பணியாற்றிய ஐநா பணியாளர்களுக்கு அவ்வாறான உதவிகளை செய்வதற்கான தகுதிகளோ, அனுபவமோ இல்லை என்பதை இந்த ஆய்வு அறிக்கை விவரிக்கிறது. இலங்கையின் கொடூரமான யுத்தத்தால் எழுந்த சவால்களை இவர்களால் சமாளிக்க முடியவில்லை என்றும், நியுயார்க்கிலுள்ள ஐநா தலைமையகத்திலிருந்து இவர்களுக்கு ஒழுங்கான உதவிகளும் கிடைக்கவில்லை என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. பயங்கரவாதத்தை நசுக்குவதாக சூளுரைத்துவிட்டு அரசாங்கம் முன்னெடுத்த விஷயங்களை சர்வதேச நாடுகள் பெருமளவில் கண்டும்காணாமல் இருந்துவிட்டனர் என்று இந்த அறிக்கை கூறுகிறது. ஆக கட்டமைப்பு ரீதியாகவே கூட பெரும் தவறுகள் நடந்துள்ளன என்றும், இப்படி ஒன்று எதிர்காலத்தில் நடக்கவே கூடாது என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

Continue Reading →