உலகத்தமிழ் இலக்கியம்: மலேசிய நாட்டில் தமிழ் இலக்கிய வளர்ச்சியும் எதிர்காலமும்!

 முன்னுரை

வே.ம.அருச்சுனன் -  மலேசியா மலேசியத் தமிழ் இலக்கியம் ஏறக்குறைய 126ஆண்டுகளுக்கும் மேலான   பழமை வாய்ந்ததாகும். மலேசியத் தமிழ் இலக்கியத்தின் செவிலித்தாய்களாக  விளங்கியவை பத்திரிக்கைகளாகும். மலாயாவில் தோன்றிய முதல்  பத்திரிக்கை யாகக் கருதப்படுவது சி.கு.மகுதும் சாயபு அவர்களால் 1875-இல் வெளியிடப் பட்ட “சிங்கை வர்த்தமானி” என்னும் இதழே.( மா.இராமையா,1996) அதனை- யடுத்து மலேசியாவில், பினாங்கில் 1876 இல் “ தங்கை நேசன்” என்னும் பத்திரிக்கை வெளிவந்துள்ளது . “உலக நேசன்”,  “சிங்கை நேசன்”,  “இந்து நேசன்”  ஆகிய பத்திரிக்கைகள் 1887-இல் வெளிவந்துள்ளன.(இரா.தண்டாயுதம்,1986). சிங்கப்பூரில் 1887-இல் சி.ந. சதாசிவப் பண்டிதரின் “வண்ணையந்தாதி”என்ற நூல் தொடக்கமாக அமைந்தது. (ஏ.ஆர்.எ.சிவகுமாரன்: “சிங்கப்பூர் மரபுக்கவிதைகள்) மலேசியாவின் முதல் தமிழ் இலக்கியப் படைப்பாகக் கருதப்படுவது  நாகப்பட்டினம் மரு.வெங்கடாசலம் பிள்ளை அவர்களால் இயற்றப் பெற்ற “ ஆறு முகப் புதிகம்” என்ற கவிதை நூலாகும்.( இராஜம் இராஜேந்திரன்,1988) மலேசியத் தமிழ்ப் படைப்பிலக்கிய வகைகளுள் கவிதை இலக்கியமே முதலில் தோன்றியது. அதற்கடுத்த நிலையில் நாவலைக் குறிப்பிடலாம். மலேசியாவின் முதல் நாவல் க.வெங்கடரத்தினம் அவர்களால் 1917-இல் எழுதப்பட்ட “கருணாசாகரன் அல்லது காதலின் மாட்சி.( வே.சபாபதி,2004).முதல்மலேசியத் தமிழ்ச் சிறுகதை வே.சின்னையா 1930 இல் வெளியிடப்பட்ட “ நவரச கதா மஞ்சரி” எனும் தொகுப்பில் அடங்கியுள்ள ஐந்து சிறுகதைகளாகும்.( ந.பாஸ்கரன்,1995).   

Continue Reading →

யாழ்ப்பாணத்தில் ‘அம்பிகைபாகன் ஆளுமைத்தடம்’ நூல் வெளியீடு!

யாழ். வைத்தீஸ்வராக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அம்பிகைபாகன் பற்றி யாழ். கல்வியல்கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் முருகேசு கௌரிகாந்தன் எழுதிய ‘அம்பிகைபாகன் ஆளுமைத்தடம்’ என்னும் நூல் வெளியீடும், அவரது…

Continue Reading →