[எழுத்தாளர் குளச்சல் மு. யூசுப் நல்லதொரு மொழிபெயர்ப்பாளர். மீஸான்கற்கள் (நாவல்), ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள் (அனுபவப் பதிவு), மஹ்ஷர்பெருவெளி (நாவல்), நளினிஜமீலா (சுயசரிதை), நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி (சுயசரிதை), அழியாமுத்திரை (நாவல்), அமரகதை (நாவல்), வினயா (சுயசரிதை), அடூர் கோபாலகிருஷ்ணனின் இடம் – பொருள் – கலை (திரைப்படப் பதிவு), உலகப்புகழ்பெற்ற மூக்கு (சிறுகதைத் தொகுப்பு), நக்ஸலைட் அஜிதா (சுயசரிதை), மேலும் சில இரத்தத் துளிகள் (நாவல்) போன்ற மலையாள இலக்கியப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பாளர் இவரே. இவர் தான் வழங்கிய நேர்காணலொன்றினை முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதனைப் ‘பதிவுகள்’ தனது ‘முகநூல் குறிப்புகள்’ வாயிலாகத் தன் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறது. – பதிவுகள்]