பதிவுகள் இணைய இதழில் வெளியாகியிருக்கும் மதிப்பிற்குரிய திரு. வெ.சா. அவர்களின் க.நா.சுவும் நானும் கட்டுரையின் இறுதிப்பகுதியில் கலாநிதி கைலாசபதி பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதைப் படித்தபொழுது சிறிது திகைப்பும், வருத்தமும் ஏற்பட்டன. அதிலவர் கலாநிதி கைலாசபதி பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:
1. “ஆனால் இலங்கையில் பெரிய சட்டாம்பிள்ளையாக வலம் வந்த ஒரு பேராசிரியர், பர்மிங்ஹாமில் ஜார்ஜ் தாம்ப்சனின் கீழ் ஆராய்ச்சி செய்தவர், இலங்கையில் தம்மை அண்டியவர்களுக்கெல்லாம் இலக்கிய தீக்ஷை அளித்து தம் பக்தர் கூட்டத்தை பெருக்கிக் கொண்டவர், ஏன் க.நா.சு.வைக் கண்டு எரிச்சல் பட வேண்டும்?”