பூங்காவனம் 11 ஆவது இதழ் பற்றிய மதிப்பீடு

சமூக இலக்கிய காலாண்டுச் சஞ்சிகையான பூங்காவனத்தின் பதினொறாவது இதழ் தற்பொழுது பூத்து மணம் பரப்புகிறது. பெண் எழுத்தாளர்களின் முன் அட்டைப் படத்தைத் தாங்கி வரும் பூங்காவனம், இம்முறை திருமதி வசந்தி தயாபரன் அவர்களின் படத்தைத் தாங்கி வந்திருக்கிறது. இவரைப் பற்றிய நேர்காணலை ரிம்ஸா முஹம்மத், எச்.எப். ரிஸ்னா ஆகியோர் செய்திருக்கிறார்கள். இலங்கை வங்கியின் முன்னாள் அலுவலரான திருமதி வசந்தி தயாபரன் அவர்கள் இலக்கிய குடும்பப் பின்னணியில் வளர்ந்ததால் இலக்கிய உலகில் முன்னணி வகிக்கக் கூடியவராக இருக்கிறார். இவர் பிரபல கலை இலக்கிய படைப்பாளியான வ. இராசையா அவர்களின் புதல்வியும், பிரபல படைப்பாளியான திரு மு. தயாபரன் அவர்களின் துணைவியும் ஆவார். சிறுவயது முதலே இலக்கிய முனைப்பு கொண்ட இவர் சிறந்த சிறுகதைகளையும், அதிகமான கட்டுரைகளையும் சஞ்சிகைகளில் எழுதிவருவதோடு தகவம் கதைஞர் வட்டத்திலும் செயலாளராக பணியாற்றி வருகிறார். அத்துடன் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் வெளியீடுகளில் ஒன்றான ஓலை இதழின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றி இருக்கிறார். சமூக இலக்கிய காலாண்டுச் சஞ்சிகையான பூங்காவனத்தின் பதினொறாவது இதழ் தற்பொழுது பூத்து மணம் பரப்புகிறது. பெண் எழுத்தாளர்களின் முன் அட்டைப் படத்தைத் தாங்கி வரும் பூங்காவனம், இம்முறை திருமதி வசந்தி தயாபரன் அவர்களின் படத்தைத் தாங்கி வந்திருக்கிறது. இவரைப் பற்றிய நேர்காணலை ரிம்ஸா முஹம்மத், எச்.எப். ரிஸ்னா ஆகியோர் செய்திருக்கிறார்கள். இலங்கை வங்கியின் முன்னாள் அலுவலரான திருமதி வசந்தி தயாபரன் அவர்கள் இலக்கிய குடும்பப் பின்னணியில் வளர்ந்ததால் இலக்கிய உலகில் முன்னணி வகிக்கக் கூடியவராக இருக்கிறார். இவர் பிரபல கலை இலக்கிய படைப்பாளியான வ. இராசையா அவர்களின் புதல்வியும், பிரபல படைப்பாளியான திரு மு. தயாபரன் அவர்களின் துணைவியும் ஆவார். சிறுவயது முதலே இலக்கிய முனைப்பு கொண்ட இவர் சிறந்த சிறுகதைகளையும், அதிகமான கட்டுரைகளையும் சஞ்சிகைகளில் எழுதிவருவதோடு தகவம் கதைஞர் வட்டத்திலும் செயலாளராக பணியாற்றி வருகிறார். அத்துடன் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் வெளியீடுகளில் ஒன்றான ஓலை இதழின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றி இருக்கிறார்.  மல்லிகை, ஞானம் போன்ற முன்னணி சஞ்சிகைகளில் தொடர்ந்து எழுதிவரும் இவர் குடை நடை கடை, மண்புழு மாமா வேலை செய்கிறார், அழகிய ஆட்டம், பச்சை உலகம் என நான்கு சிறுவர் கதை நூல்களையும்,  காலமாம் வனம் என்ற சிறுகதை நூலொன்றையும் வெளியிட்டுள்ளார். குடை நடை கடை என்ற சிறுவர் இலக்கிய நூல் தமிழ் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading →

சுவையான இலக்கியத் திறனாய்வுகள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

திரு. கே.எஸ் சிவகுமாரன் அவர்களின் சுவையான இலக்கியத் திறனாய்வுகள் என்ற நூல் 180 பக்கங்களில் மணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கிறது. இலக்கியவாதிகள் மத்தியில் பெருமதிப்பிற்குரிய இவர் பலரது நூல்களுக்குத் திறனாய்வுகள், அணிந்துரைகள், குறிப்புகள் போன்றவற்றை வழங்கி அவர்களைச் சிறப்பித்திருக்கிறார். தான் வாசித்த சிறுகதை, கவிதை, நாவல், ஏனைய படைப்புகள் பற்றியும், சினிமா பற்றியும் பல்வேறான கருத்துக்களை முன்வைத்துள்ளார். பவள விழா கண்ட முதுபெரும் இலக்கியவாதியான இவர் இலங்கையின் டெய்லி நியூஸ், தி ஐலன்ட், வீரகேசரி, நவமணி போன்ற நாழிதழ்களின் ஆசிரிய பீடங்களில் உயர் பதவி வகித்த ஒரு கலைஞர்.திரு. கே.எஸ் சிவகுமாரன் அவர்களின் சுவையான இலக்கியத் திறனாய்வுகள் என்ற நூல் 180 பக்கங்களில் மணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கிறது. இலக்கியவாதிகள் மத்தியில் பெருமதிப்பிற்குரிய இவர் பலரது நூல்களுக்குத் திறனாய்வுகள், அணிந்துரைகள், குறிப்புகள் போன்றவற்றை வழங்கி அவர்களைச் சிறப்பித்திருக்கிறார். தான் வாசித்த சிறுகதை, கவிதை, நாவல், ஏனைய படைப்புகள் பற்றியும், சினிமா பற்றியும் பல்வேறான கருத்துக்களை முன்வைத்துள்ளார். பவள விழா கண்ட முதுபெரும் இலக்கியவாதியான இவர் இலங்கையின் டெய்லி நியூஸ், தி ஐலன்ட், வீரகேசரி, நவமணி போன்ற நாழிதழ்களின் ஆசிரிய பீடங்களில் உயர் பதவி வகித்த ஒரு கலைஞர். எழுத்தாளர்கள் தாம் ஏன் எழுதுகிறோம்? எதனை எழுதுகிறோம்? எவ்வாறு எழுதுகிறோம்? என்றெல்லாம் அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். பிற்காலத்தில் தனது இலக்கியப் பங்களிப்புக்களை ஆய்வு செய்யப் போகும் ஆய்வாளர்களுக்கு அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் தனது கட்டுரைகளைப் பரிசீலிக்க உதவும்பொருட்டு இந்நூலை வெளியிட்டிருக்கும் திரு. சிவகுமாரன் அவர்கள் தான் எழுதுவதற்கான காரணத்தைக் கீழுள்ளவாறு குறிப்பிடுகின்றார்.

Continue Reading →

எம்ஜிஆர் நினைவாக: நம்பிக்கையூட்டும் எம்ஜிஆர் திரைப்படப்பாடல்கள்…

அமரர் எம்ஜிஆர் மறைந்து 25 வருடங்கள் விரைந்தோடி விட்டன. இன்றும் அவரது புகழ் வற்றி வரண்டுவிடவில்லை. அமரர் எம்ஜிஆர் மறைந்து 25 வருடங்கள் விரைந்தோடி விட்டன. இன்றும் அவரது புகழ் வற்றி வரண்டுவிடவில்லை. அமரர் எம்ஜிஆர் மறைந்து 25 வருடங்கள் விரைந்தோடி விட்டன. இன்றும் அவரது புகழ் வற்றி வரண்டுவிடவில்லை. அமரர் எம்ஜிஆர் மறைந்து 25 வருடங்கள் (நினைவு தினம்: டிசம்பர் 24) விரைந்தோடி விட்டன. இன்றும் அவரது புகழ் வற்றி வரண்டுவிடவில்லை. இன்றைய தலைமுறைகூட அவரை நன்கு அறிந்தே வைத்திருக்கின்றது. இன, மத, மொழி மற்றும் வர்க்க வேறுபாடுகளற்று, மக்கள் அவர்மேல் அன்பு வைத்திருந்தார்கள்; வைத்திருக்கின்றார்கள். அவரைப் போலவே அவரது திரைப்படப் பாடல்களும் மிகவும் பிரபல்யமானவை. இம்முறை அவர் நினைவாக அவர் நடித்து வெளிவந்த திரைப்படப்பாடல்களில் சிலவற்றை உங்களுக்கு வழங்குகின்றோம். கருத்தாழமிக்க அவரது திரைப்படப்பாடல்கள் எப்பொழுது கேட்டாலும் நெஞ்சினில் புத்துணர்ச்சியினை, வாழ்வு மீதான நம்பிக்கையினை ஊட்டும் வல்லமை மிக்கவை. சிந்திக்கத் தூண்டுவன. கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வாலி ஆகியோர் அவருக்காக எழுதிய பல பாடல்கள் அமோக வரவேற்பைப் பெற்றன. அவற்றில் சில கீழே:

Continue Reading →

சாஹித்ய அகாதமியில் கிடைத்த ஒரு நட்பு (2)

- வெங்கட் சாமிநாதன் -மிகுந்த சாமர்த்திய சாலி என்று நினைத்துக்கொண்டேன். நிர்வாகத்தையும் அவர் புறக்கணிக்க வில்லை. அதே சமயம் தன் வழியில், தன் முறையில் தன் பொறுப்புக்களையும் எதிர் கொண்டார். நிர்வாகத்தோடும் மோதாமல், தனக்களிக்கப்பட்ட பணியையும் சிறப்பாகச் செய்வதற்கும் வழிமுறைகள் தெரிந்திருப்பது சாமர்த்தியம் தானே. பதினெட்டாம் நூற்றாண்டு சாந்தலிங்க சுவாமிகள் யாரா யிருந்தால் என்ன? அவரைப் பற்றி எழுதியுள்ள ஆர். பங்காருசாமி என்பவருக்கு அந்த ஸ்வாமிகள் முக்கியமானவராகத் தெரிந்திருக்கிறார். தெரியாதவரைத் தெரிய வைப்பதும் ஒரு தொண்டு தானே. தமிழ் ஆலோசனைக் குழுவுக்கு இது போன்று பலர் தகுதியுடையவர் களாகப் பட்டிருக்கிறார்கள். ஆனந்த விகடன் மணியன், கே. மீனாட்சி சுந்தரம்(?) எழில் முதல்வன், முடியரசன்(?), தண்டாயுதம். சுகி சுப்பிரமணியம், மீ.ப..சோமசுந்தரம், சஹானே(?), மஸ்கரானஸ்(?) (இப்பெயர்கள் உதாரணத்துக்காகச் சொல்லப்படும் சிலரே) போன்றார் இதில் இடம் பெறும் தகுதியை, தமிழ் ஆலோசனைக் குழு தீர்மானித்து சிபாரிசு செய்ய  என்ஸைக்ளோபீடியா வின் அவ்வப்போதைய எடிட்டர் அதன்படி செயலாற்றியிருக்கிறார். இதில் யாரைக் குறை சொல்ல முடியும்? என்ஸைக்ளோபீடியா எடிட்டர் என்ன செய்ய முடியும்? பொறுப்பு ஆலோசனைக் குழுவினரது தான். சரி, ஆலோசனைக் குழுவினரைத் தீர்மானித்தது யார்? இந்தப் பண்டிதர்கள் தான் எல்லாம் வல்ல, அறிந்த ஞானிகளாக பெயர் பெற்றிருக்க, இவர்கள் தான் சாஹித்ய அகாடமியின் கண்களுக்கு தெரிந்திருக்கிறார்கள்.

Continue Reading →

பாட்டா பாட்டிகளின் பாலுணர்வுகளும் செயற்பாடுகளும்

பாலியல், பாலுறவு, பாலியல் உணர்வுகள், பாலியல் செயற்பாடுகளில் திருப்தி மற்றும் திருப்தியின்மை போன்றவை எமது சமூகத்தில் வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. நாலு பேர் மத்தியில் பேசுவதற்கு அசூசைப்படுகிறோம். தூஸணை வார்த்தைகள் போல  உச்சரிக்க சங்கோசப்படுகிறோம். பாலுணர்வானது உயிரினங்களின் வாழ்வின் தொடர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் இன்றிமையாத அம்சமாக விளங்குகிறது. இருந்தபோதும் அவற்றைப் பேசா மொழிகளால் மறுதலிக்கிறோம். அதிலும் முக்கியமாக வயது முதிர்ந்தவர்களின் பாலியல் உணர்வு பற்றிய எண்ணமே எமது சமூகத்தில் அறவே கிடையாது எனலாம். பாட்டா பாட்டியுடன் நெருங்கிப் பேசினால் கிழட்டு வயதில் செல்லம் கொஞ்சிறார் என நக்கல் அடிக்கிறோம்.பாலியல், பாலுறவு, பாலியல் உணர்வுகள், பாலியல் செயற்பாடுகளில் திருப்தி மற்றும் திருப்தியின்மை போன்றவை எமது சமூகத்தில் வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. நாலு பேர் மத்தியில் பேசுவதற்கு அசூசைப்படுகிறோம். தூஸணை வார்த்தைகள் போல  உச்சரிக்க சங்கோசப்படுகிறோம். பாலுணர்வானது உயிரினங்களின் வாழ்வின் தொடர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் இன்றிமையாத அம்சமாக விளங்குகிறது. இருந்தபோதும் அவற்றைப் பேசா மொழிகளால் மறுதலிக்கிறோம். அதிலும் முக்கியமாக வயது முதிர்ந்தவர்களின் பாலியல் உணர்வு பற்றிய எண்ணமே எமது சமூகத்தில் அறவே கிடையாது எனலாம். பாட்டா பாட்டியுடன் நெருங்கிப் பேசினால் கிழட்டு வயதில் செல்லம் கொஞ்சிறார் என நக்கல் அடிக்கிறோம்.

Continue Reading →

இவ்வாண்டின் சாகித்ய அக்காதமி “யுவபுரஸ்கார்“ பரிசு பெற்றுள்ள மலர்வதியின் ”தூப்புக்காரி“ நாவல்:

மலர்வதிஇவ்வாண்டின் சாகித்ய அக்காதமி “யுவபுரஸ்கார்“ பரிசு பெற்றுள்ள மலர்வதியின்  ”தூப்புக்காரி“ நாவல்:தூப்புக்காரியின் தோற்றமும் செயல்களும் வாழ்வும் ஒruruரு விளிம்பு நிலை பெண்ணின் அடையாள அவலம். மருத்துவமனையில் சுத்தப்படுத்தும் வேலை செய்யும் ஒரு தாயின் வாழ்வை மகளும்சேர்ந்து ஈர்ப்புடன் ஆத்மாவின் வலியோடு பீ, குளியலறை , எச்சிலை, ரத்தவாடையோடு நாகர்கோவில் பகுதி தலித் மக்கள் வாழ்வோடு ஓரளவு நேர்த்தியாகவே இதில் சொல்லப்பட்டிருக்கிறது.. தாய், மகள், மகளின் மகள் என்று தலைமுறை தொடர்கிறது. இது சாபமாய் படிகிறது.இந்திய சமூகத்தின் பீடை. பெண்கள் மீது சுமத்தப்பட்ட அநாவிசிய பாரம்.இந்த பாரத்தை  உணரும் வண்ணம் எழுதியிருக்கிறார் மலர்வதி. பணம் தொலைவதில் படபடப்பாகிற தாய் தன்னைத் தொலைத்தலிலும் வாழ்க்கையை கடந்து போகிறார்.  திருமண விருந்துகளில் எச்சிலெடுப்பவள் எச்சிலாகிப்போகிறாள். எச்சிலை இலைதான் இந்த நாவல் எழுப்பும் படிமம்.

Continue Reading →

பயித்தியமாகவும் கேடுகெட்டும் போன அரசு

பயித்தியமாகவும் கேடுகெட்டும் போன அரசு (Government Gone Mad And Bad)  என்ற தலைப்பு எஸ்.எல். குணசேகரா சிறீலங்கா சட்டத்தரணிகள் சங்கத்துக்கு (BASL)  28 – 11 – 2012 அன்று அனுப்பிய கடிதத்தின் ஊக்குவிப்பாகும்.  குணசேகரா பசில் க்கு அனுப்பிய கடிதத்தில் “இப்போது பதவியிலுள்ள பயித்தியக்கார அரசு உச்ச நீதிமன்ற நீதியரசருக்கு எதிராக முன்னெடுத்துள்ள அரசியல் குற்றச்சாட்டை” எதிர்க்குமாறு கேட்டிருந்தார். அண்மையில் வெளிவந்த பெட்றீ (Petrie) அறிக்கை 70,000 தமிழர்கள் அரசினால் கொல்லப்பட்டதாகக் கூறியது. ஆனால் அதையிட்டு ஒட்டுமொத்தச் சிங்களவர்களும் பாராமுகமாக இருந்துவிட்டார்கள்.  கடந்த வாரம் பசில் அமைப்பு புதிய தலைமை நீதியரசரை ஆதரிப்பதில்லை என எடுத்த முடிவு பாராட்டத்தக்கது.  ஆனால்  நாட்டிலும் பசில் அமைப்பிலும் அதிகளவு  பிழைகள் இருக்கின்றன.  தலைமை நீதியரசர் விவகாரம் வெறுமனே நோயின் அறிகுறிதான்.  எடுத்துக்காட்டாக டொலர் 100 மில்லியன்  பெறுமதியான ஓட்டப்பந்தயக் கார்களை அரசு எந்த வரியும் கட்டாமல் இறக்குமதி செய்தது என செய்திகள் தெரிவிக்கின்றன.  அதைவிட  மற்றவர்கள் கூற்றுப்படி எப்படி அரச சம்பளத்தில் வாழ்க்கையை நடத்துபவர் (அவரது தந்தையாரும் அரச சம்பளத்தில் இருப்பவர்தான்)  டொலர் 100 மில்லியனை  கட்ட முடியும்?  சண்டே லீடர் என்ற செய்தியேடு (06-03-2011)  பிரபா கணேசன் சொன்னதாக ஒரு செய்தி வெளியிட்டது. பசில் இராசபக்சே கட்சி மாறினால் உருபா 20 மில்லியன் தனக்கும் இன்னொரு அய்க்கிய தேசியக் கட்சி உறுப்பினர் பி.ஏகாம்பரம் அவர்களுக்கும் தருவதாக வாக்களித்தார். அது அபிவிருத்திக்கு என்று சொல்லப்பட்டது என்பதுதான் அந்தச் செய்தி. 

Continue Reading →

மீள்பிரசுரம்: ’ஆகாசத்திண்ட நிறம்’ ,மலையாளத் திரைப்படம் பற்றியதொரு பார்வை!

’’ஆகாயம் பல்வேறு வண்ணங்கள் காட்டுவதுண்டு..நிறமற்ற ஆகாசமும் உண்டு..நம் கற்பனைக்கேற்ற வண்ணம் காட்டும் ஆகாயமாக அது விரிவதும் உண்டு….எதுவும் நம் பார்வையைப் பொறுத்ததே’’. சீனாவின் ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ’ஆகாசத்திண்ட நிறம்’ என்ற மலையாளத் திரைப்படத்தை நேற்று தில்லி ஹேபிடட் திரைப்படவிழாவில் காண வாய்த்தது அற்புதமான ஓர் அனுபவம். படத்தைப் பற்றிய முன் அனுமானங்கள் தகவல்கள் ஆகிய எவையுமே இன்றி,அங்கு சென்றிருந்த எனக்குக் குறைந்த பொருட்செலவில் எளிமையான ஒரு கதைக்கருவை மையமிட்டு அழகானதொரு செய்தியை முன் வைத்திருந்த அந்தப்படம், ஆனந்தம் கலந்த அதிர்ச்சியைஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. படத்தின் ஒரு வரிக்கதை என்று சொல்லப்போனால் திருடன் திருந்தி நல்லவனாகும் வழக்கமான ஜீன்வால்ஜீன் கதைதான்….ஆனாலும் அதற்குத் தரப்பட்டிருக்கும் ட்ரீட்மெண்ட்…, அதைத் திரைக்கதையாக்கிக் காட்சிப்படுத்தியிருக்கும் நேர்த்தி இவை சொல்லுக்கடங்காதவை.

Continue Reading →