தொல்காப்பியம் – பாலவியாகரணம் எச்சவியல் ஒப்பீடு!

1. திராவிடமொழிக் குடும்பத்தில் தொன்மையானது தமிழ்.  தமிழை விடத் தெலுங்கு மொழிப் பேசுவோரின் எண்ணிக்கை அதிகம். தமிழ் தனித்தன்மை வாய்ந்தது.  இம்மொழிக்குரிய இலக்கண நூலாகிய தொல்காப்பியமும் அத்தன்மை…

Continue Reading →

தொல்காப்பியம் – பாலவியாகரணம் எச்சவியல் ஒப்பீடு!

1. திராவிடமொழிக் குடும்பத்தில் தொன்மையானது தமிழ்.  தமிழை விடத் தெலுங்கு மொழிப் பேசுவோரின் எண்ணிக்கை அதிகம். தமிழ் தனித்தன்மை வாய்ந்தது.  இம்மொழிக்குரிய இலக்கண நூலாகிய தொல்காப்பியமும் அத்தன்மை…

Continue Reading →

பைத்தகோரஸ் தேற்ற வாய்ப்பாடும்! போதையனார் தேற்ற வாய்ப்பாடும்!

அறிவியல் தோன்றாக் காலத்துக்குமுன்பே தமிழ் இலக்கியங்களில் அறிவியல் நிறையப் பேசப்பட்டுள்ளதை நாம் காண்கின்றோம். அறிவியலாரும் இலக்கியலாரும் தனி வழிப் பயணிப்பதை நாம் அறிவோம். அவர்கள் தங்கள் தொழில்…

Continue Reading →

பதிவுகளுக்கு ஆக்கங்கள், தகவல்களை அனுப்புவோர் கவனத்துக்கு….

பதிவுகள் இணைய இதழுக்கு ஆக்கங்கள், தகவல்களை அனுப்புவோர் ஒருங்குறி (யூனிகோட்) எழுத்திலேயே அனுப்பவும்.   பாமினி எழுத்துரு பாவித்து அனுப்பப்படும் ஆக்கங்களை ஒருங்குறிக்கு மாற்றுவதில் எமக்கு மிகவும் நேரம்…

Continue Reading →

சிறுகதை பேபி

பதிவுகளில் சிறுகதை வாசிப்போம் வாருங்கள்!வெளியே பனி கொட்டிக் கொண்டிருந்தது.உப்பளத்தில் விளைந்த உப்பைப் போல எங்கும்  வெண்பஞ்சுப் பனிப்படுக்கை நிலத்தை மூடியிருந்தது.வீதியில் சளக்குப் புளக்கென ஒரே  சகதித் தோற்றம்.”ஒ!, “இந்த பனிப் புயலில்  வாகனங்கள் நகர முடியாது.எங்கே உப்பு போட்டிருக்கப் போறார்கள்? பிறகென்ன, …சலிப்படைந்தான், வாகனத்தை சறுக்கிக் கொண்டு தான் ஓட்ட வேண்டும். தன் ஒரு வயசு மகளை தூக்கிய போது  மனதில் மாற்றம் நிகழ்ந்தது.  ‘ பனியை மனம் அழகாக கூட ரசிக்கிறது .

“பேபி,பார் எவ்வளவு பனி! “என்று காட்டினான்.

பேபி,நீ பார்க்கிற முதல் பனிப் புயல்”என்று காட்ட அது சிரிக்கிறது. என்ர செல்லம்,இத்தாலியில் பிறந்திருந்தாலும் சிரிக்கும் தான்..ஆனால், வேலைத்தளத்தில் வேலை பார்க்கிற அந்த ஈழத் தமிழன்ர பேர்?, அது என்ன?..அவனுக்கு எப்பவுமே ஞாபகம் வருவதில்லை. டிங்கரோ.., கங்கரோ..? என்னவோ, அவன், அளப்பானே ‘அட , சிறிலங்காவில் பாதி நிலமேஅவர்களிட நாடாம்! வடக்கு, கிழக்கு எனக் கிடக்கிற பெரிய மாகாணங்களை தமிழ் மன்னர்கள் ஆண்டவர்களாம்.தமிழ் நாடாகத் தான் இருந்ததாம். பேபி, அங்கே பிறந்திருந்தால்… சிரிக்காது தான். அது  வெப்பநாடு, கலாச்சாரம்  ஜீன் எல்லாமே வேற, வேற! ஒரினம், இன்னொரு இனத்தை அடிமை கொள்ள முயல்கிற நாடு அது!எப்படி இருந்தாலும் … ஆசியரின் உருவ வளர்ச்சியும்  சிறிது குறைவு  தான். இங்கே ஒரு வயசிலே செய்யிறதெல்லாம் அங்கே இரண்டு வயசிலே தான்  செய்கிறது.

Continue Reading →

ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் குந்தவையுடனான நேர்காணல்!

1. 1  நீங்கள் ஒரு மூத்த எழுத்தாளர் என்ற வகையில் உங்களைப் பற்றியும் உங்கள் எழுத்துக்கள் பற்றியும் கூறமுடியுமா? உங்களுக்கு எழுதும் உத்வேகத்தை எது தருகிறது?

எழுத்தாளர் குந்தவைஎழுத்தாளர் சு.குணேஸ்வரன்வணிகரான என் தந்தைக்கு ஒன்பது பிள்ளைகள் அவர்களில் கடைசியாகப் பிறந்த ஒரே பெண் நான். தொடக்கக் கல்வியை உள்ளுர்ப் பாடசாலையிலும் இடைநிலைக்கல்வியை சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலும் (அக்கடமி) பட்டப்படிப்பை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றேன். (பத்தாண்டுகளுக்குப் பின்னர்) புத்தளம் மாவட்டத்திலும் பின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியிலும் ஆசிரியையாகப் பணியாற்றி 1990 ஆம் ஆண்டு இறுதியில் கொண்டுவரப்பட்ட விசேட சுயவிருப்பு ஓய்வுத்திட்டத்தின்கீழ் ஓய்வு பெற்றேன். முதலில் சில கதைகள் எழுதினாலும் என் புனைபெயரை பரவலாக அறியச் செய்தது 1963இல் ஆனந்தவிகடனில் அந்தக்கிழமையின் சிறந்த கதையாக வெளிவந்த ‘சிறுமைகண்டு பொங்குவாய்’ என்ற கதையே. (அந்தக்காலத்தில் இப்பொழுது உள்ளதுபோல் விகடனும் குமுதமும் தரம்கீழ் இறங்கியவையாக இல்லை) நீண்ட இடைவெளிக்குப் பின் கணையாழியில் வெளிவந்த ‘யோகம் இருக்கிறது’ இதுவும் பலராலும் வாசிக்கப்பட்டது. கதை எழுதவேண்டும் என்ற உந்துதலை புறச்சூழலும் நாட்டின் நடப்பு நிகழ்வுகளுமே ஏற்படுத்துகின்றன. பேரினவாதம் தலைதூக்கியாடும் எம் நாட்டில் மனத்தை சலனப்படுத்தி சஞ்சலப்படுத்தும் நிகழ்வுகள் பல. நான் அநேகமாக அவற்றை வைத்தே கதைகள் எழுத விரும்புகிறேன்.

Continue Reading →