(8) – சி. சு. செல்லப்பா: தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு!

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!- வெங்கட் சாமிநாதன் -முப்பதுகளிலிருந்து எழுத்தாளனாக வாழ விரதம் பூண்டு சென்னைக்கு வந்து விட்ட செல்லப்பாவுக்கு இரண்டு தலைமுறைகளுக்கும் மேலாக தான் விரும்பிய இலக்கிய வாழ்க்கை வாழ்ந்துவிட்ட பிறகு, இனி சென்னையில் வாழ வழியில்லை என்று தோன்றிவிட்டது ஒரு சோகம் தான். சோக உணர்வு நமக்கு. ஆனால் அவருக்கு, வத்தலக்குண்டுக்கு குடிபெயர நினைத்தது இயல்பான விஷயம் தான். சொந்த மண். பிறந்த மண். வத்தலக்குண்டு செல்லப்பாவின் பாசம் நிறைந்த ஊர். அவரது பிள்ளைப் பிராயம் கழிந்த ஊர். அந்த ஊர் மாத்திரமா? அந்த மண்ணின் மனிதர்களும், பேச்சும், வாழ்க்கையும் பண்பாடும் அவரது இதயத்தை நிறைக்கும் சமாசாரங்கள். அவரது எழுத்து அத்தனையும் அந்த மண்ணையும் மக்களையும் வாழ்க்கையையும் பற்றியுமே இருக்கும். கதை, நாடகம், நாவல் எல்லாமே, பால்ய கால நினைவுகள் அத்தனையும்,  அம்மண்ணையும்  மக்களையும் பற்றியே இருக்கும். மனிதனுக்கும் மிருகத்துக்கும் இடையே ஆன  வீர விளையாட்டுக்கூட ரத்தம் படிந்ததாக இராது. அது சார்ந்த தர்மங்களைப் பேசுவதாக இருக்கும். குற்ற பரம்பரையினராக ஆங்கிலேயர் காலத்திலிருந்து பேசப்பட்ட, அவ்வாறே அதற்கான கடுமையுடன் நடத்தப்பட்ட தேவர் மக்களிடம் கூட, அவர்களில் இன்னமும் குற்றம் புரியும் பழக்கம் விடாதவர்களிடம் கூட நிலவும் தர்மங்களைப் பற்றித் தான் அவர் கதைகள் பேசும்.

Continue Reading →

தேன்கூடு:ஒரு பார்வை!

இன்று  விசேட  காட்சியாக  காண்பிக்கப்பட்ட  'தேன்கூடு'  திரைப்படம்  பல  செய்திகளை  நமக்குத் தந்தது. புருவங்களை  மீண்டும்  ஒருமுறை  உயர்த்திய  திரைப்படம்  என்பேன். ஈழத்துத் திரைப்படம் ஒன்றைப்  பார்த்த  உணர்வு  எதுவித  மாற்றுக் கருத்தின்றியே  அனைவராலும் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. கதைக்கரு  கிழக்கு மாகாணம்  ஒன்றில்  ஆரம்பித்து  பின்னர் வன்னிக்கூடாக  இந்தியா  வரை  நகர்ந்து  மீண்டும்  ஈழம் நோக்கிப் பயணிக்கிறது. இரண்டு  கதாபாத்திரங்களூடாக  கதை  நகர்த்திச்  செல்வது  பாராட்டக்கூடியது. சிறு  சிறு பாத்திரங்கள் வந்து  போனாலும்  கதையைச்   சிதைத்து விடாமல்  பார்த்துக்கொள்ளுகின்றன. இந்தியாவில்  சந்தித்து கதா நாயக/நாயகிக்கு  உதவும்  நண்பனாக  சந்திரன்  பாத்திரம்  நாம்  சந்தித்த  சில  நல்ல  நண்பர்களை ஞாபகப்படுத்துகின்றது. இன்னும்  மனிதர்கள்  இருக்கிறார்கள்  என்பதை  சந்திரன்  பாத்திரம்  ஊடாகக் கதாசிரியர்  சொல்லிச்  செல்கிறார். பாத்திரப் பொருத்தம்  கவனமெடுக்கப்பட்டதில்  பட இயக்குனரின்  தெரிவு சிறப்பானது.இன்று  விசேட  காட்சியாக  காண்பிக்கப்பட்ட  ‘தேன்கூடு’  திரைப்படம்  பல  செய்திகளை  நமக்குத் தந்தது. புருவங்களை  மீண்டும்  ஒருமுறை  உயர்த்திய  திரைப்படம்  என்பேன். ஈழத்துத் திரைப்படம் ஒன்றைப்  பார்த்த  உணர்வு  எதுவித  மாற்றுக் கருத்தின்றியே  அனைவராலும் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. கதைக்கரு  கிழக்கு மாகாணம்  ஒன்றில்  ஆரம்பித்து  பின்னர் வன்னிக்கூடாக  இந்தியா  வரை  நகர்ந்து  மீண்டும்  ஈழம் நோக்கிப் பயணிக்கிறது. இரண்டு  கதாபாத்திரங்களூடாக  கதை  நகர்த்திச்  செல்வது  பாராட்டக்கூடியது. சிறு  சிறு பாத்திரங்கள் வந்து  போனாலும்  கதையைச்   சிதைத்து விடாமல்  பார்த்துக்கொள்ளுகின்றன. இந்தியாவில்  சந்தித்து கதா நாயக/நாயகிக்கு  உதவும்  நண்பனாக  சந்திரன்  பாத்திரம்  நாம்  சந்தித்த  சில  நல்ல  நண்பர்களை ஞாபகப்படுத்துகின்றது. இன்னும்  மனிதர்கள்  இருக்கிறார்கள்  என்பதை  சந்திரன்  பாத்திரம்  ஊடாகக் கதாசிரியர்  சொல்லிச்  செல்கிறார். பாத்திரப் பொருத்தம்  கவனமெடுக்கப்பட்டதில்  பட இயக்குனரின்  தெரிவு சிறப்பானது.

Continue Reading →

பரிணாம வளர்ச்சியின் மனித வரலாறு

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)மனிதன், விலங்கு, பறவை, ஊர்வன, மரம், தாவரம், செடி, கொடி போன்ற உயிரினங்கள் வாழவேண்டுமெனில் ஓர் இருப்பிடம் தேவைப்படுகின்றது. இவை யாவுக்கும் இருப்பிடம் கொடுத்து நிற்பது அந்தரத்தில் நின்று சுழன்றுகொண்டிருக்கும் ஒன்பது கோள்களில் ஒன்றான பூமியாகும். பூமியில் மட்டும்தான் உயிரினங்கள் வாழமுடியும். மற்றைய எட்டுக் கோள்களிலும் உயிரினம் வாழ முடியாது. பூமியில் உள்ள நீர், காற்று, வெப்பம் ஆகியவை உயிரினங்களை வாழ வைக்கின்றன. இதனால்தான் பூமியும் உயிர் பெற்றுச் சிறப்புடன் நிலைத்துள்ளது. எனினும் சூரியன் இன்றேல் பூமியும் இல்லை. ஏன் மற்றைய எட்டுக் கிரகங்களும் இயங்காது அழிந்துவிடும். எனவே சூரியன் பிறந்த கதையையும்  காண்போம்.  ஒரு  கருநிலைக்  கோட்பாட்டின்படி (Theory) 460 கோடி ஆண்டுகளுக்குமுன் ஒரு கிட்டிய நட்சத்திரம் விசையால் அழிக்கப்பட்டு அந்த வெடிப்பொலி அதிர்வு அலைகளைக் கதிரவன் முகிற் படலமூலம் வெளியேற்றி அதற்குக் கோணமுடக்கான இயங்கு விசையைக் கொடுத்தது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் – 11: ‘பென்குவின் பதிப்பகம் வெளியிட்ட தமிழ்க் கவிதைத் தொகுப்பு பற்றி..’

வாசிப்பும் யோசிப்பும் - 11அண்மையில் The Rapids Of A Great River கவிதைத் தொகுப்பினைப் பார்த்தேன். உலகப் புகழ்பெற்ற ‘பென் குவின்’ நிறுவனத்தாரின் இந்தியக் கிளையினரால் வெளியிடப்பட்ட தொகுப்பு. தமிழக மற்றும் இலங்கைத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. மொழிபெயர்த்துத் தொகுத்திருப்பவர்கள்: லக்சுமி ஹோல்ம்ஸ்ட்ரோம், சுபஸ்ரீ கிருஷ்ணசாமி K.. ஸ்ரீலதா ஆகியோர். பென்குவின் தமிழ்க் கவிதைத் தொகுப்பு என்று முன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைக் கவிஞர்களில் சேரன், சோலைக்கிளி, அவ்வை, திருமாவளவன், செழியன், சிவசேகரம், சண்முகம் சிவலிங்கம், எம்.ஏ.நுஃமான், பிரமிள், சு.வில்வரத்தினம், கி.பி.அரவிந்தன் என்று பலரின் கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. தமிழக மற்றும் இலங்கைக் கவிஞர்களின் கவிதைகளை உள்ளடக்கியதாகத் தொகுப்பு வெளிவந்திருப்பது மகிழ்ச்சியளிப்பது. ஆனால் இந்தத் தொகுப்பில் கவிதைகள் தொகுக்கப்பட்ட விடயம் பற்றிச் சில கேள்விகள் என் மனதிலெழுந்தன. அதனை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென்று எண்ணுகின்றேன்.

Continue Reading →