ஆய்வரங்கு அழைப்பிதழ்: தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் `வைகறை’, சுமதி குகதாசனின் `தளிர்களின் சுமைகள்’

அனைவரும் வருக! ஆதரவு தருக! ஏற்பாடு: முற்போக்குக் கலை இலக்கிய மன்றம்இடம்: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம், 58, தர்மாராம வீதி, கொழும்பு –…

Continue Reading →

பதிவுகளில் அன்று: இலங்கை அரசின் மீனவர்கள் மீதான தாக்குதல்களும், இந்தியாவின் அமைதியும்!

[‘பதிவுகளில் அன்று’ பகுதியில் ‘பதிவுகள்’ இணைய இதழில் அன்றைய காலகட்டத்தில் வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது மீள்பதிவு செய்யப்படும். ]

இலங்கை அரசின் மீனவர்கள் மீதான தாக்குதல்களும், இந்தியாவின் அமைதியும்!அண்மைக் காலமாக தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும் , கொல்லப்படுவதும் உபகண்ட அரசியலை அவதானித்து வருபவர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்து வருகின்றது. உலக அரங்கில் இராணுவ மற்றும் பொருளியல்ரீதியில் பலம் பொருந்திய வல்லரசுகளிலொன்றாகப் பரிணமித்துவரும் பாரதம் எதனால் தனது மண்ணின் முக்கியமானதோரினத்தின் கடற்றொழிலாளர்கள் மீது , அதுவும் அன்றாட வாழ்வே கேள்விக்குறியாக ஆழியினுள் அலைக்கழிந்து, வாழ்க்கையினையோட்டிச் செல்லும் வறிய தொழிலாளர்கள் மீது நடாத்தப்படும் இத்தகைய தாக்குதல்களை உறுதியாகத் தட்டிக் கேட்காமலிருந்து வருகின்றது என்னும் கேள்வி அரசியல் அவதானிகள், தமிழ் மக்கள், தமிழ் மக்கள் மத்தியில் இயங்கும் அரசியல் அமைப்புகள், மற்றும் மனித உரிமை அமைப்புகள் மத்தியில் எழுவது நியாயமானதுதான். ஒருவரா, இருவரா … கடந்த பல வருடங்களாக இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டும், படுகொலை செய்யப்பட்டும் வந்த தமிழக மீனவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமானதாகும். இந்திய மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்போக்கு இன்றைய அரசியல் சூழலில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு மிகவும் அபாயகரமானதொரு சமிக்ஞை. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டபோதெல்லாம் காட்டிய கண்டிப்பையும், தீவிரத்தையும் ஏன் இந்திய மத்திய அரசு தமிழக மீனவர்கள் விடயத்தில் காட்டவில்லை என்ற கேள்வி நியாயமானதே.

Continue Reading →

பதிவுகளில் அன்று: சுப்ரபாரதிமணியனின் நாடக நூல் மணல் வீடு!

[‘பதிவுகளில் அன்று’ பகுதியில் ‘பதிவுகள்’ இணைய இதழில் அன்றைய காலகட்டத்தில் வெளியான ஆக்கங்கள் அவ்வப்போது மீள்பதிவு செய்யப்படும். ]

சுப்ரபாரதிமணியனின் நாடக நூல் மணல் வீடு:  புகழ்பெற்ற எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் முப்பத்தியைந்து நூல்களில்  ஒரு நாடக நூல்  “ மணல் வீடு “  உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை என்று எல்லாத்தளங்களிலும் தடம் பதித்திருக்கிறார். மணல் வீடு என்ற தலைப்பில்  ஜே.கிருஸ்ணமூர்த்தியின் தமிழ் நூல் ஒன்று ஞாபகம் வருகிறது. தமிழில் நாடக நூல்கள் வெகு குறைவு. எழுத்தாளர்களும் ஆர்வம் காட்டுவதில்லை. தி. ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, பி.எஸ். ராமையா, ஜெயந்தன், பிரபஞ்சன், இன்குலாப் போன்ற எழுத்தாளர்கள் சில நாடகங்களை எழுதியிருக்கிறார்கள். மற்றபடி நவீன நாடகங்களை நாடகக்காரர்களே படைத்துக் கொள்கிறார்கள். நவீன நாடகங்கள் உருவான பிறகு எழுத்தாளர்கள் நாடகத்துறையை திரும்பிப் பார்ப்பதில்லை. அவைகளும் மக்களை நெருங்கவில்லை. கோமல் சுவாமிநாதனின் சட்டக வடிவ நாடகங்கள் மக்களின் போராட்டங்களை சித்தரித்தன. அதனால் மக்களின் பெரும் வரவேற்பை பெற்றன. கோமலுக்குப்பின் சில நல்ல நாடகங்களை தஞ்சை ராமசாமி உருவாக்கி வெற்றி பெற்றார். அமைப்புகள் பின்னணி இல்லாததால் மக்களை அதிகம் சென்றடையவில்லை.

Continue Reading →