வாசிப்பும், யோசிப்பும் 8: மலேசிய எழுத்தாளர் வே.ம.அருச்சுணனின் ‘வேர் மறந்த தளிர்கள்’ பற்றிய குறிப்புகள்!

[தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளிவந்துகொண்டிருக்கும் மலேசிய எழுத்தாளர் வே.ம.அருச்சுனனின் 'வேர் மறந்த தளிர்கள்' நாவல் விரைவில் நூலாக வெளிவரவுள்ளது. அதற்காக எழுதிய முன்னுரை இது. - வ.ந.கி-]   [தற்போது ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராக வெளிவந்துகொண்டிருக்கும் மலேசிய எழுத்தாளர் வே.ம.அருச்சுணனின் ‘வேர் மறந்த தளிர்கள்’ நாவல் விரைவில் நூலாக வெளிவரவுள்ளது. அதற்காக எழுதிய முன்னுரை இது. – வ.ந.கி-]   இன்று இணையத்தின் வரவு ஏற்படுத்தியிருக்கும் நல்விளைவுகளிலொன்று பல்வேறு நாடுகளிலும் வாழும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை மிகவும் இலகுவாக்கி விட்டது என்பதுதான். தகவல் பரிமாற்றம் எத்துறையினைச் சேர்ந்ததாகவிருந்தாலும், அதனை மிகவும் இலகுவாக்கிவிட்டது. இதனை அனைவரும் புரிந்துகொண்டு மிகவும் ஆரோக்கியமாகச் செயற்படுவது அவசியம். இந்த இணையத்தின் வரவு இலக்கியத்தைப் பொறுத்தவரையிலும் பல நல்ல விடயங்களை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச நாடுகள் பலவற்றில் வாழும் எழுத்தாளர்களின் படைப்புகளை, அவர்கள் வெளியிடும் இணைய இதழ்களை, அச்சூடகங்களின் இணையப் பதிப்புகளை .. இவற்றையெல்லாம் இலகுவாகக் கண்டடைய முடிகிறது. வாசிக்க முடிகிறது. அந்த வகையில் எத்துறையினைச் சேர்ந்ததாகவிருந்தாலும் (இலக்கியமுட்பட) அத்துறைமீதான ஆய்வினை இணையம் மிகவும் இலகுவாக்கி விட்டது. இந்த இணையத்தின் விளைவாக உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பல்வேறு காலகட்டங்களில் புலம்பெயர்ந்த தமிழர்கள் படைக்கும் இலக்கியத்தை அறிய, வாசிக்க முடிகிறது. இதன் மூலம் பல்வேறு தகவல்களை அப்படைப்புகளினூடு அறிய முடிகிறது. இவ்விதமாக அண்மைக்காலத்தில் நான் அறிந்துகொண்ட மலேசிய எழுத்தாளரே வே.ம.அருச்சுணன். இவரது சிறுகதைகள், கட்டுரைகள், இலக்கிய நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் மற்றும் ‘வேர் மறந்த நாவல்’ பற்றியெல்லாம் ‘பதிவுகள்’ இணைய இதழ்மூலம் அறிந்துகொண்டேன். அந்த நாவல் நூலாகவும் வெளிவரவிருப்பது மகிழ்ச்சிக்குரியது. இந்த நாவலைப் படித்தபொழுது எழுந்த சில என் உணர்வுகளின் வெளிப்பாடே இக்கட்டுரை.

Continue Reading →

காலமும் கணங்களும்: இலக்கிய உலகில் ஒரு யோகி கணேஷ்!

காலமும் கணங்களும்: இலக்கிய உலகில் ஒரு யோகி கணேஷ்!எழுத்தாளர் முருகபூபதிபாலாவின் இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தைப்பார்த்த எனது இரண்டாவது மகள் பிரியா மிகவும் கலவரமடைந்து “ அப்பா…நாம் விரும்பி ருசித்து அருந்தும் தேநீருக்குப்பின்னால் துயரம் நிறைந்த பெரிய வரலாறே இருக்கிறதே…பரதேசி படம் என்னை மிகவும் பாதித்துவிட்டது” என்றாள். தேநீரின் நிறம் சிவப்பு. அதன் மூலப்பொருளை உற்பத்தி செய்யும் மக்களின் குருதியிலிருந்தும் உழைப்பிலிருந்தும் பிறந்த உலகப் பிரசித்திபெற்ற பானம். பிரித்தானியர் இந்தியாவிலிருந்து தமிழ்மக்களை கூலி அடிமைகளாக இலங்கைக்கு அழைத்துவந்து இறுதியில் அவர்களை நாடற்றவர்களாக்கிவிட்டுச்சென்ற வரலாற்றை மகளுக்குச்சுருக்கமாகச் சொல்லிவிட்டு, இயக்குநர் பாலா தமிழ்நாட்டில் தேயிலைத்தோட்டங்களில் கூலி அடிமைகளாக வேலைசெய்த மக்களுக்கு நேர்ந்த கொடுமையை சித்திரித்திருக்கிறார்” என்றேன். மறைந்த இலக்கியவாதி கே.கணேஷ் அவர்களைப்பற்றி இந்த காலமும் கணங்களும் தொடர் எழுதும்போது பரதேசி படமும் கணேஷ் நீண்ட நாட்களுக்கு முன்னர் எனக்கு எழுதியிருந்த பின்வரும் கவிதையும் நினைவுக்கு வந்தன.

Continue Reading →