தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் ‘வைகறை’ சிறுகதைத் தொகுதி மீது ஒரு பார்வை

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் 'வைகறை' சிறுகதைத் தொகுதி மீது ஒரு பார்வைவைகறைப் பொழுதினில்
வைகறை வருவது
மனதுக்கு இனியது
சிறுகதை தாங்கி
சிறப்புடன் திகழ்வது
சிந்தைக்குச் சிறந்தது!

ஆம்! இளம் பெண் எழுத்தாளரும், கவிதாயினியும், பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் துணை ஆசிரியருமான தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, தனது இரண்டாவது நூலாக வைகறை என்ற சிறுகதை நூலை வெளியிட்டிருக்கிறார். இவர், ஏற்கனவே `இன்னும் உன் குரல் கேட்கிறது’ என்ற பெயரில் கவிதைத் தொகுதி ஒன்றினை வெளியிட்டிருந்தார். வாசகர் மனதில் அந்தக் குரல் ஒலித்துக்கொண்டிருக்கும் வேளையில்தான் வைகறை சிறுகதைத் தொகுதியும் வந்துவிட்டது. இந்நூல் இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் 27வது வெளியீடாகும். இளம் எழுத்தாளர்களை இனங்கண்டு ஊக்குவிப்பு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் மேற்படி மன்றம், கவிதாயினியும் பூங்காவனம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான வெலிகம ரிம்ஸா முஹம்மதின் `தென்றலின் வேகம்’ என்ற கவிதைத் தொகுதியினையும் ஏற்கனவே வெளியிட்டு வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் – 10: அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின், எந்தையும் உடையேம்; எம் குன்றும் பிறர் கொளார்’

வாசிப்பும் யோசிப்பும் - 10அண்மையில் அ.முத்துலிங்கத்தின் நூலான ‘ஒன்றுக்கும் உதவாதவன்’ படித்தேன். அதிலொரு கட்டுரை ‘கிழங்கு கிண்டியபோது கிடைத்த ரத்தினக்கல்’. பேராசிரியர் ம.இலே.தங்கப்பாவின் மொழிபெயர்ப்பில் சங்கப்பாடல்கள் சில Love Stands Alone என்னும் பெயரில் வெளிவந்திருந்தது பற்றிய தனது கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதில் மிகவும் நன்கறியப்பட்ட பாரி மகளிரின் கவிதையான புறநானூறுப் பாடலான ‘அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்’ பாடலின் மொழிபெயர்ப்பைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

Continue Reading →