Thamil Creative Writers Association (Canada) : Uthayan Tamil newspaper and TNA leaders are under attack by Government Goons in the North.

Thamil Creative Writers Association (TCWA)
56 Littles Road
Scarborough, ON
M1B 5C5
416-281-1165 

April 03, 2013-  Uthayan Tamil newspaper and TNA leaders are under attack by Government Goons in the North. We unreservedly and unequivocally condemn the attack on the Uthayan Tamil newspaper office at Kilinochchi on April 03, 2013. This attack comes on the heels of another attack on TNA MPs and party activists holding a meeting at Sritharan MP's Office at Kilinochchi on March 31, 2013 to discuss forthcoming Northern Provincial Council election. This by no means is the first time such brazen attacks have taken place openly and during day light. Although the four MPs escaped unhurt, the attackers inflicted injuries to at least 13 persons and 2 personnel from the Ministerial Security Division (MSD) before walking away from the scene. Among the attackers were army intelligence operatives and CIDs from the Police! Three were caught red-handed, but the Police let them go.April 03, 2013-  Uthayan Tamil newspaper and TNA leaders are under attack by Government Goons in the North. We unreservedly and unequivocally condemn the attack on the Uthayan Tamil newspaper office at Kilinochchi on April 03, 2013. This attack comes on the heels of another attack on TNA MPs and party activists holding a meeting at Sritharan MP’s Office at Kilinochchi on March 31, 2013 to discuss forthcoming Northern Provincial Council election. This by no means is the first time such brazen attacks have taken place openly and during day light. Although the four MPs escaped unhurt, the attackers inflicted injuries to at least 13 persons and 2 personnel from the Ministerial Security Division (MSD) before walking away from the scene. Among the attackers were army intelligence operatives and CIDs from the Police! Three were caught red-handed, but the Police let them go. These planned attacks could be the beginning of a new wave of violent government campaign to intimidate and disrupt TNA and its supporters.  The latest attack on Uthayan Tamil newspaper office at Kilinochchi causing widespread damage to property is one of several earlier attacks on Uthayan editorial staff, reporters and employees. They have faced deaths, threats and intimidation before and continued to do so now.

Continue Reading →

தொடர் நாவல்: அசோகனின் வைத்தியசாலை (8 & 9)

அத்தியாயம் 8

நோயல் நடேசன்இன்று இரவு வைத்தியசாலையில் அதிகம் வேலையில்லை என நினைத்த இளைப்பாற நினைத்த கொரிடோரில் நடந்த சுந்தரம்பிள்ளைக்கு ஒரு வேலை அறுபது கிலோவில் வந்து கொண்டிருந்தது.  ரொட்வீலர் நாயை வைத்தியசாலையில் உள்ள தள்ளுவண்டியில் வைத்து அதை தகப்பனும் மகனுமாக தோற்றமளித்த இருவர் தள்ளிக் கொண்டு வந்தார்கள். மயக்கமாகிய அல்லது இறந்த நாயை மட்டும்தான் வண்டியில் வைத்து தள்ளமுடியும். மனித நோயாளர்கள்போல் அவை ஒத்துளைப்பு  கொடுப்பன அல்ல. இந்த நாய் மயக்கத்திற்கு அல்லது இறப்புக்கு அருகாமையில் இருப்பதாலே இவர்களால் அமைதியாக தள்ள முடிகிறது. நாயின் தலையை தவிர  மற்றய பகுதிகள் சிவப்புத் துணியால் போர்த்தப்பட்டு மறைக்கப்பட்டாலும் அதனது பெரிய உடல், போர்த்திய துணியை மீறி  வெளித் தெரிந்தது.முன்னிரண்டு கால்களும், தலை,கழுத்து என்ற பாகங்கள் வெளித் தெரிந்தது. அதனது கருமையான கண்கள் அந்த நாய் உயிருடன் விழித்திருப்பதை தெரிவித்தது. பரிசோதனை அறைக்குள் வண்டி தள்ளிவரப்பட்டு நிறுத்தப்பட்டதும் அருகில் அந்த நாயை பார்த்ததும் சுந்தரம்பிள்ளைக்கு  அளவற்ற கோபம் தள்ளி வந்தவர்களில்  ஏற்பட்டது.

Continue Reading →

சிறுகதை: ஒரு காதல் குறிப்பு!

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கைபௌர்ணமி நாளின் முன்னிரவுப் பொழுதொன்றில் காற்று வரத் திறந்திருந்த யன்னல் பிடித்தமான மெல்லிசைப் பாடலொன்றினை ஏந்தி வந்து தனித்திருந்த அறையினை நிறைக்கத் தொடங்கிய இக்கணத்தில் உன்னை நினைத்துக் கொள்வது கூட மிகப் பிடித்தமானதாக இருக்கிறது. உன்னைக் காற்று ஏந்தி வருகிறதா? மெல்லிசையின் ராகங்களுக்குள் நீ மறைந்து வந்து குதிக்கிறாயா ? பௌர்ணமியின் ஒளிக் கீற்றுக்கள் உன் உருவம் தாங்கி வருகிறதா போன்ற மாயக் கேள்விகளுக்கு என்னிடத்தில் விடைகளில்லை. என்னைப் போல இவையெல்லாவற்றையும் ரசிக்கும் மனம் கொண்ட நீ, என்னுள்ளிருக்கும் நீ, உன்னை நினைக்க வைக்கிறாய். பசுமை மிகுந்த சோலையொன்றின் மத்தியில் நீர் மிதந்து வழியுமொரு கிணற்றினைச் சூழ உள்ள தரையும் கூட ஈரலிப்பைக் காட்டுவதைப் போல உன் அன்பின் ஈரத்தில் கசியுமென் விழிகளை இந்த மாடியின் சாளரத்துக்கப்பாலுள்ள வெளிகளில் அலையவிடுகிறேன். தாயொருத்தி சிறுகுழந்தையை மிகுந்த அன்பைத் தாங்கித் தன் மார்போடு அணைத்தபடி வீதியினோரமாக நடந்து போகிறாள். ஒரு ஆண், தந்தையாக இருக்கக் கூடும், பூலோகம் முழுதையும் சுற்றிப் பார்க்கவைக்கும் பாசத்தை ஏந்தியபடி நடை பயிலக் கற்றுக் கொண்டிருக்குமொரு குழந்தைக்கு, நடக்கக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறான். சூரியனை இரவில் கொண்டு வரும் நகரத்தின் ஒளிவிளக்குகள், புதிதாகப் பிறந்த தன் குட்டியைக் கழுத்தில் கவ்வி வேற்றிடம் மாற்றுமொரு பூனை, இப்பொழுதுதான் மொட்டவிழ்த்து வாசனை அனுப்பும் இரவுராணிப் பூ, நிஷ்டை கலைந்த கலவரத்தில் எங்கோ கீச்சிடுமொரு ஒற்றைப் பட்சி… இன்னுமின்னும்… அனைத்தும் உன் நினைவுகளையே சுமந்துவருகின்றன.

Continue Reading →

அமைதியும் ஆற்றலும் ஆளுமையும் இணைந்த இலக்கிய கலாவித்தகர் மணிவிழா நாயகர் கலாமணி

எல்லாமே நேற்று நிகழ்ந்தது போலிருக்கிறது.  காலங்கள் நடக்கவில்லை. சக்கரம்பூட்டிக்கொண்டு ஓடுவதனால்தானோ  என்னவோ    நண்பர் கலாமணியுடனான   நட்புறவின்    தொடக்கமும்    நீட்சியுற்ற  நேசமும் பல்வேறு நிகழ்வுகளின் ஊடே மனதில் பசுமையாக நிறைந்திருக்கிறதுஎழுத்தாளர் முருகபூபதிஎல்லாமே நேற்று நிகழ்ந்தது போலிருக்கிறது.  காலங்கள் நடக்கவில்லை. சக்கரம்பூட்டிக்கொண்டு ஓடுவதனால்தானோ  என்னவோ    நண்பர் கலாமணியுடனான   நட்புறவின்    தொடக்கமும்    நீட்சியுற்ற  நேசமும் பல்வேறு நிகழ்வுகளின் ஊடே மனதில் பசுமையாக நிறைந்திருக்கிறது. இலங்கையில் கலாமணிக்கும் எனக்குமிடையே துளிர்த்த நட்பு அவுஸ்திரேலியாவில்தான் கொடியாக –  செடியாக – மரமாக செழித்து கிளைவிட்டு படர்ந்தது என கருதுகின்றேன்.  அவர் தனது பட்டமேற்படிப்பு ஆய்வுக்காக   அவுஸ்திரேலியா   சிட்னிக்கு வந்தார்.   நான் வாழ்ந்த மாநில மாநகரம் மெல்பன். மனைவி  பிள்ளைகளை விட்டுப்பிரிந்து வரும் துயரத்தை கடந்துவருதல் என்பது எத்தகைய   மனஉளைச்சல்   என்பதை  அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றேன். Home Sick இடம்பெயர்ந்தவர்களும் புலம் பெயர்ந்தவர்களும்   அனுபவித்த    புத்திக்கொள்முதல்தான். எனினும் தான் வந்தநோக்கத்தில்   கண்ணும்   கருத்துமாக இருந்து   அந்த இக்கட்டான காலகட்டத்தை கடந்துவந்தவர் கலாமணி.   சிறிது காலத்தில் மிகவும் பிரயாசைப்பட்டு மனைவி மக்களை இங்கு அவர் அழைத்துக்கொண்டபின்பு    ஓரு குடும்பத்தலைவன் என்ற முறையில் அவர்களின்   எதிர்காலம்   குறித்த   ஏக்கமும்   கவலையும் அவரது மனதில் கொழுவேறியது.

Continue Reading →

அமைதியும் ஆற்றலும் ஆளுமையும் இணைந்த இலக்கிய கலாவித்தகர் மணிவிழா நாயகர் கலாமணி

எல்லாமே நேற்று நிகழ்ந்தது போலிருக்கிறது.  காலங்கள் நடக்கவில்லை. சக்கரம்பூட்டிக்கொண்டு ஓடுவதனால்தானோ  என்னவோ    நண்பர் கலாமணியுடனான   நட்புறவின்    தொடக்கமும்    நீட்சியுற்ற  நேசமும் பல்வேறு நிகழ்வுகளின் ஊடே மனதில் பசுமையாக நிறைந்திருக்கிறதுஎழுத்தாளர் முருகபூபதிஎல்லாமே நேற்று நிகழ்ந்தது போலிருக்கிறது.  காலங்கள் நடக்கவில்லை. சக்கரம்பூட்டிக்கொண்டு ஓடுவதனால்தானோ  என்னவோ    நண்பர் கலாமணியுடனான   நட்புறவின்    தொடக்கமும்    நீட்சியுற்ற  நேசமும் பல்வேறு நிகழ்வுகளின் ஊடே மனதில் பசுமையாக நிறைந்திருக்கிறது. இலங்கையில் கலாமணிக்கும் எனக்குமிடையே துளிர்த்த நட்பு அவுஸ்திரேலியாவில்தான் கொடியாக –  செடியாக – மரமாக செழித்து கிளைவிட்டு படர்ந்தது என கருதுகின்றேன்.  அவர் தனது பட்டமேற்படிப்பு ஆய்வுக்காக   அவுஸ்திரேலியா   சிட்னிக்கு வந்தார்.   நான் வாழ்ந்த மாநில மாநகரம் மெல்பன். மனைவி  பிள்ளைகளை விட்டுப்பிரிந்து வரும் துயரத்தை கடந்துவருதல் என்பது எத்தகைய   மனஉளைச்சல்   என்பதை  அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றேன். Home Sick இடம்பெயர்ந்தவர்களும் புலம் பெயர்ந்தவர்களும்   அனுபவித்த    புத்திக்கொள்முதல்தான். எனினும் தான் வந்தநோக்கத்தில்   கண்ணும்   கருத்துமாக இருந்து   அந்த இக்கட்டான காலகட்டத்தை கடந்துவந்தவர் கலாமணி.   சிறிது காலத்தில் மிகவும் பிரயாசைப்பட்டு மனைவி மக்களை இங்கு அவர் அழைத்துக்கொண்டபின்பு    ஓரு குடும்பத்தலைவன் என்ற முறையில் அவர்களின்   எதிர்காலம்   குறித்த   ஏக்கமும்   கவலையும் அவரது மனதில் கொழுவேறியது.

Continue Reading →

பதின்மூன்றாவது அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்விழா

இடம் : சிட்னி – ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரக்கல்லூரி (Homebush Boys’ High School)
காலம் : (20.04.2013) சனிக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 7 மணிவரை.

பதின்மூன்றாவது அவுஸ்திரேலியத் தமிழ் எழுத்தாளர்விழாதமிழ் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் சந்த்தித்துக் கலந்துரையாடும் – எழுத்தாளர்விழா 2001 ஆம் ஆண்டிலிருந்து அவுஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகின்றது. 2005 வரையும் இதன் பிரதம அமைப்பாளராக திரு லெ.முருகபூபதி செயல்பட்டார். 2006 இலிருந்து ‘அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்’ என்ற அமைப்பு இவ்விழாவை ஒழுங்கு செய்து வருகின்றது. இதுவரை காலமும் நடந்த விழாக்களில் இலங்கையிலிருந்து தி.ஞானசேகரன், கோகிலா மகேந்திரன், தேவகெளரி, உடுவை.எஸ்.தில்லை நடராஜா, தெளிவத்தை ஜோசப், லலிதா.நடராஜா ஆகியோரும் டென்மார்க்கிலிருந்து வி. ஜீவகுமாரன், அமெரிக்காவிலிருந்து வேலுப்பிள்ளை. பேரம்பலம், இங்கிலாந்திலிருந்து ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், தமிழகத்தின் மூத்த தலைமுறைப் படைப்பாளி எஸ்.வைதீஸ்வரன், ஜேர்மனியிலிருந்து எழுத்தாளரும் ஓவியரும் ‘வெற்றிமணி’, ‘சிவத்தமிழ்’ இதழ்களின் ஆசிரியருமான மு.க.சு.சிவகுமாரன் ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.

Continue Reading →