தன்னை விடவும் 75 வயதுகள் கூடிய ஒரு முதியவரைத் திருமணம் செய்ய நேர்ந்த 15 வயது இளம்பெண் மற்றும் அனைத்து நாடுகளினதும் கெஞ்சல்களை மீறி சிரச்சேதம் செய்யப்பட்ட இளம்பெண் ரிஸானா நபீக். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த இரண்டு இளவயதுப் பெண்கள் தொடர்பான செய்திகளே சவூதி அரேபிய ஊடகங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளாக அமைந்தன. தாம் இந்தளவுக்குப் பிரபலமாகப் போகிறோமென கிஞ்சித்தேனும் நினைத்துக் கூடப் பார்த்திராத இப் பெண்கள் முழு உலகத்தினதும் கவனத்தை ஈர்த்துவிட்டார்கள். 90 வயது முதியவரைத் திருமணம் முடிக்க நேர்ந்த சிறுமியின் பெயர் ஊடக தர்மத்தின் காரணமாக எந்த ஊடகங்களாலும் வெளியிடப்படவில்லை. ஆனாலும் அவரது வயது பதினைந்து எனக் குறிப்பிட்டுள்ளது. சவூதியரான தாய்க்கும், யெமனைச் சேர்ந்த தந்தைக்கும் பிறந்த இந்தச் சிறுமியின் குடும்பம் மிகவும் வறியது. வறுமையிலிருந்து மீளும் வழியை, 90 வயது முதியவரொருவர் இவரது தாயிடம் எடுத்துக் கூறியிருக்கிறார். அதாவது 17,500 அமெரிக்க டொலர்கள் தந்து அப் பெண்ணைத் தான் திருமணம் செய்ய விரும்புவதாகக் கூறியதும், வேறு வழியின்றி பெற்றோர் சம்மதிக்க வேண்டியதாயிற்று. தனது எதிர்காலத்தை இருளுக்குள் தள்ள வேண்டாமென பெற்றோரிடமும், உறவினர்களிடமும் அழுது புலம்பிய சிறுமியின் கதறல்கள் பலனற்றுப் போயின. பணத்தினைப் பெற்றுக் கொண்ட பெற்றோர்கள் சிறுமியை முதியவரின் வீட்டில் கொண்டுபோய் விட்டனர்.
[ பேராசிரியர் கா.சிவத்தம்பியின் பிறந்த தினம் மே 10. அதனையொட்டி உயிர்நிழல் சஞ்சிகையில் வெளியான இந்த நேர்காணல் மீள்பிரசுரமாகின்றது. – பதிவுகள் ]
ய.ரா: நாங்கள் இந்த நேர்காணலிலை முழுக்க மார்க்சியம், மார்க்சியத்தினுடைய எதிர்காலம் இவை தொடர்பான விடயங்கள் குறித்துப் பேசலாம் என்று எண்ணுகிறேன். சோவியத் யூனியனுடைய வீழ்ச்சிக்கான காரணங்களை நீங்கள் எப்படி assess(மதிப்பீடு) பண்ணுகிறீர்கள்?
கா.சி : சோவியத் யூனியனுடைய வீழ்ச்சிக்கான காரணக்களை நான் இப்படிப் பார்க்கிறேன். இந்த மார்க்சியத்திற்கு ஏற்பட்ட முக்கியமான பிரச்சினை என்னவென்றால் சோவியத் stateஇனுடைய, சோவியத் அரசினுடைய development-உம் சோவியத் அரசு ரஷ்யப் பேரரசினுடைய பகுதிகளை சோவியத் அரசுக்குள் கொண்டு வரவேண்டிய– கொண்டு வந்த நிர்ப்பந்தமும் இதன் காரணமாக, தொடக்கம் முதலே காணப்பட்ட ஒரு சமனற்ற வளர்ச்சியும, சோவியத் ரஷ்யப் புரட்சியை, ரஷ்யப் பேரரசின் மாநிலங்கள் முழுவதற்கும் புதுமையாக ஆக்க முனைந்ததில் எற்பட்ட வரலாற்றுப் பிரச்சினைகள் அடிப்படையில் உள்ளன என்று நான் கருதுகிறேன். புரட்சி ஏற்பட்டது ரஷ்யாவில்தான், மொஸ்கோவில்தான். ஆனால் ரஷ்யப் பேரரசு, கசாக்ஸ்தான் வரை துருக்கிஸ்தான் வரை நீண்டு கிடந்தது. லெனின் காலத்திலே படிப்படியா இவையெல்லாம் அதாவது 27, 28 இலை தான் வந்து சேருது. இங்கெல்லாம் பெரிய ஒரு revolution உடைய தன்மைகள் பற்றியோ புரட்சி பற்றியோ அதற்கான சிந்தனைகளே இருந்தது கிடையாது.