சல்மா- ஆவணப்படத் திரையிடலும் கலந்துரையாடலும்…

காலம்- 18 ஜுன் 2013 (புதன்), மாலை 6 மணிTRINITY CENTRE,EAST AVENUEEASTHAM- E12 6SG ஆளுமைமிகு ஒரு கவிஞராக அறியப்பட்ட ஒரு பெண்ணின் கதை. ஆயிரமாயிரம்…

Continue Reading →

சீனத் தமிழ் வானொலியின் பொன்விழா!

அன்று…..
தமிழ் ஒலிபரப்பு தென்னாசியா ஒலிபரப்பு மையத்தைச் சேர்ந்தது. தற்போது, சீனத் தமிழ் வானொலியில் 18 சீனப் பணியாளர்களும் 2 தமிழ்ப் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

முதன் முதலாக சீனாவில் 1920க்கும் 1930க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் வானொலியின் குரல் ஒலிக்கத் துவங்கியது எனலாம். சீனாவின் குறிப்பிட்ட‌சில நகரங்களில் அரசியல் சூழலுக்காகவே உதயமான வானொலி ஒலிபரப்பாக இருந்தது. சீன கம்யூனிசக் கட்சி மார்ச் மாதம் 1940ல் மாஸ்கோவிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒலியலைபரப்பிகளின் ஊடாக சோதனை முயற்சியைத் துவங்கியது.  ஷின்ஹுவா புதிய சீன வானொலி ( Xinhua New Chinese Radio (XNCR) ) என்ற பெயரில் யான்னானிலிருந்து 1940ம் ஆண்டு, டிசம்பர்த் திங்கள்30ம் நாள் ஒலிக்கத் துவங்கியது. இந்த வானொலியானது 1945களில் இதன் நிகழ்ச்சி நிரல் ஒழுங்குபடுத்தப்பட்டுச் செய்திகள், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், போர் குறித்த அறிவிப்பு வெளியிடுதல் போன்றவற்றோடு கலை மற்றும் இலக்கியஞ்சார்ந்த‌ நிகழ்ச்சிகளை பரவலாக  ஒலிபரப்பத்துவங்கியது.

Continue Reading →

எரிப்பதால் வரலாற்றை திருத்தி எழுத முடியுமா?

– யாழ்ப்பாணப் பொது நூலகம் சிங்கள வன்முறையாளர்களால் தீவைத்து அழிக்கப்பட்ட நினைவுநாளை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது (01.06.2013) –

N.Selvarajahநூல்களை எரிப்பதும் நூலகங்களை எரிப்பதும் அறிவுஜீவிகளை அழிப்பதும் தமக்குப் பாதகமானதெனக் கருதும் மாற்றுக்கருத்தை இல்லாமல் செய்வதற்கான வழிமுறைகளாக உலகெங்கினும் உள்ள அரசியல் அதிகார வர்க்கங்களினால் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. மடாலயங்களில் சேகரித்து வைக்கப்பெற்ற நூல்களை எதிரிகள் அழித்தார்கள், அலெக்சாந்திரியா நூலகத்தை நிர்மூலமாக்கினார்கள் என்பதெல்லாம் வரலாறு. பப்பைரஸ் என்னும் பத்திரிகைத்தாளின் முன்னோடி அறியப்படாத அந்நாளில் இருந்த நூல் ஒரு பிரதியோ, சில பிரதிகளோ  ஏடுகளிலும், களிமண் தகடுகளிலும் எழுதப்பட்டுப் பேணப்பட்டு வந்திருந்தன. அவற்றை அழிப்பதன் மூலம் அதிகார வர்க்கம் அதிலிருந்த கருத்துக்களை குழி தோண்டிப் புதைப்பதில் ஓரளவு வெற்றி கண்டிருக்கலாம். அன்று மட்டுமல்ல இன்று அச்சியந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிற்காலத்திலும் இந்த நடைமுறையைக் கைக்கொள்வதினால் இவர்கள் எதைச்சாதித்து விட்டார்கள்?

Continue Reading →