நாங்கள் நடக்கிற பாதை தந்தை செல்வாவின் பாதை என்று சொல்லிலும் செய்கையிலும் காட்டினால் சர்வதேசம் நாங்கள் சொல்லுவதை நம்பும்! – மா.அ. சுமந்திரன், பா.உறுப்பினர் தந்தை செல்வா நினைவுப் பேருரை –

தமிழரசுக்கட்சியின் தொடக்கநரும்  தமிழ்மக்களின்  தந்தை எனவும் வாஞ்சையோடு போற்றப்படும் தந்தை செல்வாவின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் விழா  தமிழரசுக் கட்சியால் அனுட்டிக்கப்பட்டது.தமிழரசுக்கட்சியின் தொடக்குநரும்  தமிழ்மக்களின்  தந்தை எனவும் வாஞ்சையோடு போற்றப்படும் தந்தை செல்வாவின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் விழா  தமிழரசுக் கட்சியால் அனுட்டிக்கப்பட்டது. வந்தாறுமூலை சித்திவிநாயகர் ஆலய முன்றிலில்  நடந்த இந்த விழாவுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கி. துரைராஜசிங்கம் தலைமை வகித்தார்.  இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்துகொண்டதுடன் பிரதம விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா. அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) மா.நடராசா, அம்பாறை மாவட்ட மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரன், திருமலை மாவட்ட மாகாணசபை உறுப்பினர் நாகேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன்போது சித்திவிநாயகர் ஆலயத்தில் சிறப்பு  பூசை இடம்பெற்றதுடன் தந்தை செல்வாவின் திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரவேற்புரையினை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித்தலைவர் சேயோன் நிகழ்த்தினனார். அதனைத் தொடர்ந்து தலைமையுரையினை  கி.துரைராஜசிங்கம் நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து மா.அ. சுமந்திரன், பா.உறுப்பினர் தந்தை செல்வா  நினைவுப் பேருரை ஆற்றினார். அதன் முழு வடிவம் கீழே கொடுக்ப்பட்டுள்ளது.

Continue Reading →

கனடாவில் ‘கூடுகள் சிதைந்தபோது’ நூல் வெளியீட்டு விழா

மே 11, 2013 அன்று கனடா கந்தசாமி ஆலயத்தில் எழுத்தாளர் அகிலின் ‘கூடுகள் சிதைந்தபோது’ நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. பிரபல எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் முதற் சிறப்புப் பிரதியை வெளியிட மருத்துவர் லம்போதரன் அதனைப் பெற்றுக்கொண்டார். மேற்படி நிகழ்வின் காட்சிகள் சிலவற்றை ஒரு பதிவுக்காக இங்கு பதிவு செய்கின்றோம்.

கனடாவில் ‘கூடுகள் சிதைந்தபோது’ நூல் வெளியீட்டு விழா

Continue Reading →

சிறுகதை: கூடுகள் சிதைந்தபோது

- அகில் -கோடை வெயில் அனலாய்க் கொதித்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது விசிறி விட்டுப்போன காற்றில் மட்டும் லேசாய் ஈரப்பதம். வீட்டுக்குள் இருக்க அலுப்பாய் இருக்க இந்தப் பூங்காவில் வந்து அமர்ந்துகொண்டேன். எவ்வளவு நேரம்தான் அந்த நான்கு சுவர்களையும் பார்த்துக்கொண்டிருப்பது…..? கண்தொடும் தூரத்தில் பள்ளிச் சிறுவர்கள் ஊஞ்சலாடிக்கொண்டு இருக்கிறார்கள். சற்றுத் தூரத்தில் இரண்டு இளவட்டங்கள் நெருக்கமாய் அமர்ந்து, கைகளைப் பிணைத்தபடி உலகையே மறந்து இருக்கின்றனர். அந்த மரத்திற்குக் கீழ் அமர்ந்திருக்கும் சீனநாட்டுச் சோடி ஒவ்வொருநாளும் இதே நேரத்திற்கு இங்கே வந்து அமர்ந்து விடுகிறார்கள். அந்த வயது முதிர்ந்த ஆப்கான் கிழவனும், மொட்டாக்கணிந்த அவன் மனைவியும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். என்ன சந்தோசமான வாழ்க்கை! திருப்தி எல்லா முகங்களிலும் பிரதிபலிக்கின்றன. எல்லோரும் சந்தோசமாய்…. நிம்மதியாய்….. மகிழ்ச்சியாய்…..நான் மட்டும்……?

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் -14: கலாநிதி இ.பாலசுந்தரத்தின் ‘புகலிட மண்ணில் தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகள்’ கட்டுரை பற்றி….

வாசிப்பும், யோசிப்பும் -14: கலாநிதி இ.பாலசுந்தரத்தின் 'புகலிட மண்ணில் தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகள்' கட்டுரை பற்றி...கனடாவிலிருந்து வெளிவரும் ‘தமிழர் தகவல்’ மாத இதழின் 22வது ஆண்டு மலரை அண்மையில் வாசிக்க முடிந்தது. அந்த மலரைப் பற்றிய விமர்சனமல்ல இது. அதில் வெளிவந்திருந்த இரு கட்டுரைகள் பற்றிய சில குறிப்புகளே இநத என் எண்ணப்பதிவு. பொன்னையா விவேகானந்தன் ‘கனடியத் தமிழர் வாழ்வும் வளமும்’ என்றொரு கட்டுரையினை எழுதியிருக்கின்றார். அக்கட்டுரையின் தலைப்பு இதே தலைப்பில் தமிழகத்திலிருந்து ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட்ட ‘தமிழ்க்கொடி 2006’ ஆண்டு மலரில் நான் எழுதிய கட்டுரையான ‘கனடாத் தமிழர் வாழ்வும் வளமும்’ என்னும் கட்டுரையின் தலைப்பினையே எனக்கு ஞாபகப்படுத்தியது  மேற்படி எனது கட்டுரையினைக் கனடாவிலிருந்து ஆண்டுதோறும் வெளிவரும் ‘தமிழர் மத்தியில்’ வர்த்தகக் கையேடும் சில வருடங்களுக்கு முன் தனது கையேட்டில் மீள் பிரசுரம் செய்திருந்தது. இது போன்ற கட்டுரைகளை எழுதுபவர்கள் ஏற்கனவே அத் தலைப்புகளில் கட்டுரைகள் வெளிவந்திருந்தால் இயலுமானவரையிலும் தவிர்ப்பது நல்லதென்பதென் கருத்து. மேற்படி மலரில் கலாநிதி இ.பாலசுந்தரம் ‘புகலிட மண்ணில் தமிழ்ப் பத்திரிகைகள், சஞ்சிகைகள்’ என்றொரு கட்டுரையினை எழுதியிருக்கின்றார். அக்கட்டுரை பற்றிய சில கருத்துகளே எனது இந்தப் பதிவு.

Continue Reading →