பேராசிரியர் கா.சிவத்தம்பியின் பிறந்த தினமான மே 10 அன்று அவரை நினைவு கூரும் முகமாக நிகழ்வுகள் பல நிகழ்ந்தன. தமிழ் இலக்கியச் சூழலில் தவிர்க்க முடியாத முக்கியமான ஆளுமைகளிலொருவர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள். எழுத்தாளர் ஜெயமோகன் தனது கட்டுரையான ‘கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு’ என்னும் கட்டுரையில் பேராசிரியர் பற்றிய தனது கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருப்பார். அதில் அவர் பேராசிரியர் கா.சிவத்தம்பியை இலக்கியத் திறனாய்வாளராக இனங்காண்பதற்குப் பதில் இலக்கியக் கோட்பாளராகவே இனங்கண்டிருப்பார். மேலும் பேராசிரியரின் தேடல் பற்றிய கேள்வியினையும் பேராசிரியரின் ‘தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும்’ நூலிலுள்ள் இறுதிக்கட்டுரையினை ஆதாரமாகக் கொண்டு எழுப்பியிருப்பார். அதில் ஜெயமோகன் கீழ்வருமாறு குறிப்பிட்டிருப்பார்: