இலங்கையின் (ஈழத்து இலக்கிய வானில்) தமிழ் பேசும் பெண் எழுத்தாளர்கள் மிகவும் குறைவு அதிலும் முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் மிக மிகக் குறைவு கலை இலக்கிய வரலாற்றில் இன்று நிலைக்கும் பெண் கவிஞர்களை (அதிலும் முஸ்லீம் பெண் கவிஞர்களை )விரல் விட்டு எண்ணலாம். அந்த வகையில் மீன் பாடும் தேன்னாடாம் கிழக்கிலங்கையின் கவி மணம் வீசும் பூந்தோட்டமான கிண்ணியாவில் முளைத்து தென்றலாய் சர்வதேச மட்டத்தில் கவிதைகளின் இதமான தடவலாய் தடவிக் கொண்டிருப்பவர்தான் இந்த பாயிஸா அலி. அவர் பிறந்த மண் தமிழ் கவிதை வளம் நிறைந்த மண். கவியூற்று கசியும் நிலம். மரபுக் கவிதை மா மன்னர்கள் நிறைந்த கவிக் குடும்பத்தில் பிறந்த இவர் நவீன கவிதை பிரசவத்தில் கால் பதிப்பது சிறப்பு. தன் கணவருக்கு தன் நூலை சமர்ப்பணமும் செய்து மகிழ்ச்சியும் திருப்தியும் பெறுகின்றார்.
சிந்தனை ஊற்றுக்களால் மனம் மகிழ
எழுதும் விதம் கற்றாய் கவிதைத்
தரத்தால் இமயச் சிகரம் தாண்டும்
தன்மை பெற்றுவிட்டாய் – பாயிஸா