[அண்மையில் பதிவுகள் இணைய இதழில் வெளியான ‘பிரமிளின் தவளைக் கவிதை பற்றியதொரு புரிதல்’ என்னும் எனது கட்டுரையில் ‘தவளைக் கவிதை’ பற்றிய எனது புரிதலை எழுதியிருந்தேன். அது பற்றிய ஜெயமோகனுக்கு எழுதிய கடிதத்திற்கு ஜெயமோகன் அளித்துள்ள பதிற் கடிதம் ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றது. – வ.ந.கி -] ஒரு கவிதையை வாசிக்க குறைந்தபட்ச வாசிப்பு அதிகபட்ச வாசிப்பு என இரு தளங்களை உருவாக்கிக்கொள்வது பயனளிக்கும் என்பது என் எண்ணம். குறைந்தபட்ச வாசிப்பு என்பது அந்தக்கவிதை உருவான மொழி-பண்பாட்டுச்சூழலில் கவிதையின் வரிகள் மூலம் பொதுவாக அடையச்சாத்தியமான அர்த்தம். அந்த மொழி-பண்பாட்டுச்சூழலில் உள்ள, கவிதையின் தனிமொழியை கற்பனைமூலம் விரித்து அறியும் பயிற்சி கொண்ட எல்லா கவிதைவாசகர்களும் ஏறத்தாழ அடையக்கூடிய வாசிப்பு அது. ஒரு வகுப்பில், ஒரு விவாதக்கூடத்தில், ஓர் வாசிப்பரங்கில் எப்போதும் அந்த குறைந்தபட்ச வாசிப்பைத்தான் முதலில் முன்வைக்க முடியும். இந்த வரிகள் இவ்வாறெல்லாம் பொருள் அளிக்கின்றன, ஒட்டுமொத்தமாக இக்கவிதை இந்தப் பொருளை, இந்த உணர்வை, இந்த தரிசனத்தை அளிக்கிறது என்று சொல்லலாம். அப்படிச் சொன்னதுமே அதை அங்குள்ள ஒவ்வொருவரும் தாண்ட ஆரம்பித்துவிடுவார்கள். அவர்களின் தனிப்பட்ட வாசிப்பைச் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். அதைத்தான் அதிகபட்ச வாசிப்பு என்கிறேன்.
சிறீலங்கா அரசு சிறீலங்கா மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிலைமாறாமல் தொடர்ந்தும் தோல்வி கண்டுவருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்துள்ளது. இலங்கையின் யாப்பில் கொண்டுவரப்படவுள்ள உச்தேச 13 ஆவது சட்டதிருத்தம் – இன்று சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட அதிகாரப்பரவல் மூலம் வழங்கப்பட்டுள்ள ஒரே சலுகை – இந்த வாக்குறுதி மீறல்களுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு. ஒருவிதத்தில் இந்த மீறல்களில் மிகவும் குறிப்பிடத்தக்க வாக்குறுதி மீறல் அரசியல் தீர்வு தொடர்பானது. சிறீலங்கா அரசு பல ஆண்டுகளாக அதிகாரப் பரவலாக்கல் முறைமையின் கீழ் அதிகாரம் சிறீலங்காவில் வாழும் எல்லா மக்களுக்கும் இடையில் ஒப்புரவான முறையில் பகிர்ந்தளிக்கப்படும் என வாக்களித்திருந்தது. அய்க்கிய நாடுகள் அவையின் செயலாளர் நாயகம் அவர்களோடு சேர்ந்து சனாதிபதி இராசபக்சே போர் முடிந்த மே 2009 இல் விடுத்த கூட்டறிக்கையில் அரசியல் தீர்வு தொடர்பாகப் பல உறுதிமொழிகளை வழங்கி இருந்தார். அதில் “13 ஆவது சட்ட திருத்தம் நடைமுறைப் படுத்தப்படும்” என்பது ஒன்றாகும்.
போர் முடியு முன்னர் அனைத்துக் கட்சி சார்பாளர்கள் குழு (அகசாகு) மற்றும் அகசாகு க்கு உதவியாக சனாதிபதியால் யூலை 11, 2006 இல் நியமிக்கப்பட்ட பன்முக வல்லுநர் குழுவின் தொடக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு சனாதிபதி உரையாற்றும் போது:
1889 இல் பிறந்த ரஷ்யக் கவிஞர். நிக்கோலாய் குமிலியோவ் என்ற கவிஞரைக் காதலித்து,1910 இல் திருமணம் செய்தார்; 1916 இல் இருவரும் பிரிந்தனர். எதிர்ப்புரட்சியாளர் என்ற தவறான குற்றச்சாட்டில் 1921 இல் குமிலியோவ் சுட்டுக்கொல்லப்பட்டார். 1912 இல், அக்மதோவாவின் முதலாவது கவிதை நூலான ‘மாலைப்பொழுது’ வெளிவந்தது; 1914 இல் ‘மணிகள்’ என்ற இரண்டாவது தொகுப்பு வெளியானது. 1935 – 40 ஆம் ஆண்டுகளில், – ஸ்டாலினின் ‘களைஎடுப்புக்’ காலகட்டத்தில் – எழுதப்பட்ட ‘இரங்கற்பா’ நெடுங்கவிதை மிக முக்கியமான படைப்பாகும். ஸ்டாலினின் இலக்கியக் கொமிஸாரான ‘ஸ்தனோவ்’, “ பாதி கன்னியாஸ்திரி ; பாதி வேசி” என அக்மதோவாவை இழித்துரைத்தார். ‘யுனெஸ்கோ’ நிறுவனம், 1989 ஆம் ஆண்டினை ‘அக்மதோவா ஆண்டு’ எனப் பிரகடனப்படுத்தியது. இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் உலகக் கவிஞரில் ஒருவராக அக்மதோவா கருதப்படுகிறார். 1966 இல் மரணமடைந்தார்.
[இன்று ஜூன் 15, 2013 அன்று மாரடைப்பால் மரணமான இயக்குநர் மணிவண்ணன் கீற்று இணையத்தளத்துக்கு வழங்கியிருந்த இந்த நேர்காணலை அவரது நினைவாக மீள்பிரசுரம் செய்கின்றோம். – பதிவுகள் ] இயக்குநர், நடிகர் என பொதுவெளியில் அறியப்படும் மணிவண்ணன், மார்க்ஸிய-பெரியாரிய சிந்ததைனைகளின் மீது; தீவிரப் பற்றாளர் மேலும் தேர்ந்த வாசிப்பனுபவம் உள்ளவர். மார்க்ஸியத்தின் மீதும் பெரியாரியத்தின் மீதும் அவர் கொண்டுள்ள பிடிப்பு நம்மை வியக்க வைக்கக் கூடியது. ஈழ ஆதரவு, தமிழ்த்தேசிய சிந்தனைகளின் ஊடாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் தமிழ்த்தேசிய அமைப்புகள் மீது விமர்சனங்கள் இருந்தால் சற்றும் தயங்காமல் கருத்துச் சொல்லக்கூடியவர். தமிழ்த்தேசிய அமைப்புகள் மார்க்ஸிய-பெரியாரிய அடிப்படையிலேயே இயங்க வேண்டும், இயங்கவும் முடியும் என்று உரத்துச் சொல்பவர்; இடதுசாரிகளின் ஒற்றுமையை சளைக்காமல் வலியுறுத்துபவர்; சினமாத் துறையினர் மத்தியில் வாசிப்பை ஒரு இயக்கமாகவே எடுத்துச் செல்பவர். இயக்குநர், நடிகர், ஓவியர், பாடகர், களப்பணியாளர் என்று பன்முகங்களை கொண்டிருந்தாலும் அவரிடம் எளிமையானது அவரது தோழமை.மணிவண்ணன் அவர்களை நேர்காணல் செய்ய நம்மை உந்தித் தள்ளியது அவரது வாசிப்பும் வாசக அனுபவமும்தான். அவருடைய சமகால இயக்கப்பணிகள் குறித்தோ, சினிமாத்துறை சார்ந்தோ இந்நேர்காணலில் விரிவாக பதிவு செய்யவில்லை. நம்முடைய நோக்கம் அது மட்டுமன்று. அவரது வாசிப்பு அனுபவங்களை புதிய புத்தகம் பேசுது வாசகர்களுக்கு அறியச் செய்வதன் வழியாக வாசகப் பரப்பு ஒரு சிறிய அளவிலேனும் விரிவடையும் என்பதே நம்முடைய எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் அவ்வளவுதான். – சிராஜுதீன் –
‘கிறிஸ்தவ மதத்தின் பிடியிலிருந்து மக்களை மீட்டு எடுத்தால் மட்டும்தான் புரட்சியின் வெற்றி சாத்தியமென்று’ பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கரவாத ஆட்சியின்போது கருதப்பட்ட நிலையில் Bordeaux என்னுமிடத்தில் அதி.வண.பேராயர் Pierre Bienvenu Noailles அவர்களால் உருவாக்கிய திருக்குடும்பக் கன்னியர் மடத்தின் வரலாற்றோடு இளவாலைக் கன்னியர் மடத்தின் வரலாறும் பின்னிப்பிணைந்துள்ளது. 1858 இல் யாழ்ப்பாணத்துக் கத்தோலிக்க சமய அதி வணக்கத்திற்குரிய ஆயராக இருந்த Semeria (OMI) அவர்களால் அதி வண. பேராயர் Noailles அடிகளார்க்கு யாழ்ப்பாணத்தில் பெண்கள் மத்தியில் கல்வி ஊட்டும் முகமாகää கன்னியாஸ்திரிகைகளை அனுப்பி வைக்குமாறு கடிதம் எழுதி வேண்டிக் கொண்டதிற்கிணங்க உருவானதே இளவாலைக் கன்னியர் மடமாகும்.
கலாபூஷணம் பாலமுனை பாறூக்கின் எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு… என்ற நவீன குறுங்காவிய நூல் அண்மையில் பர்ஹாத் வெளியீட்டகத்தின் மூலம் 88 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே பதம் (1987) கவிதைத் தொகுதி, சந்தனப் பொய்கை (2009) கவிதைத் தொகுதி, கொந்தளிப்பு (2010) குறுங்காவியம், தோட்டுப்பாய் மூத்தம்மா (2011) குறுங்காவியம் ஆகிய நான்கு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இலங்கை அரச சாஹித்திய மண்டல சான்றிதழ் பெற்ற நூல் கொந்தளிப்பு குறுங்காவியம் ஆகும். அதுபோல் இலங்கை அரச சாஹித்திய மண்டல விருது, கொடகே சாஹித்திய மகாகவி உருத்திரமூர்த்தி விருது, இலங்கை இலக்கியப் பேரவை (யாழ்ப்பாணம்) சான்றிதழ் ஆகியவந்றை தனதாக்கிக் கொண்ட நூல் தோட்டுப்பாய் மூத்தம்மா என்ற குறுங்காவியம் ஆகும். இனவாதிகளின் வெறியாட்டத்தில் எதுவும் தெரியாமல் மாட்டிக்கொண்டு பலியாகிப்போன அப்பாவிகளுக்கே எஞ்சியிருந்த பிரார்த்தனையோடு.. என்ற இந்த நூலை சமர்ப்பணம் செய்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நிகழ்ந்த யுத்தம் காரணமாக முஸ்லிம் தமிழ் இனங்களுக்கிடையே இருந்த உறவுநிலை, அதனால் ஏற்பட்ட விரிசல், மனமுறிவுகள், இயல்பு வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்பு, இடர்பாடுகள், விளைவுகள், ஒற்றுமை வாழ்வுக்கான சமாதான முயற்சி போன்றவற்றைப் பற்றிப் பேசுவதாகவே இந்த நூல் அமைந்திருக்கிறது.
2. சதுரங்க விளையாட்டு
அவள் வீற்றிருந்த நாற்காலி ஜொலிக்கும் சிம்மாசனம்,
தகதகத்தது பளிங்குத்தரைமேல். நிலைக்கண்ணாடியில்
ஒரு மதுரஸ திராட்சைக்கொத்தின் சித்திரம்
அதில் பொன்னிற கியூபிட் எட்டிப்பார்த்தான்.
(இன்னொரு காதல் தேவன் அவள் விழிகளை சிறகால் மறைக்க)
எழுதினாள் பக்கச்சட்டங்கள் இரட்டிப்பாக்கிய
தூங்காவண்ணமணி விளக்குச்சுடரில் பட்டுத்தெறித்தது
மேஜையும் அவள் வெல்வெட்டுப் பேழை ஆபரணங்களும்.
அள்ளிவீசிய் வெண்கிரணங்களில் ஐக்கியமான ஒளி ஜாலங்கள்
திறந்திருந்த தங்கச்சிமிழ்கள் வர்ணக்குப்பிகள் அகத்தே
திரவம், பொடி, குழம்பென்று டப்பிகளில் நெளிய
வண்ண வண்ண செயற்கை வாசனாதி திரவியங்கள்
சிந்தையை மயக்கி செயலிழந்து ஊசலாடச் செய்யும்.
வீசும் சாளரத்தென்றலில் மெழுகுத் தீபங்கள் நடனமாடும்
சித்திர விதானத்தில் எழில் கோலங்களை
புகைமண்டலங்கள் எழுப்பும் பாங்கில்
கடல்கட்டைகள் எரியும் தாமிர அடுப்பில்
கணப்பு ஆரஞ்சு நிறத்தொல் தகிரும்.
அதன் சுவரில் திமிங்கிலம் நீந்தும் மாடத்தில் ஓர் அடர்வனம்.
மங்கிய நிலவொளியில் ஒருநெஞ்சை உருக்கும் ஓவியம்.
அதில் ஒரு புராணக் காட்சி
கொடூர டார்க்குஸ் மன்னன்தன் கொழுந்தியாள்
பிலோமிலாளை கடூரமாய் கற்பழித்து
அவள் குயிலாகச் சபிக்கப்பட்டதில் இன்றும் அவள்
கானகத்தில் தன் ஊமைச் சோகத்தை கூவித்திரிகிறான்.
‘ஜக், ஜக்’ என்று இன்னும் அவள் புலம்புவது
இன்றைய ஜடக்காதுகளுக்கு கேட்காது. இப்படி எத்தனையோ சித்திரங்கள் பேசின.
அவைகளில் வெறித்த உருவங்கள் விரக்தியால்
காலத்தால் கருகிய தங்கள் கதைகளைச் சொல்லின.
அறையின் அமைதி கிழித்து அந்நேரம் மாடியில் யாரோ ஏறும்
காலடி ஓசையில் ஒய்யாரமாய் வளைந்து திரும்பினாள்
கணப்பின் கதகதப்பில் சிங்காரியின் கேஸங்கள்
ஐந்தாய் வகிந்திடும் ஜாலத்தில்
காதல் மொழிகள் பொங்கி உதிர்ந்தன.