ரொறன்ரோவில் பட்டமளிப்பு விழா – 2013

இன்டர் நாஷனல் சென்ரர் போ பைன் ஆர்ட்ஸ் (International centre for Fine Arts)  என்ற ரொறன்ரோவில் உள்ள கலை நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவில் உள்ள பெரிய சிவன் கோயில் கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. இன்டர் நாஷனல் சென்ரர் போ பைன் ஆர்ட்ஸ் (International centre for Fine Arts)  என்ற ரொறன்ரோவில் உள்ள கலை நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவில் உள்ள பெரிய சிவன் கோயில் கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. கனடாவில் உள்ள கலை ஆர்வம் மிக்க மாணவர்களுக்கான பொதுப் பரிட்சையில் சித்தியடைந்தவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. திரு திருமதி குரு அரவிந்தன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். மங்கள விளக்கேற்றி தமிழ்த் தாய் வாழ்த்து கனடிய தேசிய கீதம் கல்லூரிக்கீதம் ஆகியன இசைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து எம்மினத்திற்காகத் தம்முயிர் தந்தவர்களுக்காக ஒரு நிமிட அகவணக்கம் மேற்கொள்ளப்பட்டது. செல்வி அருசி மகேஸ்வரன் நிகழ்ச்சிகளின் அறிவிப்பாளராவும், திருமதி வனிதா குகேந்திரன் தொடர்பாளராகவும்  கடமையாற்றினார்கள்.
 

Continue Reading →

எகிப்தில் சில நாட்கள் 4

எகிப்தில் சில நாட்கள் 3நோயல் நடேசன்சலாடினால் கட்டப்பட்ட சிற்றாடல் என்ற அந்தக் கோட்டையின் சிலபகுதிகளை மட்டும்பார்த்து முடித்துக்கொண்டு மதியத்திற்கு கெய்ரோவின் கடைகளை பார்ப்பதாக ஜனநாயக முறையில் தீர்மானித்தோம். எந்த ரகமான கடைகள் என்பது பிரச்சனையாக முளைத்தது. பெண்கள் நவீன சொப்பிங் கொம்பிளக்ஸ் போவோம் என கூறியபோது எனது நண்பனும் நானும் புராதன காலமாக அமைந்துள்ளதும் அதிகமாக உல்லாசப்பிரயாணிகள் செல்லும் பெரியகடைவீதி அருகில் உள்ளது. அங்கு செல்வோம் என்று முடிவு எடுத்து கான் எல்-காலி (Khan El-Khalili) கடைவீதிக்கு சென்றோம். வெள்ளிக்கிழமையாதலால் அந்தப் பகுதியில் நமது நல்லூர் திருவிழா போல் உள்ளுர் மக்கள் நின்றார்கள். ஆனால் வெளிநாட்டு உல்லாசப்பிரயாணிகளைக் பெருமளவு அங்கு காணவில்லை. பள்ளிவாசல் கடைவீதி மற்றும் கோப்பி கடைகள் என எல்லாம்அருகருகே அமைந்துள்ளன.

Continue Reading →

வதிரி தந்த கவிஞன்: வதிரி.சி.ரவீந்திரன்

வதிரி தந்த கவிஞன்: வதிரி.சி.ரவீந்திரன்வதிரி.சி.ரவீந்திரன்ஈழத்து கவிதை உலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றவர்களில் ஒருவராகத் தெரிபவர் வானம்பாடி என அன்புடன் அழைக்கப்படும் வதிரி.சி.ரவீந்திரன் ஆகும். 25/10/1953இல் சாவகச்சேரியில் பிறந்த இவர் வதிரியையும், பின்னர் கொழும்பையும் வாழ்விடமாகவும் கொண்டிருப்பதனால் இவரின் சிந்தனைத் தளம் விரிவடைய பலருடன் நட்புடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. இவரின் கவிதை முயற்சி பூம்பொழிலில் எழுதியதுடன் ஆரம்பமாகியது எனலாம். கவிதை,சிறுகதை, கட்டுரை, நாடகம், நூல்விமர்சனம் என தன் திறமையை வெளிப்படுத்தி நின்றாலும் கவிதை மூலமே அறியப்பட்டவர். சாவகச்சேரி ட்றிபேக் கல்லூரியிலும், வதிரி.வடக்கு மெதடிஸ்ட் மிஷன் பாடசாலையிலும், உய்ர வகுப்பை கரவெடி தேவரியாளி இந்துக் கல்லூரியிலும் பயின்றார். இளமையிலேயே வாசிக்கும் பழக்கத்தினை கொண்டிருந்தவரின் அறிவுப் பசிக்குத் தீனி போடுபவர்களாக பலர் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக இவருக்கு வாய்த்த ஆசிரியர்களும், நண்பர்களும் தான்.தேவரையாளி இந்துக் கல்லூரியின் பெருமை இலக்கியத்தும் உண்டு. அங்கு படித்த காலத்தில் தான் எழுத்தாளர். திரு.தெணியான், கவிஞரும், நாடகாசிரியருமான கலாநிதி.காரை.எஸ்.சுந்தரம்பிள்ளை ஆகியோரின் நெறிப்படுத்தல் இவருக்குக் கிடைத்ததும் வாய்ப்பாக அமைந்தது. நாடகங்களில் நடிக்கும் ஆர்வம் மேலோங்க பல நாடகங்களில் நடித்தும் உள்ளார். கலாநிதி.காரை.சுந்தரம்பிள்ளை அவர்களினதும்,திரு.இளவரசு ஆழ்வாப்பிள்ளையினதும் நாடக இயக்கம் நடிப்பில் ஜொலிக்க உதவியது.நாடகப் பயிற்சிப் பட்டறையின் அனுபவம் இன்று வரை நாடக விமர்சகராகவும்,தேசிய நாடக சபை உறுப்பினராகவும் இயங்க முடிந்திருக்கிறது.

Continue Reading →