தற்கொலைக்கு ஒரு கலைஞனை விரட்டும் சமூகம்!

- வெங்கட் சாமிநாதன் -வியாளம் என்றொரு புத்தகம் சமீபத்தில் என் நெடுநாளைய நண்பர், பேராசிரியர், தமிழறிஞர் செ.ரவீந்திரனிடமிருந்து வந்தது. வியாளம் என்றால் என்ன பொருள் என்று தெரியவில்லை. தமிழறிஞர் எனக்குத் தெரிந்தவர் சிலரிடம் கேட்டுவிட்டேன். தெரியவில்லை. இதைப் படிப்பவர் யாராவது சொல்லக் கூடும். மிகுந்த சோகத்துடனும் இழப்பின் வலியுடனும் பாச உணர்வுடனும் இளமையில் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட ஒரு கலைஞனுக்கு அவரது தோழமையும் உடன் செயலாற்றும் வாய்ப்பும் பெற்றவர்கள் தங்கள் நினைவுகளை அஞ்சலியாகத் தந்துள்ளதன் தொகுப்பு இது. மறைந்த கலைஞனின் ஆளுமையையும் நேர்மையையும் பிரதிபலிப்பதே போல, மிக எளிமையான மிகுந்த தன்னடக்கம் கொண்ட, எவ்வித பகட்டும் அற்ற அவருடன் கொண்ட தங்கள் பாசத்தையும் அவரது ஆளுமையும் செயலும் தங்களுக்குத் தந்த வியப்பையும் பதிவு செய்துள்ள அஞ்சலி இது. வேலாயுதம் அந்தக் கலைஞனின் பெயர்.  தன்னடக்கம், எளிமை என்றேன். ஆளுமையும் செயல் திறனும்  தந்த  வியப்பு என்றேன். இவையே அவரை அந்த சோக முடிவுக்கு இழுத்துச் சென்றதோ என்னவோ.

Continue Reading →

கண்ணாடி வார்ப்புக்கள்-நாடக நூல் அறிமுக விழா-கண்ணோட்டம்!

கண்ணாடி வார்ப்புக்கள்-நாடக நூல் அறிமுக விழா-கண்ணோட்டம்!நேற்று  ஹரோ சிவிக்  மண்டபத்தில் (12/10/13) அவைக் காற்றுக் கலைக்  கழகத்தினரின் ‘கண்ணாடி வார்ப்புக்கள்’    நாடக நூல்  அறிமுகவிழா  சிறப்பாக  நடைபெற்றது.  சில  நூல்  அறிமுக விழாக்களுக்கு  செல்வதில் நாட்டம் கொள்வதில்லை.அங்கு விழா ஒரு பக்கம் நடக்க சபையோர் இரைச்சலுடன் கதைத்துக் கொண்டிருப்பர்.சிலர் நூலை விமர்சிக்காது ஏதோவெல்லாம் பேசிக்கொள்ள எழுத்தாளர் பாவமாய் உட்கார்ந்திருப்பார்.சில இடங்களில் நூலை விற்றுவிடுவதிலுள்ள ஆரவம்/அவசரம் மற்றவற்றில் கோட்டை விட்டிருப்பர். மாறாக, நூலுக்குள் நின்றபடியே நாடகம்,நடிப்பு,அரங்கியல் சார்ந்த விமர்சனக்களை நேர்த்தியாக திருமதி மாதவி.சிவலீலனும்,திரு.சாம் பிரதீபனும் செய்தனர். தமிழன்,மனம்பேசுது,ஈழகேசரி,புதினம் பத்திரிகைகளின் ஆசிரியர் திரு.ஈ.கே.ராஜகோபால் அவர்களின் வாழ்த்துரை நல்ல செய்திகளைச் சொன்னது.

அரங்கியல் சார்ந்த அனுபவமும்,பட்டப்படிப்பும் கொண்டவர் சாம் பிரதீபன். திருமறைக்கலா மன்றம் மூலமும்,பின்னர் தீபம் தொலைக்காட்சி ‘பிடிக்கல..பிடிக்கல மூலமும் நாடகங்களை ரசிகர்களுக்கென தந்து அசத்தியவர்.அவரின் நீதியின் இருக்கைகள் நாடக நூல் அவரின் நாடக அனுபவதிற்கு சான்றானது. எனவே அவரின் விமர்சனம்  நம் போன்றோரின் தேடலுக்குத்  தீனி  போட்டன எனலாம். நாடகம், கவிதை, அரங்கியல் சார் நூல்களின் மூலம் அறிமுகமான/பரிச்சயமான அமரர். காரை.சுந்தரம்பிள்ளை அவர்களின் மகளான திருமதி.மாதவி சிவலீலனின் விமர்சனம் நூலைப் பல தடவை படித்து உள்வாங்கியது தெரிகிறது.அவரின் தந்தையின் நாடக அனுபவம் இவரின் இலக்கிய முயற்சிகளுக்கு பெரிதும் உதவுக்கின்றன.புலிக்குப் பிறந்தது பூனையாகாது.

Continue Reading →

“இலங்கையில் தமிழின அழிப்பு”- தமிழருக்கான பாராளுமன்றக் குழுவினரின் கருத்தாய்வு

"இலங்கையில் தமிழின அழிப்பு"- தமிழருக்கான பாராளுமன்றக் குழுவினரின் கருத்தாய்வுபிரித்தானியத் தமிழர் பேரவையும், தமிழருக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த “இலங்கையில் தமிழின அழிப்பு” என்ற தலைப்பிலான கருத்தரங்கம் ஒன்று, கடந்த செவ்வாய்க் கிழமை, பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள Portcullis House என்னும் இடத்தில் நடைபெற்றது. பல்வேறு அரசியல்வாதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் ஆய்வாளர்கள், கல்விமான்கள், அரசியல் செயட்பாட்டளர்கள் கலந்து கொண்ட இவ்நிகழ்வு, விவாதங்கள் மற்றும் இலங்கையால் அரங்கேற்றப்பட்ட இனவழிப்பு சம்மந்தமான கேள்வி-பதில் அரங்கமாகவும் உருப்பெற்றது. இலங்கையில் தமிழ் மக்களின் நிலை தொடர்பான,தமிழ் மக்களுக்கும் – வேற்றின மக்களுக்கும்,  தனிநபர்களுக்கும்-அமைப்புகளுக்கும், என சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கிடையான, ஆரோக்கியமான கலந்துரையாடல் இங்கு இடம் பெற்றது.

Continue Reading →

‘ஞானம்’ சஞ்சிகையின் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கிய’ச் சிறப்பிதழ்! ஆக்கங்களை அனுப்பி வையுங்கள்!

‘ஞானம்’ சஞ்சிகையின் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கிய'ச் சிறப்பிதழ்! ஆக்கங்களை அனுப்பி வையுங்கள்!(1)  ‘ஞானம்’ தனது 15ஆவது அகவையில் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம்’ என்ற மகுடத்தில் சிறப்பிதழ் ஒன்றினை வெளியிடத் தீர்மானித்துள்ளது. படைப்பாளிகளிடமிருந்து இச்சிறப்பிதழுக்கான ஆக்கங்கள் கோரப்படுகின்றன. புலம்பெயர் எழுத்தாளர்கள் 01-10-2013க்கு முன்னர் பிரசுரமான தமது சிறந்த படைப்பு ஒன்றினை பிரசுர விபரங்களுடன் அனுப்பி வைக்கலாம். புலம்பெயர் இலக்கியம் சார்ந்த கட்டுரைகளும் வரவேற்கப்படுகின்றன. தட்டச்சு செய்யப்பட்ட படைப்புகளை 31-12-2013க்கு முன்னர் தமது புகைப்படத்துடன் மின்னஞ்சலில் அனுப்பிவைக்குமாறு வேண்டுகிறோம்.

Continue Reading →

இலண்டன் மாநகரில் பேராசிரியர் ”சாகித்திய ரத்னா” சபா ஜெயராசாவுக்குப் பாராட்டு..! ”இணுவில் ஒலி” சஞ்சிகை அறிமுகம்..!

இலண்டன் மாநகரில் பேராசிரியர் ''சாகித்திய ரத்னா" சபா ஜெயராசாவுக்குப் பாராட்டு..! ''இணுவில் ஒலி" சஞ்சிகை அறிமுகம்..!பேராசிரியர் – ”சாகித்திய ரத்னா” சபா ஜெயராசா இலண்டன் மாநகரில் கடந்த சனிக்கிழமை மாலை (28 – 09 – 2013) பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். ”இணுவில் ஒலி” சஞ்சிகை அறிமுகமும் இடம்பெற்றது. இலண்டன் தமிழ் இலக்கிய நண்பர்கள் வட்டத்தினரின் ஏற்பாட்டில் 28 -ம் திகதி மாலை இலண்டன் சிவன் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்குப் பிரபல எழுத்தாளர் வவுனியூர் இரா. உதயணன் தலைமை வகித்தார். திருமதி வேலையா தமிழ்மொழி வாழ்த்தினையும் பக்திப் பாடல்களையும் பாடினார். திருமதி நிர்மலா விஜயகுமார் வரவேற்புரை நிகழ்த்தினார். மூத்த பத்திரிகையாளர் ஈ. கே. இராஜகோபால் பேராசிரியரது பணிகளைக் குறிப்பிட்டு வாழ்த்துரை வழங்கினார். பேராசிரியர் சபா ஜெயராசா தம்பதிகளுக்குப் பொன்னாடை போர்த்து – மாலை அணிவித்து – நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.  இரா. உதயணன் பேராசிரியரின் பல்துறை ஆளுமைகள் குறித்து விரிவாகத் தமது தலைமையுரையில் குறிப்பிட்டார்.

Continue Reading →

யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !

ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்க நாவலாசிரியராக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் காலித் ஹுஸைனி, தனது 15 ஆவது வயதில் ஒரு ஆப்கானிஸ்தான் அகதிச் சிறுவனாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார். அப்பொழுது அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு சில சொற்கள் மாத்திரமே தெரிந்திருந்தது. இன்று அவர் ஒரு வைத்தியர், அமெரிக்க சமூக நல அமைப்பின் தூதுவர் மற்றும் சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்ற The Kite Runner, A Thousand Splendid Suns ஆகிய நாவல்களை எழுதிய எழுத்தாளராகவும் அறியப்பட்டிருக்கிறார். இவரது புதிய தொகுப்பான And the Mountains Echoed எனும் நாவல் கடந்த மே மாதம் 21 ஆம் திகதி வெளிவந்தது. அவரது புதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்ற நேர்காணலின் தமிழாக்கம் இது. -குறிப்பு – ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்க நாவலாசிரியராக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் காலித் ஹுஸைனி, தனது 15 ஆவது வயதில் ஒரு ஆப்கானிஸ்தான் அகதிச் சிறுவனாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார். அப்பொழுது அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு சில சொற்கள் மாத்திரமே தெரிந்திருந்தது. இன்று அவர் ஒரு வைத்தியர், அமெரிக்க சமூக நல அமைப்பின் தூதுவர் மற்றும் சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்ற The Kite Runner, A Thousand Splendid Suns ஆகிய நாவல்களை எழுதிய எழுத்தாளராகவும் அறியப்பட்டிருக்கிறார். இவரது புதிய தொகுப்பான And the Mountains Echoed எனும் நாவல் கடந்த மே மாதம் 21 ஆம் திகதி வெளிவந்தது. அவரது புதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்ற நேர்காணலின் தமிழாக்கம் இது. –

உங்களது முந்தைய இரண்டு நாவல்களும் ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டவை. உங்கள் புதிய நாவலின் சம்பவங்களும் ஆப்கானிஸ்தானை அடிப்படையாகக் கொண்டிருந்த போதிலும், அதன் கதையானது, பரம்பரைகள் மற்றும் கால இடைவெளி பலவற்றைக் கடந்து கிரீஸ், பாரிஸ் மற்றும் கலிஃபோர்னியா போன்ற உலகின் பல்வேறு பிரதேசங்களுக்கும் விரிந்து செல்கின்றது. ஆப்கானிஸ்தானைத் தாண்டி சர்வதேச அளவில் கதையை விரிவாக்கிச் செல்ல நீங்கள் தூண்டப்பட்டது எவ்வாறு?

Continue Reading →

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ‘கலை இலக்கியம் 2013’

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ‘கலை இலக்கியம் 2013’எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 27ஆம் திகதி (27.10.2013) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு EPPING MEMORIAL HALL (827  HIGH STREET, EPPING, VIC 3076 – Melway :-  182 B10 ) இல் நடைபெறும். விழாவில் அவுஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சி, கிருஷ்ணமூர்த்தி எழுதிய ‘மறுவளம்’ நூல் வெளியீடு, ‘வண்ணம்’ வெளியீட்டாளர் சிவா முனியப்பன் அவர்களின் ’ஒன்லைன் புத்தகங்கள் & ஒலிவடிவப்புத்தகங்கள்’ பற்றிய ஒரு கலந்துரையாடல், ‘பாரதம் தந்த பரிசு’,  ‘கண்ணீரினூடே தெரியும் வீதி’, ’ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள்’ நூல்கள் அறிமுகம். ’பாலகாத்தான்’ (காத்தவராயன்)கூத்து மற்றும் கானமழை (இன்னிசை நிகழ்ச்சி) என்பவை இடம்பெறும்.

அன்று நடைபெறும் ’அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர்களின் புத்தகக் கண்காட்சியில்’ உங்கள் புத்தகங்களும் இடம்பெறவேண்டுமாயின் – நீங்கள் புலம்பெயர்ந்த்தன் பிற்பாடு எழுதி வெளியிட்டுள்ள புத்தகங்களின் பிரதி ஒன்றை அனுப்பி வைக்கலாம். இந்தப்புத்தகங்கள் மீள உங்களுக்கு கையளிக்கப்படமாட்டாது. அவ்வப்போது நடைபெறும் புத்தகக்கண்காட்சிகளில் அவை காட்சிப்படுத்தப்படும். தொடர்புகளுக்கு

Continue Reading →

லண்டனில் ‘குவர்னிகா’ நூல் அறிமுகவிழா!

லண்டனில் ‘குவர்னிகா’ நூல் அறிமுகவிழா! “ஸ்பானிய உள்நாட்டுப் போரின்போது ஜேர்மனிய நாசிப் படைகள் குண்டுவீசி ஐயாயிரம் அப்பாவி மக்களைக் கொன்று ஒழித்த சற்றூரான ‘குவர்னிகா’, குண்டுகளுக்கு இரையான எல்லாத் தேசங்களுக்குமே பொருந்துகின்ற குறியீடாகும். ஈழத்தின் இன்றைய அவலத்திற்கு மிகப் பொருத்தமான முகப்புத் தலைப்பாக ‘குவர்னிகா’ என்ற தலைப்பைத் தாங்கி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 41வது இலக்கியச் சந்திப்பு மலராக இந்த மலர் வெளிவந்திருப்பது ஒரு காலத்தின் தேவையை நிறைவு செய்யும் இலக்கிய முயற்சியாக நோக்கத்தக்கதாகும்” என்று விமர்சகர் மு.நித்தியானந்தன் சென்ற ஞாயிற்றுக்கிழமை(6.10.2013) வால்த்தம்ஸ்ரோவில் நடைபெற்ற ‘குவர்னிகா’ மலர் வெளியீட்டின்போது தலைமையுரை  ஆற்றுகையில் தெரிவித்திருந்தார்: “பன்னிரெண்டு நாடுகளில் இருந்து எழுதப்பட்ட எழுபத்தைந்துக்கும் அதிகமான ஆக்கங்களைத் தாங்கி எண்ணூறு பக்கங்களில் மிகப் பாரிய தொகுப்பாக வெளிவந்திருக்கும் ‘குவர்னிகா’ ஷோபாசக்தி, கருணாகரன, தமயந்தி போன்றோரின் மிகப்பெரும் உழைப்பில் உருவாகி உள்ளது. யுத்த மறுப்பையும், ஈழத்தில் நடைபெற்ற இனஅழிப்பு நிகழ்வுகளையும், சாதிய எதிர்ப்பையும், பெண்விடுதலையையும், வஞ்சிக்கப்பட்ட மனிதர்களின் கதைகளையும் பேசும் பெரும் தொகுப்பாக ‘குவர்னிகா’ மலர்  அமைந்திருக்கிறது. கடந்த காலங்களில் புகலிட நாடுகளில் இடம்பெற்ற இலக்கிய சந்திப்புக்களின்போது வெளியான சுகனின் ‘இருள்வெளி’, கலைச் செல்வனின் ‘இனியும் சூல்கொள்’ ஆகிய மலர்களை அடுத்து மிகப்பெரும் உழைப்பில் உருவாகியுள்ள ‘குவர்னிகா’ என்ற இந்த மலர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இலக்கியச் சந்திப்பின் மகுடமாக அமைகிறது” என்று அவர் மேலும் பேசுகையில் தெரிவித்தார்.

Continue Reading →

ஏ.ஜே.கனகரத்னா: பல்துறை இணைவுப் பார்வையை நோக்கி

[ அமரர் ஏ.ஜே.கனகரத்னாவின் நினைவு தினம் அக்டோபர் 11. அதனையொட்டி ‘பதிவுகள்’  இதழ் 38இல் (பெப்ருவரி 2003) வெளியான யமுனா ராஜேந்திரனின் இக்கட்டுரை மீள்பிரசுரமாகின்றது. – பதிவுகள் – ]

(1). மத்து : மித்ர: சென்னை: மறுபிரசுரம் : டிசம்பர் 2000.  (2). மார்க்சியமும் இலக்கியமும் : சில நோக்குகள் : அலை வெளியீடு : யாழ்ப்பாணம் 1981.  (3). செங்காவலர் தலைவர் யேசுநாதர் : மித்ர : சென்னை : டிசம்பர் 2000 

ஏ.ஜே.கனகரத்னாஅக்டோபர் புரட்சி தொடங்கி இரண்டாயிரமாண்டு இறுதிவரையிலான ஆண்டுகள் , உலகின் மிகப்பெரிய வரலாற்று உற்பவங்களுக்குச் சாட்சியமாக இருக்கிறது. 1968 பிரெஞ்சு மாணவர் எழுச்சியும், அதைத் தொடர்ந்து சமவேளையில் முதலாளித்துவத்துக்கும், அதிகாரவர்க்க சோசலிசத்திற்கும் எதிரான கலாச்சார விமர்சகர்களும் படைப்பாளிகளும் தோன்றினர் இலக்கியவாதியான ஸார்த்தர், கோட்பாட்டாளரான மார்க்யூஸ், உளவியல் ஆய்வாளரான எரிக் பிராம், பொருளியலாளரான கென்னத் கால்பிரெய்த் போன்றவர்கள் அக்கால கட்டத்தில் முக்கியமான சிந்தனையாளர்களாக இருந்தனர். எண்பதுகள் அதிகார வர்க்க சோசலிசத்தின் வீழ்ச்சியும், தேசிய இன எழுச்சிகளின் உச்சபட்ச வீச்சும் நிகழ்ந்த ஆண்டுகளாகின. இருபதாம் நு¡ற்றாண்டின் இறுதி ஆண்டுகளில், உலக முதலாளித்துவம், ‘உலகமயமாதல்’ எனும் புதிய பெயராகியிருக்கிறது. சோசலிசத்தினதும் இடதுசாரிக் கோட்பாட்டினதும் கோஷங்களை இன்று மதவழிப்பெருந்தேசியம் ஸ்வீகரித்துக் கொண்டுவிட்டது. இனக்குழுக்களுக்கிடையிலான போர்களும், விளிம்பு நிலை மக்களுடைய வேட்கைகளும், பெண்விடுதலை குறித்த பிரக்ஞையும் எமது நாடுகளில் புதிய வீறுடன் எழுந்திருக்கிறது. ஏ.ஜேயின் எழுத்துக்கள் இந்தக் கால இடைவெளியில் நிகழ்ந்த அறிவுத்துறை நடவடிக்கைகளைத் தமிழில் ஆவணப்படுத்தியிருக்கிறது. வரலாற்று உற்பவங்களுக்கு ஆதாரமாகவிருந்த, உலகைக் குலுக்கிய முக்கியமான புத்தகங்கள், தமிழ் மொழியில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. மார்க்சீய அழகியல் தொடர்பான விவாதங்கள் தொகுக்கப்பட்டிருக்கிறது.  இந்த நு¡ற்றாண்டு அறிவுப் பரப்பின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தை, ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கால கட்டத்தில் அறிமுகம் கொள்ள நினைக்கிறவர்களுக்கு நிச்சயமாகவே நாம் ஏ.ஜே.யின் எழுத்துக்களைப் பரிந்துரைக்கமுடியும்.

Continue Reading →

பயனுள்ள மீள்பிரசுரம்: எனதருமை டால்ஸ்டாய்

ஒரு நாவலின் வெற்றியும் தோல்வியும் எதை வைத்து முடிவு செய்யப்படுகிறது, உலக அரங்கில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு லட்சக்கணக்கில் விற்பனையான நாவல்கள் இன்று இருந்த இடமே தெரியவில்லை, வெளியான காலத்தில் சில நூறு பிரதிகள் விற்ற நாவல்கள் இன்று கொண்டாடப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன, புத்தகம் அது வாசிக்கப்படும் காலத்திற்காகவும் அதற்கான வாசகனுக்காகவும் எப்போதும் காத்துக் கொண்டிருக்க கூடும்ஒரு நாவலின் வெற்றியும் தோல்வியும் எதை வைத்து முடிவு செய்யப்படுகிறது, உலக அரங்கில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு லட்சக்கணக்கில் விற்பனையான நாவல்கள் இன்று இருந்த இடமே தெரியவில்லை, வெளியான காலத்தில் சில நூறு பிரதிகள் விற்ற நாவல்கள் இன்று கொண்டாடப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன, புத்தகம் அது வாசிக்கப்படும் காலத்திற்காகவும் அதற்கான வாசகனுக்காகவும் எப்போதும் காத்துக் கொண்டிருக்க கூடும். அதைத் தவிர எழுத்தாளன் மேற்கொள்ளும் தந்திரங்கள் சுயபுகழ்ச்சிகள். ஊதிப்பெருக்கிய பாராட்டுகள் எதனாலும் ஒரு நாவலை வெற்றி அடைய செய்துவிட முடியாது, அவை புகைமயக்கம் மட்டுமே, ஒவ்வொரு நாவலின் பின்னேயும் எழுத்தாளர்கள் வெளியே பகிர்ந்து கொள்ளாத கஷ்டங்கள். நெருக்கடிகள்.  நாவலை எழுதுவதற்கு உந்துதலாக இருந்த சம்பவங்கள். நிஜமனிதர்களின் சாயல்கள் என வாசகஉலகம் அறியாத எவ்வளவோ இருக்கின்றன. அவை எழுத்தாளனின் ரகசியங்கள். அவற்றை தனக்குள்ளாகவே புதைத்துவிடவே எழுத்தாளன் எப்போதும் விரும்புகிறான், அரிதாக சிலர் தனது நாவலின் அந்தரங்கக் குறிப்புகளில் ஒன்றிரண்டைப்  பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்,  பந்தயத்தில் வெற்றி பெறும் குதிரை புகழ்ந்து பேசப்படுகிறது, தோற்ற குதிரை புறக்கணிக்கப்படுகிறது ஆனால் ஒடி வலித்த அதன் கால்களின் வேதனையை ஒருவருமே கவனிப்பதில்லை, அப்படி பட்டது தான் நாவலின் வெற்றி தோல்வியும், அதன் முன்னே எழுத்தாளின் வலிகள் கண்டுகொள்ளபடாமல் போகின்றன,

Continue Reading →