நூல் அறிமுகம் – சுஜாதாவின் வெள்ளி விழா முன்னுரை: சுப்ரபாரதிமணியனின் “ அப்பா “ ’’ : சிறுகதைத் தொகுப்பிற்கு ( 1987) சுஜாதா எழுதியது

சுஜாதாவின் வெள்ளி விழா முன்னுரை: சுப்ரபாரதிமணியனின் “ அப்பா “  ’’ :  சிறுகதைத் தொகுப்பிற்கு ( 1987)  சுஜாதா எழுதியதுசுதந்திரத்திற்குப் பின் பிறந்தவர்கள் தமிழில் இன்று எழுதும் சிறுகதைகளில் லேசான சோகம், லேசான அவநம்பிக்கை, சிறுகதை வடிவத்தைப் பற்றிய அக்கறையின்மை இவை மூன்றும் இருப்பதைப் பார்க்கிறேன். தமிழில் இலக்கியத் தரமான சிறுகதைகள் இன்று சிறுபத்திரிகைகளில் தான் எழுதப்படுகின்றன என்று சொல்பவர்கள் உண்டு. சில வயசான எழுத்தாளர்கள். நான் எழுதினதுக்கு பிற்பாடு நல்ல கதைகள் நின்றுவிட்டன. தமிழ்ச் சிறுகதை உலகம் எப்படித்தான் பிழைக்கப்போகிறதோ என்று கவலைப்பட்டுக் கொண்டு பல்செட்டை கழற்றி வைக்கிறார்கள். சில ஜாம்பவான்களும் சாம்ராட்டுகளும் நான் எழுதுவதுதான் இலக்கியம் மற்றதெல்லாம் ஊதுவத்தி வியாபாரம் என்கிறார்கள். இந்த வகை அதீத அபிப்பிராயங்கள் எல்லாம் எந்த இலக்கிய சூழ்நிலையிலும் ஒரு காசு பெறாது. இவைகளுக்குக் காரணங்கள் ஒரு புறம் பொறாமை, மற்றொரு புறம் இயலாமை. இவைகளையெல்லாம் நீக்கி விட்டு ஆரோக்கியமாக இன்றைய தமிழ்ச் சிறுகதை உலகைப் பார்த்தால் நம்பிக்கை பிறக்கக்கூடிய தரமான பல கதைகள் இன்றைய காலகட்டத்தில் எழுதப்படுகின்றன. இளைஞர்கள் தத்தம் புதிய புதிய கவலைகளையும் புதிய மன ஓட்டங்களையும் செதுக்கி வைத்தாற்போல வார்த்தைகளில் அவ்வப்போது எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் சிறு பத்திரிகைகளில்தான் எழுதுகிறார்கள். சிலர் பெரிய பத்திரிகைகளிலும் அனுமதி பெறுகிறார்கள்.

Continue Reading →

நூல் அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலை

நூல் அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலைஇலக்கியம் என்பது அனுமானம் ,அனுபவம் மற்றும் அவதானிப்பில் பிறக்கிறது என சொல்வார்கள். இலங்கையில் மதவாச்சி என்னும் பிரதேசத்தில் தொழில் நிமித்தம் வாழ்ந்த காலப்பகுதியில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் அவதானிப்பையும் பின்னணியாக வைத்து உருவாகியது எனது முதல் நாவல் வண்ணாத்திக்குளம். இலங்கை அரசியலில் சாதாரண சிங்கள மக்களின் மனங்களில் இனவாதத்தை தூவிய சிங்கள அரசியல்வாதிகளினாலும் – அதேபோல் தமிழ் இளைஞர்களுக்கு உணர்ச்சியூட்டி கொம்பு சீவிய தமிழ் அரசியல்வாதிகளாலும் ஏற்பட்ட இனநெருக்கடிகளை கோடிகாட்டி எழுதப்பட்ட இந்த நாவல்; ஆங்கிலத்திலும் (Butterfly Lake ),சிங்களத்திலும் ( சமணலவௌ) மொழி பெயர்க்கப்பட்டது. நான் பிறந்த நாட்டில் எனக்கிருந்த அபிமானத்தால் வண்ணாத்திக்குளம் நாவல் எழுதப்பட்டதே அல்லாமல், எழுத்தாளராகவோ அல்லது நாவலாசிரியராகவோ வரவேண்டுமென்ற எண்ணத்தில் நான் அந்த நாவலை எழுதவில்லை. அதன் பின்னர் அவுஸ்திரேலியா நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் நான் பணியாற்றிய மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தின் பின்புலத்தில் எழுதிய நாவல் உனையே மயல்கொண்டு. பெண்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த பின்பும் ஏற்கனவே அவர்கள் தமது தாயகத்தில் எதிர்கொண்ட வன்செயலின் பாதிப்புகள் எப்படி தொடர்கிறது என்பதை உளவியல் ரீதியாக சித்திரிக்கும் முயற்சிதான் உனையே மயல்கொண்டு என்ற எனது இரண்டாவது நாவல். குறிப்பிட்ட இரண்டு நாவல்களும் இலங்கைப் பிரச்சினைகளைக் கருவாகக் கொண்டவை. மூன்றாவது நாவலான அசோகனின் வைத்தியசாலை எனது புகலிட வாழ்வில் முக்கிய பகுதியான – சுமார் ஆறுவருடங்கள் மிருகவைத்தியராக தொழில்புரிந்த மெல்பன் வைத்தியசாலையொன்றின் பின்னணியில் புனையப்பட்டது.

Continue Reading →

விளம்பர உத்திகள்!

விளம்பர உத்திகள்!1.0. ‘உத்தி’ என்பது இல்லையென்றால், வாழ்க்கையே இல்லை எனுமளவிற்கு நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றது. அந்த வகையில், விளம்பரம் என்பது உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் தங்களது பொருளை விற்க மேற்கொள்ளும் வணிக உத்திகளில் ஒன்றாகும்.

1.1. உத்தி  விளக்கம்:
 உத்தி என்பதற்கு அகராதிகளும், அறிஞர்களும் பல்வேறு விளக்கங்களைத் தருகின்றனர். உத்தி என்வபது கலை ஆக்க முறையாகும். ஒன்றைச் சொல்ல, ஒரு பொருளை மக்களிடம் கொண்டு செல்ல செயற்கையாகக் கலை நுணுக்கத்துடன் விளம்பரங்களில் அமைக்கும் முறையே உத்தியாகும்.  ஒரு பொருளை வாங்க வேண்டும் என்ற விருப்பம், விரைவூக்கம், முனைப்புப் போன்றவற்றை ஏற்படுத்த கவர்ச்சியான அம்சங்களை விளம்பரங்களில் புகுத்துவதே உத்தி எனப்படுகின்றது.  தொல்காப்பியரும், நன்னூலாரும் பல்வேறு உத்திகளைக் கூறுகின்றனர்.

1.2. விளம்பர உத்திகள் 
 விளம்பர உத்திகளை, காட்சிப் பயன்பாட்டு உத்திகள், மொழிப்பயன்பாட்டு உத்திகள், பிற உத்திகள் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

ஆய்வு: பதிற்றுப்பத்தில் மானமும் வீரமும்

முன்னுரை
manikandan_cd.jpg - 22.36 Kbதமிழின் உயர்வை உலகறியச்செய்த இலக்கியங்களுள் சங்க இலக்கியம் முதன்மையான இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது. அத்தகு சிறப்புப்பொருந்திய சங்க இலக்கியத்தில், எட்டுத்தொகை நூல்களில் புறம் பற்றி பாடப்பட்டுள்ள இரண்டு நூல்களில் ஒன்று பதிற்றுப்பத்தாகும். இந்நூல் சேர அரசர்களின் வாழ்வியல் பண்புகளை எடுத்தோதும் ஒப்பற்ற இலக்கியம். இதனை கேரளப் பல்கலைக்கழகப் பேராசிரியை திருமதி காஞ்சனா அவர்களால் எளிய மலையாலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது சிறப்பான ஒன்று.

நூல் அமைப்பு
பாடாண் தினையில் அமைந்த 80 பாடல்களைக் கொண்டது. இதில் எட்டு சேர வேந்தர்களைப் பற்றி குமட்டூர்க் கண்ணனார், பாலைக்கவுதமனார், காப்பியாற்றுக்காப்பியனார், பரணர், காக்கைப்பாடினியார், கபிலர், அரிசில்கிழார், பெருங்குன்றூர்க்கிழார் என எட்டு புலவர்கள் பாடியுள்ளனர். 

பிரித்தானியத் தமிழர் பேரவை: தமிழர் தாயகத்தில் நில அபகரிப்புக்கு எதிரான மாநாடு இரண்டாவது நாளாக இன்று இலண்டனில் (UCL) இல் இடம்பெற்றது

பிரித்தானியத் தமிழர் பேரவை: தமிழர் தாயகத்தில் நில அபகரிப்புக்கு எதிரான மாநாடு இரண்டாவது நாளாக இன்று இலண்டனில் (UCL) இல் இடம்பெற்றதுதமிழர் தாயகத்தில் நில அபகரிப்பு இடம் பெறுகின்றமையை கண்டித்தும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து எவ்வாறு அவற்றை வென்றெடுக்க முடியும் என்பது தொடர்பான மாநாடு இரண்டாவது நாளாக இன்று இலண்டனில் இடம்பெற்றது. நிகழ்வின் முதல் அம்சமாக தமிழ் மகா பிரபாகரனின் கடின உழைப்பில் தயாரிக்கப்பட்ட ‘திஸ் லான்ட் பிலோங்ஸ் ரு ஆமி ‘ எனும் ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டது. யுத்தத்திற்கு பிந்திய இன்றைய காலகட்டத்தில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் எவ்வாறு பேரினவாத அடக்கு முறைக்குட்படுத்தப்பட்டுள்ளன என்பதை காட்சிகள் சித்தரித்திருந்தன. தொடர்ந்து உரை நிகழ்திய இஸ்ரேலிய நாட்டு பேராசிரியர் ஒரின் – நில உரிமைத்துவம் மற்றும் மனித உரிமை சார்ந்த விடயங்கள் குறித்து தெளிவுபடுத்தினார் குறிப்பாக இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் நில அபகரிப்பின் ஊடாக தமிழர்களது உரிமைகள் எவ்வாறு மீறப்படுகின்றன அவற்றிற்கு தீர்வு காணும் வகையில் அல்லது தடுக்கும் வகையில் சர்வதேச சமுகத்துடன் இணைந்து எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்பது குறித்தும் தெளிவுபடுத்தினார். சர்வதேச தரத்திலான தரவுகள் சட்டம் மற்றும் கோட்பாடு ஆகியவற்றை ஒப்பிட்டு இலங்கை விடயத்தில் எவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் போன்றவற்றையும் அறிவுறுத்தினார். சேபியா, ஈரான், எஸ்தோனியா, சூடான் மலேசியா துருக்கி இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் ஆகிய நாடுகளில் மக்கள் எதிர் கொண்டிருந்த இவ்வாறான பிரச்சினைகளை உதாரணமாக எடுத்துரைத்து இதன் மூலம் பாதிக்கப்படும் தமிழ் தாயக மக்களை எவ்வாறு காப்பாற்ற முடியும் அல்லது நீதியை பெற்றுக் கொடுக்க முடியும் என்பது குறித்து பரிசீலித்தார்.

Continue Reading →