இலங்கையில் இடதுசாரி இயக்க வரலாறு!

நூல் அறிமுகம்: இலங்கையில் இடதுசாரி இயக்க வரலாறு -லெனின் மதிவானம் புதிய பண்பாட்டுக்கான வெகுசன அமைப்பு சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில் எனக்கு அறிமுகமானவர் தோழர் நடராஜா ஜனகன். அவர் நவ சமசமாஜக் கட்சியில் நீண்டகாலம் சமூக செயற்பாட்டாளராக இருந்து வருகின்றவர். தமது தேடல்களில் கிடைக்கப்பெற்ற தகவல்களையும் அனுபவங்களையும் கொண்டு History of Left Movement in Sri Lanka  என்ற நூலை எழுதியிருக்கின்றார். இந்நூல் வெளியீடு கடந்த வாரம் (30 ஜனவரி) கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. ஏதோ மறதியின் காரணமாக எனக்கு அழைப்பிதழ் அனுப்ப மறந்திருக்க கூடும்;. நண்பர் மல்லியப்பு சந்தி திலகர் தான் இது பற்றிய பத்திரிகை செய்தியை எனக்கு அறிவித்ததுடன் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். நிகழ்வு சரியாக மாலை 5 மணிக்கு தொடங்கிவிட்டது. முதலாவது உரையினை  கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி; வழங்கினார். இடதுசாரி இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை எடுத்துக்கொண்ட முயற்சி என்பன குறித்து உரையாற்றிய அவர் – இன்று ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்கள் – அத்தகைய மாற்றங்களின் பின்னணியில் இடதுசாரி இயக்கங்கள் தன்னை எவ்வாறு புனரமைத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி  கூறிய அவர்,மிக முக்கியமாக இடதுசாரி இயக்கங்கள் பற்றிய பல விடயங்களை பேசுகின்ற இந்நூல் இன்று ஏற்பட்டுள்ள சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது பற்றியும் கூறியிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும் எனவும் குறிப்பிட்டார்.

Continue Reading →

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்: நன்றி!

அவுஸ்திரேலியா    தமிழ்  இலக்கிய   கலைச்சங்கம்: நன்றி!24-02-2014
அன்புடையீர்   வணக்கம். எமது   அவுஸ்திரேலியா   தமிழ்  இலக்கிய  கலைச்சங்கத்தின் அனுபவப்பகிர்வு  நிகழ்ச்சி  கடந்த  23  ஆம்  திகதி  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபொழுது  வருகைதந்து  சிறப்பித்த  சங்கத்தின்   செயற்குழு உறுப்பினர்களுக்கும்   சங்கத்தின்   உறுப்பினர்கள்   மற்றும்  அன்றைய  தினம் புதிய  உறுப்பினர்களாக  இணைந்துகொண்ட  அன்பர்களுக்கும்  நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய    திரு. முகுந்தராஜ்  திரு. சத்தியா  ஆகியோருக்கும்  மதிய உணவு  வழங்கி  உபசரித்த  செயற்குழு  உறுப்பினர்கள்  மற்றும்  திருமதி சாந்தினி  புவனேந்திரராஜா  அவர்கட்கும்  நன்கொடை  வழங்கிய  திருமதி பாலம்  இலக்ஷ்மணன்  அம்மையார்  அவர்கட்கும்  குறிப்பிட்ட அனுபவப்பகிர்வு  நிகழ்ச்சி  பற்றிய  செய்திகள்  வெளியிட்ட இணையத்தளங்கள்   மற்றும்    நேர்காணல்  கலந்துரையாடல்களை  நடத்திய வானொலி   நிகழ்ச்சி   தயாரிப்பாளர்களுக்கும்   அனுபவப்பகிர்வு நிகழ்ச்சிகளை   நடத்துவதற்கு  மண்டப வசதியளித்த  பிரஸ்ட்டன்  இன்றர் கல்சரல்   நிலையத்தின்  நிருவாகத்தினருக்கும்  எமது   சங்கத்தின்    மனமார்ந்த நன்றியைத்  தெரிவித்துக்கொள்கின்றோம்.

Continue Reading →