பிரான்சு: கம்பன் கழகத்தின் ஏழாம் ஆண்டுப் பொங்கல் விழா 2014!

வணக்கம் நம்முடைய கம்பன் கழகத்தின் ஏழாம் ஆண்டுப் பொங்கல் விழா15.02.2014 சனிக்கிழமை பிற்பகல் 14.00 மணிக்கு நடைபெறவுள்ளது.அதைக் குறித்த மடல் இணைத்துள்ளேன். அன்புடன்கவிஞர் கி. பாரதிதாசன்தலைவர் கம்பன்…

Continue Reading →

சிறுகதை: அது..!

எழுத்தாளர் சுதாராஜ்இருள் கசியத் தொடங்கும் மாலை ஆறுமணிப் பொழுதில் அந்த வீதியில் வந்துகொண்டிருந்தேன். முக்கிய நகரங்களைத் தொடுக்கும் பிரதான வீதிதான் அது. எனினும் சன நடமாட்டம் குறைவாயிருந்தது. நகரத்திலிருந்து எட்டுக் கட்டை தொலைவிலிருந்த அந்தப் பகுதியில் குடிமனைகளும் குறைவு. அடுத்த நகரம் சுமார் நாற்பது கிலோமீட்டருக்கு அப்பாலிருந்தது. நாட்டில் சுமுக நிலையற்ற காலம் அது. இருள்வதற்கு முன்னரே மக்கள் வீடுகளுள் அடங்கிப்போய்விடுவதற்கு அதுவும் ஒரு காரணமாயிருக்கலாம். இன்னும் வெட்டப்படாத காட்டு மரங்களும் பற்றை புதர்களும் இரு மருங்கும் கொண்ட வீதியில், இந்தத் தனிமை வேளையில் எனது ஐம்பது சீசீ ஸ்கூட்டரில் பயணித்து வருவது சற்றுத் திரில்லாகக்கூட இருந்தது. முகத்திலடிக்கும் குளிர் காற்றின் சுகத்துடன் பறந்து செல்லும் ஒரு குருவியாக நான். ஆனால் வீதியில் மூச்சிரைக்கும் வேகத்தில் அவ்வப்போது வரும் வாகனங்கள் இந்த அனுபவிப்பைக் கெடுத்துவிடும்.

Continue Reading →

சிறுகதை: வெண் நிலவுகள்

சிறுகதை:  வெண் நிலவுகள் ” பிச்சை எடுக்கிறதுக்காகவே  பிள்ளையை பெறுவது , பிறகு – பேத்தி ,பேத்தி – எண்டு சொல்லித்திரியிறது ‘பேத்தியின்ர அப்பாவும் நான் தான் ! ‘எண்டு சொல் வேண்டியது தானே….”   என எரிந்து கொண்டு பெருமாள் கோயில் படி ஏறினார் ஒரு நடுத்தர வயது பெண் – அந்த பிச்சைக்காற முதியவருக்கு இது ஒன்றும் புதிதில்லை  . சேற்றில் தோய்த்தெடுத்த கோலத்தில்  இருந்தாலும் பார்ப்பதற்கு  அழகான சிலை போல்   ஒரு கையில்  பிள்ளையும் மறு கையில் பிச்சைத்தட்டும் ஏந்திய படி இருக்கும் மகளையும் ,  மனம் கல்லாகி மரத்துப் போய் எதற்கும் பதிலோ இல்லை கேள்வியோ கேட்காத  அவரையும் இப்படி ஊரார் எள்ளி நகை யாடுவது இன்று நேற்று அல்ல இரண்டு வருடத்திற்கு மேலாக நடக்கிறது . ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொழுத்துவோம் ‘ என்ற பாரதியின் கூற்றுக்கு ‘மாதர் தம்மை  (தாமே ) இழிவு செய்யும் மடமையைகொழுத்துவோம்   ‘ . என்ற  எழுத்தாளர் ஜெயகாந்தனின் விபரிப்பை எண்ணி மனதில் நகைத்தபடி . தாடியை தடவிக் கொண்டு அனேகமாக காதலிக்காக காத்திருந்த அந்த இளைஞனை நோக்கி நடந்தார்  பேச்சு வேண்டிய பிச்சைக்காற முதியவர் . யாழ் மாநகரிலே பிரசித்திவாய்ந்த கோயில்களில்  பெருமாள் கோயிலும் ஒன்று . அழகான சுற்றுசூழலில் இருக்கும் இந்த கோயிலில் தினமும் பூசைகள் தவறாது நடைபெறும் .  இவ் ஆலயம் அதிக பக்தர்கள் சூழும்  இடம் என்பதால் காதலர்கள் முதல் வியாபார நிலையங்கள் வரை ஏன்  பிச்சைக்காறர்களுக்கு கூட பஞ்சமில்லை .

Continue Reading →

பெப்ருவரி 2014 கவிதைகள்!

ஜனவரி 2014 கவிதைகள்!1. அம்மா

– ஷஸிகா அமாலி முணசிங்க / தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் –

(கைவிலங்கிடப்பட்டு சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்படும் அம்மாவுடன் கதைப்பதற்கு இடமளிக்கப்படாத குழந்தை, நீதிமன்ற வளாகத்தில் சத்தமிட்டு அழுதது – செய்தி)

 இழுத்துச் செல்லப்படுகிறாள் அம்மா
விலங்கிடப்பட்டிருக்கின்றன அவளது கைகள்
இருண்டு பருத்த தொப்பை மனிதர்கள்
அவளை அண்டவிடாமல் காவலிருக்கிறார்கள்

Continue Reading →