சிங்கப்பூரில் எழுத்தாளர் மாதங்கியின் படைப்புகள் பற்றிய கருத்தரங்கும், நூல்வெளியீடும்!

[ஒரு பதிவுக்காக இந்த நிகழ்வு பற்றிய அறிவிப்பு பிரசுரமாகின்றது. ‘பதிவுகளு’க்கு நிகழ்வுகள் பற்றிய அறிவித்தல்களை அறியத்தருபவர்கள் இறுதி நேரத்தில் அனுப்புவதைத் தவிர்க்கவும். – பதிவுகள் -]

சிங்கப்பூரில் எழுத்தாளர் மாதங்கியின் படைப்புகள் பற்றிய கருத்தரங்கும், நூல்வெளியீடும்! 26.1.2014  அன்று  சிங்கப்பூரில் எழுத்தாளர் மாதங்கியின் படைப்புகள் பற்றிய கருத்தரங்கும் நூல்வெளியீடும் நடைபெறுகிறது.  26.1.2014  அன்று  மாலை ஆறுமணியளவில், 100, விக்டோரியா சாலை, சிங்கப்பூர், தேசிய நூலகத்தில் ( ஐந்தாம் தளம்)  எழுத்தாளர் மாதங்கியின் படைப்புகள் குறித்து ஒரு கருத்தரங்கும் அதைத் தொடர்ந்து  அவருடைய  இரண்டு நூல்களும்  வெளியிடப்பட உள்ளன. முதல் நூல் , 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதை நூலுக்கான  சிங்கப்பூரின்  அமரர் மு.கு இராமச்சந்திரா நினைவுப் புத்தகப் பரிசு பெற்ற ‘ஒரு கோடி டாலர்கள்‘ என்ற சிறுகதைத் தொகுப்பு.நூல்  (சந்தியா பதிப்பகம்) அடுத்த  நூல் 62   நவீனக் கவிதைகளை  உள்ளடக்கிய ‘ மலைகளின் பறத்தல்’ என்ற அவருடைய    கவிதைத்தொகுப்புநூல் (அகநாழிகை பதிப்பகம்) . .  தேசிய கலைகள் மன்றம், கனடா இலக்கியத் தோட்டம் ஆகியஅமைப்புகள் வெளியிட்ட  தொகுதி நூல்களில் இவருடைய கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவை அவருடைய இரண்டாவது சிறுகதை மற்றும் கவிதை  நூல்கள் ஆகும். இக்கருத்தரங்கில்  முனைவர் சுப. திண்ணப்பன் அவர்கள்,   எழுத்தாளர் மாதங்கியின் மரபுக்கவிதைகளைப் பற்றிப்பேசுவார்.

Continue Reading →

“சாப்பாடுபோட்டு நாற்பது ரூபாய்”-தி. ஜானகிராமனின் கதை விமர்சனம்.

- பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்) -எழுத்தாளர் தி.ஜானகிராமனைப்பற்றி பலர் பேசும்போதெல்லாம் ஓர் உறுத்தல் எனக்குள்ளே எழும். இன்னும் அவருடைய படைப்பைப் படிக்காமல் இருக்கிறோமே என்ற குற்ற உணர்வு  வருத்தும். சென்ற ஆண்டு புத்தகவிழாவில் அவருடைய ஒரு நாவலைப்படித்து விடவேண்டும் என்று எண்ணி வாங்கினேன். வீட்டு நூலகத்தில் உள்ளது. அதற்குள் இங்கு வந்துவிட்டதால் அதையும் தொடமுடியவில்லை. இரண்டு வாரத்திற்கு முன்பு சுவாசுகாங் நூலகத்தில் தி. ஜனகிராமனின்  ‘மனிதாபிமானம்’ என்ற சிறுகதைத்தொகுப்பை எடுத்தேன். மூன்றுவாரத்தில் முடித்துவிடவேண்டும் என்ற முயற்சியில் இறங்கினேன். இன்றுதான் முடித்தேன்(13.12.13) பன்னிரண்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. அவருடைய  மோகமுள், மரப்பசு பற்றி நண்பர்கள் சிலாகித்துப் பேசியது நினைவுக்கு வருகிறது. ஜானகிராமன் என்னை எப்படிக் கவர்கிறார் என்று பார்க்கத்தான் இந்தத்தொகுப்பையே எடுத்தேன். தி.ஜானகிராமன் மனச்சாட்சியோடு எழுதுகிறவர் என்பது தெளிவானது. அவருடைய நடை அப்படியே பேச்சுவழக்கில் அமைந்த நடை.  பிராமணர் என்பது எழுத்தின் மொழியில் இருந்தாலும் எழுதும் இதயத்தில் இல்லை என்பது என் முடிவு. இது தற்காலிகமானதா? நிரந்தரமானதா? தொடர் வாசிப்பு பதிலளிக்கலாம்.

Continue Reading →