மனிதாபிமானச் சிந்தனையாளன்!

'பிரேம்ஜி எழுத்துலகில் பொன்னாண்டு நிறைவு' என்னும் நூலினை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1988இல் வெளியிட்டது.  இத்தொகுப்பின் பதிப்பாசிரியராகவிருந்தவர் மறைந்த எழுத்தாளர் என்.சோமகாந்தன். இத்தொகுப்புக்காக,  தான் பிரேம்ஜி பற்றி எழுதிய கட்டுரையினை எழுத்தாளர் பிரேம்ஜியின் மறைவினையொட்டிப் 'பதிவுகள்' இணைய இதழுக்குத் திறனாய்வாளரும், எழுத்தாளருமான திரு. கே.எஸ்.சிவகுமாரன் அனுப்பியிருந்தார். அதனை இங்கு பிரசுரிக்கின்றோம். - பதிவுகள் [ ‘பிரேம்ஜி எழுத்துலகில் பொன்னாண்டு நிறைவு’ என்னும் நூலினை இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1988இல் வெளியிட்டது.  இத்தொகுப்பின் பதிப்பாசிரியராகவிருந்தவர் மறைந்த எழுத்தாளர் என்.சோமகாந்தன். இத்தொகுப்புக்காக,  தான் பிரேம்ஜி பற்றி எழுதிய கட்டுரையினை எழுத்தாளர் பிரேம்ஜியின் மறைவினையொட்டிப் ‘பதிவுகள்’ இணைய இதழுக்குத் திறனாய்வாளரும், எழுத்தாளருமான திரு. கே.எஸ்.சிவகுமாரன் அனுப்பியிருந்தார். அதனை இங்கு பிரசுரிக்கின்றோம். – பதிவுகள் ]

1950களின் பிற்பகுதி. எனது 20களுக்குள் பிரவேசம். தமிழ் வெகுஜன ஊடகத்துறையைப் பரிச்சயப் படுத்திக்கொள்ளும் காலம். சுதந்திரன் பத்திரிகையின் வளர்மதிப் பக்கத்தில் பெரியவர் துரைசாமி ம.த. லோரன்ஸ் ஆகியோரின் கணிப்பீனூடாக ஆக்கங்கள் அப்பக்கத்தில் வெளிவரத் தொடங்கின. மூத்த முன்னோடிப் பத்திரிகையாளர் எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் வழிகாட்டலில் அப்பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. பிற்காலத்தில், இலங்கை தமிழ் அரசியற்துறையில் முக்கியஸ்தராக விளங்கப்போகும் இரத்தின சபாபதி (இணுவை மாறன்) அங்கு பணிபுரிந்தார். இவர்களுடன் இன்னுமொருவரும் அமைதியாக இருந்து எழுதிக்கொண்டிருப்பார். யார் அவர்? சிரிக்க மாட்டார். பார்வையிலேயே சீரியஸ் ஆன பிரமுகராக இருந்தார். விசாரித்தபொழுது, புதிய பார்வையில் பாரதிதாசனை எடைபோடும் எழுத்தாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன் என்றார்கள். அப்பொழுதுதான் முதல் அறிமுகம். ஆயினும் அந்நியோன்யம் கிடையாது.

Continue Reading →