‘பாலு… உன்னுடைய நுண்ணுணர்வுகளுக்கும் இந்த மீடியத்தின் மீது நீ கொண்டிருக்கும் காதலுக்கும் உன்னுள் இருக்கும் படைப்புத்தாகத்திற்கும் நீ ஒரு இயக்குநராக மாறுவதுதான் இயல்பானது — விரைவில் நீ ஒரு படத்தை இயக்குவாய்— Mark My Words – என்று பல வருடங்களுக்கு முன்னர் கல்கத்தா மருத்துவமனையிலிருந்தவாறு – தன்னைப்பார்க்கவந்த பாலுமகேந்திராவை வாழ்த்தியவர் சர்வதேச புகழ் பெற்ற இயக்குநர் சத்தியஜித் ரே. புனா திரைப்படக்கல்லூரியில் பாலுமகேந்திரா ஒளிப்பதிவுக்கலையை பயின்ற காலத்தில் வருகைதரு விருந்தினராக விரிவுரையாற்ற வந்த சத்தியஜித்ரேயை பாலு மகேந்திரா இலங்கையில் மட்டக்களப்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே மிகவும் நேசித்தவர். ரேயின் ஆளுமையை உள்வாங்கிக்கொண்ட திரையுலக கலைஞர்களின் வரிசையில் பாலுமகேந்திரா மிகவும் முக்கியமானவர். ரே மறைந்த பின்னர் 1994 ஆம் ஆண்டு வெளியான ஒரு மேதையின் ஆளுமை என்ற தொகுப்பு நூலில் பாலுமகேந்திரா எழுதியிருக்கும் கட்டுரைகள் திரைப்படத்துறையில் பயிலவிருப்பவர்களுக்கு சிறந்த பாட நூல். இந்திய சினிமாவின் நூற்றாண்டு தமிழகத்தில் கொண்டாடப்பட்டுள்ள கால கட்டத்தில் பாலுமகேந்திராவின் மறைவை – தென்னிந்திய சினிமாவில் அவரது பங்களிப்பு தொடர்பாக ஆராய்வதற்கும் – அவரது இழப்பு பலருக்கும் வழி திறந்திருக்கிறது. பாலு மகேந்திரா இயல்பிலேயே நல்ல தேர்ந்த ரசனையாளர். இலக்கியப்பிரியர். தீவிர வாசகர். இலங்கையில் அவர் மட்டக்களப்பில் படித்த காலத்திலும் சரி கொழும்பில் வரைபடக்கலைஞராக பணியிலிருந்த காலத்திலும் சரி அவரது கனவுத் தொழிற்சாலையாக அவருக்குள்ளே தொழிற்பட்டது அவர் நேசித்த சினிமாதான்.
லண்டன் கீழைத்தேய பரீட்சைச் சபையின் பட்டமளிப்பு விழாவில் செல்வன் அகஸ்ரி ஜோகரட்னம் மிருதங்கத்தில் டிப்ளோமா பரீட்சையை மேற்கொண்டு தேர்ச்சி பெற்று ‘சங்கீத கலாஜோதி’ பட்டத்தினை பெற்றுக்கொண்டார். இசை நடனம், மிருதங்கம், வயலின், வீணை போன்ற நுண்கலைகளுக்கு ஐரோப்பாவில் அங்கீகரிக்கப்பட்ட தனித்துவம் மிக்க அமைப்பாக லண்டன் கீழைத்தேய பரீட்சைச்சபை 2008 ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கி வருகின்றது. ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம் அவர்கள் இந்த அமைப்பினை நிர்வகித்து வருகின்றார். கலையார்வம் கொண்ட அகஸ்ரி ஜோகரட்னம் தற்போது லண்டனில் வசித்து வரும் ‘மிருதங்க மேதை’ காரைக்குடி கிருஷ்ணமூர்த்தியிடம் தொடர்ந்தும் மேலதிக பயிற்சிகளை மேற்கொண்டுவருகின்றார். ‘அண்மைக்காலத்தில் நான் கலந்துகொண்ட மிருதங்க இசை நிகழ்ச்சிகளில் அகஸ்ரி ஜோகரட்னம் போல இத்துணை இளவயதில் அபூர்வமான இசைஞானத்தைக் காட்டிய ஒரு இளவலை நான் கண்டது கிடையாது. அவருக்கு இந்த இசைஞானம் இறைவன் அளித்த கொடையாகும்’ என்று பிரபல மிருதங்கவாத்திய விசாரத் பிரம்மஸ்ரீ ஏ.என். சோமஸ்கந்தசர்மா அவர்கள் பாராட்டியிருந்தார்.
– ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான அண்மையில் மறைந்த பாலுமகேந்திரா அவர்கள் ‘மூன்றாம் பிறை’ என்னும் பெயரில் வலைப்பதிவொன்றை பெப்ருவரி 2012இல் ஆரம்பித்து நடாத்தி வந்தார். அதிலவர் எழுதியிருந்த கட்டுரைகளை ஒரு பதிவுக்காக ‘பதிவுகள்’ இணைய இதழ் பதிவு செய்கின்றது. – பதிவுகள் –
பாலுமகேந்திரா பேசுகிறேன்….
நண்பர்களே…, என்னுடைய வாழ்க்கையை சுயசரிதையாக நான் பதிவு செய்ய வேண்டும் என்று எனது மாணவர்களும், நலம் விரும்பிகளும் மற்றும் என்னை ரொம்பவும் மதிப்பவர்களும் அவ்வப்போது என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். சுயசரிதம் எழுதும் அளவிற்கு நான் அப்படியொன்றும் சாதனையாளனல்ல. நான் ஒரு சாமன்யன். இன்னும் சொல்லப்போனால் நான் ஒரு சேறு நிறைந்த சாக்கடை. இந்த இடத்தில் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். லட்சுமி அமர்ந்திருப்பதாக சொல்லப்படும் செந்தாமரையும் சரஸ்வதி வீற்றிருப்பதாக சொல்லப்படும் வெண்தாமரையும் சேற்றில் தானே மலர்கின்றன.பாலுமகேந்திரா என்ற சேற்றில் இருந்து தான் கோகிலா, அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை, மறுபடியும், சதிலீலாவதி, ஜூலி கணபதி, அது ஒரு கனாக்காலம், போன்ற செந்தாமரைகளும், வீடு, சந்தியா ராகம், போன்ற வெண்தாமரைகளும் மலர்ந்தன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உடற் கூறியல் பிரிவுத் தலைவராகப் பணியாற்றிய ராஜினி திரணகம ஈழத்தமிழர்களின் மனித உரிமைகளுக்காக இறுதிவரை போராடியவர். ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திப் போராடியவர். வெளிநாட்டில் வாழ்ந்துகொண்டு சீரும் சிறப்புமாக வாழ்ந்திருக்கக் கூடியதொரு சூழலில் போர்ச்சூழலில் மூழ்கிக் கிடந்த சொந்த மண்ணுக்குத் திரும்பியவர். போராட்டச் சூழலில் தமிழ் மக்கள்மேல் அனைத்துப் பிரிவினராலும் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கெதிராகக் குரல்கொடுத்தவர். அவற்றை ‘முறிந்த பனை’ என்னும் நூலில் பதிவு செய்தவர். அதன் காரணமாகவே சுட்டுக்கொல்லப்பட்டவர். அவரைக்கொன்றவர்கள் யார் என்பது பற்றிப் பல்வேறு ஊகங்கள் , குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள போதிலும், இவை யாவும் நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அல்ல என்பதால் எம்மாலும் அவ்விதம் குற்றஞ்சாட்ட முடியவில்லை. இவரை யார் படுகொலை செய்திருந்தாலும், ஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றில் அதுவொரு களங்கமாகத்தானிருக்கும். நிராயுதபாணியான பெண்ணொருவர், இரு குழந்தைகளின் தாய், சொந்த மண்ணில் மக்களுக்காக இறுதிவரை குரல் கொடுத்த மனித உரிமைப் போராளி இவ்விதம் சுட்டுக்கொல்லப்பட்டதை ஒருபோதுமே நியாயப் படுத்த முடியாது. இதுபோல் பலர் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்கள்; அல்லது காணாமல் போயிருக்கின்றார்கள். ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடும் அனைவரும், அமைப்புகளும் இக்காலகட்டத்தில் தமது கடந்த கால வரலாற்றைப் பாரபட்சமின்றிச் சுயபரிசோதனை செய்வது அவசியம். நடந்த தவறுகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும். அதன் மூலமே ஈழத்தமிழர்களின் உரிமைப்போராட்டத்தின் நேர்மை மேலும் வலுப்படும். தவறுகளுக்காக, தம்மைத்தாமே மீளாய்வு செய்வதென்பது ஆரோக்கியமானதொரு செயற்பாடு. எதிர்கால முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமானதொன்று.