“watch our girls march fearless of the fight
Torch of learning burning ever bright” – இளவாலை கன்னியர் மடத்தின் பாடசாலைக் கீதம்.
இளவாலைக் கன்னியர் மடத்தில் குளிர் நிழல் பரப்பும் மகோக்கனி மரத்தில் சிறகடித்துத் திரிந்த வானம்பாடி ஊசிப்பனித் தேசத்தில் தரித்து நின்று தன் வாழ்வின் சோபனங்களைத் தொலைத்துவிட்ட துயரங்களின் துளிகளில் இந்தக் கவிதைத் தாள்கள் நனைந்திருக்கின்றன.
‘நடு இரவில்
எனக்கு மட்டும் சூரியன் உதிக்கிறான்
சூரியன் உதிக்கும் பொழுது
இருள் தோன்றுகின்றது’
என்ற நவஜோதியின் வரிகள் ஒரு பெண் கவியின் சூக்கும உலகின் சிக்கலான பரிமாணங்களைக் கோடிட்டுக் காட்டுகின்றன.