– அண்மையில் பாரதிதாசன்பல்கலைக்கழக உறுப்பு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் (தமிழ்நாடு) நடைபெற்ற “தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள்” பன்னாட்டுக்கருத்தரங்கிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்படும். இவற்றைத் தொடர்ச்சியாகப் ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அனுப்பி வைப்பதாக முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். – ஆசிரியர், பதிவுகள் –
ஆய்வுச்சுருக்கம்
தமிழ்மொழியைக் கற்றல் கற்பித்தலுக்கு உதவும் இணைய ஏந்துகள் (வசதிகள்) தற்போது பல்கிப் பெருகி வருகின்றன. மழலையர்; கல்வி தொடங்கி முனைவர் படிப்பு வரையில் தமிழில் படிப்பதற்குரிய வாய்ப்புகளை இன்றைய இணையம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. கேட்டல், பேச்சு, வாசிப்பு, எழுத்து முதலான அடிப்படைப் படிப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரையில் இணையத்தில் படிக்கக்கூடிய நிலைமை உருவாகிக்கொண்டு வருகின்றது. தமிழ்மொழியைக் கற்றல் கற்பித்தலுக்கு இணையத்தை எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும், இணையம் தொடா;பான ஏந்துகளைத் தமிழ்மொழியைக் கற்றல் கற்பித்தலுக்கு எவ்வாறெல்லாம் பயன்படுத்த முடியும் என்பதையும், இலக்கணத்தையும் இலக்கியத்தையும் புதிய ஊடகத்தின் வழியாக புதிய அணுகுமுறைகளோடு தமிழ்மொழியைக கற்பது கற்பிப்பதுப் பற்றி இக்கட்டுரை எடுத்துக் கூறுகின்றது.