வாசிப்பும், யோசிப்பும் 54: சீனத்துப் பைங்கிளி கூறிய இலக்கணம்!

வாசிப்பும், யோசிப்பும் 54: சீனத்துப் பைங்கிளி கூறிய இலக்கணம்!

‘டொராண்டோ’ போன்ற பல் கலாச்சார மக்கள் வாழும் நகரங்களில் வசிப்பதால் ஏற்படும் நன்மைகளிலொன்று: உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களுடன் பழகுவதற்கு, அவர்களைப் பற்றி அறிவதற்குச் சந்தர்ப்பங்கள் ஏற்படுவதாகும். பல்வேறு நாட்டு மக்களின் உணவு வகைகளை ருசிப்பதற்குச் சந்தர்ப்பங்கள் ஏற்படுவதாகும். எல்லாவற்றிலும் மேலாக இப்பூவுலகு பற்றிய சிந்தனை முதிர்ச்சி ஏற்படுவதாகும். இத்தாலியர்கள் சிறிது ஆச்சரியம் அடையும்போது ‘மம்மா மியா’ என்பார்கள். ஸ்பானிஷ்காரர்கள்  ‘நண்பனே’ என்பதற்கு ‘அமிகோ’ என்பார்கள். எனக்குத் தெரிந்த ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஆசிரியனொருவன் தமிழ் உட்படப் பல்வேறு மொழிகளில் சிறிதாவது உரையாடுவதற்குப் போதுமான மொழியறிவு பெற்றிருக்கிறான். என்னைக் கண்டால் தமிழில் நலம் விசாரிப்பான். பாகிஸ்தானியர்களைக் கண்டால் ‘அஸ்ஸலாமு அழைக்கும்’ , கியா ஹால் கை’, ‘சுக்ரியா’ போன்ற உருது சொற்களைக் கூறுவதற்குத் தெரியும். போர்த்துகேயர்களைக் கண்டால் அவர்கள் ஒரு காலகட்டத்தில் எங்களூரில் செய்த அட்டுழீயங்களை விபரிப்பேன். மேலும் ஜன்னல், சப்பாத்து என்று தமிழில் கலந்துவிட்ட போர்த்துகேய சொற்களைப் பற்றிய எனது பாண்டித்தியத்தையும் சிறிது ‘அவிழ்த்து’ விடுவேன். ‘ஆ’வென்று வாயைப் பிளப்பார்கள். ஆங்கிலேயர்களிடம் ‘எங்கள் மொழியிலிருந்தும் நீங்கள் சொற்களைக் கடன் வாங்கியிருக்கிறீர்கள் தெரியுமா?’ என்பேன். ‘என்ன” என்று தலையைச் சொறிவார்கள். அவர்களுக்கு ‘கட்மரான்’ கட்டுமரத்திலிருந்து வந்ததுதானென்பேன்.  அவர்களும் தம் பங்குக்கு வாயைப் பிளப்பார்கள்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 53: கவிதை பற்றிச் சில வரிகள் …..

வாசிப்பும், யோசிப்பும் 53: கவிதை பற்றிச் சில வரிகள் .....

இன்று கவிதைகளை எழுதித் தள்ளுகின்றார்கள் பலர். நூற்றுக்கணக்கில் கவிஞர்களும், அவர்கள்தம் நூல்களும் வெளிவருகின்றன. கவிதைகளைப் பற்றிய அடிப்படை அறிவில்லாதவர்களெல்லாரும் கவிதைகளைத் தொகுத்து தொகுப்புகளை வெளியிடுகின்றார்கள். இவர்கள் எல்லாரும் இவ்விதம் கவிதைகளை எழுதித் தள்ளுவதற்கு முக்கிய காரணங்களிலொன்று: மரபுக் கவிதையிலிருந்து புதுக்கவிதைக்குக் கவிதை பரிணாமமடைந்து விட்டது. இனி ஒன்றைபற்றியும் கவலைப்படத்தேவையில்லை.’ இவ்விதம் எண்ணிக்கொண்டு எழுதித்தள்ளூகின்றார்கள். இவர்களது கவிதைகளை முறிக்காமல் எழுதி விட்டு வாசித்துப் பாருங்கள்.  அவை கவிதைகளல்ல என்பதைப் புரிந்துகொள்ளலாம். இவர்களெல்லாரும் ஒன்றினைப் புரிந்துகொள்ள வேண்டும். கவிதையிலிருந்து கவிதையானது புதுக்கவிதைக்கு மாறிவிட்டது உண்மைதான். ஆனால் கவிதையானது தனது அடிப்படைத் தன்மைகளிலிருந்து மாறிவிடவில்லை என்பதை இவர்கள் மறந்து விட்டார்கள். கவிதை மரபுக் கவிதையோ அல்லது மரபு மீறிய நவீன கவிதையோ கவிதையாக இருக்க வேண்டும். அது கவிதையாக இருப்பதற்கு கவிதையில் பாவிக்கப்படும் மொழி முக்கியம். மரபுக் கவிதையில் மட்டுமல்ல மரபினை மீறிய நவீன கவிதையிலும் ஓசை நயமுண்டு. உதாரணமாகச் சேரனின் ஒரு கவிதையினை எடுத்துப் பார்ப்போம்:

Continue Reading →

நிகழ்வுகள்: மாதாந்த இலக்கிய கலந்துரையாடல் 30-08-2014

நிகழ்வுகள்: மாதாந்த இலக்கிய கலந்துரையாடல் 30-08-2014நிகழ்ச்சி நிரல்
கிறித்தவமும் தமிழ்ப் பண்பாடும்
உரை: பேராசிரியர் அ.ஜோ.சந்திரகாந்தன்

சிறப்பு விருந்தினர்கள் உரை
“தமிழ்ப்பண்பாடு எனும் கருத்துருவாக்கத்தில்
கிறிஸ்தவ மிஷனறிமாரின் பங்களிப்பு” – கலாநிதி மைதிலி தயாநிதி
வீரமாமுனிவரின்  தமிழ் இலக்கியப்பணி – ஜுட்   பெனடிக்ட், BA (Hons. Jaffna) MA (Cand.)

ஆடி மாத இலக்கிய நிகழ்வுகள்
தொகுப்புரை: திருமதி ஜெயகௌரி சுந்தரம்பிள்ளை

Continue Reading →

கிளவியாக்கத்தில் தெய்வச்சிலையாரின் தொடரியல் சிந்தனைகள்

தொல்காப்பியம் தமிழில் கிடைக்கப்பெற்ற நூல்களில் மிகவும் தொன்மையானது. இதன் காலம் குறித்து பல்வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இருப்பினும், இந்நூலுக்கு காலந்தோறும் உரை வெளிவந்த வண்ணம் உள்ளது. தொல்காப்பியச்…

Continue Reading →

கிளவியாக்கத்தில் தெய்வச்சிலையாரின் தொடரியல் சிந்தனைகள்

தொல்காப்பியம் தமிழில் கிடைக்கப்பெற்ற நூல்களில் மிகவும் தொன்மையானது. இதன் காலம் குறித்து பல்வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இருப்பினும், இந்நூலுக்கு காலந்தோறும் உரை வெளிவந்த வண்ணம் உள்ளது. தொல்காப்பியச்…

Continue Reading →

மெல்பனில் முருகபூபதியின் ‘சொல்லமறந்த கதைகள்’ நூல் வெளியீட்டு அரங்கு

படைப்பிலக்கியவாதியும்   பத்திரிகையாளருமான   அவுஸ்திரேலியா  மெல்பனில் வதியும் திரு. லெ. முருகபூபதியின் புதிய புனைவிலக்கிய கட்டுரைத்தொகுதியின்   வெளியீட்டு   அரங்கு   எதிர்வரும்   23-08-2014           ஆம்  திகதி   மாலை  3   மணியிலிருந்து  …

Continue Reading →

சுதாராஜின் சிறுகதைகள் பற்றிய ஆளுமைகளிருவரின் பார்வைகள் ஒரு பதிவுக்காக ‘பதிவுகளி’ல்!

சுதாராஜ் சிறுகதைகள்சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் சுதாராஜின் படைப்புகள் முக்கியத்துவம் மிக்கவை. 2010 ஜுனில் நியு செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட  உயிர்க்கசிவு எனும் 60 சிறுகதைகளின் தொகுப்பு நூலுக்கு, எம்.ஏ.நுஃமான் அவர்களும் பொன்னீலன் அவர்களும் எழுதிய முன்னுரைகள் அவரது சிறுகதைகள் பற்றிய விரிவான பார்வையினை அளிப்பதாலும், ‘பதிவுகள்’ இணைய இதழில் சுதாராஜின் சிறுகதைகள் தொடர்ச்சியாக வெளிவருவதாலும்,  பதிவுகள் வாசகர்களுக்கு எழுத்தாளர் சுதாராஜ் பற்றிய மேலதிக விளக்கங்களை இவை அளிப்பதாலும், பதிவுகளில் இம்முன்னுரைகளை மீளப்பிரசுரிப்பது பொருத்தமானதே. இவற்றை எமக்கு அனுப்பி வைத்த சுதாராஜுக்கு நன்றி. – -பதிவுகள் –

சுதாராஜ் சிறுகதைகள்

எம். ஏ. நுஃமான்

1970களில் எழுதத் தொடங்கிய சுதாராஜ், இலங்கையின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். கடந்த சுமார் நாற்பது ஆண்டுகால ஈழத்து வாழ்வின் அசைவியக்கத்தை, அதன் வரலாற்றுத் திருப்பங்களை, தனிமனித வாழ்வில், மன உணர்வுகளில் அவை ஏற்படுத்திய தாக்கங்களைத் தன் கதைகளில் அவர் பதிவுசெய்திருக்கிறார். இந்தப் பதிவுகள் உணர்வு சார்ந்த, அனுபவம் சார்ந்த பதிவுகளாக அமைகின்றன. அவற்றில் பொதிந்திருக்கும் அரசியலும் அழகியலும் அவரை சமூகப் பொறுப்புடைய ஒரு கலைஞராக இனங்காட்டுகின்றன.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் -52: மொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்க வெளியீடான ‘நுட்பம்’ இதழ் பற்றி…

magazine_nutpam1981ab.jpg - 34.65 Kbமொறட்டுவைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தின் 1980/1981 ஆண்டுக்கான செயற்குழுவில் , சங்கம் வருடா வருடம் வெளியிடும் ‘நுட்பம்’ சஞ்சிகைக்கான இதழாசிரியர் குழுத் தலைவராக நானிருந்தேன்.  இதழாசிரியர் குழுவில் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த சு.வித்தியானந்தன், கட்டடக்கலைப் பீடத்தைச் சேர்ந்த அ.மகேந்திரன் ஆகியோரிருந்தனர்.

“ஒரு நாள் வரும்.
எழுதுகோல் நிற்கும்.
பின் கைகள் ஆயுதங்களைத் தாங்கும்.
இலக்கியம் இயல்பாகவே யுத்தத்திற்கு
இட்டுச் செல்லும்” – Jean Paul Satre

என்னும் சார்த்தரின் கூற்று முதல் பக்கத்தில் தமிழ்ச்சங்க இலச்சினையுடனிருக்கும். மேற்படி சஞ்சிகை நல்ல முறையில் வெளிவரப் பெரிதும் உதவியவர்கள் விரிவுரையாளர் மு.நித்தியானந்தன், மற்றும் யாழ் பல்கலைக்கழக நூலகத்தைச் சேர்ந்த மூர்த்தி ஆகியோரே. மேற்படி சஞ்சிகையின் அட்டைப்படத்தினை வரைந்தவர் தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கட்டடக்கலைஞர் குணசிங்கம். ஓவியத்திலிருக்கும் ஆண்டினை உற்றுக் கவனித்தீர்களென்றால் அது ஒருவிதத்தில் 1980 ஆகவும், இன்னொரு விதத்தில் 1981 ஆகவுமிருக்கும். 1980 / 1981 நடப்பாண்டுச் செயற்குழுவின் வெளியீடு என்பதால் ‘நுட்பம்’ இதழின் அட்டைப்பட ஓவியத்தில் ஓவியர் காட்டிய நுட்பம் அது. சஞ்சிகையில் வெளிவந்த ஆக்கங்கள் வருமாறு:

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் – 51: கே.எஸ்.சிவகுமாரன் என்னும் கலை, இலக்கியத்திறனாய்வாளர்!

வாசிப்பு, யோசிப்பும் - 51:  கே.எஸ்.சிவகுமாரன் என்னும் கலை, இலக்கியத்திறனாய்வாளர்!ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் இலக்கியத் திறனாய்வில் தங்கள் பங்களிப்பை நல்கியவர்களில் கே.எஸ்.சிவகுமாரனுக்கும் முக்கியமானதோரிடமுண்டு. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அவரது கட்டுரைகளைப் பல்வேறு பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் இணைய இதழ்கள் பிரசுரித்து வருகின்றன. அவரது பங்களிப்பு எத்தகையது என்பதைச் சிறிது ஆய்வுக்கண்ணோட்டத்தில் சிந்திப்பதுதான் இக்கட்டுரையின் நோக்கம். இவரது பத்தி எழுத்துகள் அதிகமாக வெளிவருவதால் இவர் தன்னையொரு பத்தி எழுத்தாளராகவே அடிக்கடி கூறிக்கொள்கின்றார். தான் எழுதுவது இலக்கியத் திறனாய்வுகளல்ல வெறும் மதிப்பரைகள்தாம் என்று கூறிக்கொள்கின்றார். இவர் எழுத்துகள் வெறும் புத்தக மதிப்புரைகளா? அல்லது காத்திரமான இலக்கியத் திறனாய்வுகளா? இவ்வகையான எண்ணம் பலருக்கும் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. இதற்கு முக்கிய காரணங்களிலொன்று இவர் அடிக்கடி தான் எழுதுவது வெறும் மதிப்பபுரைகள்தாம் என்று கூறிக்கொள்வதுமென்பதென் கருத்து. இது பற்றிக் கலாநிதி கார்த்திகேச சிவத்தம்பி அவர்களும் ‘திறனாய்வுப்பார்வைகள்” – பத்தி எழுத்துகளும் பல் திரட்டுகளும் 1 -(1966இல் வெளிவந்த நூல்) என்னும் கே.எஸ்.எஸ். அவர்களின் கட்டுரைத் தொகுப்பு நூலொன்றுக்கு எழுதிய முன்னுரையில் பின்வருமாறு கூறியிருப்பார்:

Continue Reading →

இலங்கை மீதான ஐ.நா விசாரணை தொடங்கியது – குற்றச்சாட்டுகள் மற்றும் சாட்சியங்களைச் சமர்ப்பிக்கலாம்!”

ஈழப்போரில் நிகழ்ந்தேறிய போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றச்செயல்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் ஆரம்பித்துள்ளது. குற்றச்செயல் நடந்த காலம்: 21.02.2002 முதல் 15.11.2011 வரை. (இதனோடு தொடர்புடைய நிகழ்வுகள் அல்லது அதன் தொடர்ச்சி அதற்கு பின்னர் நடைபெற்றாலும் அதுகுறித்தும் புகார் தெரிவிக்கலாம்). புகார் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 30.10.2014. (அக்டோபர் மாதம் 30 ஆம் நாளுக்கு முன்னதாக புகார்களை அனுப்ப வேண்டும்) புகார்களை ஆங்கிலத்தில் மட்டுமன்றி தமிழ் மொழியிலும் அனுப்பி வைக்கலாம்ஈழப்போரில் நிகழ்ந்தேறிய போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றச்செயல்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகம் ஆரம்பித்துள்ளது. குற்றச்செயல் நடந்த காலம்: 21.02.2002 முதல் 15.11.2011 வரை. (இதனோடு தொடர்புடைய நிகழ்வுகள் அல்லது அதன் தொடர்ச்சி அதற்கு பின்னர் நடைபெற்றாலும் அதுகுறித்தும் புகார் தெரிவிக்கலாம்). புகார் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 30.10.2014. (அக்டோபர் மாதம் 30 ஆம் நாளுக்கு முன்னதாக புகார்களை அனுப்ப வேண்டும்) புகார்களை ஆங்கிலத்தில் மட்டுமன்றி தமிழ் மொழியிலும் அனுப்பி வைக்கலாம்.

Continue Reading →