‘செப்டெம்பர்’ 2014 கவிதைக்ள்!

செப்டம்பர் 2014  கவிதைக்ள்!மணிபாரதி (அம்பாசமுத்திரம்) கவிதைக்ள்!

1. கூடு

மேய்ச்சலுக்கு போன
மாடுகள் கொட்டடி திரும்பின,

உணவு தேடியலைந்த
பறவைகள் கூடு திரும்பின,

பணி முடித்த
மனிதர்கள் வீடு திரும்பினர்,

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 57: மேலும் சில முகநூற் குறிப்புகள்!

கனடாத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘தாயகம்’ சஞ்சிகையின் பங்களிப்பு.

வாசிப்பும், யோசிப்பும் 57: மேலும் சில முகநூற் குறிப்புகள்!கனடாத் தமிழ் இலக்கியத்துக்குத் ‘தாயகம்’ சஞ்சிகை ஆற்றிய பங்களிப்பு முக்கியமானது. ஐந்து வருடங்கள் வரையில் 200ற்கும் அதிகமான இதழ்கள் வெளியாகியது மட்டுமல்ல, உலகின் பல பாகங்களிலிருந்தும் பலரின் படைப்புகளையும் தாங்கி வெளியான சஞ்சிகை / பத்திரிகை அது. மாத்தளை சோமு , பேராசிரியர் சிவசேகரம், கலா மோகன் (பல படைப்புகள்: ஜெயந்தீசன் என்னும் பெயரில் எழுதிய குட்டிக்கதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள் போன்ற), தி. உமாகாந்தன்,  செல்வம் (இவரது ‘கிழுவை மரச் சிலுவை’ என்னும் நாடகம் தாயகத்தில் தொடராக வெளிவந்தது), ரதன், ஆனந்தபிரசாத் (‘ஆடலுடன், பாடலைக்கேட்டு’ தொடர்), வ.ந.கிரிதரன் (பல படைப்புகள்: சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடர் கட்டுரைகள் ஆகியன), கவிஞர் கந்தவனம் (இவரது ‘மணிக்கவிகள்’ தாயகம் சஞ்சிகையில்தான் முதலில் வெளியாகின), ஜி.மொனிக்கா (இவரது பல சிறுகதைகள், கவிதைகள் வெளியாகியுள்ளன), நேசமித்திரனின் பல படைப்புகள், சின்னத்தம்பி வேலாயுதத்தின் ‘ஈழம் ஒரு தொடர்கதை’த் தொடர்) கனடா மூர்த்தி ‘முனி’ என்னும் பெயரில் அளித்த சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த பதில்கள் , ஜோர்ஜ் குருஷேவ்வின் ‘சிறுகதைகள்’ .. என பலரின் படைப்புகளைத் தாங்கி வெளிவந்த பத்திரிகை / சஞ்சிகை ‘தாயகம்’. ‘தாயகம்’ பத்திரிகை. சஞ்சிகையினைத் தவிர்த்துக் கனடாத் தமிழ் இலக்கியம் பற்றிக் கதைக்க முடியாது. இங்கு குறிப்பிட்டவர்களைப் போல் இன்னும் பலர் ‘தாயக’த்துக்குப் பங்களிப்பு செய்துள்ளார்கள். அதன் மூலம் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருக்கின்றார்கள். ‘தாயகம்’ சஞ்சிகை பற்றிய விரிவான ஆய்வொன்றின் அவசியம் (கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு அது ஆற்றிய பங்களிப்பு பற்றி) தவிர்க்க முடியாது. ‘படிப்பகம்’ இணையத்தளத்தில் ‘தாயகம்’ சஞ்சிகையில் சுமார் 50 வரையிலான இதழ்களுள்ளன. ‘தாயகம்’ சஞ்சிகை தனது அரசியல் கருத்துகளைப் படைப்பாளிகளின் மேல் ஒருபோதுமே திணித்ததில்லை. அதனால்தான் பல்வேறு அரசியல் கருத்துள்ளவர்களின் படைப்புகளை பலவற்றைத் தாங்கி அதனால் வெளிவர முடிந்திருக்கின்றது. ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து , மிக அதிகமான இதழ்களை வெளியிட்ட இலக்கியச் சஞ்சிகை / பத்திரிகை அது.

Continue Reading →

ஒரே இலக்கில் இரண்டு பறவைகள்

1_thangavadivel5.jpg - 286.67 Kbதிரு. தங்கவடிவேல் ஆசிரியர் அவர்கள் எனது தந்தை அகஸ்தியரின் ‘லெனின் பாதச் சுவடுகளில்…’ என்ற நூல் வெளியீட்டிற்கு சிறப்புச் சொற்பொழிவாற்ற வருகை தந்து சிறப்புரை ஆற்றியமை எங்களுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய கௌரவமாக நான் கருதுகிறேன். திரு.தங்கவடிவேல் அவர்கள் எனது தந்தையின் சம காலத்தவர். முற்போக்கு அரசியல் இலக்கிய பாரம்பரியத்தைச் சுவீகரித்தவர்கள். திரு. தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் தன் சமகாலத்தில் முற்போக்கு இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்த அனைத்து எழுத்தாளர்களுடனும் நல்லுறவைப் பேணி வந்தவர் ஆவார். \யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதி ஒடுக்குமுறை தமிழ் சமுதாயத்தின் கோரமான முகம் என்பதை நன்குணர்ந்த என் தந்தை அகஸ்தியர் அவர்கள் இந்த சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக ‘எரிநெருப்பில் இடைபாதை இல்லை’ என்ற நாவலை எழுதினார். எழுத்து வெறும் கலைக்காக  மட்டுமல்ல அது சமுதாய மாற்றத்தைக் கோரி நிற்கும் புரட்சிகரப் பணியாகும் என்பது என் தந்தையின் இலக்கியக் கோட்பாடாக இருந்தது.

Continue Reading →

‘With You, Without You’ திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயுடன் ஒரு நேர்காணல்

பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான இலங்கையைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயின் 'With You, Without You' (உன்னுடன், நீயில்லாமல்) எனும் திரைப்படமானது, கடந்த ஜூன் மாதத்திலிருந்து இந்தியத் திரையரங்குகளில் திரையிடப்பட திட்டமிடப்பட்டிருந்தது.பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான இலங்கையைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயின் ‘With You, Without You’ (உன்னுடன், நீயில்லாமல்) எனும் திரைப்படமானது, கடந்த ஜூன் மாதத்திலிருந்து இந்தியத் திரையரங்குகளில் திரையிடப்பட திட்டமிடப்பட்டிருந்தது. யுத்த கால இலங்கையைப் பின்புலமாகக் கொண்ட இத் திரைப்படமானது, ஒன்று சேரவே முடியாத இடைவெளியை ஏற்படுத்திச் சென்ற மோதலொன்றின் இடையே, தற்செயலாகச் சந்திக்க நேரும் இருவரைச் சுற்றி பின்னப்பட்ட கதையாகும். அவர்கள் இருவருக்கும், அந்த இடைவெளியை அழித்து ஒன்று சேர காதல் உதவுமா அல்லது அவர்களது இறந்த காலமானது தொடர்ந்தும் நிகழ்காலத்தைப் பாதித்துக் கொண்டேயிருக்குமா என்பதைப் பற்றியே இத் திரைப்படம் பேசுகிறது.  இந்தத் திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகை அஞ்சலி பட்டீலுக்கு, இத் திரைப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக  2012 ஆம் ஆண்டு நடந்த இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. அத்தோடு இத் திரைப்படமானது, லண்டன் BFI, சிக்காகோ, ஹொங்கொங், கேரளா மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றிலும் திரையிடப்பட்டுள்ளது.

கேள்வி – ‘With You, Without You’ திரைப்படமானது தஸ்தாவேஸ்கியின் ‘A Gentle Creature’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இந் நாவலின் கதையை, இலங்கையின் யுத்த காலத்தோடு தொடர்புபடுத்தலாம் என உங்களுக்கு ஏன் தோன்றியது? அவ்வாறு உங்களுக்குத் தோன்றச் செய்தது எது?

பதில் – வளர்ந்துவரும் திரைக்கதையாசிரியர் ஒருவர், இந் நாவலை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் யுத்த காலப் பின்னணியில் தான் எழுதிய கதையை என் கவனத்தில் கொண்டு வந்தார். தஸ்தாவேஸ்கியின் இந் நாவலானது, பல தளங்களில் விரியும் படைப்பு. அதன் ஒரு தளமானது நுகர்வுக் கலாசாரம், மானிடத் தொடர்புகளை சீர்குலைப்பதை விவரிப்பதாக அமைந்திருப்பதாக பல விமர்சகர்கள் தங்கள்  கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தக் கருவானது, அகிலம் முழுவதற்கும் பொருந்தக் கூடியதாகவும், நிரந்தரமானதுமென நான் சிந்தித்தேன்.

Continue Reading →