வாசிப்பும், யோசிப்பும் 60 – : கனடாத் தமிழ் இலக்கியம்: ‘ழகரம்’ சஞ்சிகை.

வாசிப்பும், யோசிப்பும் 60 - : கனடாத் தமிழ் இலக்கியம்: 'ழகரம்' சஞ்சிகை.வாசிப்பும், யோசிப்பும் 60 - : கனடாத் தமிழ் இலக்கியம்: 'ழகரம்' சஞ்சிகை.கனடாத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் ‘ழகரம்’ சஞ்சிகைக்கும் முக்கியமானதோரிடமுண்டு.  ஆனி 1997, ஆடி 1997, ஆவணி/புரட்டாதி 1997 & ஐப்பசி 1997 என நான்கு இதழ்களே வெளிவந்துள்ள போதிலும், தவிர்க்க முடியாத சஞ்சிகை. ‘ழகரம்’ சஞ்சிகையினை எழுத்தாளர் அ.கந்தசாமி அவர்களே வெளியிட்டு வந்ததாக நான் கருதுகின்றேன். எழுத்தாளர் அ.கந்தசாமி எழுபதுகளில் யாழ் நகரில் புகழ்பெற்ற பெளதிக ஆசிரியராக விளங்கியவர். கனடா வந்த பிறகுதான் இவரது இலக்கியப் பங்களிப்பு பற்றி அறிந்து கொண்டேன். ‘ழகரம்’ சஞ்சிகை 4 இதழ்களே வெளிவந்தாலும், கனடாத்தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளிலொன்று. கவிதைகள், தொடர்கதைகள் கனடாவில் வெளிவந்த சஞ்சிகைகள், பத்திரிகைகளில் தொண்ணூறுகளில் எழுதியிருக்கின்றார். இந்தப்பதிவின் நோக்கம் கனடாத் தமிழ் இலக்கியத்துக்குப் பங்களிப்பு செய்த பத்திரிகைகள், சஞ்சிகைகளை பற்றிய விபரங்களை ஆவணப்படுத்துவதுதான். குழு மனப்பான்மையுடன் பலர் செயற்படுவதால், பலரது ஆக்கபூர்வமான பங்களிப்புகள் பற்றிய விபரங்களும் மறைக்கப்பட்டு விடுகின்றன. இவ்விதமான சஞ்சிகைகள், பத்திரிகைகள் பலவற்றில் எழுதியவர்களே மேற்படி சஞ்சிகைகள், பத்திரிகைகள் பற்றி எழுதுதில்லை; பேசுவதில்லை. இந்நிலை ஆரோக்கியமானதொன்றல்ல.

Continue Reading →

என்னோடு வந்த கவிதைகள்—6

“மயக்கம் எனது தாயகம்
மெளனம் எனது தாய்மொழி.
கலக்கம் எனது காவியம்-நான்
கண்ணீர் வரைந்த ஓவியம்” –
   கண்ணதாசன்

- பிச்சினிக்காடு இளங்கோ கும்மிப்பாடல்கள், நடவுப்பாடல்கள், காவடிப்பாடல்கள், நாடகப்பாடல்கள், நாடகத்தில் பாடப்பட்ட திரைப்பாடல்கள், மாலையில், இரவில் நண்பர்கள் பாடிய திரைப்பாடல்களுக்கு மொழியை, இசையை, கலையை, அதன் சுவையை உணரவைத்ததில் பெரும்பங்கு உண்டு. ஒரு திரைப்பாடலைக்கூட முழுமையாய் நான் பாடியதில்லை. கற்றுக்கொண்டதுமில்லை. கோடையில் பிச்சினிக் குளக்கரையில் நிலா இரவில் வட்டமாக உட்கார்ந்துகொண்டு மூத்தவர்கள் தங்கள் இசை ரசணையை கச்சேரியாக நடத்துவார்கள்.அதைக்கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். பேச்சுப்போட்டி,பாடல்போட்டி எதுவும் நடைபெறாத ஊர் எங்கள் ஊர். உள்ளூர் ஏகலைவன்களே எங்களுக்கு முன்மாதிரி. அவர்களைப்பார்த்து சூடுபோட்டுக்கொண்டு புலியாய் மறியவர்கள் நாங்கள். ஒரு முளைக்கொட்டு மாறியம்மன் விழா நடைபெறும்போது நான் ஒரு பாடலை முதன்முதலாக ஒலிவாங்கியை எடுத்துப் பாடினேன். எங்கள் பள்ளிக்கூடத்திற்குள் இருந்துகொண்டு யாரும் பார்க்காதவாறு நின்றுகொண்டு பாடினேன்.அதுவரை நான் பாடி யாரும் கேட்டதில்லை. நானும் பாடியதில்லை. என்னைப்பாடச்சொன்ன அந்தப்பாடலைப் பாடிவிடுவது என முடிவெடுத்துத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பாடினேன். எல்லோரும் கேட்டார்கள். அவர்களிடமிருந்து விமர்சனத்தை எதிர்பார்த்தேன்.

Continue Reading →

திரும்பிப்பார்க்கிறேன்: இலங்கையில் கல்விக்கும் இலக்கியத்திற்கும் அயராது சேவையாற்றிய ஆய்வறிஞர் முகம்மது சமீம்.

muhamatsameem9.jpg - 33.91 Kbமுருகபூபதிகடந்த  சில  மாதங்களாக   முற்போக்கு   இலக்கிய   முகாமிலிருந்து அடுத்தடுத்து   எனது  இனிய   நண்பர்களை  நான் இழந்து கொண்டிருக்கின்றேன். இலங்கை   முற்போக்கு   எழுத்தாளர்   சங்கத்தின்   முன்னாள் செயலாளர்   நண்பர்   பிரேம்ஜி   ஞானசுந்தரன்   அவர்களின்   மறைவின் துயரத்தின்  சுவடு   மறையும்   முன்னர்   தமிழ்   நாட்டில்   மூத்த படைப்பாளி   இலக்கிய  விமர்சகர்   தி.க.சிவசங்கரன் மறைந்தார். அவருக்கும்   இரங்கல்  எழுதி   எனது   நினைவுகளுக்கு   அவரை மீண்டும்   அழைத்து   மனதிற்குள் உரையாடிக்கொண்டிருந்தவேளையில் —  இதோ  நானும்  வருகிறேன் என்னையும்    அழைத்துக்கொள்ளும்   என்று   நெஞ்சத்தினுள் பிரவேசித்துவிட்டார்     இனிய   நண்பர்    சமீம்   அவர்கள். அவரது   மறைவுச்செய்தியை  அறிந்தவுடன்  கடந்த  காலங்கள்தான் ஓடிவருகின்றன.   நான்   இலக்கிய   உலகில்   பிரவேசித்த  காலப்பகுதியில்  அதாவது 1972  ஆம்  ஆண்டு   காலப்பகுதியில்தான்   சமீம்  எனக்கு அறிமுகமானார்.  அவர்  கம்பளை  சாகிராக்கல்லூரி   அதிபராகவும்  பின்னர்   கிழக்குப்பிராந்திய   கல்வி  பணிப்பாளராகவும்  பணியாற்றிய காலகட்டத்தில்    எமது    இலங்கை   முற்போக்கு   எழுத்தாளர்   சங்கத்தின்    பணிகளிலும்   தீவிரமாக   இணைந்து   இயங்கினார்.

Continue Reading →