இலண்டன் தமிழ் நாடக விழா 2014: அடக்குமுறைக்கு எதிரான சரித்திர பிரசித்தி பெற்ற குரல் -சமூக விரோதி (1882) நாடகம்

இலண்டன் தமிழ் நாடக விழா 2014: அடக்குமுறைக்கு எதிரான சரித்திர பிரசித்தி பெற்ற  குரல்  -சமூக விரோதி (1882) நாடகம் க பாலேந்திரா மிழ் அவைக்காற்று கலைக் கழகம் இலங்கையில் 1978 இல் ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து இயங்கும் ஒரே தமிழ் நாடக அமைப்பு;  இலண்டனில் மையம் கொண்டு உலகில் பல நாடுகளிலும் நாடக விழா நடத்தி வருகின்றது . எதிர் வரும் ஒக்டோபர் 5ஆம் திகதி தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் வருடாந்த லண்டன் நாடக விழா வடக்கு இலண்டன் பகுதியிலே வாத்போர்ட் பம்ப் ஹவுஸ் அரங்கில் நிகழவிருக்கிறது.  இவர்களது இந்த  விழாவில் இரண்டு வெவ்வேறு சுவை தரும் நாடகங்கள் மேடையேறுகின்றன. முதலாவதாக லண்டன் தமிழ்  நாடக பள்ளி சிறுவர்கள் நடிக்கும் “அரசனின் புத்தாடை ‘ என்ற மாவை நித்தியானந்தனின் நாடகம் இடம் பெறுகின்றது. அடுத்து மிகவும் காத்திரமான உலகப் புகழ் பெற்ற “சமூக விரோதி ” என்ற நாடகம் பேராசிரியர் சி சிவசேகரம் அவர்களின் பிரதியாக்கத்தில் அரங்கேறுகிறது. இரு நாடகங்களையும் தமிழ் நாடக உலகு நன்கு அறிந்த நெறியாளர் க பாலேந்திரா நெறிப்படுத்துகிறார்.

அரசனின் புத்தாடை நாடகம் ஒரு  இசை கலந்த  நாடகமாக,  லண்டனில் பாலேந்திரா -ஆனந்தராணி ஆகியோரால் கடந்து பத்து வருடங்களாக நடத்தப் படும் இலண்டன் நாடகப் பள்ளி மாணவர்கள், அழகு தமிழில் முறையான அரங்கப் பயிற்சியுடன் , நிகழ்த்தும் வர்ணங்கள் நிறைந்த மேடை நிகழ்வு. நகைசுவையுடன் கூடிய  நாடகத்தில் , லண்டன் சிறுவர்கள் ஆடி பாடி கலகலப்பாக தோன்றுகின்றனர். துசி தனு சகோதரிகள் மற்றும்  ஜனன இசை வழங்க விஜயகுமாரி , தர்ஷினி ஆகியோர் பாடல்களை பாடுகின்றனர் நடக்க ஆசிரியர் மாவை நித்தியானந்தன் இது பற்றி கருத்து தெரிவிக்கும் போது பின் வருமாறு கூறுகிறார்:

Continue Reading →