திரும்பிப்பார்க்கின்றேன் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் குத்துவிளக்கு திரைப்படம் வெளியிட்ட கட்டிடக்கலைஞர் வி.எஸ். துரைராஜா தென்னிந்திய தமிழ் சினிமாவின் இராட்ச ஒளிவெள்ளத்தால் மங்கிப்போன ஈழத்தின் அகல்விளக்குகள்.

குத்துவிளக்கு   திரைப்படம்   1970   களில்    உருவான    சூழல்   மிகவும் முக்கியமானது.  வி.எஸ். துரைராஜாகுத்துவிளக்கு   திரைப்படம்   1970   களில்    உருவான    சூழல்   மிகவும் முக்கியமானது.     டட்லி சேனா  நாயக்கா    தலைமையிலான    ஐக்கிய தேசியக்கட்சி    படுதோல்வியடைந்து    ஸ்ரீமா ( ஸ்ரீலங்கா .சு.க)  –  என். எம். பெரேரா   (சமசமாஜி) –   பீட்டர்    கெனமன்    (கம்யூனிஸ்ட்) கூட்டணியில்    அரசு    அமைந்த   பின்னர்   பல   முற்போக்கான திட்டங்கள்    நடைமுறைக்கு    வந்தன. உள்நாட்டு     உற்பத்திக்கு   மிகவும்    முக்கியத்துவம்   தரப்பட்டது. வடக்கில்    வெங்காயம் – மிளகாய்   பயிர்செய்கையாளர்களின் வாழ்வில்    வசந்தம்   வீசியது. உள்நாட்டு    ஆடைத்தொழிலுக்கு  ஊக்கமளிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து    தரமற்ற    வணிக   இதழ்கள்   மீதான  கட்டுப்பாடு வந்தது. உள்நாட்டுத்திரைப்படங்களை   ஊக்குவிப்பதற்காக திரைப்படக்கூட்டுத்தாபனம்    தோன்றியது.

அதுவரைகாலமும்    இந்திய   திரைப்படங்களை    இறக்குமதி  செய்து கோடி    கோடியாக    சம்பாதித்த   இலங்கையில்    திரைப்படங்களின் இறக்குமதிக்கு   ஏகபோக    உரிமை     கொண்டாடிய   பெரும் தனவந்தர்களுக்கு   வயிற்றில்    புளி   கரைக்கப்பட்டது. பதுக்கிவைக்கப்பட்ட   கள்ளப்பணத்தை   வெளியே    எடுப்பதற்காக புதிய    ஐம்பது  –   ரூபா   நூறு    ரூபா    நாணயத்தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்நிய செலாவணி   மோசடிகளில்   ஈடுபட்ட   சில   பெரும்   புள்ளிகள் கைதானார்கள்.  கொழும்பு    தெற்கில்   வோர்ட்    பிளேஸில்   முன்னாள்   அதிபர் ஜே. ஆர் .ஜெயவர்தனாவின்    வாசஸ்தலத்திற்கு    அருகாமையில்   தமது கட்டிடக்கலை        பணியகத்தை    நடத்திக்கொண்டிருந்த  துரைராஜா அவர்களுக்கு    தாமே  ஒரு   தமிழ்த்திரைப்படம்   தயாரிக்கவேண்டும் என்ற    எண்ணம்    உருவானது   தற்செயலானது  என்று    சொல்ல முடியாவிட்டாலும்  அன்றைய   காலப்பின்னணியும்   அவரை அந்தப்பரீட்சைக்கு    தள்ளியிருந்தது    எனச்சொல்லலாம்.

Continue Reading →

நூல் அறிமுகம்: பல்வேறு பயன் தரும் பனைமரம் (MAN’S TROPICAL BOON-THE PALMYRA PALM)

நூல் அறிமுகம்: பல்வேறு பயன் தரும் பனைமரம்  (MAN’S TROPICAL BOON-THE PALMYRA PALM)நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)இலக்கிய  ஆய்வு  நூலுக்கான  ‘எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம்’  வழங்கிய  ‘தமிழியல் விருது-2011’ என்ற பரிசைப் பெற்ற, செந்தமிழ் செழிக்கும் யாழ் மண்ணில் நுணாவிலூர் எனும் பூங்காவில் மலர்ந்தெழுந்த நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களால்  எழுதப்பட்ட ‘பல்வேறு பயன் தரும் பனைமரம்’ என்ற ஆய்வு நூலொன்று அண்மையில் வெளிவந்துள்ளது. இந்நூலில், பல்வேறு பயன் தரும் பனைமரம், சங்க இலக்கியங்களில் பவனி வரும் விலங்குகளும் பறந்து பறந்து கீதம் பாடும் பறவைகளும், புகழ் நாடாது ஊதியம் பெறாது தீந்தேன் தரும் தேனீக்கள், மண்ணின் மாண்பும் மரத்தின் மாட்சியும், ஐந்திணைகளில் அமைந்த பதினான்கு வகையான வேறுபட்ட கருப்பொருள்கள், தேசத்துக்குப் பொருத்தமான தொழில்நுட்ப முறைகள், தொல்காப்பியம்- அகநானூறு- சிலப்பதிகாரம் காட்டும் கரணவியல், ஆண் பெண் பேதம் பேசும் தமிழ் இலக்கியப் பாங்கு, உலகரங்கில் நேர்மையும் தலைமையும், கலப்புத் திருமணம், இயமராசன் தமிழனுக்கு அளித்த வரம், ஐக்கிய நாடுகள் அமைப்பு, உலக நெறியான மனித நேயம், குடும்பமும் ஒற்றுமையும், கல்வியின் வருங்காலம், பூவுலகைப் படித்தல், சொர்க்கம் தரும் சுகம், இலக்கியம் சார்ந்த போட்டிகள், மனிதநேயத் தொடர்புகள், சொர்க்கம்! நரகம்! மறுபிறப்பு! கற்பனையா? நிசமா?, உலக சமாதானம் பேசும் இலக்கியங்கள், மகப்பேற்றிலும் மகத்தான உலக சாதனை படைக்கும் பெண்கள், மனித உரிமைகள் அன்றும் இன்றும், சனப்பெருக்கம் உலகிற்கோர் ஏற்றம் ஆகியவை பற்றி அலசப்பட்டுப் பேசப்பட்டுள்ளன. இவை இலக்கியம், இதிகாசம், உலகரங்கு, வாழ்வியல், மனிதநேயம், விலங்கியல், வானியல், பொருளாதாரம், தாவரவியல் ஆகிய பொருட்பிரிவுகளின் அடக்கமாகும்.

Continue Reading →