மாதாந்த இலக்கிய கலந்துரையாடல் 27-09-2014

மாதாந்த இலக்கிய கலந்துரையாடல் 27-09-2014 - 'ரொறன்ரோ' தமிழ்ச்சங்கம் -மாதாந்த இலக்கிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நிரல்

உரை: தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் பெண் – முனைவர் பார்வதி கந்தசாமி

சிறப்பு விருந்தினர்கள் உரை
சங்ககால ஒளவையின் ஆளுமை அம்சங்கள்
விமலா பாலசுந்தரம்
விலைமகளிர் சமூக அசைவியக்கத்தில் மாதவியும் மணிமேகலையும்மீரா இராசையா
ஆண்டாள் பாடல்களில் மரபும் மாற்றமும்தேன்மொழியாள் கங்காதரன்

ஆவணி மாத இலக்கிய நிகழ்வுகள்
ஐயந்தெளிதல் அரங்கு

Continue Reading →

ஸி. வி. வேலுப்பிள்ளை நூற்றாண்டு நிறைவு நினைவு ஒரு முன்னோட்டம்!

ஸி. வி. வேலுப்பிள்ளைசெப்டம்பர் பதினான்காம் திகதி ஸி.வி வேலுப்பிள்ளை நூற்றாண்டாகும். அவர் மலையக இலக்கியத்தின் தலைமகனாக விளங்கியவர். அவரது நூற்றாண்டை எதிர்நோக்கியிருக்கின்ற இவ்வேளையிலே அவர் பொறுத்த காத்திரமான ஆய்வுகள், மதிப்பீடுகள், விவரணங்கள், செய்திகள், நினைவுக் குறிப்புகள் என்பன வெளிவரவில்லையாயினும் சில குறிப்பிடத்தக்க எழுத்துக்கள் பிரசுரமாகியிருக்கின்றன என்பது மனங்கொள்ளத்தக்கவையாகும். அவ்வாறு குறிப்பிடத்தக்கவற்றுள் பெரும்பாலானவை முற்போக்கு மார்க்ஸியர்களால் எழுதப்பட்டவையாகும். இர.சிவலிங்கம், மு.நித்தியானந்தன், சாரல் நாடன், தெளிவத்தை ஜோசப், அந்தனி ஜீவா, ஓ.ஏ. இராமையா, லெனின் மதிவானம், சுப்பையா இராஜசேகர், மல்லியப்புசந்தி திலகர் முதலானோரின் எழுத்துக்கள் குறிப்பிடத்தக்கவையாகும். இவற்றுள் சாரல் நாடனின் ‘சி.வி. சில சிந்தனைகள’;;; என்ற நூலே ஸி.வி பற்றிய தேடலுக்கு காத்திரமான அடித்தளத்தை வழங்கியது. இவ்வெழுத்துக்களிடையே தத்துவார்த்த வேறுபாடுகள் இருப்பினும் ஸி.வி.யின் ஆளுமை பண்முகப்பாட்டை வௌ;வேறு விதங்களில் வெளிக்கொணர்பவையாக அமைந்திருக்கின்றன.

Continue Reading →

அற்பாயுளில் மறைந்த அற்புதக்கலைஞன் மண்டலின் ஸ்ரீநிவாஸ்

பிறநாட்டு    நல்லறிஞர்    சாத்திரங்கள்   தமிழ்  மொழியில்  பெயர்த்தல்  வேண்டும்
இறவாத   புகழுடைய  புதுநூல்கள்   தமிழ்மொழியில்  இயற்றல் வேண்டும்
மறைவாக  நமக்குள்ளே   பழங்கதைகள்   சொல்வதிலோர்   மகிமை இல்லை
திறமான   புலமையெனில்   வெளிநாட்டோர்   அதை வணக்கஞ்செய்தல்  வேண்டும்

அற்பாயுளில்  மறைந்த   அற்புதக்கலைஞன் மண்டலின்  ஸ்ரீநிவாஸ்முருகபூபதிஎன்று   மகாகவி  பாரதி    பல்லாண்டுகளுக்கு   முன்னர்   சொன்னார். அவரது   வாக்கிற்கு   சிறந்த   இலக்கணமாக  வாழ்ந்த   மெண்டலின் இசைமேதை   ஸ்ரீநிவாஸ்  தனது   45   வயதில்  ஆயுளை முடித்துக்கொண்டார். ஸ்ரீநிவாஸ்  என்றால்   எந்த   ஸ்ரீநிவாஸ்..?     என்றுதான்    கேட்பார்கள். மெண்டலின்    என்ற   மேலைத்தேய    இசைக்கருவியுடனேயே   தனது    வாழ்நாளை    செலவிட்ட    இந்தக்கலைஞருடன்   அந்த இசைக்கருவியின்    பெயரும்    இணைந்தமையால்  இன்று  அவரது மறைவு    என்றைக்குமே    அஸ்தமிக்காத   அந்த    இசையுடன் பேசப்படுகிறது. மேதாவிலாசம்  மிக்க  பலருக்கு   அற்பாயுள்தானா? எனக்கேட்கச்செய்கிறது  அவரது  மறைவுச்செய்தியும்.   விவேகானந்தர்,   பாரதி,   ஐன்ஸ்றின்,   போன்று   உலகளவில் பேசப்பட்டவர்களும்    அற்பாயுளில்   மறைந்தார்கள்.   அந்த வரிசையில்  இன்று    மெண்டலின்   ஸ்ரீநிவாசன். கர்னாடக    இசையாகட்டும்   மேலைத்தேய    இசையாகட்டும் திரையிசையாகட்டும் அவற்றிலெல்லாம்    சங்கமித்த    மெண்டலின் வாத்தியம் உள்ளத்தை   கொள்ளைகொண்டு  போகும் வல்லமை மிக்கது. தனது இளம்பராயத்திலிருந்தே    தனது    தந்தையிடமிருந்து   இந்த வாத்திய   இசையை    கற்று  வந்து   சாதனைகள்  படைத்த ஸ்ரீநிவாஸ்  பத்மஸ்ரீ  –    சங்கீத   ரத்னா   விருதுகளையும்   பெற்றவர். கீழைத்தேய    வாத்தியக்கருவிகளான   தம்புரா  –  வீணை  –  கோட்டுவாத்தியம்  –   புல்லாங்குழல்  –  நாதஸ்வரம்  –   மிருதங்கம் – தவில்   –  கடம்  –   கஞ்சிரா   –   சதங்கை முதலானவற்றிலிருந்து வேறுபட்டவை   வயலின்  –   கிட்டார்  –      ட்ரம்ஸ்  –   மெண்டலின்.

Continue Reading →

பெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சு!

- வெங்கட் சாமிநாதன் -நான் பத்திரிகைகள் படித்து வந்த ஆரம்ப காலத்தில் கல்கி யாழ்ப்பாணம் சென்று வந்த கதைகளை சுவாரஸ்யமாகச் சொல்வார். ”யாழ்ப்பாணத் தமிழ் மணம் பற்றி மற்றவர்கள் எத்தனையோ குணம் கண்டு சொல்வார்கள். எனக்கு அது என்னவென்று யாழ்ப்பாணம் சென்ற பிறகு தான் தெரிந்தது. யாழ்ப்பாண அன்பர்கள் பேசும்போது கமழும் யாழ்ப்பாணப் புகையிலை மணம் தான் அது” என்பார் அவர். கி.வா.ஜகன்னாதன் இலக்கியச் சொற்பொழிவுகளுக்கு அங்கு நல்ல வரவேற்பு இருந்தது. அங்கு தமிழ்ப் பத்திரிகைகளுக்கு நல்ல மார்க்கெட். அங்கு செல்லும் போதெல்லாம், அங்குள்ள எழுத்தாளர்களை உற்சாகப்படுத்த தம் பத்திரிகைகளுக்கு எழுதச் சொல்வார்கள். ஒரே ஒரு வேண்டுகோள். ”எம் வாசகர்களுக்கு புரியும் தமிழில் எழுதுங்கள்,” என்பது தான் அது. அவர்களும் எழுதியிருப்பார்கள்.

என் நினைவில் நான் படித்த எதிலும் அவர்கள் வாழும் இடத்தின், மொழியின் , வாழ்க்கையின் பரிச்சயம் கிடைத்ததில்லை. மெரினா பீச்சில், காதல் புரியும் கதைகளாகவே, அன்றைய பத்திரிகைக் கதைத் தமிழில் பேசுவார்கள் காதல் செய்வார்கள். தமிழ் வாசகர்களுக்கு புரியும் விதத்தில் அவர்கள் விரும்பும் உலகைச் சொன்னார்கள். பத்திரிகைகள் அப்படி வேண்டின. லக்ஷ்மி என்று ஒருவர் அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் தொடர்ந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக எழுதி வந்தார்.  அவர் இங்கு மருத்துவ கல்வி பெற்று தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கிருந்து அவர் நிறைய எழுதினார். என் நினைவில் லட்சியவாதி, காஞ்சனா,  மிதிலா விலாஸ் என பல தொடர்கதைகள்.  அவ்வளவுதான்  என் நினைவில் இருப்பது. அவ்வளவு கதைகளும் நடப்பது தமிழ் நாட்டில். ஊர் பேர் தெரியாத ஊரில். தென்னாப்பிரிக்க வாழ்க்கையோ அனுபவங்களோ எட்டிப் பார்த்ததே இல்லை. கடைசியாக எழுதிய, சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ஒரு நாவல், ”காவிரியைப் போல,” என்று நினைவு. அதில் தான் தென்னாப்பிரிக்கா எட்டிப் பார்க்கிறது. தாமறிந்த வாழ்க்கையை, பழகிய மனிதர்களை எழுதுவது என்பதே அக்காலத்தில் இவர்கள் மனதில் தோன்றியதில்லை.

Continue Reading →