எழுத்தாள நண்பர் எஸ். சங்கர நாராயணன் மகன் பிரசன்னா திருமணத்திற்கு போக முடியாத வருத்தம் மனதிலிருந்தது. அலுவலகப்பிசாசின் அவஸ்தைதான். அத்திருமண தாம்பூலப் பையில் ஒரு புத்தகம் தந்தது பற்றி பல நண்பர்கள் சொன்னார்கள். அதைப்பற்றி சில பத்திரிக்கைகள் எழுதின. அந்தப் புத்தகம் அவரின் 16 சிறுகதைகள் கொண்ட ” கைத்தலம் ” என்ற புத்தகம். சமீபத்தில் இலக்கிய வீதியின் ” அன்னம் விருது” வாங்க சென்னை போயிருந்த போது திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் ஞானராஜசேகரன் கையில் பரிசு பெற்ற மகிழ்ச்சியை கூட்டியது சங்கரநாரயணன் அந்தப்புத்தக பிரதியைப் பரிசளித்தது. அக்கதைகளை ஒரே மூச்சில் படித்து முடித்த போது மூன்று மாதம் இதை படிக்காமல் போய் விட்ட குறை, திருமண வைபவத்திற்குப் போகாத குறையை விட உறுத்தியது. அமர்க்களமான கதைகள் . அபாரமான நகைச்சுவை. புத்தகமெங்கும் நிறைந்திருந்தது. கல்யாண வீட்டின் நல்ல விருந்து போல. . சில பிரசுரமாகாத கதைகளும் பல பிரசுரமான முன்பே படித்து ரசித்த கதைகளுமான தொகுப்பு அது. இதில் பெண் யாதுமாகி நிற்கிறாள். தாயாய் , சினேகிதியாய், காத்லியாய், குருவாய் என்று. இப்படி பெண்ணை பெருந்தன்மையுடன் பார்ப்பதற்கு எவ்வளவு முதிர்ச்சி வேண்டும். திருமணத்தை ஒட்டி நடைபெறும் பெண்பார்த்தல், கல்யாண ஏற்பாடுகள், மூகூர்த்த கால சடங்குகள், சச்சரவுகள், குடும்ப போட்டோக்கள் எடுத்துக் கொள்வது, குலதெய்வம் கோவிலுக்குப் போவது, சொந்தங்கள் தரும் மகிழ்ச்சி, சங்கடங்கள் எல்லாம் உள்ளடக்கிய கதைகள் இவை. பெண் பார்க்கும் படலம் முதலே பெண்ணுள் ஆக்கிரமிக்கும் உணர்வுகளை துல்லியமாக்க் காட்டுகிறார். ஊமைப் பெண்ணாக இருந்தாலும் அவள் திடமாக நின்று கணவனுக்கு காவலாளி ஆகிறாள். ஜாதீயத்தீ பலரை பலி கொள்கிறது. அம்மாக்களின் பெருமைகளுக்கும், தியாயங்களுக்கும் குறைவேயில்லை.கோபத்தை அணிகலனாய் அணிந்து கொள்ளும் ஆண்கள், பொறுமையை அணிந்து கொள்ளும் பெண்கள் என்று உறவுகளில் விதவிதமாய் இருக்கிறார்கள். உறவுகளுக்கு மத்தியில் கிண்டல்கள் மலிந்திருப்பது போல் எஸ். ச வின். உரைநடையில் நகைச்சுவை மலிந்தும் , மிளிர்ந்து கிடக்கிறது.சில உதாரணங்கள்: ஊறுகாய் குலுக்கல் போல்/,பூனை மியாவ் என கோரிக்கை வைக்கும் சாப்பிடுவது உப்புமாவாக இருந்தால் சேமியாவ்./ பீடிக்கு தாஜ் பீடி கவர்னர் பீடி என்றெல்லாம் மகாப் பெயர் வைக்கிறார்கள். எந்த கவர்னர் பீடி குடிக்கிறார் தெரியவில்லை./
Continue Reading →