வாசிப்பும், யோசிப்பும் 57: மேலும் சில முகநூற் குறிப்புகள்!

கனடாத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘தாயகம்’ சஞ்சிகையின் பங்களிப்பு.

வாசிப்பும், யோசிப்பும் 57: மேலும் சில முகநூற் குறிப்புகள்!கனடாத் தமிழ் இலக்கியத்துக்குத் ‘தாயகம்’ சஞ்சிகை ஆற்றிய பங்களிப்பு முக்கியமானது. ஐந்து வருடங்கள் வரையில் 200ற்கும் அதிகமான இதழ்கள் வெளியாகியது மட்டுமல்ல, உலகின் பல பாகங்களிலிருந்தும் பலரின் படைப்புகளையும் தாங்கி வெளியான சஞ்சிகை / பத்திரிகை அது. மாத்தளை சோமு , பேராசிரியர் சிவசேகரம், கலா மோகன் (பல படைப்புகள்: ஜெயந்தீசன் என்னும் பெயரில் எழுதிய குட்டிக்கதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள் போன்ற), தி. உமாகாந்தன்,  செல்வம் (இவரது ‘கிழுவை மரச் சிலுவை’ என்னும் நாடகம் தாயகத்தில் தொடராக வெளிவந்தது), ரதன், ஆனந்தபிரசாத் (‘ஆடலுடன், பாடலைக்கேட்டு’ தொடர்), வ.ந.கிரிதரன் (பல படைப்புகள்: சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடர் கட்டுரைகள் ஆகியன), கவிஞர் கந்தவனம் (இவரது ‘மணிக்கவிகள்’ தாயகம் சஞ்சிகையில்தான் முதலில் வெளியாகின), ஜி.மொனிக்கா (இவரது பல சிறுகதைகள், கவிதைகள் வெளியாகியுள்ளன), நேசமித்திரனின் பல படைப்புகள், சின்னத்தம்பி வேலாயுதத்தின் ‘ஈழம் ஒரு தொடர்கதை’த் தொடர்) கனடா மூர்த்தி ‘முனி’ என்னும் பெயரில் அளித்த சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த பதில்கள் , ஜோர்ஜ் குருஷேவ்வின் ‘சிறுகதைகள்’ .. என பலரின் படைப்புகளைத் தாங்கி வெளிவந்த பத்திரிகை / சஞ்சிகை ‘தாயகம்’. ‘தாயகம்’ பத்திரிகை. சஞ்சிகையினைத் தவிர்த்துக் கனடாத் தமிழ் இலக்கியம் பற்றிக் கதைக்க முடியாது. இங்கு குறிப்பிட்டவர்களைப் போல் இன்னும் பலர் ‘தாயக’த்துக்குப் பங்களிப்பு செய்துள்ளார்கள். அதன் மூலம் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்திருக்கின்றார்கள். ‘தாயகம்’ சஞ்சிகை பற்றிய விரிவான ஆய்வொன்றின் அவசியம் (கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு அது ஆற்றிய பங்களிப்பு பற்றி) தவிர்க்க முடியாது. ‘படிப்பகம்’ இணையத்தளத்தில் ‘தாயகம்’ சஞ்சிகையில் சுமார் 50 வரையிலான இதழ்களுள்ளன. ‘தாயகம்’ சஞ்சிகை தனது அரசியல் கருத்துகளைப் படைப்பாளிகளின் மேல் ஒருபோதுமே திணித்ததில்லை. அதனால்தான் பல்வேறு அரசியல் கருத்துள்ளவர்களின் படைப்புகளை பலவற்றைத் தாங்கி அதனால் வெளிவர முடிந்திருக்கின்றது. ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து , மிக அதிகமான இதழ்களை வெளியிட்ட இலக்கியச் சஞ்சிகை / பத்திரிகை அது.

Continue Reading →

ஒரே இலக்கில் இரண்டு பறவைகள்

1_thangavadivel5.jpg - 286.67 Kbதிரு. தங்கவடிவேல் ஆசிரியர் அவர்கள் எனது தந்தை அகஸ்தியரின் ‘லெனின் பாதச் சுவடுகளில்…’ என்ற நூல் வெளியீட்டிற்கு சிறப்புச் சொற்பொழிவாற்ற வருகை தந்து சிறப்புரை ஆற்றியமை எங்களுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய கௌரவமாக நான் கருதுகிறேன். திரு.தங்கவடிவேல் அவர்கள் எனது தந்தையின் சம காலத்தவர். முற்போக்கு அரசியல் இலக்கிய பாரம்பரியத்தைச் சுவீகரித்தவர்கள். திரு. தங்கவடிவேல் மாஸ்டர் அவர்கள் தன் சமகாலத்தில் முற்போக்கு இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்த அனைத்து எழுத்தாளர்களுடனும் நல்லுறவைப் பேணி வந்தவர் ஆவார். \யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதி ஒடுக்குமுறை தமிழ் சமுதாயத்தின் கோரமான முகம் என்பதை நன்குணர்ந்த என் தந்தை அகஸ்தியர் அவர்கள் இந்த சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக ‘எரிநெருப்பில் இடைபாதை இல்லை’ என்ற நாவலை எழுதினார். எழுத்து வெறும் கலைக்காக  மட்டுமல்ல அது சமுதாய மாற்றத்தைக் கோரி நிற்கும் புரட்சிகரப் பணியாகும் என்பது என் தந்தையின் இலக்கியக் கோட்பாடாக இருந்தது.

Continue Reading →

‘With You, Without You’ திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயுடன் ஒரு நேர்காணல்

பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான இலங்கையைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயின் 'With You, Without You' (உன்னுடன், நீயில்லாமல்) எனும் திரைப்படமானது, கடந்த ஜூன் மாதத்திலிருந்து இந்தியத் திரையரங்குகளில் திரையிடப்பட திட்டமிடப்பட்டிருந்தது.பல விருதுகளுக்குச் சொந்தக்காரரான இலங்கையைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர் ப்ரசன்ன விதானகேயின் ‘With You, Without You’ (உன்னுடன், நீயில்லாமல்) எனும் திரைப்படமானது, கடந்த ஜூன் மாதத்திலிருந்து இந்தியத் திரையரங்குகளில் திரையிடப்பட திட்டமிடப்பட்டிருந்தது. யுத்த கால இலங்கையைப் பின்புலமாகக் கொண்ட இத் திரைப்படமானது, ஒன்று சேரவே முடியாத இடைவெளியை ஏற்படுத்திச் சென்ற மோதலொன்றின் இடையே, தற்செயலாகச் சந்திக்க நேரும் இருவரைச் சுற்றி பின்னப்பட்ட கதையாகும். அவர்கள் இருவருக்கும், அந்த இடைவெளியை அழித்து ஒன்று சேர காதல் உதவுமா அல்லது அவர்களது இறந்த காலமானது தொடர்ந்தும் நிகழ்காலத்தைப் பாதித்துக் கொண்டேயிருக்குமா என்பதைப் பற்றியே இத் திரைப்படம் பேசுகிறது.  இந்தத் திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகை அஞ்சலி பட்டீலுக்கு, இத் திரைப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக  2012 ஆம் ஆண்டு நடந்த இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டிருக்கிறது. அத்தோடு இத் திரைப்படமானது, லண்டன் BFI, சிக்காகோ, ஹொங்கொங், கேரளா மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றிலும் திரையிடப்பட்டுள்ளது.

கேள்வி – ‘With You, Without You’ திரைப்படமானது தஸ்தாவேஸ்கியின் ‘A Gentle Creature’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இந் நாவலின் கதையை, இலங்கையின் யுத்த காலத்தோடு தொடர்புபடுத்தலாம் என உங்களுக்கு ஏன் தோன்றியது? அவ்வாறு உங்களுக்குத் தோன்றச் செய்தது எது?

பதில் – வளர்ந்துவரும் திரைக்கதையாசிரியர் ஒருவர், இந் நாவலை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் யுத்த காலப் பின்னணியில் தான் எழுதிய கதையை என் கவனத்தில் கொண்டு வந்தார். தஸ்தாவேஸ்கியின் இந் நாவலானது, பல தளங்களில் விரியும் படைப்பு. அதன் ஒரு தளமானது நுகர்வுக் கலாசாரம், மானிடத் தொடர்புகளை சீர்குலைப்பதை விவரிப்பதாக அமைந்திருப்பதாக பல விமர்சகர்கள் தங்கள்  கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தக் கருவானது, அகிலம் முழுவதற்கும் பொருந்தக் கூடியதாகவும், நிரந்தரமானதுமென நான் சிந்தித்தேன்.

Continue Reading →

சிறுகதை: மனைவி மகாத்மியம்

சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -அதிகாலையிற்தான் அந்தக் கனவு வந்தது. கனவில் மனைவி வந்தாள். கமலநாதனுக்குத் திடுக்குற்று விழிப்பு ஏற்பட்டது. பொதுவாக, மனைவி என்பது பலருக்குத் திடுக்குறல் ஏற்படுத்தும் விஷயம்தான். ஆனால் இது அந்த மாதிரியான திடுக்குறல் அல்ல. சற்று வித்தியாசமான, சற்று பரவசம் கலந்த திடுக்குறல் என்று சொல்லலாம். விழிப்பு வந்ததும் எழுந்து கட்டிலில் அமர்ந்தான். தான் வீட்டிற்தான் இருக்கிறேனா அல்லது கப்பலிற் தன் கபினுக்குள்ளா என உணர்வுக்குத் தட்டுப்படாமல் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் திரும்பித் திரும்பிப் பார்த்து விழித்தான். கப்பலில் ஜெனரேட்டரின் இரைச்சல் அப்போதுதான் காதுக்கு எட்டுவதுபோலிருந்தது. அட, நீயெங்கோ நானெங்கோ என்ற சலிப்புடன் மீண்டும் படுக்கையில் விழுந்தான். மறுபக்கம் திரும்பித் தலையணையை அணைத்துக்கொண்டு கண்களை மூடினான். கனவில் மூழ்கிவிட ஆசையாயிருந்தது. கனவில் மனைவி மிக அழகாகவும் இளமையாகவும் தோன்றினாள். மென்மையாகவும் இனிமையாகவும் பேசினாள். கனவுகள் எப்போதுமே இப்படித்தான் போலும். மனசு விரும்புவதை படம் பிடித்து காட்டுகின்றன. ‘தொட்டதெற்கெல்லாம்’ கூச்சமைடைந்தாள். ‘சும்மா இருங்கோ’ எனப் பொய்க்கோபத்துடன் கையில் ஒரு அடியும் போட்டாள். அவ்வளவுதான். அத்தோடு விழிப்பு வந்துவிட்டது.

Continue Reading →

சிறுகதை: மகிழ்வறம் வாழ்க்கையும் வெண்காயப் பொரியலும்

-பேராசிரியர் கோபன் மகாதேவா -அந்தத் தமிழர், காலை ஒன்பதிற்குப் படுக்கையை விட்டெழுந்து கழிவறைக்குச் சென்று தன் சலம் பாய்ச்சிய பின்,  வழக்கம் போல் அன்று சவரம் செய்வதிலிருந்து தப்பலாமா எனக் கண்ணாடியில் பார்த்தார். ஒரு மில்லிமீற்றர் நீளத்தில் அவரின் நாடியிலிருந்து கீழே தூங்கிய நரை வளர்த்தி, கோதுமை-மா இடியப்பம் பிழியும் போது வரும் வெள்ளைப் புழு-வால் போல் தோன்றிற்று. அதை இன்னும் ஒருநாள் இருக்க விடமுடியுமென முடிவெடுத்த மறுகணம், வளரும் புழுக்களுக்கும் தான் போட்டிருந்த சட்டையின் கழுத்து-வெட்டுக்கும் மத்தியில், நெஞ்சின் மேற்பக்கம் ஒரு பெரிய கரிய இலையான் போல் ஏதோ ஒன்று ஒட்டிக் கொண்டு இருப்பதைக் கண்டார். சாவகாசமாக அதை நுள்ளிப் பிடுங்கிக் கண்ணால் பார்த்து,  நுகர்ந்தும் பார்த்தார். அவருக்கு மிகவும் பிடித்த வாசனைகளில் ஒன்று! நல்லதான எதையும் எறிந்து வீணாக்க மாட்டாதார், அதைத் தன் வாயினுள் போட்டு நாக்கில் வைத்துத் துழாவித் தாலாட்டி அன்புடன் மெல்லமாகக் கடித்து அதை மிகமிகச் சுவைத்து உண்டார். அதன் பின்னர் பல்விளக்கி முகம் கழுவித் தன் காலை உணவைத் தயாரிக்கக் குசினிக்குச் சென்று ஓரத்தில் இருந்த சிற்றலை மின்னடுப்பின் கதவைத் திறந்து எதையோ உள்வைத்தார்.

Continue Reading →

எழுத மறந்த குறிப்புகள் பயிர் வளர் மண்ணில் உயிர்ப்புடன் வாழும் தம்பதியர் தொடர்பாடல்தான் இயந்திர யுகத்தில் ஆரோக்கியத்திற்கு அவசியம் தேவைப்படுகிறது.

முருகபூபதிபலரதும்  வாழ்க்கை   ஏதோ   ஒருவகையில்   தூண்டுதல்களுடன்தான் தொடருகின்றது.   எனது    வாழ்வும்   அப்படியே   சமீபத்தில்   நான்   வெளியிட்ட   எனது   சொல்ல   மறந்த  கதைகள்  நூலை  வெளியிட முன்வந்தபொழுது   அதுதொடர்பாக   நான்   வழங்கிய   வானொலி நேர்காணல்   மற்றும்   வெளியான    விமர்சனங்களையடுத்து   அவற்றை செவிமடுத்த –   கவனித்த   சில  இலக்கியவாதிகள்   எனக்கு   வாழ்த்து தெரிவித்திருந்ததுடன்    நூலின்   பிரதியும்   கேட்டிருந்தார்கள்.    அவர்களில் ஒருவர்    ஜெர்மனியில்   வதியும்   எழுத்தாளர்   ஏலையா  முருகதாசன்   என்ற   அன்பர்.  இவர்  அண்மைக்காலமாகத்தான்   என்னுடன்   மின்னஞ்சல்   தொடர்பில் இருப்பவர்.    ஒரு   நாள்   இரவு   தொலைபேசியிலும்  தொடர்புகொண்டு உரையாடினார். எனது   வானொலி   நேர்காணலில்  குறிப்பிட்ட   அந்த   சொல்ல  மறந்த கதைகளில்   இடம்பெற்ற   முன்னைய   சோவியத்தின் இராஜதந்திரியிடமிருந்த    சங்கத்  தமிழ்  இலக்கியம்  தொடர்பான பார்வையைப்பற்றி   அறிந்ததும்   எனக்கு   பின்வரும்  மின்னஞ்சலை அனுப்பினார்.   அதனை    காலத்தின்   தேவை   உணர்ந்து    வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டு   –   இனி    நான்  எழுதப்போகும்    எழுத  மறந்த  குறிப்புகள் தொடருக்குள்    பிரவேசிக்கின்றேன்.

Continue Reading →

‘மழை ஒலி’ கவிதைத் தொகுப்பில் சூழியல் சிந்தனைகள்

‘மழை ஒலி’ கவிதைத் தொகுப்பில் சூழியல் சிந்தனைகள்சூழியல் என்பது இன்றைய நிலையில் முக்கியமாக வைத்துப் பேசப்பட வேண்டிய துறைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. மனித வாழ்விற்கு அடிப்படையாக அமைவது சூழல். இத்தகையச் சூழல் மனிதனின் அனைத்து வித செயல்பாடுகளுடன் ஒன்றிணைந்துள்ளது. இத்தகைய சூழலால் உந்தப்பட்ட மனிதன் தனது கற்பனைச் சிறகை விரித்து இலக்கியம் படைக்கிறான். எனவே ஒவ்வொரு படைப்பிலும் படைப்பாளன் இருக்கின்றான். ஒவ்வொரு படைப்பினுள்ளும் படைப்பாளன் இருப்பதனால் தகடூர்த் தமிழ்க்கதிரின் ‘மழை ஒலி’ என்கின்ற இக்கவிதைத் தொகுப்பு படைக்கப்பட்ட சூழல் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

ஆய்வு எல்லை
 ‘மழை ஒலி’ என்னும் கவிதைத் தொகுப்பு மட்டும் இக்கட்டுரைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆய்வுக் கருதுகோள்
 ‘மழை ஒலி’ என்ற கவிதைத் தொகுப்பு படைப்பாளியின் சூழல் காரணமாக உருப்பெற்றிருக்கலாம் என்ற கருதுகோளினை அடிப்படையாக வைத்து இவ்வாய்வு தொடங்கப்படுகிறது.

படைப்பாளனும் படைப்பும்
 தகடூர்த் தமிழ்க்கதிர் என்னும் இக்கவிஞர் தர்மபுரி மாவட்டத்தில் கம்பை நல்லூரில் 15.02.1962-இல் பிறந்தார். இவர் தமிழ்க்கதிரின் எழில்வானம், ஐங்குறள் அமிழ்தம், மழை ஒலி, போன்ற கவிதை நூற்களும் அடைக்கலன் குருவியும் ஆறாம் வகுப்புச் சிறுவனும், பசுவும் பாப்பாவும், சிறுவர் பூக்கள் போன்ற சிறுவர்களுக்கான படைப்புகளையும் படைத்துள்ளார். மழை ஒலி என்னும் கவிதைத் தொகுப்பின் அமைப்பினைப் பத்துப் பிரிவாகப் பகுக்கலாம். அவையான, 1.இயற்கை, 2.தமிழ், 3.தமிழர், 4.சான்றோர், 5.இரங்கற்பா, 6.சமுதாயம், 7.பாவரங்கம், 8.அரங்குகளில் பாடப்பெற்ற பாடல்கள், 9.குறுங்காவியப் பாடல்கள், 10.பல்சுவைப் பாடல்கள் போன்ற பகுதியாக இந்நூலைப் பகுத்து அமைக்கலாம்.

Continue Reading →

‘மழை ஒலி’ கவிதைத் தொகுப்பில் சூழியல் சிந்தனைகள்

‘மழை ஒலி’ கவிதைத் தொகுப்பில் சூழியல் சிந்தனைகள்சூழியல் என்பது இன்றைய நிலையில் முக்கியமாக வைத்துப் பேசப்பட வேண்டிய துறைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. மனித வாழ்விற்கு அடிப்படையாக அமைவது சூழல். இத்தகையச் சூழல் மனிதனின் அனைத்து வித செயல்பாடுகளுடன் ஒன்றிணைந்துள்ளது. இத்தகைய சூழலால் உந்தப்பட்ட மனிதன் தனது கற்பனைச் சிறகை விரித்து இலக்கியம் படைக்கிறான். எனவே ஒவ்வொரு படைப்பிலும் படைப்பாளன் இருக்கின்றான். ஒவ்வொரு படைப்பினுள்ளும் படைப்பாளன் இருப்பதனால் தகடூர்த் தமிழ்க்கதிரின் ‘மழை ஒலி’ என்கின்ற இக்கவிதைத் தொகுப்பு படைக்கப்பட்ட சூழல் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

ஆய்வு எல்லை
 ‘மழை ஒலி’ என்னும் கவிதைத் தொகுப்பு மட்டும் இக்கட்டுரைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆய்வுக் கருதுகோள்
 ‘மழை ஒலி’ என்ற கவிதைத் தொகுப்பு படைப்பாளியின் சூழல் காரணமாக உருப்பெற்றிருக்கலாம் என்ற கருதுகோளினை அடிப்படையாக வைத்து இவ்வாய்வு தொடங்கப்படுகிறது.

படைப்பாளனும் படைப்பும்
 தகடூர்த் தமிழ்க்கதிர் என்னும் இக்கவிஞர் தர்மபுரி மாவட்டத்தில் கம்பை நல்லூரில் 15.02.1962-இல் பிறந்தார். இவர் தமிழ்க்கதிரின் எழில்வானம், ஐங்குறள் அமிழ்தம், மழை ஒலி, போன்ற கவிதை நூற்களும் அடைக்கலன் குருவியும் ஆறாம் வகுப்புச் சிறுவனும், பசுவும் பாப்பாவும், சிறுவர் பூக்கள் போன்ற சிறுவர்களுக்கான படைப்புகளையும் படைத்துள்ளார். மழை ஒலி என்னும் கவிதைத் தொகுப்பின் அமைப்பினைப் பத்துப் பிரிவாகப் பகுக்கலாம். அவையான, 1.இயற்கை, 2.தமிழ், 3.தமிழர், 4.சான்றோர், 5.இரங்கற்பா, 6.சமுதாயம், 7.பாவரங்கம், 8.அரங்குகளில் பாடப்பெற்ற பாடல்கள், 9.குறுங்காவியப் பாடல்கள், 10.பல்சுவைப் பாடல்கள் போன்ற பகுதியாக இந்நூலைப் பகுத்து அமைக்கலாம்.

Continue Reading →