நூல் நயப்புரை: அமரர் பொ. கனகசபாபதியின் – மரம் மாந்தர் மிருகம் மாதுளம் கனியின் மகத்துவம் அறிந்த கிரேக்கர்களும் சீனர்களும்

அதிபர் கனகசபாபதிசுபகாரியம்   சீக்கிரம்  என்பார்கள்.  சுபகாரியம்  மட்டுமல்ல – எந்தக்காரியத்தையும்  தாமதிக்காமல்  உரியவேளையில் செய்யத்தவறிவிட்டால்  அதற்கான  பலனையும்  அடைய முடியாமல் போய்விடும்   என்பதும்  நிதர்சனமான  உண்மை. பல   மாதங்களுக்கு  முன்னர்,   எனது  அக்காவின்  சம்பந்தியான ஸ்ரீஸ்கந்தராஜா   அண்ணா,   என்னிடம்  மரம்  மாந்தர்  மிருகம்  என்ற நூலைத்தந்து,    தனது  ஆசான்  பொ. கனகசபாபதி  அவர்கள் எழுதியது  என்றார்.   அவர்  எப்பொழுதும்  நல்ல  விடயங்களை எனக்கு   அறிமுகப்படுத்துபவர்.அத்துடன்    நல்ல  இலக்கிய  ரசிகர்.  யாழ்.மகாஜனா   கல்லூரியின் பழையமாணவர்.   இக்கல்லூரியின்  பல  பழையமாணவர்கள்   கலை, இலக்கியவாதிகளாகவும்  ஊடகவியலாளர்களாகவும்  இருப்பதாக அறிவேன்.   மகாஜனா  கல்லூரியில்  விஞ்ஞானப்பட்டதாரி  அதிபராக பணியாற்றியவர்    கனகசபாபதி. மரம்  மாந்தர்  மிருகம்  நூலை   கையில்  எடுத்தவுடன்,   மரங்களின் தன்மைகளைப்பற்றிய    பட்டியல்  தரும்  நூலாக  இருக்குமோ…?  என்ற   எண்ணத்திலேயே  நூலைப்படித்தேன்.   ஆனால், அதனைப்படிக்கும்பொழுது   எனக்குள்  ஆச்சரியங்கள்  மலர்ந்தன. தனது   வீட்டில்  பெற்றவர்களினால்  வளர்க்கப்பட்ட   மற்றும் தானாகவே    வளர்ந்துவிட்ட  மரங்கள்,  செடி,  கொடிகள்  வீட்டு மிருகங்கள்    என   மரங்களையும்  மிருகங்களையும்  அவற்றை வளர்த்த    மாந்தர்களின்  மகிமைகள்  பற்றியும்  நாம் அறியத்தவறிவிட்ட   பல   அரிய  தகவல்களுடன்  நூலை   எழுதுகிறார் கனகசபாபதி.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 70: சிறிலங்காவின் அரசியல் மாற்றம் பற்றிய சிந்தனைகள்…

வாசிப்பும், யோசிப்பும் 70: \சிறிலங்காவின் அரசியல் மாற்றம் பற்றிய சிந்தனைகள்...

[ வாசித்தவை, யோசித்தவை, வாசித்து யோசித்தவை எனப்பல்வேறு விடயங்களையும் உள்ளடக்கியது இந்த ‘வாசிப்பும், யோசிப்பும்’ பகுதி. – பதிவுகள். ]

அன்று ரணில் பிரதமராக இருந்தபோது ஏற்பட்ட ‘சமாதானப் பேச்சு வார்த்தைகள்’ அன்று நிறைவேற்று அதிகாரங்கள் கொண்ட ஜனாதிபதியாக விளங்கிய சந்திரிகா குமாரதுங்க அம்மையாரால் நிறைவேற்ற முடியாமல் செய்யப்பட்டது. இன்று ஆட்சி மாறி மீண்டும் பிரதமராக ரணில்….  சந்திரிகா குமாரதுங்கவோ எந்தவித அதிகாரங்களுமற்ற முன்னாள் ஜனாதிபதி. ஆனால் அவர் ரணிலுடன் கூட்டுச்சேர்ந்திருக்கின்றார். அன்று சமாதான உடன்படிக்கையைச் சீர்குலைத்து மகிந்த ராஜபக்சவை ஆட்சிக்கட்டிலில் ஏற வழி வகுத்த அவர். இன்று மகிந்தாவைப் பதவியை விட்டே ஓட வியூகம வகுத்து வெற்றியும் அடைந்திருக்கின்றார்.  இன்று ஜனாதிபதியாக எதிர்கட்சியின் தலைவரான மைத்திரிபால சிரிசேன. இருக்கிறார்.

அன்று ஏற்பட்ட சமாதான உடன்படிக்கை சீர்குலைந்ததால் ஏற்பட்ட விளைவு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் வந்து முடிந்தது. அத்துடன் விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களையும் மெளனிக்க வைத்தது.

Continue Reading →

ஞானம் 175ஆவது இதழ்: புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழ்!

அன்பார்ந்த இலக்கிய நெஞ்சங்களே!  வணக்கம். அனைவருக்கும் எமது பொங்கல் நல்வாழ்த்துக்கள்..! ஞானம் 150ஆவது இதழை நாம் ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழாக வெளிக்கொணர்ந்தோம்.  தற்போது 175 ஆவது…

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 69 : முருகனின் ‘மாதொருபாகன்’ பற்றிச் சில குறிப்புகள்….

I do not agree with what you have to say, but I’ll defend to the death your right to say it. – Voltaire

வாசிப்பும், யோசிப்பும் 69 : முருகனின் 'மாதொருபாகன்' பற்றிச் சில குறிப்புகள்....பெருமாள் முருகனின் கருத்துகளை நாம் ஏற்கலாம் அல்லது ஏற்காமலிருக்கலாம். ஆனால் அவரது கருத்துகளைத் தர்க்கரீதியாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர அவரது எழுத்தின்மேல் வன்முறையினைப் பிரயோகிக்க யாரையும் தூண்டக்கூடாது. அவரது கருத்துகளைக்கூறும் அவரது அடிப்படை உரிமையினை மதிக்கும் அதே சமயம், அவரது கருத்துகளைத் தர்க்க ரீதியாக எதிர்வு கொள்ளும், அமைதியான வழிகளில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாற்றுக்கருத்தாளர்களினது உரிமையினையும் மதிப்போம். கருத்தை கருத்துரீதியாக எதிர்கொள்ளாமல், எழுத்தாளர் ஒருவரின்மேல் வன்முறையினைப் பிரயோகிப்பது அல்லது தூண்டிவிடுவது, அனைவராலும் எதிர்க்கப்பட வேண்டியது. தர்க்கரீதியாக படைப்புகளை அணுகுங்கள்; உணர்ச்சிவெறியூடாக ஒருபோதுமே அணுகாதீர்கள். எழுத்தாளர் ஒருவரின் படைப்புச் சுதந்திரம் முக்கியமானது’ மதிக்கப்பட வேண்டியது. அதே சமயம் எழுத்தாளரொருவர் இவ்விதமான எதிர்ப்புகளைக் கண்டு தளர்ந்து விடுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

Continue Reading →

சர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி – 2015; பரிசு மொத்தம் 2 இலட்சம் இலங்கை ரூபா!

சர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி - 2015;  பரிசு மொத்தம் 2 இலட்சம் இலங்கை ரூபா!பாரிஸ் மாநகரிலிருந்து 24 மணி நேரமும் ஒலிக்கும் ‘ரி. ஆர். ரி.” தமிழ் ஒலி வானொலி நடாத்தும் தோழர் சபாரத்தினம்  சுரேந்திரன் ஞாபகார்த்தச் சர்வதேச ரீதியிலான சிறுகதைப்போட்டி – 2015

வானொலி, தொலைக்காட்சி, இலக்கியம் எனப் பெரிதும் பங்காற்றிய, காலஞ்சென்ற தோழர் சபாரத்தினம் சுரேந்திரன் நினைவாக   ‘ரி. ஆர். ரி.” தமிழ் ஒலி வானொலி இவ்வருடம் சர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டியினை நடாத்த முன்வந்துள்ளது. இப்போட்டியில் பரிசுக்குரியனவாகத் தெரிவுசெய்யப்படும் கதைகளுக்கு மொத்தமாக இரண்டு இலட்சம் (200000) இலங்கை ரூபா பரிசாக வழங்கப்படவுள்ளது. முதலாவது பரிசுக்குரியதாகத் தெரிவுசெய்யப்படும் கதைக்கு ஒரு இலட்சம் (100000) ரூபா வழங்கப்படவுள்ளது. சிறுகதைப் போட்டிக்கென வந்துசேரும் கதைகளில், ஒவ்வொரு நாட்டிலிருந்தும் மூன்று கதைகள் வீதம் முதலில் தெரிவுசெய்யப்பட்டுப் பின்னர் அவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட கதைகளிலிருந்து பரிசுக்குரிய முதல் மூன்று கதைகள் தெரிவுசெய்யப்படும். அடுத்து ஆறுதல் பரிசுக்குரிய ஐந்து கதைகள் தெரிவுசெய்யப்பட்டுப் பரிசுகள் வழங்கப்படும். பரிசுக்குரியனவாகத் தெரிவுசெய்யப்படும் கதைகள் நூலாகத் தொகுக்கப்படும்போது மேலும் அடுத்த தரத்திலுள்ள சில கதைகளும் நூலில் சேர்த்துக்கொள்ளப்படும்.

Continue Reading →

பொங்கல் / புத்தாண்டுக் கவிதைகள்!

பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்.

 – வ.ந.கிரிதரன் –

greeting_pongal5.jpg - 13.10 Kb கதிரும், உழவும் இன்றேல் இங்கு
 உயிரின் இருப்பும் இல்லை அதனால்
 நன்றி மறப்பது நன்று அன்று
 என்றே நாமும் பொங்கல் செய்வோம்.
 கதிரும் வாழ்க! உழவும் வாழ்க!
 உழவர் வாழ்வில் இன்பம் பொங்க,
 உலகோர் வாழ்வில் மகிழ்ச்சி மலர
 இத்தரை எங்கும் மரங்கள் செழிக்க
 இங்கு இருக்கும் உயிர்களும் களிக்க
 கதிரும் உழவும் எருதும் எண்ணி
 அனைவர் வாழ்வும் களியால் சிறக்க
 இன்பப் பொங்கல் செய்வோம்
பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்.

 நாளும் பொழுதும் இரத்தம் சிந்தி
 வாழும் வாழ்வு ஒழிந்து நீதி
 ஒளியில் உலகு மூழ்கிக் களிக்க
 அனைத்துப் பிரிவுகள் நீங்கி மானுட
 இனத்தில் ஏற்றம் பிறந்திட எங்கும்
 களியால் நிறைந்து வழிந்திட
பொங்கலொ பொங்கல். பொங்கலோ பொங்கல்
  

Continue Reading →

மீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்பு!

- வெங்கட் சாமிநாதன் -சரியாக இருபது வருடங்கள் ஆகப்போகின்றன. இமையத்தின் எழுத்துடன் முதல் பரிச்சயம் நிகழ்ந்து. கோவேறு கழுதைகள் நாவல் இமையத்தின் எழுத்துடனான முதல் பரிச்சயத்தைத் தந்தது. தலித் சமூகத்திடமிருந்து இன்னம் ஒரு சிறப்பான எழுத்தின் வருகையைக் கண்டு எனக்கு மிகுந்த உற்சாகமும் மகிழ்ச்சியும். வெகுஜன கவர்ச்சியை மீறி தனித்தடம் ஒன்று தனக்கென வகுத்துக்கொண்டு தம் பயணத்தைத் தொடங்கியவர்கள் கணிசமாக வந்துகொண்டிருந்த காலம் அது, கவனிக்கப் பட்டுக்கொண்டிருந்த கால கட்டமும்/. தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்ட கால கட்டம். ஆனால் வெகு ஜன கவர்ச்சியை ஒதுக்கியது ஒன்று தான் அவர்களை ஒன்று படுத்தியதே தவிர, அதில் உரத்த கோஷங்களும், பிரசாரமும், மிகைப் படுத்தல்களூம், கொள்கைகளே அனுபவங்களாக உருவாக்கப்பட்டவையாகவும் இருந்தவை ஒரு சுவடாகவும், இன்னொரு சுவடு இதுவரை சொல்லப்படாத அனுபவங்களுக்கு எழுத்துரு கொடுக்கப்பட்டனவாகவும், வரத் தொடங்கின. இந்த இரண்டாம் சுவட்டில் தான்  பூமணி, சிவகாமி, சோ தருமன் போன்றோருடன் இமையமும் சேர்ந்து கொண்டது தெரிந்தது.

Continue Reading →

மகாபாரத மங்கா மாண்புடை மகளிர்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)மகாபாரதம், இராமாயணம் ஆகிய இரண்டும் உலகம் போற்றும் உயர்ந்த இதிகாசங்களாகும். மகாபாரதம் இராமாயணத்தைவிடப் பெரியது. அதில் சுமார் முப்பதாயிரம் (30,000) பாடல்கள் உள்ளன. வியாச மகரிசி அவர்களால் மகாபாரதம் எழுதப்பட்டது. இந்நூல் எழுந்த கால எல்லையைக் கணக்கிட்டுக் கூறமுடியாது. ஆனாலும் மகாபாரதம் கி.மு. 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட நூலென்று சிலர் கருத்துரைப்பர். வியாசர் பாரதத்தைத் தழுவித் தமிழில் முதன் முதலில் எழுந்த காப்பியம் வில்லிபுத்தாழ்வாரால் இயற்றப்பட்ட வில்லி பாரதம் ஆகும். இதையடுத்து, ‘நல்லாபிள்ளை பாரதம்’, பாரதியாரின் ‘பாஞ்சாலி சபதம்’, மூதறிஞர் ராஜாஜியின் ‘வியாசர் விருந்து’, பல்கலை அறிஞர் ”சோ’ அவர்களின் ‘மஹாபாரதம் பேசுகிறது’, திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகளின் ‘மகாபாரதம்’, அறிஞர் அ. லெ. நடராசன் அவர்களின் ‘மகாபாரதம்’, சுவாமி சித்பவானந்தர் அவர்களின் ‘மகாபாரதம்’, பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன் அவர்களின் ‘மகாபாரதம் உரைநடையில்’ ஆகிய நூல்களும் எழுந்தன.  

சகோதரர்களான கௌரவர் குடும்பத்துக்கும், பாண்டவர் குடும்பத்துக்கும் இடையில் தோன்றிய குடும்பப் பிரச்சினைகள் பெரும் யுத்தமாக உருக்கொண்டு பதினெட்டு நாட்கள் மகாபாரதப் போர் நடந்தது. அப்போரில் பதினெட்டு அக்ரோணிப் படைவீரர்கள் (முப்பத்தொன்பது இலட்சத்து முப்பத்தாறாயிரத்து அறுநூறு – 39,36,600) பங்கேற்று, அதில் பத்துப் பேர் தவிர மற்றைய அனைவரும் இறந்துபட்டனர். இறுதியாகப் பாண்டவர்கள் வெற்றி பெற்றுத் தருமர் முடிசூடி அத்தினாபுரத்தைத் தன் சகோதரரான பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோருடன் ஆட்சி புரிந்து வந்தான். அத்தினாபுரத்து மக்களும் மகிழ்ச்சியில் மூழ்கி இன்புற்று வாழ்ந்து வந்தனர்.

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: இலக்கியத்திலும் மொழியியலிலும் பன்முக ஆளுமை கொண்டிருக்கும் பேராசிரியர் நுஃமான் இலக்கியத்தொடர்பாடலுக்கும் ஆய்வுத்தேடலுக்கும் பாதை செப்பனிட்டுக்கொடுத்தவர்.

 நுஃமான்முருகபூபதிஇலங்கையின்  மூத்த  கவிஞரும்  விமர்சகருமான  நுஃமான் அவர்களுக்கு  70  வயது  என்பதை  அறிந்து  முதலில்  எனது நல்வாழ்த்துக்களை   அவருக்குத்  தெரிவித்துக்கொண்டே இந்தப்பதிவை  எழுதத்தொடங்குகின்றேன். நுஃமான்   தொழில்  ரீதியில்  பணியாற்றிய  கல்வித் துறையில்  எவ்வாறு  படிப்படியாக  உயர்ந்து  இன்று  தகைமைசார்  பேராசிரியராக  விளங்குகிறாரோ  அவ்வாறே  தாம்  சார்ந்த  இலக்கியத்துறையிலும்   படிப்படியாக  உயர்ந்து  பலருக்கும் முன்மாதிரியாகியிருப்பவர். அவர்  கவிஞர்,  விமர்சகர்,  ஆய்வாளர்,  மொழியியல்  அறிஞர், பேராசான்,   பதிப்பாளர்  முதலான  பன்முகம்  கொண்டவர். இலக்கியப்பிரவேசத்தில்  அவர்  ஆரம்பத்தில்  சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்   என்பதை   அறியமுடிகிறது.  பின்னாளில் ஆளுமையுள்ள  விமர்சகராகத்  தோற்றம்  பெற்ற  பலர்  ஆரம்பத்தில் சிறுகதைகள்தான்   எழுதியிருக்கின்றனர்  என்பது  தகவல்.   அந்த வரிசையில்  கைலாசபதி –  தொ.மு.சி ரகுநாதன்  ஆகியோரையும் குறிப்பிடலாம்.

நுஃமான்  பிறந்த  ஆண்டு  1944  என்பது  மாத்திரமே  தெரிந்த நிலையில்  அவரது  வாழ்க்கைப்பின்புலம்  பற்றிய  எதுவித தகவலும் இற்றைவரையில்  எனக்குத் தெரியாது.  அவரை  முதன்  முதலில் கொழும்பில்   இலக்கியசந்திப்புகளிலும் –  பின்னர்  அவர்  ஆசிரியராக பணியாற்றிய  கொழும்பு  அல்.ஹிதாயா  வித்தியாலயத்திலும் சந்தித்தேன். எனது  நினைவுக்கு  எட்டியவரையில்  1972  காலப்பகுதியில்  அவரை ஒரு  பாடசாலை  ஆசிரியராகவும்,  அதேசமயம்  இலக்கிய விமர்சகராகவும்  பார்த்தேன்.   அவரை  கவிஞன்  என்ற   கவிதைக்காக கிழக்கிலங்கையில்  (1969 -1970)  வெளியான   இதழின்  இணை ஆசிரியராகவும்  மகாகவி  உருத்திரமூர்த்தியின்  சில  நூல்களை பதிப்பித்த  பதிப்பாளராகவும்  தெரிந்துகொண்டிருந்தேன்.

Continue Reading →

செம்மொழிக் கருத்தரங்கம். (மின் ஊடகங்களில் சங்க இலக்கியச் சொல்லடைவுகளும் அகராதி தொகுத்தலும்)

CICT & Department of Tamil, Bharathidasan Universtiy Constituent College, Trichy , is organizing a Three day National Seminar on Part…

Continue Reading →