வாசிப்பும் யோசிப்பும் 97 : ஒரு கவிதையென்ற உரைநடை பற்றிச் சில வரிகள்…..
அண்மைக்காலமாக வெளிவரும் கவிதைகள் என்ற பெயரில் வரும் படைப்புகளைப் படிக்கும்போது ஒரு விடயத்தை அவதானிக்க முடிகிறது. கவித்துவமான தலைப்புகளுக்காக நேரத்தைச்செலவிடும் அவ்விதமான படைப்புகளைப் படைப்பவர்கள் கவிதையென்ற பெயரில் எழுதுபவையெல்லாம் கவிதைகளாக எனக்குத் தெரியவில்லையே. உங்களுக்குத் தெரிகிறதா?
உதாரணத்துக்குக் கீழுள்ள கவிதையென்ற பெயரில் வந்துள்ள படைப்பினை ஒருமுறை வாசித்துப் பாருங்கள்”
கவிதையின் தலைப்பு: மெய்நிகர் தீபம்
கவிதை கீழுள்ளவாறு செல்கிறது. வரிகளென்ற பெயரில் முறித்து முறித்து எழுதப்பட்டிருந்த படைப்பினை ஒரு மாறுதலுக்காக முறிக்காமல் எழுதியிருக்கின்றேன்.
“மெட்ரோபாலிடன் நகரின் வேகம் பரபரக்கும் சாலை அது. பின்னிருக்கையில் உட்காரப் பழகாத மலரொன்றை அமர்த்தியிருக்கிறான் தகப்பனெனப்படுபவன். செல்பேசியில் தன் காதலியோடு உல்லாசித்தபடியே செலுத்துகிறான். இருசக்கர வாகனத்தை. இடையிடையே வெடித்துச் சிரிக்கிறான். அப்போதெல்லாம் வாகனம் சமன் குலைகிறது.”