ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் மாதாந்த இலக்கிய கலந்துரையாடல்

“மொழிபெயர்ப்பியல் ஆய்வரங்கு” ஒருங்கிணைப்பு: சின்னையா சிவநேசன் நிகழ்ச்சி நிரல் “அன்றாட தமிழாக்கத்தின் இன்றைய நிலவரம்”  – உஷா மதிவாணன்“தமிழாக்கத்தில் வாசகர்களின் எதிர்பார்ப்புகள்” – சுல்பிகா இஸ்மயில்“புனைவிலக்கிய தமிழாக்கத்தில்…

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: கற்காலம் முதல் கம்பியூட்டர் காலம் வரையில் ஆடற்கலையின் நுட்பங்களின் ஆய்வில் தேடுதலில் ஈடுபட்ட மூத்த நடன நர்த்தகி நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்!

நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்கொழும்பில் கலை இலக்கிய நண்பர்கள் கழகம் என்ற அமைப்பு 1970களில் இயங்கியது. இதில் எழுத்தாளர்கள் சாந்தன், மாவை நித்தியானந்தன், குப்பிழான் சண்முகன், யேசுராசா, இமையவன், நெல்லை க.பேரன் உட்பட சில நண்பர்கள் அங்கம்வகித்து அடிக்கடி கலை, இலக்கிய  சந்திப்புகளை   நடத்திக்கொண்டிருந்தார்கள். சில நிகழ்ச்சிகளை வெள்ளவத்தை  தமிழ்ச்சங்கத்திலும்  நடத்தி  மூத்த  எழுத்தாளர்களை  அழைத்து  அவர்களின்  இலக்கிய அனுபவங்களை பேசவைத்தார்கள்.

இலங்கையின்  வடபகுதியைச் சேர்ந்த  இந்த  இலக்கிய  நண்பர்கள் தொழில்   நிமித்தம்  கொழும்பில்  வாழ்ந்துவந்தனர்.  பெரும்பாலும் அனைவருக்கும்   அப்பொழுது  திருமணம்  ஆகியிருக்கவில்லை. இந்த  பிரம்மச்சாரிகள்  நடத்திய  சில  சந்திப்புகளில் நீர்கொழும்பிலிருந்து  சென்று  கலந்துகொள்ளும்  சந்தர்ப்பங்களும் எனக்குக்கிடைத்தது.    சில  சந்திப்புகள்  நண்பர்களின்  வாடகை அறைகளில்  நடக்கும். அங்கிருக்கும்  கட்டில்களே  ஆசனங்கள்.

நாடகம்,   கவிதை,  சிறுகதை,  நாவல்,  விமர்சனம்  என்று அந்தக்கலந்துரையாடல்கள்   அமைந்திருக்கும்.   மிகவும்  தரமான கருத்துப்பரிமாறல்களுக்கு  களம்  அமைத்திருந்த   அச்சந்திப்பில்  ஒரு நாள்  நாட்டியம்  பற்றிய  கலந்துரையாடல்  நடந்தது. நடன   நர்த்தகி  கார்த்திகா  கணேசர்  அவர்கள்  எழுதி  தமிழ் நாடு தமிழ்ப்புத்தகாலயம்  1969  இல்  வெளியிட்டிருந்த  தமிழர்  வளர்த்த ஆடற்கலை   என்ற   நூலையே  அன்று  பேசுபொருளாக எடுத்திருந்தார்கள்.    அன்றைய   சந்திப்புக்கு  இலக்கிய   திரனாய்வாளர்    கே.எஸ். சிவகுமாரனும்  வருகை  தந்திருந்தார்.

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோவின் 67வது குறும்பட வட்டம் – அம்பேத்கர் திரைப்படம் திரையிடல்…

12-09-2015 – சனிக்கிழமை, இக்சா மையம், ஜீவன ஜோதி அரங்கம், எழும்பூர், கன்னிமாரா நூலகம் எதிரில். மாலை 4 மணிக்கு. சிறப்பு அழைப்பாளர்கள்:செயல்பாட்டாளர் சிவகாமி IASஎழுத்தாளர் அழகிய…

Continue Reading →

ஆய்வு: ஒளவையாரின் அகமும் புறமும்

ஆய்வு: ஒளவையாரின் அகமும் புறமும்தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒளவையார் என்னும் பெயரில் பலர் வாழ்ந்துள்ளனர். சங்க காலம், நாயன்மார்காலம், கம்பர்காலம், இக்காலம் எனப் பல்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததாகக் குறிப்புகள் உள்ளன. சங்க கால ஒளவையார் இலக்கியப் புலமை, சமயோகித அறிவுமிக்கவர்களுள் அதியமான் அவைக்களப் புலவர்களுள் நட்பாற்றலும், தன்முனைப்பும், பேரன்பும் கொண்டவர். இவர் இன்தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமது பாடல்கள் மூலம் அருந்தொண்டாற்றியவர். பெண்பாற் புலவர்களுள் முதன்மையானவர். தமிழகத்தின் முதல் பெண் தூதுவர் – கிரேக்கப் பெண்பாற்புலவர் சாப்போவுடன் ஒப்பிடத்தக்கவர்.

ஒளவையார் சங்க இலக்கியத்துள் 59 பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றுள் அகப்பாடல்கள் 26. புறப்பாடல்கள் 33. அகப்பாடல்களுள் குறுந்தொகை 15. நற்றிணை 7. அகநானூறு 4. இவற்றுள் ‘நல்ல குறுந்தொகை’ என்று போற்றப்படும் குறுந்தொகைப் பாடல்களுள் ஒளவையாரின் பாடல்கள் தலைவிக் கூற்றுப் பாடல்களாகவே அமைந்துள்ளன. புறப்பாடல்களுள் அதியமான் மகன் பொகுட்டெழினி குறித்தும் நாஞ்சில் வள்ளுவனைப்; பற்றி ஒரு பாடலும் மூவேந்தர்கள் பற்றி ஒரு பாடலும் பிற பாடல்கள் ஆறு என அப்பாடல்கள் அமைந்துள்ளன.

அகப்பாடல்களில்…
அகமாந்தர்கள் அனைவரும் ஏதாவது ஒரு தருணத்தில் உரையாடுகின்றனர். அந்த உரையாடல் தனித்தோ மற்றவர்களுடனோ அமைகிறது. இதனைத் தொல்காப்பியர் களவியலிலும் கற்பியலிலும் பொருளியலிலும் விளக்குகின்றார். அந்தவகையில் தலைவிக் கூற்று நிகழும் சூழல்கள் பலவாகும். குறுந்தொகையில் ஒளவையாரின் பாடல்களில் தலைவிக் கூற்றுப் பாடல்கள் இங்குக் களமாக்கப்படுகிறது. குறுந்தொகையின் 15 பாடல்களை 4 வகைப்படுத்தலாம். அவை,

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 111: மேலும் சில முகநூல் குறிப்புகள்!

1. ‘வெங்கட் சாமிநாதன்’: வாதங்களும் விவாதங்களும்’

. 'வெங்கட் சாமிநாதன்': வாதங்களும் விவாதங்களும்' கடந்த ஐம்பது வருடங்களுக்கும் அதிகமாக தமிழ்க்கலை, இலக்கிய உலகில் கலை, இலக்கிய விமர்சகராகப்பங்களித்து வருபவர் திரு. வெங்கட் சாமிநாதன் அவர்கள். முதுமையின் தளர்ச்சியையும் உள்வாங்கிச்சோர்ந்து விடாமல் தொடர்ந்தும் சஞ்சிகைகள், இணைய சஞ்சிகைகள் என்று தன் எழுத்துப் பங்களிப்பினை வழங்கி வருபவர் வெங்கட் சாமிநாதன். அவருடன் கருத்து முரண்பாடு கொண்டவர்கள் கூட தமிழ்க்கலை, இலக்கியச்சூழ்நிலையில் நிராகரிக்க முடியாத அவரது ஆளுமையினை ஏற்றுக்கொள்வார்கள், ‘பதிவுகள்’ இணைய இதழுக்குப் பல வருடங்களாகத்தன் கட்டுரைகளை அனுப்பி வருபவர் அவர். ‘பதிவுகள்’ இணைய இதழினை மிகவும் மதிப்பவர் திரு.வெ.சா, அவர் தன் படைப்புகளை அனுப்பும்போது எப்பொழுதும் மின்னஞ்சலில் ‘அன்புள்ள நண்பர், ஆசிரியர் பதிவுகள் கிரிதரன் அவர்களுக்கு’ என்று விளித்துத்தான் தன் படைப்புகளை அனுப்புவார். இது அவரது பெருந்தன்மையினைக்காட்டுகிறது. என்னை அவர் தன் நண்பர்களிலொருவராக ஏற்றிருப்பது அவரது நல்ல உள்ளத்தைக்காட்டுகிறது. அது ‘பதிவுகள்’ இணைய இதழ் மேல் அவர் வைத்துள்ள மதிப்பினையும் எடுத்துக்காட்டுகிறது.

திரு.வெ.சா.வின் ஐம்பது வருட இலக்கியப்பணியினைச் சிறப்பிக்கும் முகமாக எழுத்தாளர்கள் பா.அகிலன், திலீப்குமார் மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோர் சந்தியா பதிப்பகம் வாயிலாக ‘வெங்கட் சாமிநாதன்’: வாதங்களும் விவாதங்களும்’ என்றொரு தொகுப்பு நூலினை 2010இல் வெளியிட்டு வைத்தார்கள். மிகவும் நேர்த்தியான வடிவமைப்பில், தடித்த மட்டையுடன் வெளியான அந்த நூலில் கலை, இலக்கிய ஆளுமைகள் பலரின் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. எனது கட்டுரையான ‘அறிவுத்தாகமெடுத்து அலையும் வெங்கட்சாமிநாதனும் அவரது கலை ,மற்றும் தத்துவியற் பார்வைகளும்’ என்றொரு நீண்டதொரு கட்டுரையினை எழுதியிருந்தேன். மேலும் மேற்படி நூலினைப்பெற விரும்புவோர் சந்தியா பதிப்பகத்துடன் தொடர்புகொள்ளவும். முகவரி வருமாறு: சந்தியா பதிப்பகம், புது எண் 77, 53ஆவது தெரு, 9ஆவது அவென்யு, அசோக் நகர் , சென்னை 600 083 என்னு முகவரிக்கு எழுதித்தொடர்பு கொள்ளுங்கள். விலை ரூபா 300.

Continue Reading →

லண்டனில் ‘கட்டை விரல்’ ‘சிதறல்’ நூல்களின் வெளியீடு

லண்டனில் ‘கட்டை விரல்’  ‘சிதறல்’ நூல்களின் வெளியீடு

- நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -‘தேடல்களின் வெளிப்பாடாகவும்,சொந்த அனுபவங்களின் வெளிப்பாடாகவும்  ‘கட்டைவிரல்’ கட்டுரைகளைப் படிக்க முடிந்தது . இலங்கை வீரகேசரியில் வெளியான பல கட்டுரைகள் கட்டை விரலுக்கு அழகு சேர்ப்பதாகவும், ‘தடுத்திடுவார்கள் இன அழிப்பை’,‘போர்க்காலக் காதல்’ போன்ற கவிதைகள் கடந்த கால,சமகால நிகழ்வுகளையும் கோடிட்டுக் காட்டும் சிறந்த கவிதைகள்’ என முன்னாள் லண்டன் தெற்கு லண்டன் சதாக் பகுதியின் நகரசபை முதல்வரும்,தற்போதைய நகரசபை உறுப்பினருமான செல்வி எலிசா மன் அவர்கள் லண்டன் ஈஸ்ற்ஹாம் ரினிற்ரி மண்டபத்தில் மிக அண்மையில் பாரீசிலிருந்து வருகைதந்த திவ்வியநாதனின் நூல்; வெளியீட்டின்போது, தனது தலைமையுரையில்  குறிப்பிட்டிருந்தார். அவர் மேலும் பேசுகையில்: ‘ கட்டைவிரல்’ தொகுப்பில் கவிதை, கட்டுரை,சமையற்குறிப்புகள் என விரிந்து கிடப்பது பாராட்டுக்குரியது. திவ்வியநாதனின் இத்தகைய உழைப்பு  தமிழுலகுக்குச் செய்ய வேண்டிய அளப்பரிய செயற்பாடு. மேலும் இத்தகைய ஈடுபாடு; தொடரவேண்டுமென வாழ்த்துக் கூறினார்;.’

‘ நூலசிரியர் திவ்வியநாதன் பல புத்தங்களின்; தேடல்களினால் பெற்றுக் கொண்ட அறிவையும்,அவரது சொந்த அனுபவங்களையும் ஒன்று சோர்த்து இக் ‘கட்டைவிரலை’ப் படைத்துள்ளார். இக் ‘கட்டைவிரல்’ ஆங்கில மொழியில் வெளிவருமேயானால் மேலும் பயனுள்ளதாக அமையும்’ என இலக்கிய ஆர்வலரும்,இரசாயனப் பொறியியலாளருமான திரு ஜெயதீசன் தனது உரையில் தெரிவித்தார்.’

Continue Reading →

படிக்கட்டு!

கவிதை வாசிப்போம் வாருங்கள்!அன்பு படிக்கட்டு ஆசைப் படிக்கட்டு
இன்பம் பெருகும் படிக்கட்டு – துன்பம்
விலகும் படிக்கட்டு. வெண்ணிலா வந்து
உலவும் படிக்கட்டு நீ.

எண்ணப் படிக்கட்டு எண்ணும் படிக்கட்டு
வண்ணப் படிக்கட்ட மண்விட்டு – விண்ணில்
அடிக்கல் இடுதற்கு அஸ்திவாரம் செய்து
படிக்கட்டுக் கட்டு பயின்று.

கட்டி முடிச்சிடக் கட்டி லகப்பட்டுக்
கட்டில் சுகப்பட்டு கட்டுண்ட – கட்டைநீ
விட்டு விடைபெற்று விண்ணில் கொடிக்கட்ட
கட்டும் படிக்கட் டுயர்த்து.

Continue Reading →

சக்தி சக்திதாசன் கவிதைகள்!

1. அலாரம் அலற விழித்தன விழிகள்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!இரவெனும் நதியிலேகி வண்ணக்
கனவெனும் படகிலேறி வானில்
மிதந்து சென்ற உணர்வினையேந்தி
வியந்து நின்ற வகையிங்கு பகர

சின்னச் சின்னச் நட்சத்திரங்கள்
சொன்ன பல சுவையான கதைகள்
வண்ண முழு நிலவது தானும்
மெல்லத் தேயும் விந்தை விளக்க

Continue Reading →

கோவிந்த் நிலானி & B. லெனின் – உரையாடல்.!

தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது விழாவிற்காக கோவிந்த் நிலானி சென்னை வந்திருந்தபோது, அவருக்கும் படத்தொகுப்பாளர் லெனினுக்கும் இடையே இரண்டுமணிநேரம் சினிமா பற்றிய விவாதம் நடைபெற்றது. இருபெரும் ஆளுமைகள்,…

Continue Reading →

பாரதியாரின் “புதிய ஆத்திச்சூடி” – வாழ்வியல் சிந்தனைகள்

முன்னுரை

 முனைவர் செ.ரவிசங்கர், உதவிப் பேராசிரியர், ஒப்பிலக்கியத்துறை, தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை -.-‘இந்திய தேசியக் கவிஞர்களுக்கு இடையில் திலகம் போன்றவர் பாரதியார்’ என்று வினோபா பாவேவால் போற்றப் பெற்றவர் பாரதியார். தமிழ் இலக்கிய உலகில் சக்திதாசன் காளிதாசன் ஷெல்லிதாசன் சாவித்திரி என்ற நிருபநேயர் ஒரு உத்தம தேசாபிமானி நித்தியதீரர் போன்ற புனைப்பெயர்களைக் கொண்டவர் பாரதியார் மட்டும் என்றால் மிகையல்ல தான் வாழ்ந்த காலத்தில் உலக உயிர்கள் அனைத்தையும் ஒன்றாகப் பார்த்தவன் பாரதி எனவே தான்

‘எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓரினம்
எல்லோரும் இந்திய மக்கள்
எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர் ஆம்
எல்லோரும் இந்நாட்டு மன்னர்’

என்று தனது கடைசிப் பாடலாக இவற்றை எழுதியுள்ளான் ஆம் இது பாரதியின் இறுதிப்பாடல் ‘இப்போது 1921 ஆம் ஆண்டு பாரதி தனது இறுதிக் காலத்தில் ஒரு கவிதை எழுதுகிறான் அது ஒரு வாழ்த்துக் கவிதை வாழ்த்து வழக்கம் போல நாட்டிற்காக? அல்லது பாரத நாட்டு மக்களுக்கா? என்று கேட்டால் வாழ்த்து பாரத சமுதாயத்திற்கு எழுதப்பட்டுள்ளது. இந்த பாரத சமுதாய வாழ்த்தே பாரதியின் கடைசிப்பபடல் என பாரதியின் நண்பர் ஸ்ரீ சக்கரை செட்டியர் கூறுகிறார்.’ என்று முத்துக்கிருஷ்ணன் பதிவு செய்கிறார். இவ்வாறாக எல்லா உயிர்களையும் ஒன்றாகப் பார்த்த பாரதியார் தமது ஆத்திச்சூடியில் மக்கள் வாழ்ககைக்குத் தேவையான பல்வேறான சிந்தனைகளைக் கூறியுள்ளார். இக்கட்டுரை புதிய ஆத்திச்சூடியின் பன்முகத் தன்மைகளை ஆராய்வதாக அமைகிறது.

Continue Reading →