இலங்கையில் அண்மையில் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த ‘குடிவரவாளன்’ நாவலின் குறிப்பிட்ட எண்ணிகையிலான பிரதிகள் இலங்கையிலும் விற்பனைக்குள்ளன. நூலின் பிரதிகளை வாங்க விரும்புபவர்கள் எழுத்தாளர் குணேஸ்வரன்…
இம்மானுவேல் கான்ற்.
அப்பாடா… இவரின்றி மெய்யியலுலகே அசையாதென்பர் இவரை அறிந்தோர்.
இரு பெரும் பிரிவுகளாய் அறிவுலகு பிரிந்திருந்தது.
1. ஞான அறிவு
2. அனுபவ அறிவு.
2 ம் 2 ம் நாலு என்பது அனுபவ அறிவல்ல. 2 மனிதரும் 2 மனிதரும் 4 மனிதராய் அதோ தெரிகிறார்கள் பார். என்பது அனுபவ அறிவு.
முக்கோணம் 3 கோணங்களை உடையது. இதற்கு அனுபவம் தேவையில்லை. முக்கோணம் பற்றிய ஞான அறிவு வேண்டும். ஆனால், அந்த முக்கோணம் சற்றுச் சரிந்திருக்கிறதென்றால்…அதற்கு அனுபவ அறிவு வேண்டும்.
1. உயரமான மனிதன் ஒரு மனிதன். (ஞான அறிவு)
2. உயரமான மனிதன் நீலச் சட்டை அணிந்துள்ள ஒரு மனிதன். (அனுபவ அறிவு)
[எழுத்தாளர் ஆ.சி.கந்தராஜா ‘ஆசிகந்தராஜாவின் முற்றம்’ என்னும் தனது வலைப்பதிவில் பகிர்ந்துகொண்டிருந்த இக்கட்டுரையினைப் ‘பதிவுகள்’ வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம் ஒரு பதிவுக்காக. – பதிவுகள் -]
‘மாறுதல் பருவம்’ என்ற ஒன்றைப்பற்றி இலக்கிய விமர்சகர்கள் பொதுவாக குறிப்பிடுவதுண்டு. இலக்கியத்திற்கு மிக உகந்த பருவம் இது. கலாச்சார மாறுதல்கள் நிகழும் போது தான் சிறந்த படைப்புகள் உருவாகின்றன. தமிழில் காப்பிய காலகட்டம், அதற்கு மகுட உதாரணம். பௌத்த, சமண மதங்களின் வருகையை ஒட்டி உருவான கலாச்சார மாறுதல் (கலாச்சார உரசல் என்று மேலும் குறிப்பாகச் சொல்ல வேண்டும்) பெருங்காப்பியங்களின் பிறவிக்கு வழிவகுத்தது. நிலைத்துபோன மதிப்பீடுகள் மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படுகின்றன. வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படுவதனால் இலக்கியத்தின் களங்கள் மாறுபடுகின்றன. அதன் விளைவாக இலக்கிய மொழியை, இலக்கியத்திற்கேயுரிய தனி மொழியை (Meta Language) உருவாக்கி நிலை நிறுத்தக்கூடிய ஆழ்மனப் படிமங்களில் பெரும் மாறுதல்கள் உருவாகின்றன. இவ்வாறு இலக்கியம் முக்கியமான மாறுதல்களை அடைகிறது. உண்மையில் இலக்கியமாறுதல் என்பது சமூகம் கொள்ளும் மாற்றத்தின் ஒரு தடையமே. இலக்கியமாறுதல் அச்சமூக மாறுதலை மேலும் துரிதப்படுத்துகிறது. இந்திய மரபுமனம் மேற்கின் இலட்சியவாத காலகட்டத்தை எதிர்கொண்டமையின் மிகச்சிறந்த விளைவுதான் பாரதி. மாறுதல் பருவமே இலக்கிய ஆக்கத்தின் சிறந்த பின்னணி என்று நிறுவ பாரதி இன்னொரு சிறந்த உதாரணம். பாரதியில் தொடங்கிய அப்பருவம் இப்போதும் நீள்கிறது.
மாறுதல் பருவம் உற்சாகம், இக்கட்டு என்ற இரு தளங்கள் கொண்டது. மாறுதல் புதிய ஒரு வாழ்விற்கான கனவினை உருவாக்குகிறது. புதிய காலகட்டத்திற்கான சவால்களை முன்வைத்து மானுட ஊக்கத்தின் முன் சவால்களை திறந்து விடுகிறது. அதேபோல மாறுதல் மரபின் இன்றியமையாத கூறுகளை கூட பழைமை நோக்கித் தள்ளுகிறது. மனிதனின் சுயநலத்தையும் பேராசையையும் இத்தகைய மாறுதல் கணங்களே விசுவரூபம் கொள்ளச் செய்கின்றன. ஒரு உரையில் நித்ய சைதன்ய யதி இதைப்பற்றி சொன்னார். மாறுதல் காலகட்டம் சாத்தியங்களை திறந்து வைக்கிறது. சாத்தியங்கள் மனிதனின் இச்சா சக்தியை திறந்து விடுகின்றன. ஆக்க சக்தியாக வெளிப்படுவதும் இச்சா சக்தியே. சுயநலமாகவும் பேராசையாகவும் போக வெறியாகவும் வெளிப்படுவதும் அதுவே.
இலங்கை படைப்பாளிகள் புலம்பெயர்ந்த பிறகு ஒரு மாறுதல் பருவத்தின் பதிவுகள், தமிழிலக்கியத்தில் எழுந்தன. அத்துடன் இணையம் மூலம் தமிழிலக்கியத்தின் சாராம்சமான பகுதியுடன் அடையாளம் காணநேர்ந்த சில இந்தியப்புலம்பெயர் தமிழர்களும் இந்த மாறுதல் காலகட்டத்தின் இலக்கியப் பதிவுகளை உருவாக்கினார்கள். அ.முத்துலிங்கம், பொ.கருணாகரமூர்த்தி, ரமணிதரன், சோபா-சக்தி, கலாமோகன், ராஜேஸ்வரி பாலசுப்ரமணியன், சிறிசுகந்தராஜா, சக்கரவர்த்தி, வ.ந.கிரிதரன் என்று இலங்கை சார்ந்த தமிழ்படைப்பாளிகளின் புலம்பெயர் அனுபவக் கதைகள் முக்கியமானவை. காஞ்சனா தாமோதரன், மனுபாரதி, கோகுலக்கண்ணன், அலர்மேல்மங்கை, நா.கண்ணன் போன்று இந்தியத் தமிழர்களும் எழுதிவருகிறார்கள். இப்படைப்புகளில் பொதுத்தன்மைகளை வகுத்துக் கொள்ள இன்னும் காலம் ஆகவில்லை. எனினும் நம்பிக்கையூட்டும் பல ஆக்கங்கள் தொடர்ந்து வருகின்றன என்பதை கூறாமலிருக்க முடியாது.
தமிழ்
– இரா.சி. சுந்தரமயில் (கோவை) –
ஈராயிரம் வயதைக்
கடந்த பின்னும்
வலியது
நரை, மூப்பை எதிர்க்கும்
வாலிபமுடையது
தமிழகத்தாரின் தாய் என்றாலும்
சேய் போல
உலகத்தாரின் நாவிலும்
தவழ்வது
துறைகள் தோறும்
ஏற்றம் காண்பது
அற்புத நோக்குடைய
இலக்கியங்களைத் தருவது
தகவல்: பாஸ்கரன் tamilmurasu1@gmail.com
கண்காட்சி, சிறுவர் அரங்கு, கருத்தரங்கு, விமர்சன அரங்கு, கலையரங்கு அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இம்முறை தமிழ் எழுத்தாளர் விழாவை குவின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்ட்கோஸ்டில் ஒழுங்குசெய்துள்ளது. கடந்த …
June 11, 2016 இல் நடைபெறவுள்ள சர்வதேச தமிழ்த் திரைப்;பட விழா – படைப்புகளுக்கான கோரல்
தாய் வீடு பத்திரிகையும் சுயாதீன கலை திரைப்பட மையமும் கனடாவின் ரொறன்ரோ நகரில், நடத்தும் சர்வதேச குறுந் திரைப்பட விழாவில் பங்குபற்றுவதற்கான குறுந்திரைப்படங்கள் வரவேற்கப்படுகின்;றன.
சிறந்த குழந்தை நட்சத்திரம், நடிகர், நடிகைக்கான விருதுகள்
சிறந்த கதை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்குநருக்கான விருதுகள்
சிறந்த குறும்படம், சமூக விழிப்புணர்வுக்கான சிறந்த குறும்படம்,
சிறந்த குறும்படத்துக்கான விமர்சகர் விருது என்பவற்றோடு
சான்றிதழும் C$200 – 1000 வரையிலான பணப்பரிசுகளும் வழங்கப்படும்.
படைப்புகள் ஆங்கிலத்தில் துணைத் தலைப்புகளைக் கொண்டிருத்தல்; விரும்பத்தக்கது.
• படைப்புகள் ஏப்பிரல் 30, 2016க்கு முன்னர் கிடைக்;கக்;கூடியதாக அனுப்பிவைக்கப்;படவேண்;டும்.
• படைப்புகள்; 20 நிமிடங்களுக்குட்பட்டதாக இருத்தல் வேண்டு;ம்.
• படைப்புகளின் மொழி தமிழாக இருத்;தல் வேண்;டும்.
• படைப்புகளுடன் அதில் பங்குபற்றிய தொழினுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் பட்;டியல் இணைக்கப்படல் வேண்;டும்.
• படைப்புகளின் தயாரிப்பாளரின் கையொப்;பத்;துடன் கூடிய கடிதம் இணைக்கப்படல் வேண்டு;ம்.
• தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.
• படைப்புகள் அனுப்பப்படவேண்டிய முகவரி:
இசை என்பது ஒரு ஒழுங்கான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட இனிமையான ஒலிவடிவமாகும். மனித இனம் முதற்கொண்டு, சகல உயிரினங்களையும் இசைய வைக்கும் ஆற்றல் இதனிடம் பொதிந்து கிடப்பதனாலேயே இசை என்ற காரணப் பெயரை இது பெற்றதாகப் பொருள் கூறுவாரும் உளர். ’இசை கேட்டுப் புவி அசைந்தாடும்’ என்றும், ’என் இசை கேட்டு எழுந்தோடி வருவாரன்றோ’ என்றும் திரையிசைப் பாடல்கள் ஒலிப்பதை நாம் கேட்டிருக்கின்றோமல்லவா? இவையும் இசை பற்றிய இவையொத்த பல பாடல் வரிகளும் கவிதையழகுக்கென வரையப்பட்ட வெற்றுக் கற்பனை வார்த்தைகளல்ல. மாறாக, இசையின் வரலாற்று வழிவந்த உண்மை அனுபவங்களின் வெளிப்பாடுகளே என்பதற்கான சான்றாதாரங்கள் ஏராளம் உள.
இத்தகைய வல்லமை வாய்ந்த, இசை தோற்றம் பெற்ற காலம் தொடர்பாக ஏராளம் எடுகோள்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் அறுதியான முடிபுகள் இன்னமும் எட்டப்படாமல் அவை யாவும் அனுமானங்களாகவே இருந்து வருகின்றன. ஆதிமனிதனின் முதல் ஆயுதம் கோடரி எனவும், அதன் ஆயுள் 1.7 பில்லியன் ஆண்டுகளாக இருக்கலாம் எனவும், அடுத்த ஆயுதமான ஈட்டியின் வயது 500,000 ஆண்டுகளாக இருக்கலாம் எனவும் சில ஆய்வுகள் கூறுகின்றன. இதே ஆய்வுகள், முதலாவது இசைக்கருவி இற்றைக்கு 40,000 ஆண்டளவில் தோன்றியதாகத் தெரிவிக்கின்றன. ஆனால் தொடர்பாடலின் முதல் வழிமுறையான இசையானது இவை அனைத்திற்கும் முன்னதாகவே தோன்றியிருக்க வாய்ப்புண்டு என்றும், பறவைகள், மிருகங்களிடமிருந்தே மனிதன் இந்த இசையெனும் தொடர்பாடல் ஊடகத்தைப் பெற்றிருக்கின்றான் என்றும் இன்னொரு ஆய்வு கூறுகின்றது. இதன் விளைவாக, மனிதனிடமிருந்து முதன் முதலாகத் தோன்றிய இசைவடிவம் கைதட்டல் எனவும், பின்னர் தடிதண்டுகளைக் கொண்டு தட்டுதல் ஊடாக அது மேலும் பயணித்திருக்கலாம் எனவும், அதனைத் தொடர்ந்துதான் மனிதன் தன் குரலை இசையின் ஊடகமாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. இதற்குப் பின்னரான காலத்தில் வந்த கற்காலத்தில், கல்லாலான கருவிகளால் தானியங்கள், கிழங்குகள், வேர்களை இடித்தும் துவைத்தும் உணவாக்க முற்பட்டபோது தாளலயம் அந்நாளைய மனிதனால் அவதானிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.
நவீன முறையில் ஈமச்சடங்குகளை முடித்துவிட்டு அலுவலக நண்பர்களுக்கு நன்றி கூறியபின் இரவு நேரத்தில் வீடு திரும்பிய அவனை நாம் ‘அச்சா’வென்று அழைக்கலாம்.என்ன காரணமெனில் நகரத்திலுள்ள மூன்று குழந்தைகளுக்குத்தான் அவனது மதிப்புத்தெரியும். அந்தக்குழந்தைகள் அவனை ‘அச்சா’வென்று அழைப்பார்கள். பஸ்ஸில் அறிமுகமாகாத புதியவர்கள் மத்தியில் அமர்ந்துகொண்டு அவன் அந்த நாளின் ஒவ்வொரு கணத்தினூடாகவும் பயணித்தான். அந்நாளின் ஒவ்வொரு நிகழ்வையும் நினைத்துப்பார்த்தான்.காலை நேரத்தில் எழுந்ததிலிருந்தே அவளது குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது. “உன்னி அப்படியே படுக்கையில் உருண்டுகிட்டே இருக்க முடியுமா? இன்னிக்கு திங்கட்கிழமை இல்ல?” அவள் அவளது மூத்த மகனை எழுப்ப முயன்றாள். அழுக்குப்படிந்து கசங்கிய வெள்ளைச்சேலையைக் கட்டிக்கொண்டு சமையலறையில் வேலையைத்தொடங்கினாள். ஒரு பெரிய கப்பில் அவனுக்குக் காபி கொண்டுவந்தாள். அதன் பின்… என்னவெல்லாம் நடந்தது.மறக்கவே முடியாத சொற்களை ஏதாவது அவள் பேசினாளா?.எவ்வளவுதான் நினைவுக்குக் கொண்டு வந்தாலும் அதன் பின் அவள் சொன்னதாக எதுவும் நினைவில்லை.அந்த வார்த்தைகள் தான் எண்ணத்தில் அலைமோதுகின்றன. “உன்னி அப்படியே படுக்கையில் உருண்டுகிட்டே இருக்க முடியுமா? இன்னிக்கு திங்கட்கிழமை இல்ல?” அவன் அந்த வாக்கியத்தை ஒரு மந்திரத்தைப்போல உச்சரித்தான். அந்த வார்த்தைகளை மறந்துவிட்டால் அவனது இழப்பு திடீரென விஸ்வரூபம் எடுத்து தாங்க முடியாததாகிவிடும். அலுவலகம் கிளம்பும்போது குழந்தைகளும் அவனுடன் வந்தார்கள். குழந்தைகளுக்குப் பள்ளியில் சாப்பிட உணவு தயாரித்துக் கொடுத்திருந்தாள் அவள். அவளது வலதுகரத்தில் குங்குமப்பூத் துகள்கள் எஞ்சியிருந்தன. அதன்பின் அலுவலகத்தில் ஒருமுறைகூட அவளை நினைக்கவில்லை.
முன்னுரை
தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இந்நூல்கள் அறம், அகம், புறம் என மூன்றாக பகுக்கப்பட்டுள்ளன. இதில் அறநூல் பதினொன்று,அக நூல் ஆறு, புற நூல் ஒன்று என்ற வகையில் அமைந்துள்ளன.நான்மணிக்கடிகை அறநூல் வகையை சார்தது ஆகும். இந்நூலின் ஆசிரியர் விளம்பிநாகனார் நூலின் ஒவ்வொரு பாடலிலும் நான்கு மணியான கருத்துக்களை கூறியிருக்கிறார்.இவர் வைணவ சமயத்தை சார்ந்தவர்.இந்நூலின் நூற்று ஆறு பாடல்கள் இடம்பெறுகின்றன.இந்நூலில் இடம்பெறும் தனிமனிதன்; நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தனிமனிதன் என்பதன் விளக்கம்
சென்னை பல்கலைக்கழக ஆங்கில தமிழ் அகராதி தனிமனிதன் என்பதற்கு குழுமம், திரள், பொதுநோக்கால் ஒன்றுபட்ட மக்கள் தொகுதி, அச்செழுத்தின் ஓர் அளவு, உயர்நிலையாளரின் பின்னணிக்குழு, வழித்துணைக்குழு,மெய்க்காவலர், பீடிகை நீங்கியபத்திரம், பெரும்பான்மையளவு, (வினை) உருவம் அளி, உருவாக்கு, மனத்தில் கற்பனை செய்து பொதுமாதிரியாயமை என்று விளக்கம் அளிக்கிறது.