பத்தி 14 இணையவெளியில் படித்தவை!

சி.சு. செல்லப்பா – பழுப்பு நிறப் பக்கங்களில் சாரு நிவேதிதா

சத்யானந்தன்

நவீன இலக்கியம் (கவிதை கதைகளில் நவீனத்துவம்), விமர்சன இலக்கியம், வணிக இதழ்களுக்கு மாற்றான தீவிர இலக்கியம் இவற்றை ‘எழுத்து’ என்னும் பத்திரிக்கை மூலம் தமிழுக்கு அறிமுகம் செய்த சி.சு.செல்லப்பா சுதந்திரப் போராட்டதில் பங்கேற்று சிறை சென்றவர். அவர் இன்று தமிழில் தீவிர இலக்கியம் வணிக இலக்கியத்தைத் தாக்குப் பிடித்து நிமிர்ந்து நிற்கும் காலத்துக்கு அடித்தளமிட்ட முன்னோடி. சாரு நிவேதிதா அவரது பணி, ஆளுமை, படைப்புகள் மற்றும் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் யாவற்றையும் விரிவாக ஒன்பது பகுதிகளில் தினமணியின் இணையதளத்தில் எழுதி இருக்கிறார். எட்டாம் பகுதியில் அவருடைய சாதனைகள் என்ன என்னும் சாருவின் பார்வையைக் கீழே பகிர்கிறேன்:

மேற்கு நாடுகளில் பல்கலைக்கழக மொழியியல் துறையில் பணிபுரிபவர்கள் அனைவருமே சிந்தனையாளர்களாகவும், விமரிசகர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு நிலைமை வேறு. இங்கே விமரிசனம் என்றால் என்னவென்றே தெரியாது. வியாக்கியானமும் உரை விளக்கங்களும் மட்டுமேதான் இங்கே உண்டு. இப்படிப்பட்ட சூழலில் விமரிசனம் என்ற புதிய விஷயத்தை ஆரம்பித்த சி.சு. செல்லப்பாவின் விமரிசனப் பயணம் அவர் காலத்திலேயே – அதுவும் ‘எழுத்து’ பத்திரிகையிலேயே பெரும் விபத்துக்குள்ளாகியது. அவருடைய மாணாக்கர்களான வெங்கட் சாமிநாதனும் தர்மு சிவராமுவும் செல்லப்பாவின் பாணியிலேயே சென்று விமரிசனக் கலையை வம்புச் சண்டையாக மாற்றினர். ‘நமக்கு நட்பாக இருந்தால் நல்ல எழுத்தாளர்; இல்லாவிட்டால் போலி’ என்பதுதான் இவர்களது விமரிசனப் பாணியாக மாறியது. அவர்களின் விமரிசனத்தில் வேறு எந்தவித இலக்கியக் கோட்பாடுகளோ ரசனையோ இருந்ததில்லை. க.நா.சு. பரவாயில்லை. தன்னுடைய ரசனைக்கு ஏற்றபடி அவர் உலக இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். ஆனால் விமரிசனக் கலைக்கு அவர் பங்காற்றவில்லை. உலக இலக்கியத்தை வாசித்தால் நம்மால் நல்ல இலக்கியத்தை இனம் காண முடியும் என்று மட்டுமே குறிப்பிட்டார். அதன்படியே வாழ்நாள் முழுதும் வாசித்தார்; நமக்கு அறிமுகப்படுத்தினார். ஆனால் செல்லப்பாவும் சாமிநாதனும் சிவராமுவும் விமரிசனக் கலைக்கு ஆக்கபூர்வமாக எதுவும் செய்யவில்லை.

அசோகமித்திரனை மட்டுமல்ல; ஞானக்கூத்தன் உட்பட அவர்கள் காலத்திய பல எழுத்தாளர்களைப் போலி என்றார்கள் சாமிநாதனும் சிவராமுவும். ந. பிச்சமூர்த்தியின் இலக்கியத் தகுதியை சந்தேகித்து எழுதினார் நகுலன். அதுவும் ‘எழுத்து’ பத்திரிகையில். ஆக, மேற்குலகைப் போல் ஓர் ஆரோக்கியமான இலக்கிய வடிவமாக ஆகியிருக்க வேண்டிய விமரிசனக் கலை அடிதடி சண்டையாக மாறியது.

Continue Reading →

தாயாக நீ….

வாண்மதி உந்தன் கடனுக்காக
அடகுவைக்கப்பட்ட
அநாதைப்பெண்ணவள்

ஆயிரம் கேள்விகள் கேட்பேன்
ஒரு பதிலேனும்
சொல்லிவிடு!

பெத்தவள் பாவத்துக்கு
பாவையவளை
பலியாக்கியது நியாயமா?

சிரிப்பைத்தொலைத்த
மழழைப்பருவம்
ஏக்கம் சுமந்த பள்ளிப்பருவம்
கனவைத்தொலைத்த
கன்னிப்பருவம்

எல்லாப்பருவங்களின்
ஏக்கங்களை மட்டும்
எனக்குச் சீதனமாக்கி
என்னைத் தாரைவார்த்த
நாட்கள்

இன்னும் நெருஞ்சிமுள்ளாய்
குத்துகிறது அம்மா

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: மல்லிகையில் அட்டைப்பட அதிதி கௌரவம் பெறாத மல்லிகையின் தொண்டன் ரத்தினசபாபதி

திரும்பிப்பார்க்கின்றேன்: மல்லிகையில்  அட்டைப்பட  அதிதி  கௌரவம்  பெறாத மல்லிகையின்   தொண்டன்  ரத்தினசபாபதிபெரியார்  ஈ.வே.ராமசாமி  தமது  குடியரசு  இதழ் விநியோகத்திற்கு முதலில்   தேர்வு  செய்த   இடங்கள்  தமிழகத்தின்  பட்டி  தொட்டி எங்கும்  இருந்த  சிகை அலங்கார  நிலையங்கள்தான்  என்று சொல்லப்பட்டதுண்டு. காரணம்;  இங்கு  வரும்  வாடிக்கையாளர்களின்  கண்களில்  குடியரசு இதழ்கள்   தென்படும்.   எடுத்துப்படிப்பார்கள்.  அவ்வாறு  தமது சமூகச்சீர்திருத்தக் கருத்துக்களையும்    பகுத்தறிவுவாத சிந்தனைகளையும்   பெரியார்  அக்காலத்தில்  சாதாரண  மக்களிடம் பரப்பினார். எங்கள்  மல்லிகை  ஜீவாவுக்கும்  பெரியார்  ஆதர்சமாகத் திகழ்ந்தவர். அவரை   முன்மாதிரியாகக்கொண்டு,  தாம்  வெளியிட்ட  மல்லிகையை   இலங்கையில்  பல  தமிழ்  அன்பர்கள்   நடத்திய சிகை அலங்கரிப்பு  நிலையங்களுக்கும்  விநியோகித்தார். யாழ்ப்பாணத்திலும்  கொழும்பிலும்  இவ்வாறு  மல்லிகையை  அவர் விநியோகம்   செய்ததை  நேரில்  பார்த்திருக்கின்றேன்.  தொடக்கத்தில் அவருடைய   யாழ்ப்பாணம்  கஸ்தூரியார்  விதியில்  அமைந்த ஜோசப்சலூனின்   பின்னறையிலிருந்து  மல்லிகையின்  பக்கங்கள் அச்சுக்கோர்க்கப்பட்டன. காலப்போக்கில்  ராஜா   தியேட்டருக்குப்பின்னால்  மல்லிகைக்கென தனியாக   அலுவலகம்  அமைத்து  வெளியிட்டார்.   வடக்கில்  போர் நெருக்கடியினாலும்  இயக்கத்தின்  நெருக்குவாரங்களினாலும்  கொழும்புக்கு   இடம்பெயர்ந்து,  மல்லிகையை  வெளியிட்டார்.  கடந்த சில   வருடங்களாக  மல்லிகை  வெளிவரவில்லை.

மல்லிகை ஜீவாவுடனும்  மல்லிகையுடனும்   மல்லிகையின் நண்பர்களுடனும்   தொடர்ச்சியாக  இணைந்திருந்த  முன்னாள்  தபால் அதிபர்  ரத்தினசபாபதி,  அவர்கள்  மல்லிகையில்  பல  ஆக்கங்களை எழுதியிருந்தபோதிலும்  அவருடைய   முகம்   அட்டையில் பிரசுரமாகவேயில்லை. அட்டைப்பட  அதிதி  என்ற  மகுடத்தில்  இலங்கை,  இந்திய  மற்றும் புலம்பெயர்ந்த    படைப்பாளிகள்,   கல்விமான்கள்,  கலைஞர்கள், சமூகப்பணியாளர்கள்,   முற்போக்கான  அரசியல்  தலைவர்கள்  பலரும்   அட்டைப்பட  அதிதிகளாக  மல்லிகையில் கௌரவிக்கப்பட்டுள்ளனர். பழைய  மல்லிகை  இதழ்களை   பார்த்தால்,  எத்தனைபேர்  அவ்வாறு கனம் பண்ணப்பட்டுள்ளனர்  என்பது   தெரியவரும். பின்னாளில்   அக்கட்டுரைகளை  தனித்தனி  தொகுதிகளாகவும் மல்லிகைப்பந்தல்   வெளியிட்டுள்ளது. அட்டைப்பட  ஓவியங்கள் (1986)  மல்லிகை முகங்கள் (1996) அட்டைப்படங்கள் (2002)  முன்முகங்கள் (2007)  முதலான தொகுப்புகள்தான்  அவை.   இந்த  வரிசையில்  முதல்  வெளியீடான அட்டைப்பட  ஓவியங்கள்  நூல்,   தமிழ்நாட்டில்  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்  பதிப்பகத்தினால்  மற்றும்  ஒரு  பதிப்பையும் கண்டிருக்கிறது. ஆனால்,   மல்லிகையின்  வளர்ச்சிக்கு  பல  ஆண்டுகாலம் பக்கத்துணையாக  விளங்கிய  ரத்தினசபாபதி  அவர்களின்  படம்தான் மல்லிகையின்   முகப்பு  அட்டையை   அலங்கரிக்கவில்லை. கண்களுக்கு  கண்ணின்  இமைகள்   தெரிவதில்லை. ஆயினும் –  ஜீவா  ஆரம்பத்தில்  வழக்கமாக  எழுதும்  மல்லிகையின் கொடிக்கால்கள்   என்ற  பத்தியில்    இவரைப்பற்றிய   குறிப்பினை பதிவுசெய்துள்ளார்

Continue Reading →

கவிதை: அதிசயக்குழந்தை

1. அதிசயக்குழந்தை – பூதம்

கவிதை வாசிப்போம் வாருங்கள்!
ஒட்டு துணிகூட இல்லாமல் …
பிறந்த மேனியோடு கட்டாந்தரையில் ….
புழுதி மண்ணுக்குள் உருண்டு பிரண்டு ….
விளையாடிகொண்டிருந்தான் ….
அதிசயக்குழந்தை …….

டேய் எழுந்திரு என்று அதட்டினேன் …
எதற்கு என்று கேட்டான் அவன் ….!!!

மண்ணுக்குள் விளையாடுகிறாயே ….
உடம்பு முழுக்க அழுக்கு படுத்தே …
என்றேன் ….

நீங்க மட்டும் அழுகில்லையோ…?
என்றான் அவன் – மேலும் சொன்னான் ….

Continue Reading →

ஜெயராமசர்மா கவிதைகள் மூன்று!

1. சிறக்க வாழ்ந்திட !

கவிதை கேட்போம் வாருங்கள்!மதுவைநீ நாடாதே மதிகெட்டுப் போயிடுவாய்
மங்கையரை நாடுவதால் வலியுனக்கு வந்துவிடும்
சதிசெய்யும் குணமுடையார் சகவாசம் தனைவிடுத்தால்
சரியான வழிநடக்கத் தானாகப் பழகிடுவாய் !

ஏழ்மைநிலை இருப்பாரை இரக்கமுடன் அணைத்துவிடு
எதிரியென எவரையுமே என்றும்நீ எண்ணாதே
சோதனைகள் வந்திடினும் சோர்ந்துவிடா இருந்துவிடின்
சாதனையின் நாயகனாய் தலைநிமிர நின்றிடுவாய் !

அறத்தினைநினை அன்பையணை
சிரத்தையுடன்நீ சிறந்தனதேர்ந்திடு
இறப்பினைப்பற்றி எண்ணாதிருந்திடு
சிறக்கவாழ்ந்திட சிந்தனைசெய்திடு !

Continue Reading →

மே-15. உலகக் குடும்ப தினம்.

மே-15.  உலக குடும்ப தினம்.

உறவினைப் போற்றிடு!  உணர்வினைப் பகிர்ந்திடு!
உண்மையைப் பேசிடு!  ஒற்றுமை கொண்டிடு!
அறத்தினை வளர்த்திடு! அன்பினைப் பகிர்ந்திடு!
ஆதரவு தந்திடு!  ஆனந்தம் கண்டிடு!
பறவையைப் பார்த்திடு!  பாசத்தைக் கற்றிடு!
பகிர்ந்திட வாழ்ந்திடு!  பட்டொளி வீசிடு
பிறவியின் பயனெடு!  பிரிவினை மறந்திடு!
பிளவினை தடுத்திடு! பெருமையைக் காத்திடு!

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: முதல் பிரதியை சைவஹோட்டல் வாயிலில் வெளியிட்ட விஞ்ஞான ஆசிரியர்; நாவலப்பிட்டியில் படிப்பகம் அமைத்து இலக்கியப்பயிர் வளர்த்த சீர்மியத்தொண்டர்!

 இர.சந்திரசேகரன்நூல் வெளியீடுகள்  எங்கும்  நடக்கின்றன.  முதல்  பிரதி,  சிறப்புப்பிரதி வழங்கும்  சடங்குகளுக்கும்  குறைவில்லை.  அவற்றை அவ்வாறு பெற்றுக்கொள்பவர்கள்  படிக்கிறார்களா ?  என்பது  வேறு  விடயம். இவ்வாறு  நூல்களின்  அரங்கேற்றங்கள்  கோலம்கொண்டிருக்கையில்,  ஒரு  எழுத்தாளரின்  நூலை முகத்திற்காக  விலைகொடுத்து  வாங்காமல்,  எதிர்பாராத  தருணத்தில் ஒரு  சைவஹோட்டல்  வாயிலில்  அந்த  எழுத்தாளரின் கைப்பையிலிருக்கும்  நூலைக்  கண்டுவிட்டு  பணம்  கொடுத்து வாங்கிய     முகம்  மறந்துபோன ஒரு  வாசக  அன்பர்  இன்றும் அழியாதகோலமாக  அந்த  எழுத்தாளரிடம் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

அந்த  எழுத்தாளர்  தமது  முதலாவது  நூலை  1974   ஆம்  ஆண்டு புரட்டாதி  மாதம்  கொழும்பில்  ஒரு  அச்சகத்தில்  அச்சடித்துவிட்டு, அவற்றில்  25   பிரதிகளை   எடுத்துக்கொண்டு  கோட்டை  ரயில் நிலையத்திற்கு  முன்னால் அமைந்துள்ள  பிரபல சைவஹோட்டலுக்குச்செல்கிறார்.

அங்கு  தமது  புதிய  நூலின்  பிரதிகளை  விற்பனைக்கு வைக்கமுடியுமா ?  எனக்கேட்கிறார்.    இத்தகைய விற்பனைக்காக  அந்த  ஹோட்டலுக்கு  அவர்  கமிஷனும் கொடுக்கத்தயார். ஆனால்,  அங்கு  மறுத்துவிடுகிறார்கள்.  சொல்லப்பட்ட  பதில் “இலங்கை  நூல்கள்  விற்பனை  செய்வதில்லை.”

அங்கிருந்த  கண்ணாடி   அலுமாரியில்  தமிழகத்தின்  நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.   மேசையில்  தமிழக  வணிக  இதழ்கள் வண்ணம்   வண்ணமாக  விற்பனைக்கு  இருந்தன.

அந்த  எழுத்தாளர்  ஏமாற்றத்துடன்  படி  இறங்கியபோது,  அந்த ஹோட்டலில்  உணவருந்திவிட்டு  கையை    காகிதத்தால் துடைத்துக்கொண்டு  வந்த  ஒரு  தமிழ்  அன்பர்,  அந்த  எழுத்தாளரை நிறுத்தி  ”  உங்கள்  புத்தகத்தின்  விலை  என்ன ?   என்று கேட்கிறார்.

” மூன்று  ரூபா  தொன்னூறு  சதம்.”

அந்த  அன்பர்  நான்கு  ரூபாவை  நீட்டி  நூலைப்பெற்றுக்கொள்கிறார்.

Continue Reading →

கவிதை 1: முள்ளிவாய்க்கால்! (* மே 18 நினைவுக்கவிதை.)

கவிதை: முள்ளிவாய்க்கால் நினைவுக்கவிதை - வ.ந.கிரிதரன்

முள்ளிவாய்க்கால் ஒரு நினைவுச்சின்னம்.
மானுடத்தின் கோர முகத்தை
மானுடத்தின் தீராச்சோகத்தினை
வெளிப்படுத்துமொரு நினைவுச் சின்னம்.

முள்ளிவாய்க்காலில் தர்மம்
அன்று.
தலை காத்திருக்கவில்லை.
தலை குனிந்திருந்தது.

அதர்மத்தின் கோலோச்சுதலில்
எத்தனை மனிதர் இருப்பிழந்தார்?
எத்தனை மனிதர் உறவிழந்தார்?
எத்தனை மனிதர் கனவிழந்தார்?

Continue Reading →

நிகழ்வுகள்: மாபெரும் தமிழினப்படுகொலை நாள் மே 18 அன்று பூரண ஹர்த்தால்! வர்த்தக சங்கங்கள் அறிவிப்பு!

நிகழ்வுகள்: மாபெரும் தமிழினப்படுகொலை நாள் மே 18 அன்று பூரண ஹர்த்தால்! வர்த்தக சங்கங்கள் அறிவிப்பு!

இறுதி யுத்தத்தில் சிறீலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களை நினைவுகூர்ந்து ‘தமிழர் தேசியப்பெருந்துயரை உலகுக்கு பறைசாற்றுவதற்காக மே 18 புதன்கிழமை அன்று வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முழுமையான ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படும் என்று வர்த்தக சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதுதொடர்பில் முல்லைத்தீவு – கிளிநொச்சி மாவட்டங்களின் வர்த்தக சங்கங்கள் கூட்டாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிறீலங்கா அரசின் மாபெரும் தமிழினப்படுகொலைக்;கு நேரடியாக இரையாக்கப்பட்ட இவ்விரு மாவட்டங்களின் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்ற உணர்வு ரீதியாகவும்,

வன்முறைகள் – படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டு உயிர்நீத்த எமது உறவுகளை விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைவுகூர்ந்து அஞ்சலிப்பதை எமது தேசியக்கடமையாகக்கொண்டும்,

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர், முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் உரிமைக்கான அமையத்தினர், தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கம் (Forum for Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives – Tamil Homeland) ஆகியன எம்மிடம் கடிதம் மூலமும் – நேரில் சந்தித்தும் விடுத்த தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடலுக்கு உளத்தூய்மையுடன் ஆதரவு தெரிவித்தும், மே 18 புதன்கிழமை அன்று முழுமையான ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படும்.

Continue Reading →

குடிவரவாளன் நூல் அறிமுக நிகழ்ச்சி

‘உயில் மற்றும் சித்தம் அழகியார்’ ஏற்பாட்டில் வ.ந.கிரிதரன் எழுதிய “குடிவரவாளன்” என்ற நாவலின் அறிமுக நிகழ்வு 15.05.2016 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு இடம்பெற்றது. நிகழ்வுக்கு குப்பிழான்…

Continue Reading →