மனித சமூகம் இனக்குழு வாழ்க்கை முறையில் இருந்து குடிமைச் சமூக நாகரிகத்தை ( civic society ) நோக்கி வளா்ந்த ஒரு வளா்ச்சிக் கட்டத்தை சங்ககாலம் என்று குறிப்பிடுவா்.இச்சங்க கால வாழ்க்கை முறைகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.சங்கம் மருவிய கால இலக்கியமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள சிலப்பதிகாரத்தில் சங்க இலக்கியப் பதிவுகள் சில இடங்களில் அவ்வாறேயும் சில இடங்களில் மாற்றம் பெற்றும் காணப்படுகின்றன. அவற்றை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
திருமணநிகழ்வு
திருமணம் என்பதனை “திருமணம் என்பது சமூகத்திலுள்ள ஒரு வகை வழக்கமாகும். இது சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண்- பெண் உறவுநிலையைக் குறிக்கிறது” என்பா். (முனைவா் கே.பி.அழகம்மை சமூக நோக்கில் சங்க மகளிர் ப-44 )
“திருமணம் இரண்டு தனிப்பட்டவா்களுக்கிடையே நடைபெறும் உடன்படிக்கையன்று.இரண்டு குழுக்களிடையே இணைப்பை நெருக்கத்தை ஏற்படுத்தும் உறவுத்தளை நியதி ” ( சசிவல்லி தமிழா் திருமணம் ப- 8 ) என்று குறிப்பிடுவா். சங்க இலக்கியங்கள் களவு வழிப்பட்ட கற்பு வாழ்க்கையினையே பெரிதும் பதிவு செயதுள்ளன.இருப்பினும் மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாரிடம் பெண் கேட்டு நிச்சயிக்கும் முறையும் வழக்கில் இருந்தமையைக் காணமுடிகிறது.
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே ( தொல்.கற் – 1 )
என்று தொல்காப்பியரும் இதனை விளக்குவார்.
அம்மவாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணா்ப்போ ரிருந்தனா் கொல்லோ
தண்டுடைக் கையா் வெண்டலைச் சிதலவர்
நன்றுநன் றென்னு மாக்களோடு
இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையே ( குறு – 146 )
என்ற பாடல் பெரியவா்கள் கூடிப் பேசி திருமணம் செய்யும் முறையினைப் புலப்படுத்துகின்றது எனலாம்.
Continue Reading →