கவிதை: தாலாட்டு…

*பிரான்சில் அன்னையர் தினம் (29.05.2016)

பத்மா இளங்கோவன்அன்று நீ பாடினாய்
ஆராரோ.. ஆரிவரோ… ..
அழகான தாலாட்டு
ஆனந்தத் தூக்கமது..!

அம்மா…
நீ சென்றபின்..
இன்று வரையில்லை
அத்தூக்கம்… ..

அன்னையர் தினம்..
அன்னையர் தினமென்று
உலகெங்கும்
பாட்டுக்கள்.. பாராட்டுக்கள்
அம்மாக்களுக்காக… ..!

அம்மா..
உன்னை நினைத்துப் பார்த்தேன்..
பாடினேன் ஒரு பாட்டு..
அது
என் தாலாட்டு…
தூங்குவாயா அம்மா…
என் தாலாட்டுக் கேட்டு… ..
முடியுமா உன்னால்… ..?

Continue Reading →

முனைவர் நீலமலர் இலக்குவனாரின் நூல் அறிமுகம்.

An Endless Refugeeமுனைவர் நீலமலர் இலக்குவனாரின் நூல் அறிமுகம்.கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில், தமிழகத்தில் இருந்து வருகை தந்த கலாநிதி நீலமலர் செந்தில்குமார் அவர்களின்  An Endless Refuge   என்ற ஆங்கில் நூல் அண்மையில் ரொறன்ரோவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்விற்குக் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் உபதலைவர் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் தலைமை தாங்கினார். இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு இந்த நிகழ்வைச் சிறப்பித்தனர். தலைமை தாங்கிய எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் உரையில் இருந்து ஒரு பகுதியை இங்கே தருகின்றேன்.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த பல எழுத்தாளர்களைப் பலதடவைகள் கௌரவித்திருக்கின்றது. அந்த வகையில் கலாநிதி நீலமலர் அவர்களையும் கௌரவிக்கும் பாக்கியம் இன்று எழுத்தாளர் இணையத்திற்குக் கிடைத்திருக்கின்றது. கலாநிதி நீலமலர் அவர்களின் இலக்கியக் கருத்துரையைச் செவிமடுக்க வந்திருக்கும் உங்கள் எல்லோருக்கும் வணக்கம்கூறி, அவரைப்பற்றியும் அவரது ஆக்கங்கள் பற்றியும் சில வார்த்தைகள் குறிப்பிடலாம் என நினைக்கின்றேன்.

கலாநிதி நீலமலர் அவர்களின் தாத்தாதான் தமிழ் அறிஞர் சி. இலக்குவனார் அவர்கள். தமிழ் மீது கொண்ட அதீத பற்றுக் காரணமாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பணி நீக்கம் செய்யப்படாலும் மனம் தளராது தொடர்ந்தும் தாய் மொழிக்காகப் போராடியவர். அவர் தனது மகனுக்கும் மறைமலை அடிகளாரின் பெயரையே சூடியிருந்தார். கலாநிதி நீலமலர் அவர்களின் தந்தையான மறைமலை இலக்குவனார் தமிழ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். அவரது உரையைப் பல தடவைகள் நான் கேட்டிருக்கின்றேன். குறிப்பாக உலகத்தாய் மொழி நாளன்று சண் தொலைக்காட்சியில் அவர் ஆற்றிய உரை மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. கலாநிதி நீலமலரின் தாயாரும் ஒரு பேராசிரியராவார். திருமதி நீலமலர் செந்தில்குமார் அவர்கள் எதிராஜ் கல்லூரியில் கல்வி கற்றவர். சென்னையில் வசிக்கும் இவர் தொடக்கத்தில் விளம்பர நிறுவனம் ஒன்றில் பணியாற்றியவர். தற்போது அண்ணா பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணி புரிகின்றார்.

Continue Reading →

ஆய்வு: சமூகமாற்றமும் சாதீயத்தேய்வும் – புதியசுவடுகளை முன்வைத்துச் சில குறிப்புகள்

தி.ஞானசேகரனின் புதிய சுவடுகள்சின்னராசா குருபரநாத்“தமிழில் மாதிரி உரைநடை நவீனம் பொது மக்களுக்கு இதுவரை அளிக்கப்படவில்லை. ஆகையால் இந்நூல் வாசகர்களுக்கு சுவை பொருந்தியதாகவும் போதனை நிறைந்ததாகவும் இருக்கும் என எதிர்பார்க்கின்றேன்” என தமிழுக்குப் புதிய உரைநடை நவீனமான நாவலெனும் இலக்கிய வடிவம் வேதநாயகம்பிள்ளையினால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டதிலிருந்து. நாவல் எனும் இலக்கிய வடிவம் பல்வேறு வளர்ச்சிக்கு உட்பட்டு இந்நூற்றாண்டிலும் செல்வாக்குப் பெற்ற இலக்கிய வடிவமாகவும் மிளிர்கின்றது.

இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பாரிய இலக்கியப் புரட்சியின் விளைவாக பல புதிய இலக்கிய வடிவங்கள் தமிழுக்குள் அறிமுகமாயின. இவ் இலக்கிய வடிவங்கள் சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளையும் வெவ்வேறு பொருள் நிலைகளில் வெளிப்படுத்தின. இவ் இலக்கிய வடிவங்களுள் நாவலும் சிறுகதையும் தனிமனித உணர்வுப் பிரச்சினைகளை மிகச் சிறப்பாக, உணர்ச்சிப் பூர்வமாக புதியதோர் தளத்தில் வெளிப்படுத்தியிருந்தன. குறிப்பாக ஈழத்தில் தோற்றம் பெற்ற நாவல்கள் ஈழத்திற்கே உரித்தான அரசியல், பொருளாதார, சமுதாய, சமயப் பிரச்சினைகளை கருவூலமாகக் கொண்டு தோற்றம் பெற்றன. தமிழகச் செல்வாக்கும், மேலைத்தேய பிரக்ஞையும், படித்த மத்தியத்தர வர்க்கத்தின் தோற்றமும் ஈழத்தில் சிறந்த நாவல் இலக்கியத் தோற்றத்திற்கு வழியமைத்துக் கொடுத்தன. குறிப்பாக ஈழத்தில் 1950, 60 களில் ஏற்பட்ட சமுதாய மாற்றமும் இலக்கிய இயக்கங்களின் தோற்றங்களும் 1970களில் சிறந்த சமுதாயச் சிந்தை கொண்ட நாவல்கள் தோற்றம் பெறுவதற்கு வழியமைத்துக் கொடுத்தன.

ஈழத்து நாவல் இலக்கியப் பரப்பில் 1960, 1970 காலப்பகுதியில் சிறந்த பொற்காலம் என்நு கூறலாம். இக்காலப் பகுதியில் நாவல் பல்வேறு நோக்கங் கருதி பல்வேறுபட்ட சமுதாய பார்வையோடு சமூக பிரக்ஞையோடு படைக்கப்பட்டது. இக்காலப் பகுதியில் செ. கணேசலிங்கன், கே. டேனியல்,தி. ஞானசேகரன் போன்றோர் பல்;வேறு சிந்தை கொண்ட ஈழத்து சமுதாயப் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் நாவல்களை வேறுபட்ட நிலைகளில் நின்று வெளிப்படுத்தி இருந்தனர். அந்தவகையில், தி. ஞானசேகரன் குறிப்பிடத்தக்க இடத்தினை பெற்றவராக விளங்குகின்றார்.

Continue Reading →

ஆய்வு: தொல்காப்பியர் காட்டும் பிரிவொழுக்க முறைகள்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

ஆண், பெண் ஈர்ப்பு ஒரு மனித வாழ்வியலை உருவாக்கித் தந்துள்ளது. இதன் ஊற்றால் அவர்கள் இன்ப வெள்ளத்தில் மூழ்கிக் குடும்ப வாழ்வைத் தொடங்கி, உற்றார் உறவினர் என்று குடும்பமாகச் சுற்றியிருந்து வாழ்வர். ஒருவரை ஒருவர் நேசித்து, அன்பு சொரிந்து, பாசம் காட்டி, உதவு கரம் கொடுத்து, அறநிலை நின்று வாழ்வதையே விரும்பினர். அவர்கள் எட்டச் சென்று தனித்து வாழார். இவ்வண்ணம் வாழ்ந்து பழகியவர்கள் ஒரு சில நாட்கள்தானும் பிரிந்து சென்று வாழவிரும்பமாட்டார். இனித் தொல்காப்பியu; காட்டும் பிரிவிற்குரிய நிமித்தங்களையும் காண்போம்.

தொல்காப்பியம்.
இடைச் சங்ககாலத்தில் எழுந்த நூலான தொல்காப்பியம் என்ற நூலைத் தொல்காப்பியர் (கி.மு.711) எனும் புகழ் பூத்த புலவர் யாத்துத் தந்தனர். அதில் அவர் பிரிவொழுக்க முறைகளையும்,  பிரிவுக்குரிய நிமித்தங்களையும் காட்டியுள்ளார். கல்வி கற்பதற்காகப் பிரிதல், பகை காரணமாகப் பிரிதல், தூது போவதற்காகப் பிரிதல் ஆகிய மூவகைப் பிரிதல்களுக்கும் தொல்காப்பியச் சூத்திரம் அமைத்துதுத் தந்துள்ளார்.

‘ஓதல் பகையே தூதுஇவை பிரிவே.’ – (பொருள். 27)

மேற் காட்டிய மூவகைப் பிரிதலில், கல்வி கற்பதற்காகப் பிரிதலும், தூது செல்வதற்காகப் பிரிதலும் ஆகிய இரு பிரிதல்களும் உயர்ந்தோராகிய மக்களுக்கே உரியனவாமென்றும் கூறியுள்ளார். குணம், ஒழுக்கம், செல்வம், கல்வி, ஞானம் முதலியன நிறைந்த மக்களே உயர்ந்தவர்களாகக் கணிக்கப்பட்டனர்.

‘ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன.’ – (பொருள். 28)

Continue Reading →