ழகரம் 5 இதழ் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் அ.யேசுராசா அவர்கள் தனது ‘தெரிதல்’ என்னும் செய்திக்கடித வடிவமைப்பில் கடந்த பல வருடங்களாக வெளியாகி வரும் சிற்றிதழினைத்தந்தார். ‘இளைய தலைமுறைக்கான இரு திங்கள் கலை, இலக்கிய இதழ்’ என்னும் தாரக மந்திரத்துடன் வெளியாகும் இதழ் ‘தெரிதல்’.
‘தெரிதல்’ மூலம் பல கலை, இலக்கிய விடயங்களை தெரிந்துகொள்ள முடிகின்றது என்பதை இதழைப்புரட்டியபோதுதான் புரிந்தது. 12 பக்கங்களில் எவ்வளவு விடயங்களைத் தர முடியுமோ அவ்வளவு விடயங்களையும் தருகின்றது ‘தெரிதல்’. உதாரணத்துக்கு நிகழ்வில் யேசுராசா அவர்கள் வழங்கிய தெரிதல் வைகாடி- ஆனி 2016 இற்குரிய இதழ். மொத்தப் பக்கங்களின் எண்ணிக்கை: 12. இதழில் மூன்று கவிதைகள் (மஞ்சுளா வெடிவர்த்தனாவின் ‘சப்பாத்து’ என்னும் சிங்களக் கவிதை எம்.ரிஷான் ஷெரீப் மொழிபெயர்ப்பில், லதுரு மதுசாங்க லியனாராய்ச்சியின் ‘நண்பா..’ லறீனா அப்துல் ஹைக் மொழிபெயர்ப்பில், மற்றும் தீபிகாவின் ‘நகரம்’ ஆகியவை வெளியாகியுள்ளன.
இவை தவிர இதழிலுள்ள முக்கியமான படைப்புகள் பற்றிய விபரங்கள் கீழே பட்டியலிடப்படுகின்றன:
1. நயநீக்கப் புனைவால் திரவநேர அழகியல் – இ.சு.முரளிதரன் –
2. மிக்கயீல் ஷோலக்கவ் – சோ.பத்மநாதன்
3. சீறி ஓயாத வருங்கால மனிதநதி – சோலைக்களி
4. எஸ்.பொ. என்னும் ஆளுமை: இலக்கிய ஆய்வரங்கு – இறமணன் –
5. சிறுகதை: நிழல் தேடி – பைந்தமிழ்க்குமரன் –
6. சிறுகதை: ஒளி – மருதூர்க்கொத்தன் –
7. எழுகையும் – நா.நவராஜ்
8. அறிதலுக்கான புதியதோர் வாசல்: இலங்கை சமகால கலை, கட்டட வடிவமைப்பு – கிருபாலினி பாக்கியநாதன்
9. தகவற் களம் : பல கலை, இலக்கியத்தகவல்களின் சுருங்கிய வடிவிலான தொகுப்பு
செய்திக்கடிதமளவில் தரமான கலை, இலக்கிய விடயங்களைத்தாங்கி வெளிவந்திருக்கும் ‘தெரிதல்’ நிச்சயம் நம் ;புரிதலை’ அறிதலை அதிகரிக்கவே செய்யுமென்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமேயில்லை. கீழுள்ள இணைய இணைப்பில் ஏனைய இதுவரை வெளிவந்த இதழ்களைப் படிக்கலாம்:
venkat_swaminathan_new_a
Copyright © 2025 இரவி — Primer WordPress theme by GoDaddy