வடக்கு மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் பீல் தமிழ் முதியோர் சங்கத்துக்கு வருகை

மாண்புமிகு வடக்கு மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் பீல் தமிழ் முதியோர் சங்கத்துக்கு வருகைவெள்ளி 13 மேற்கத்திய மூட நம்பிக்கையின்படி ஒரு துரதிர்ஷ்டமான நாளாகக் கருதப்படுகிறது. 2017 ஆம் ஆண்டில், ஜனவரி 13 ஆம் திகதி ஒரு வெள்ளிக்கிழமை. ஆனால் அத்தினம் மிசிசாகா ஒன்றாரியோவில் உள்ள பீல் தமிழ் முதியோர்; சங்கத்திற்கு; ஒரு முக்கியமான  நல்ல நாளாகும்.. இலங்கையில் வடக்கு மாகாணத்தின் கௌரவ முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன், பீல் முது தமிழ்ர் சங்கத்திற்கு  இரு மணி நேரத்துக்கு வருகைதந்து, உறுப்பினர்களோடு தனது கருத்துக்களைப் பகிர்ந்தார். இச் சங்கம் 1999 இல் நிறுவப்பட்டு 900 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. பல சமூக நடவடிக்கைகளில் ஈடுபாடுள்ளது. இலங்கையில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய தகுதியும், திறமையான முதியவர்களை  உள்ளடக்கியது. கௌரவ முதலமைச்சர் தமிழ் தேசிய உடையான வேட்டியோடும் நெற்றியில் குங்குமப்; பொட்டோடும் சமூகம் தந்து, தமிழ் பாரம்பரியத்தை நிலைநாட்டினார்.. அவரது முகத்தில் ஆன்மீகத் தன்மை பிரதிபலித்தது. குத்துவிளக்கேற்றி, மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி,  ; தேசிய க னேடிய கீதம் மற்றும் தமிழ் கீதம் பாடியபின் நிகழ்வு ஆரம்பித்தது, சில அறிமுக உரைகளின் பின்,  சங்கத்தின் தலைவர் வடமாகாணத்தில் உள்ள இளைஞர்கள் எதிர்நோக்கும்; பிரச்சனைகளை வரவேற்பு உரையில் குறிப்பிட்டுப் பேசினார்

தமிழில் உரையாற்றிய கௌரவ முதலமைச்சர் வட மாகாண  வளர்ச்சி தொடர்பான  எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி குறிப்பிட்டுப் பேசினார் .கனடாவில் வதியும் ஈழத் தமிழர்கள்.; யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வளர்ச்சியில் மிகவும் ஆர்வமாக உள்ளவர்களாக இருப்பதைத் தான் உணர்ந்தாக சொன்னார். தங்கள் சொந்த நிதி பங்களிப்பு மூலம் மாகாண  வளர்ச்க்கு பல உறுப்பினர்கள் முன் வந்தார்கள். ” உறவுப் பாலம் ” என்ற திட்டத்தின் கீழ் வடமாகாணத்தில் உள்ள முக்கிய நபர்களின் விருத்திக்கான திட்டத்துக்கு, புலம் பெயர்ந்த மக்களின் ஆதரவை  மாகாண மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டார். இதில் மார்க்கம்-முல்லைத்தீவு, பிராம்ப்டன்-வவுனியா இரட்டை நகரத்; திட்டங்கள் மூலம் நிரூபணம் ஆகிறது. காலப்போக்கில் இந்த இரட்டை நகரத்; திட்டங்கள், மன்னார் மற்றும் கிளிநொச்சி நகரங்களுக்கு நீடிக்க வேண்டும். இதே முயற்சியை கிழக்கு மாகாணசபையும் தொடரலாம் என்றார்.

Continue Reading →

வேலணை வடக்கு, ஆத்திசூடி மக்கள் ஒன்றியம் – கனடா வழங்கும் தைத்திங்கள் பொங்கல் விழா!

தமிழ்மரபு போற்றும் ஒரு தனித்துவப் பொங்கல்விழா! சிந்தனையில் ஆழ்த்தும் பாரதியாரின் பூமிக்கு வருகை! கலைவேந்தன் கணபதி-தேசபாரதி சந்திக்கும் ஒரு கவிதாநிகழ்ச்சி! சிறுவர் பெரியோர் நிகழ்வுகளோடு மகிழ்விக்கும் விழா!…

Continue Reading →

கவிதை: நூற்றி ஐம்பதில் புலருங் கனடியம் .ஒரு போற்றுங் காவியம்!

* கனடாவின் நூற்றி ஐம்பதாவதாண்டினையொட்டி இக்கவிதை இங்கு பிரசுரமாகின்றது.

- தேசபாரதி (தீவகம் வே.இராசலிங்கம்) - -

விஞ்சிய தாயாய் விளங்கு பூமியில்’
ஒன்றரை நூற்றாண்டு உயிலென அகவையில்…!

பல்லவி

வாழிய கனடா வாழிய கனடா!
வாழிய கனடா மணித்திரு நாடு!

அனுபல்லவி

ஆழிசூழ் உலகின் அற்புத விளக்கே
ஊழி முதல்வனாய் ஒளிருங் கோவிலே

சரணம்

நூற்றி ஐம்பதின் நூபுரக் கலசம்
போற்றியே கனடியம் பூத்தது மகுடம்!
காற்றும் ஒருமுறை களிப்பில் மலர்ந்தது
நேற்றைய பொழுதிலும் இன்றும் சிரித்தது!

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 216 : எழுத்தாளர் மைக்கலின் முகநூல் கருத்துகள் பற்றி…; மஹாகவியின் ‘புள்ளி அளவில் ஒரு பூச்சி!’; தமிழ்த்திரையுலகில் உண்மையான சகல கலா வல்லுநர் எஸ்.பாலச்சந்தர்!; இசை கேட்கும் நேரம் இது: உனது மலர் கொடியிலே. எனது மலர் மடியிலே. உனது

1. எழுத்தாளர் மைக்கலின் முகநூல் கருத்துகள் பற்றி…

- வ.ந.கிரிதரன் -நண்பர் எழுத்தாளர் மைக்கல் தனது முகநூல் பதிவொன்றில் “தமிழிலக்கியம் ஏன் எப்போதுமே வாழ்வின் இருளையும்/துன்பங்களையும் பேசுகிறது? ” என்றொரு கேள்வியினையும், “ஜப்பானில் காமிக்ஸ் நூற்கள்தான் மிக விற்பனையாகின்றனவாம். அப்படியொரு வாசிப்பை நாம் வழமைபடுத்தவேண்டும்.” என்றொரு கருத்தினையும் “ஒரு படைப்பு, மனுஷவாழ்க்கைக்கு நம்பிக்கை தரவேண்டும். தொய்ந்த மனதை ஆரவாரித்து ஆர்முடுகலாக்க வேண்டும்.”என்றொரு கருத்தினையும் கூறியிருந்தார். அவை என் சிந்தையில் ஏற்படுத்திய சிந்தனைகளை அப்பதிவுகளுக்கு எதிர்வினைகளாகக் கொடுத்திருந்தேன். அவற்றை ஒரு பதிவுக்காக இங்கே பதிவிடுகின்றேன்.

1. நண்பரே! மானுட வாழ்வு என்பது பல்வேறு முரண்பட்ட உணர்வுகளையும் உள்ளடக்கியதுதான். இதுவரை கால உங்களது வாழ்க்கையை மட்டுமே நினைத்துப்பாருங்கள். அந்த வாழ்வு இன்பகரமான உணர்வுகளாலும், துன்பகரமான உணர்வுகளாலும், நேர்மறை / எதிர்மறை உணர்வுகளாலும், வெற்றி/ தோல்விகளாலும், இறப்பு/பிறப்புகளாலும் உள்ளடக்கியிருப்பதைக் காண்பீர்கள். அனைவர் நிலையும் இதுதான்.,… இவைபோன்ற முரண்பட்ட விடயங்களை உள்ளடக்கியதுதானே மானுட வாழ்வு. தமிழிலக்கியம் மட்டுமல்ல உலக இலக்கியம் அனைத்துமே தத்யயேவ்ஸ்கியிலிருந்து, சேக்ஸ்பியரிலிருந்து,.. தகழி சிவசங்கரம்பிள்ளை வரை. கோகுலம் சுப்பையா வரை, சிவராம் காரந் வரை, வைக்கம் முகம்மது பஷீர் வரை மானுடத்தின் இருண்ட, ஒளிர்ந்த பக்கங்களைத்தாம் பேசுகின்றன.

Continue Reading →

அடைக்கலப் பாம்புகள்’ – சிறுகதைத் தொகுப்பு வெளியீடு; ‘இறுதி மணித்தியாலம்’ மொழிபெயர்ப்புத் தொகுப்பு!

என் நேசத்துக்குரியவருக்கு, எனது இந்த வருடத்தின் முதல் புத்தகமாக, இந்தியாவின் சிறந்த பதிப்பகங்களுள் ஒன்றான ‘வம்சி’ பதிப்பக வெளியீடாக ‘இறுதி மணித்தியாலம்’ எனும் மொழிபெயர்ப்புத் தொகுப்பு இந்த…

Continue Reading →

கீழ்க்கணக்கின் அகநூல்கள் கூறும் அகவாழ்வியல்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், ஏலாதி, முதுமொழிக் காஞ்சி, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது, களவழி நாற்பது ஆகிய பதினெட்டு நூல்களைச் சேர்ந்த தொகுதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கலாயிற்று. இப் பதினெட்டு நூல்களையும் ஒரு நான்கடி வெண்பாவில் அமைத்திருக்கும் சீரினையும் காண்போம்.

‘நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி – மாமூலம்
இன்னிசைசொல் காஞ்சியுட னேலாதி யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.’

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக் கோவை, சிறுபஞ்சமூலம், பழமொழி நானூறு, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்ற பதினொரு நூல்களை நீதி கூறும் அறம் சார்ந்த நூல்களாகவும், ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை, கார் நாற்பது என்ற ஆறு நூல்களை அகம் சார்ந்த நூல்களாகவும், களவழி நாற்பது என்ற ஒரு நூலைப் புறம் சார்ந்த நூலாகவும் வகுத்துள்ளனர்.

அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பொருள்களையும் குறைந்த அடிகளில் சிறப்புற (நான்கு அடிக்கு மிகாமல்) உரைப்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் இயல்பாகும்.

Continue Reading →

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

இத்தினத்தில் அனைவரும் ஆனந்தத்’தை’, வாழ்வில் ஏற்றத்’தை’ப் பெற்று விளங்கிட வாழ்த்துகின்றோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். வழி பிறக்கட்டும். பிறக்கும் அவ்வழியில் வாழ்வு மேலும் சிறக்கட்டும்.…

Continue Reading →

கவிதை: பொங்கல் பொங்கட்டும்

இவ்வுலகம் இனிதுஎண்ணம் போல உயர்ந்திருக்கும் வான் இனிது      ஒளிதந்து வாழ்வளிக்கும் கதிர் இனிதுநிலத்திற்கு வளமை சேர்க்கும் மழை இனிதுவிதைத்ததை செழுமை படுத்தும் நிலம் இனிதுவியர்வைக்கு இதம் அளிக்கும்…

Continue Reading →

கவிதை: எல்லோரும் பொங்கி நிற்போம் !

- எம் . ஜெயராமன், மெல்பேண், அவுஸ்திரேலியா -

புத்துணர்வு புதுக்கருத்து
புறப்பட்டு வந்திடட்டும்
பொங்கலிட்டு மனம்மகிழ்ந்து
புதுப்பொலிவு பெற்றிடுவோம்
பொறுமையெனும் நகையணிந்து
பொங்கிநின்று மகிழ்ந்திடுவோம்
இறைநினைப்பை மனமிருத்தி
எல்லோரும் பொங்கிநிற்போம் !

குறையகன்று ஓடிவிட
இறைவனைநாம் வேண்டிடுவோம்
நிறைவான மனதுவரும்
நினைப்புடனே பொங்கிடுவோம்
துறைதோறும் வளர்ச்சிவர
துடிப்புடனே உழைப்பதென
மனமெண்ணி யாவருமே
மகிழ்வுடனே பொங்கிநிற்போம் !

Continue Reading →

திரும்பிப்பார்க்கின்றேன்: வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் இளங்கீரன்

 ஈழத்து முற்போக்கு  எழுத்தாளர்  இளங்கீரன்எழுத்தாளர் முருகபூபதி எழுத்தாளர் இளங்கீரனுடன்இலங்கைத்தமிழ்ச்சூழலில்     ஒருவர்    முழு நேர    எழுத்தாளராக வாழ்வதன்    கொடுமையை    வாழ்ந்து     பார்த்து   அனுபவித்தால்தான் புரியும்.     எனக்குத்தெரிய     பல      முழுநேர      தமிழ்    எழுத்தாளர்கள்  எத்தகைய    துன்பங்களை,     ஏமாற்றங்களை,     தோல்விகளை, வஞ்சனைகளை,     சோதனைகளை      சந்தித்தார்கள்     என்பதை  மனதில் பதிவு செய்யத்தொடங்கியபோது      அவர்களின்      வாழ்வு  எனக்கும்  புத்திக்கொள்முதலானது. நான்      எழுத்துலகில்    பிரவேசித்த     காலப்பகுதியில் மினுவாங்கொடையைச் சேர்ந்த     நண்பர்  மு.பஷீர்,  எங்கள் இலக்கியவட்டத்தின்        கலந்துரையாடல்களின்போது  குறிப்பிடும்  பெயர்:-  இளங்கீரன்.  இவரது  இயற்பெயர்      சுபைர்.      இவரும்     முழு நேர    எழுத்தாளராக     வாழ்ந்தவர்.

நீர்கொழும்பில்      எனது       உறவினர்       மயில்வாகனன்     மாமா  1966 காலப்பகுதியில்      தாம்     நடத்திய     அண்ணி     என்ற    சஞ்சிகையின்  முதலாவது      இதழில்      இளங்கீரன்     அவர்களின்     நேர்காணலை  பிரசுரித்திருந்தார்.      அப்பொழுது     எனக்கு       இளங்கீரனைத் தெரியாது.  அந்த      இதழில்     முன்புற –  பின்புற     அட்டைகளைத்தவிர     உள்ளே அனைத்துப்பக்கங்களிலும்      விடயதானங்கள்      கறுப்பு     நிறத்தில் அச்சிடப்பட்டிருந்தன.       ஆனால்,      இளங்கீரனின்       நேர்காணல்     மாத்திரம் சிவப்பு      நிறத்தில்      அச்சாகியிருந்தது.  அதற்கான காரணத்தை        மாமாவிடம்      கேட்டேன். அண்ணி    சஞ்சிகையின்      துணை      ஆசிரியர்களில்      ஒருவரான ஓட்டுமடத்தான்       என்ற      புனைபெயரில்       எழுதும்      நாகராஜா    என்பவர்   இடதுசாரி      சிந்தனையாளர்.       இளங்கீரனும் கம்யூனிஸப்பற்றாளர்.        நாகராஜாதான்       அந்தப் பேட்டிக்காக இளங்கீரனைச்சந்தித்து        எழுதியவர்.      சஞ்சிகையில்       குறிப்பிட்ட பக்கங்கள்       சிவப்பு நிறத்தில்      அச்சாகவேண்டும்      என்ற      பிடிவாதத்தில் நாகராஜா       இருந்தார்     என்று      சொல்லி     எனது சந்தேகத்தைப்போக்கினார்.

Continue Reading →