வவுனியாவில் 23.01.2017 திங்கள்கிழமை அன்று காலை 8.00 மணியிலிருந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்.

அறிவித்தல்[உரிய நேரத்தில் எமக்குக் கிடைக்காததால் இவ்வறிவித்தல் உரிய நேரத்தில் பிரசுரமாகத்தவறி விட்டது. ‘பதிவுகள்’ இணைய இதழுக்கு அறிவித்தல்களை அனுப்புவோர் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்பாக அனுப்பும்படி கேட்டுக்கொள்கின்றோம் உரிய நேரத்தில் இதனைத்தவற விட்டமைக்காக வருந்துகின்றோம். ஒரு பதிவுக்காக இவ்வறிவித்தல் இங்கு பிரசுரமாகின்றது.- பதிவுகள்-]


வவுனியாவில் 23.01.2017 திங்கள்கிழமை அன்று காலை 8.00 மணியிலிருந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்.

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர், நான்கு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோருக்கு கையொப்பமிட்டு அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை இன்று (20.01.2017 வெள்ளிக்கிழமை) அனுப்பி வைத்துள்ளனர். வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு முன்பாக எதிர்வரும் 23.01.2017 திங்கள்கிழமை அன்று காலை 8.00 மணியிலிருந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக குறித்த சங்கத்தின் வவுனியா மாவட்டத்தலைவி திருமதி ஜெயவனிதா காசிப்பிள்ளை அறிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தின் முழுவிவரமும் வருமாறு:

21.01.2017
சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள எமது இறுதி முடிவை தங்களுக்கு அறியப்படுத்தல் தொடர்பாக,

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினராகிய நாங்கள், சிறீலங்கா அரச படைகள் மற்றும் அரச துணை ஆயுதகுழுக்களால் எமது உறவுகள் கடத்திச்செல்லப்பட்டமையை கண்கண்ட சாட்சிகளாக உள்ளோம்.

Continue Reading →

திரை விமர்சனம்: பைரவா ! ஒரு பார்வை!

திரை விமர்சனம்: பைரவா ! ஓர் பார்வை!கடந்த வாரம் 2017 தைப்பொங்கலோடு உலகமெங்கும் தைப்பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது . இளைய தளபதி விஜய் நடித்த பைரவா திரைப்படம் திரைக்கு வந்தது. உலகமெங்கும் திரைக்கு வந்த அந்தப் படம் டென்மார்க்கிலும் பல இடங்களில் திரையிடப்பட்டது.

என் மகன் விஜய் ரசிகன் என்பதால் அவன் பைரவா தியட்டரில் பார்க்க வேண்டும் என்று ஒரு மாசத்துக்கு முன்னமே என்னை நச்சரித்துக் கொண்டே இருந்தான் ஓம் ஓம் என்று சொல்லி காலத்தை கடத்தலாம் என்று நினைத்து வந்த எனக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வசமாக மாட்டிக்கொண்டு விட்டேன். எனது வீட்டில் இருந்து 40 km  தொலைவில் இருக்கின்ற அந்த தியட்டரில் “பைரபா” பார்பதற்காக நுழைந்தேன் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் மக்கள்  இருந்தார்கள். அதிகமாகப் பிள்ளைகளின் கட்டாயத்தின் பேரில் வந்தவர்கள்தாம் அதிகமாக இருந்தார்கள்.

இந்தியாவில் பல தனியார் கல்வி நிறுவனங்களின் பிற்போக்குத்தனத்தைச்  சொல்லும் கதைக் களத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் விஜய் ,கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்க, ஜேகபதிபாபு,டேனியல் ,பாலாஜி ,தம்பி ராமையா சதீஸ் மற்றும் பலரது நடிப்பில் இருந்தது அந்தப்படம் ஒளிப்பதிவு பாடல்கள் சிறப்பாக இருந்தன.  கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியிருந்தார்

சொந்தம் பந்தம் என யாருமே இல்லாத ஓர் அனாதையான விஜய் தன் நண்பனோடுசென்னையில் அறையொன்றில்  ஒன்றாக இருக்க அறிமுகமாகிற விஜய  வங்கியொன்றில் வராத கணக்குகளை வசூலிக்கும் வேலை பார்த்து வருகிறார். வங்கி அதிகாரியான ஒய் ஜி மகேந்திரன் ‘மைம்’ கோபிக்கு கொடுத்த  பல லட்சம் பணம் வட்டி ஒழுங்காக கட்டாததால் ஒய் ஜி மகேந்திரன் திருப்பி கேக்க போய் தருவதாக கூறி பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு காசும் கொடுக்காமல் அவமானப் படுத்தி திருப்பி அனுப்பிவிட ,அவர் வந்து விஜயின் உதவியை நாடுகிறார்.

Continue Reading →

ஆய்வு: விருந்தோம்பல் பண்பும் தமிழரின் மாண்பும்

முன்னுரை:
- முனைவர் சு.தங்கமாரி, உதவிப்பேராசிரியர்,முதுகலைத் தமிழ், வி.இ.நா.செ.நா.கல்லூரி, விருதுநகர். -தமிழரின் வீரம்,கொடை,மானம் போன்ற முக்கியமான பண்புகளைப் போன்றே நம்மால் மறைக்கப்பட்ட அல்லது மறுக்கப்பட்ட முக்கியமான பண்பு விருந்தோம்பல் ஆகும்.இந்த உலக இயக்கமே ‘பசி’ என்ற ஒற்றைச் சொல்லில் தான் உள்ளது.‘ஒரு சான் வயிறு இல்லாட்டா;உலகத்தில் ஏது கலாட்டா”  என்று ஒரு எதார்த்தமான உண்மையினைப் போகின்ற போக்கில் சொல்லிச் செல்லும் கவிஞனும் உள்ளான். இன்றைய காலத்தில் உலகம் முழுவதும் விஞ்ஞான வளர்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகின்றது. அந்த ஈடுபாட்டில் மனிதத்தை மட்டும் மறந்து வருகின்றது. அதற்கான அடையாளம் தான் ஆப்பிரிக்க தீபகற்பப் பகுதியில் அமைந்துள்ள சோமாலியா நாடு ஆகும். இங்கு உணவு என்பது ஒரு வேளை கூட இல்லாமல் பஞ்சத்தாலும் பசியாலும் தற்பொழுதுவரை 2இலட்சத்து58 ஆயிரம் பேர் இறந்துள்ளனர் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.ஆனால் அறிவியல் வளர்ச்சியில் இன்றைய உலகம் சுருங்கிவிட்டது என்றும் மனிதன் இந்தப் பேரண்டத்தைத் தம் கைக்குள்ளே அடக்கிவிட்டான் என்றும் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றோம்.

பசி:
பசி என்ற ஒற்றைச் சொல்லால் உயிர் விடுகின்ற ஒரு சக ஜீவராசியைக் கூட காப்பாற்ற முடியாத ஒருகையற்ற நிலையில் தான் நாம் இன்று உள்ளோம்.தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திட்வோம் என்றார் முண்டாசுக்கவி பாரதி. ஆனால் பசிக் கொடுமையினால் கூட்டம் கூட்டமாக,கொத்துக்கொத்தாக மனிதர் தன்இன்னுயிரை விடுகின்றனர்.என்ற கொடுமை நம் நெஞ்சினிலே ஈட்டியாகப் பாய்கின்றது. இந்த உலகில் ஏற்படும் அனைத்து நொய்களுக்கும் மருந்து தமிழனிடமே உள்ளது. அம்மருந்தின் மூலத்தினை நம் முன்னோர்கள் நம்மிடையேசொல்லிச் செல்கின்றனர். அது தான் “விருந்தோம்பல்” எனும் அருமருந்து ஆகும்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 219: தி.ஜா.வின் ‘அன்பே! ஆரமுதே!’

தி.ஜா.வின் ‘அன்பே! ஆரமுதே!’

தி.ஜா.வின் 'அன்பே! ஆரமுதே!'தமிழில் எனக்குப் பிடித்த முக்கியமான நாவலாசிரியர் தி.ஜானகிராமன். இவரது ‘செம்பருத்தி’, ‘மோகமுள்’, ‘மலர் மஞ்சம்’, மற்றும் ‘அன்பே ஆரமுதே’ ஆகிய நாவல்கள் இவரது நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்தவை. ‘அன்பே ஆரமுதே’ நாவலை என் பதின்ம வயதுகளில் வாசித்திருக்கின்றேன். கல்கி சஞ்சிகையில் தொடராக வெளிவந்த நாவலை அழகாக ‘பைண்டு’ செய்யப்பட்ட நிலையில், ஓவியங்களுடன் வாசித்திருக்கின்றேன். அன்று இந்த நாவலை வாசித்ததற்கும், இன்று வாசிப்பதற்குமிடையில் நாவலை அனுபவிப்பதில், புரிந்து கொள்வதில் நிறையவே வித்தியாசங்களுள்ளன. ஏனென்றால் இந்த நாவலின் பிரதான பாத்திரங்கள் இளம் வயதினரல்லர். முதுமையை எட்டிப்பிடிக்கும் நடுத்தர வயதினர். இவ்வயதினரின் உளவியலை பதின்ம வயதுகளில் புரிந்து கொள்வது வேறு. பாத்திரங்களின் வயதில் புரிந்து கொள்வதென்பது வேறு 🙂

கதை இதுதான். அனந்தசாமி என்னும் சன்யாசி, சென்னையில் வாழும் மக்களுக்கு வர்க்க, சமூக வேறுபாடுகளற்ற நிலையில் நாட்டு வைத்தியம் செய்பவர். பந்தங்களைத் தன் இளவயதில் துறந்தவருக்குப் பந்தங்கள் அவரிடம் வைத்தியம் பார்க்கும் சென்னைவாசிகள்தாம். நாவல் அனந்தசாமியின் தாயாரின் மரணத்துடன் ஆரம்பமாகின்றது. அவருக்குச் சகோதர, சகோதரிகள் நல்ல நிலையில் இருந்தாலும், யாருமே வயதான தாயாரைத் தம்முடன் வைத்துப்பார்க்கத்தயாரில்லை. அனந்தசாமியே தாயாரைத்தன்னுடன் கூட்டி வந்து பராமரிக்கின்றார். இந்நிலையில்தான் தாயாரும் இறந்து விடுகின்றார். இவரிடம் வைத்தியம் பார்க்கும் செல்வந்தப்பெண்மணியொருத்திதான் நாகம்மாள். அவளுக்கு ஒரு மகள் சந்திரா.  காதல் தோல்வியால் துயரத்துக்குள்ளாகியிருப்பவள் சந்திரா.

Continue Reading →

லண்டனில் ‘சலங்கைகளின் சங்கமத்’தின் வெள்ளி விழா

லண்டனில் ‘சலங்கைகளின் சங்கமத்’தின் வெள்ளி விழா‘சலங்கை நர்த்தனாலயா நுண்கலை அமைப்புத் தொடர்ந்து வருடந்தோறும் ‘சலங்கைகளின் சங்கமம்’ நிகழ்ச்சியை முன்னெடுத்து 25 வருடங்களை பூர்த்திசெய்திருப்பது பாராட்டுக்குரிய விடயம். கணபதி வந்தனம், கவித்துவம், கீர்த்தனம், நவீன வடிவில் அமைந்த வித்தியாசமான  பூ நடனம், கிருஷ்ண பஜனை, செம்பு நடனம், குறத்தி நடனம், சிவஸ்துதி நடனம், தில்லானா என நாட்டியத்தின் பல்வேறு வடிவங்களை இந்த மேடையில் நடன ஆசிரியர்கள், அவர்களின்; மாணவர்களென தொடர்ச்சியாக முன்னெடுப்பதை சிறந்த ஒரு நாட்டியக் கலையின் வளர்ச்சியாக என்னால் அவதானிக்க முடிகின்றது’ என கீழைத்தேச நுண்கலை அமைப்பின் தலைவியும் ( ழுநுடீடு), நாட்டியக் கோகிலவாணியுமான ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம் அவர்கள் லண்டன் வின்சன் சேர்ச்சில் மண்டபத்தில் இடம்பெற்ற  வெள்ளிவிழா நாட்டிய நிகழ்வின்போது தனது பிரதமவிருந்தினர் உரையில் தெரிவித்தார்.

அவர் மேலும் தனது பேசுகையில்; ‘நாட்டிய ராஜேஸ்வரி நர்த்தனம் பட்டம் பெற்ற ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜா நாட்டியத்தில் புதிய புதிய வடிவங்களைக் கையாண்டு மாணவர்களையும், பார்வையாளர்களையும் உற்சாகப்படுத்தி, நாட்டிய நாடங்களையும் இணைத்து புதியரசனையில் உட்படுத்திவிடுவது மகிழ்ச்சிக்;குரிய விடயம். அந்த வகையில் இன்றைய ‘பார்வதி பரியம்’ என்ற நாட்டிய நாடகத்தின் மூலம் புராணக்கதையுருவத்தை  கண்முன் நிறுத்திய கலைஞர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.  ‘மாயா’ நடனக்குழுவை பாங்களுரில் நடாத்தி வரும் பாங்களுர் நாட்டியக் கலைஞரான கே.சி. ருபேஷ் சிவனாகவும், ஜெயந்தி யோகராவின் அன்பு மகளான நாட்டிய ரூபினி சஸ்கியா யோகராஜா பார்வதியாகவும் இணைந்து வழங்கிய காட்சிகள் மிகவும் பாராட்டுக்குரிய காட்சிகளாக அமைந்திருந்தன. அவர்களுடன் இணைந்து பல்வேறு பாத்திர வடிவங்களை சலங்கைகளின் சங்கமம் நுண்கலை அமைப்பின் தலைவி நாட்டிய விசாரத் ஸ்ரீமதி ஜெயந்தி யோகராஜாவும், அந்த அமைப்பின் ஆரியர்கள் மாணவர்கள் என 30 இற்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் இணைந்து சிறப்பித்தமை புத்துணர்வு தரும் புதிய முயற்சி’ என மேலும் அவர் தெரிவித்தார்.

Continue Reading →

திருப்பூர் அரிமா விருதுகள் 2017 ; * ரூ 25,000 பரிசு

திருப்பூர் மத்திய அரிமா சங்கம்ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருது, மற்றும் பெண் எழுத்தாளர்களுக்கான ”சக்தி விருது” ஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் வெளிவந்த குறும்படங்கள்,…

Continue Reading →

இலங்கை: கவிதை குறித்த பொது வெளி உரையாடல்.( றியாஸ் குரானா வாசகர் வட்டம் )

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!புனைவு வடிவங்களின் பின்புலம் பற்றி பேசுதல்.2017_02_24 ( வெள்ளிக்கிழமை)
இடம் : கிண்ணியா பொது நூலக மண்டபம்.
நேரம் : பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பம்

♦ முன்னிலையும் தலைமையும்  றியாஸ் குரான
01. சிவகுமார் கவிதைகள் (மலேசியா )
♦உரையும் கருத்தாடலும்  ஜிஃப்ரி ஹாஸன் ( எழுத்தாளர், விமர்சகர் )

02 றியாஸ் குரான கவிதைகள்
♦ உரையும் கருத்தாடலும் ( இளம் எழுத்தாளர், கவிஞர் சாஜித் )

03 ஜமீல் கவிதைகள்
♦ உரையும் கருத்தாடலும் அம்ரிதா ஏயெம் ( எழுத்தாளர்,விமர்சகர் )

04 தேன்மொழி தாஸ் கவிதைகள்.
♦உரையும் கருத்தாடலும்  ஏ.நஸ்புள்ளாஹ்

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 218: சல்லிக்கட்டு பற்றிய சிந்தனைகள்.. ; கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) நூல் பற்றி..

சல்லிக்கட்டுக் காளை!கவிதா பதிப்பக வெளியீடாக 'தினமணி: கணையாழிக் கட்டுரைகள் (1995-2000)'சல்லிக்கட்டுத்தடையைத்தொடர்ந்து அண்மைக்காலமாகத் தமிழகத்தில் கிளர்ந்தெழுந்த மாணவர் போராட்டம் பலரது கவனத்தையும் தமிழர்களின் பாரம்பரியக் கலைகள் பற்றிய விடயங்கள் மீது திருப்பியிருக்கின்றது. ஓரினத்தின் அடையாளங்களில் ஒன்றான அம்சமொன்றின் மீதான ஒருபக்கச்சார்பான தடையென்பது அதுவும் மத்திய அரசின் தடையென்பது நாட்டின் ஒற்றுமைக்குக் குந்தகத்தையே விளைவிக்கும். சல்லிக்கட்டு விளையாட்டானது மிருக வதையென்றால் அதற்கான காரணங்களை விளக்கி, அதனைத்தடை செய்வதற்கான மக்களின் ஆதரவைப்பெற முயல வேண்டும். அதன் பின்னரே , அதற்கான ஆதரவு கிடைத்தால் மட்டுமே அதனைத்தடை செய்ய வேண்டும்.  இன்னுமொரு முக்கியமான விடயம் என்னவென்றால்..: சல்லிக்கட்டு என்பது மிருக வதையென்று மட்டும் கூறி விட முடியாது மனித வதையும் கூடத்தான். இவ்விளையாட்டில் மாடும் உயிரிழக்கலாம். அதனை அடக்க முயலும் மனிதரும் உயிரிழக்கலாம். அல்லது மாடும் படு காயமடையலாம். மனிதரும் படு காயமடையலாம். இந்த ஒப்பீட்டின் அடிப்படையில் காளையை அடக்கப்புறப்படும் காளையர்கள் இவ்விளையாட்டில் தாம் எதிர்நோக்கும் வெற்றி, தோல்விகளை, அபாயங்களை உணர்ந்தே இறங்குகின்றார்கள். ஆனால் காளைகள் (எருதுகள் அல்லது காளைகள்) அவ்விதம் உணர்ந்தே இறங்குகின்றனவா என்பதை ஒருபோதுமே உணர முடியாது. ஆனால் அவை ஆக்ரோசமாகத் தம்மை எதிர்ப்போர் மீது பாய்வதைப்பார்க்கும்போது அவையும் இந்த விளையாட்டில் தீவிரமாகத் தம்மை ஈடுபடுத்துக்கொள்கின்றன என்பதை மட்டும் உணரலாம்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 217 : ‘மகுடம்’ இதழின் கனடாச்சிறப்பிதழ். பற்றி……

'மகுடம்' இதழின் கனடாச்சிறப்பிதழ்‘மகுடம் (கனடாச்சிறப்பிதழ்)’ எழுத்தாளர் களப்பூரான் தங்கா அவர்கள் மூலம் கிடைத்தது. வி.மைக்கல் கொலின் அவர்களை ஆசிரியராகக் கொண்டு , இலங்கையின் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியாகும் கலை, இலக்கியச் சிற்றிதழான ‘மகுடம்’ இதழின் ஏப்ரல் – டிசம்பர் 2016 இதழ் கனடாச்சிறப்பிதழாக  கவிதைகள், சிறுகதைகள், மற்றும் கட்டுரைகளை உள்ளடக்கி வெளியாகியுள்ளது. சிறப்பிதழினை இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை. வாசித்ததும் விரிவாக என் கருத்துகளைப் பதிவிடுவேன். இதுவரையில் வாசித்த ஆக்கங்கள் பற்றிய கருத்துகளை மட்டும் இங்கு குறிப்பிடுவேன்.

கவிதைகளைப் பிரதீபா , தான்யா, இரா.குணசீலன், களப்பூரான் தங்கா, மாவலி மைந்தன் சி.சண்முகராசா, வல்வைக் கமல், முரளிதரன், த.அகிலன், அமரர் நா.ஜெயபாலன், எஸ்.லிங்கேஸ்வரன் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். மகனது பிறப்பு பற்றிய அனுபவம் தன்னைக் கவிஞனாக்கிய அனுபவத்தை இரா.குணசீலனின் ‘வயிற்றறுத்து வரும் வம்சங்களுக்காக..’ கவிதை வெளிப்படுத்துகிறது. வல்வைக் கமலின் ‘காணாமல் போனவர்’ கவிதை யுத்தம் முடிவடைந்து ஆண்டுகள் ஏழினைக் கடந்த நிலையிலும் , காணாமல் போனவர் இன்னும் திரும்பாத நிலையினை எடுத்துரைத்து நீதி கேட்கின்றது. சர்வதேச மனிட உரிமை அமைப்புகளிடமெல்லாம் முறையிட்டும், இதுவரை எதுவுமே நடக்கவில்லை. நீதி இன்னும் காணாமல் போய்த்தானுள்ளது என்பதை எடுத்துரைக்கும் கவிதை.

எஸ். லிங்கேஸ்வரனின் ‘எறும்புகள்’ கவிதை வானிலை அறிக்கை எதுவுமேயற்ற சூழலில் எறும்புகள் எவ்விதம் மழை வரப்போவதை அறிந்து ஒளிந்து கொண்டன என வியக்கின்றது. இவ்வகையான அனுபவங்கள் அவ்வப்போது அனைவருக்கும் ஏற்படுபவைதாம். சுனாமி ஏற்பட்ட சூழலில் மானுடர் அழிந்த அளவில் மிருகங்கள் அழியவில்லையென்றும், அவை சுனாமி வரப்போவதை உள்ளுணர்வால் அறிந்து , மேட்டு நிலங்களை நாடிச்சென்று தப்பி விட்டன என்றும் கூறக்கேட்டிருக்கின்றேன். அதனையே கவிதை நினைவூட்டியது. சாதாரண மானுட அனுபவமொன்று இங்கே கவிதையாகியிருக்கின்றது. இனிக்கின்றது.

Continue Reading →

தமிழர்கள் பெருமைப்படத்தக்க ‘நூலகம்’!

எண்ணிம நூலகச் (Noolaham Digital Library)செயற்பாடுகளில் ஆரம்பத்தில் செயற்பட்டுவந்த நூலக நிறுவனமானது இன்று மேலும் பல துறைகளில் குறிப்பாக ஆவணப்படுத்தல் , ஆராய்ச்சி அடிப்படையிலான ஆவணப்படுத்தல் துறைகளில்…

Continue Reading →