” மணிவிழா நாயகர் திருநந்தகுமார் ” அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஸ்தாபகர்! அவுஸ்திரேலியாவில் தமிழ்க்கல்விப்பணியில் முன்னுதாரணமாகத்திகழும் அயராத செயற்பாட்டாளர்!

திருநந்தகுமார்ஒவ்வொருவருக்கும் கனவுகள் வருவது இயல்பானது. மனதில் தங்கிவிடும் அல்லது நீண்டகாலம் நினைவிலிருந்து மறைந்துவிடும் கனவுகளையும் கடந்து வந்திருப்போம். இளைய தலைமுறையினரைப்பார்த்து பாரத ரத்னா அப்துல்காலம், ” கனவு காணுங்கள்” எனச்சொன்னார். அதன் அர்த்தம் தொடர்ந்து உறங்கவும் என்பதல்ல. சிறுபராயத்தில் பாடசாலைகளில் குடும்பத்தில் எதிர்காலத்தின் என்னவாக வரப்போகிறாய்…? என்ற பொதுவான ஒரு கேள்வியைக்கேட்பார்கள். ஒவ்வொருவரும் தமது கனவுகளைத்தான் சொல்வார்கள். ஆசிரியரோ தனது அபிமான மாணவர் இப்படித்தான் வரவேண்டும் என்று கனவுகாண்பார். பெற்றவர்கள் தமது பிள்ளை இவ்வாறுதான் எதிர்காலத்தில் இருக்கவேண்டும் என கனவு காண்பர். கனவுகளைத்தொலைத்தவர்கள், கனவுகளை விதைத்தவர்கள், கனவுகளிலேயே வாழ்பவர்கள் என பலதரப்பட்டவர்கள் பற்றியும் எழுதியிருப்போம், பேசியிருப்போம்.

எங்கள் மத்தியில் கலை, இலக்கிய ஆர்வலராகவும், பட்டிமன்ற பேச்சாளராக மேடைகளை கலக்குபவராகவும், புகலிடத்தில் எமது இளம் தலைமுறைக்கு தமிழ்க்கல்வியை போதிப்பதில் அர்ப்பணிப்புள்ள தொண்டராகவும் விளங்கும் எமது இனிய நண்பர் திருநந்த குமார் அவர்கள் சிறுபராயத்தில் எத்தகைய கனவுகளை கண்டார்..? என்பது எமக்குத்தெரியாது. அவரது பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர் சமுதாயத்தில் எந்த நிலைக்கு வரவேண்டும் என்று எத்தகைய கனவுகளை கண்டனர்…? என்பதும் தெரியாது. ஆனால், பாடசாலைப்பருவத்தில் திருநந்தகுமார், பெற்றோர், ஆசிரியர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களினால், ” இவர் எதிர்காலத்தில் ஒரு இராணுவ உயர் அதிகாரியாக அல்லது பொலிஸ் துறையில் ஒரு உயர்ந்த பதவியை வகிப்பவராக வரக்கூடும் என்றுதான் எண்ணியிருப்பார்கள் எனச் சொல்லத்தோன்றுகிறது. ” விளையும் பயிரை முளையிலே தெரியும்” என்று முன்னோர்களும் சொல்லிவிட்டுச்சென்றமையால் இந்தக்கனவுகள் பல்வேறு பரிமாணங்களை பெறுகின்றன.

தற்பொழுது அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் எமது நண்பர் திருநந்தகுமார் அவர்களுக்கு தற்பொழுது மணிவிழாக்காலம் என அறிந்தமையால், ஆளுமைகள் பற்றிய எனது தொடர்பத்திகளில் அவர் பற்றியும் எனது அவதானங்களையும் பதிவுசெய்யவிரும்பினேன். இலங்கையில் அவர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலப்பகுதியிலிருந்தே அவருடனான எனது நட்புறவு எந்த விக்கினமும் இல்லாமல் நீடிக்கிறது.

Continue Reading →

முதுபெரும் பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் அமரரானார்

ஈழத்தின் முதுபெரும் பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் தனது 87ஆவது அகவையில்; நேற்று 15.11.2017 அன்று மட்டக்களப்பில் காலமானார். தமது இளவயதில் வீரகேசரி நாளிதழில் ஒப்புநோக்குநராக இணைந்து கொண்ட அவர் பின்னர் அங்கு உதவி ஆசிரியராகிப் பின்னர் சிரேஷ்ட உதவி ஆசிரியராகப் பதவி உயர்வுபெற்று பணிபுரிந்தார். 1958இல் ’ஈழநாடு” பத்திரிகை நாளிதழாக வெளியானபோது, அதன் செய்தி ஆசிரியராக இணைந்த கோபாலரத்தினம் 1980களின் முற்பகுதிவரை அதன் ஆசிரியபீடத்தின் பிரதானியாக இயங்கிவந்தார். 1985இல் ‘ஈழமுரசு” பத்திரிகையின் ஆசிரியராகப் பணியை ஏற்று அப்பத்திரிகையின் துரித வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தார். அவ்வேளையில்; 1987இல் இந்திய அமைதிப்படை இலங்கைக்குள் புகுந்து ஈழத்தின் பத்திரிகைச் சுதந்திரத்தில் கைவைத்தபோது கைது செய்யப்பட்டு பல மாதங்கள் இந்திய அமைதிப் படைகளின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பின்னர் வெளியே வந்ததும் ‘ஈழமண்ணில் ஒரு இந்தியச் சிறை’ என்ற தலைப்பில் தனது அனுபவத்தினை தொடராக தமிழகத்தின் ‘ஜுனியர் விகடன்” பத்திரிகையில் இடம்பெறச்செய்து, இந்திய அமைதிப்படையின் கோரமுகத்தை வெளிப்படுத்தினார். இத்தொடர் பின்னர் ‘ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை” என்ற மூலத் தலைப்பிலேயே மட்டக்களப்பு றுழசடன எழiஉந Pரடிடiஉயவழைளெஇ வெளியீடாக ஆகஸ்ட் 2000 இல் நூலுருவாக வெளிவந்தது. இந்நூலில் இந்திய அமைதிப்படையினரால் தான் கைது செய்யப்பட்டதன் பின்னரான இரண்டு மாத சிறை அனுபவம் விரிவாகப் பதிவுசெய்திருந்தார். கைது செய்யப்பட்டதிலிருந்து விடுதலையாகும் வரை நடந்த நிகழ்வுகள், சிறையில் சந்தித்தவர்கள், அவர்களிடமிருந்து கேட்டறிந்தவை என அனைத்தும் பதிவுக்குள்ளாகியிருந்தன. 

இந்தியப்படை 1991இல் இலங்கையிலிருந்து புறப்பட்ட பின்னர், ‘ஈழநாதம்” நமது ஈழநாடு” ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றிய கோபாலரத்தினம் கொழும்பில் ‘சுடரொளி” பத்திரிகையின் ஆசிரிய பீடத்திலும் சிறிது காலம் தனது ஊடகவியல் பணியைத்; தொடர்ந்தார். பின்னர் மட்டக்களப்புக்குச் சென்று அங்கு ‘தினக்கதிர்” பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

தெகிவளை, நிகரி வெளியீட்டாளர்களினால் மே 2003இல் வெளியிடப்பட்ட ‘அந்த ஒரு உயிர்தானா உயிர்” என்ற அவரது நூல், மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் தினக்கதிர் நாளேட்டில் பிரதம ஆசிரியராக இருந்த வேளையில் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கங்களையே பெருமளவில் உள்ளடக்கியதாக இருந்தது. இந்நூலில் யாழ்ப்பாணத்து ‘ஈழநாதம்” பத்திரிகையில் வெளிவந்த இரண்டு ஆக்கங்களும் சேர்க்கப்பட்டிருந்தன. இவரது ஆசிரியத் தலையங்கங்கள் அனைத்தும் சமகால ஈழத்து அரசியல் நிலையை வைத்து எழுதப்பட்டவையே. தமிழ்மக்களின் மன எழுச்சியையும் இவை துல்லியமாகப் பிரதிபலிப்பனவாக அமைந்துள்ளன.

ஈழத்தில் அனுபவம்மிக்க பத்திரிகையாளராகத் திகழும் எஸ்.எம்.ஜி. அவர்கள் வீரகேசரியில் 7 ஆண்டுகளும், ஈழநாட்டில் 21 ஆண்டுகளும் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவத்தை முன்வைத்து, ‘பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு” என்றதொரு நூலையும்  நவம்பர் 2003 இல் யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பக வெளியீடாக வெளியிட்டிருந்தார். ஈழத்தின் பத்திரிகையாளராகத் தான் வாழ்ந்துபெற்ற அனுபவங்களை இந்நூலில் சுவையாக விபரித்திருந்தார்.

Continue Reading →