பத்தாவது ஆண்டில் தமிழ் ஸ்டுடியோ…

நிகழ்வுகள் , அறிவித்தல்கள்நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ 23-11-2017 அன்று அதாவது நாளை 10வதுஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நாளில் தமிழ் ஸ்டுடியோ கடந்த வந்த பாதை உங்களுக்காக…

இன்றுவரை
* 2568 நிகழ்ச்சிகள்
* 3112 குறும்படங்கள் திரையிடல்
* 214 ஆவணப்படங்கள் திரையிடல்
* 355 உலகப் படங்கள் திரையிடல்
* 315 இந்தியாவின் ஆக சிறந்த திரைப்படங்கள் திரையிடல்
* 10,00,00 உறுப்பினர்கள்
* லட்சக்கணக்கான பார்வையாளர்கள் (தமிழ் ஸ்டுடியோ & பேசாமொழி&பியூர் சினிமா இணையத்தளத்திற்கு)
* 600 வெள்ளித்திரை படைப்பாளிகளுடன் கலந்துரையாடல்
* 24 மாவட்டங்களில் குறும்பட / ஆவணப்படங்கள் திரையிடல்
* 16 பிரம்மாண்டமான பயிற்சிப் பட்டறைகள் (புகைப்பட பயிற்சி, சிறுகதை பயிற்சி, இயக்குனர் மிஷ்கின் பயிற்சிப் பட்டறை உட்பட)
* இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்
* தமிழ் சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டம்
* தமிழில் மாற்று சினிமாவுக்கான இணைய இதழ் (http://thamizhstudio.com/Pesaamozhi/index.html)
* சினிமா தொடர்பான முக்கியமான நூல்களை தமிழில் மொழியாக்கம் செய்துக் கொண்டிருப்பது
* நூறு தமிழ்ப்படங்களை திரையிடுவது
* நூறு தமிழ்த் திரைப்படக் கலைஞர்களுடன் கலந்துரையாடல்

Continue Reading →

இலக்கியங்களில் உயிரின நடத்தையை மாந்தரோடு ஒப்புமைப்படுத்தல் (நற்றிணையை முன்வைத்து)

இலக்கியங்களில் உயிரின நடத்தையை மாந்தரோடு ஒப்புமைப்படுத்தல் (நற்றிணையை முன்வைத்து)விலங்குகள் என்பதற்குப் பொதுவாக ‘நான்கு கால்களைக் கொண்ட பாலூட்டி வகைகளைச் சார்ந்தன@ பலவகை உணவு உண்ணும் பழக்கங்களைக் கொண்டன@ இனப்பெருக்கத்துக்காக குட்டிகளை ஈன்று கொள்வன’ என்று பொதுமையான ஒரு வரையறைக் கொடுக்கலாம். நற்றிணையில் ஆடு, எருது, எருமை, கரடி, குதிரை, குரங்கு, சிங்கம், புலி, செந்நாய், பசு, பன்றி, மான், யானை உள்ளிட்ட 27 வகை விலங்கினங்கள் 221 பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆய்வுப் பொருண்மை, அதிகப்பாடல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விலங்கினம் என்ற இரண்டின் அடிப்படையில் யானை, புலி, மந்தி, மான் செந்நாய் ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்ட பாடல்கள் மட்டும் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவ்விலங்கினங்களின் செயல்கள் மனிதச் செயல்களோடு எவ்வாறு தொடர்புபடுத்தப்படுகின்றன என்பதை உளவியல் நோக்கில் ஆராய முற்படுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

யானை
நற்றிணையில் யானைப்பற்றிய பாடல்கள் 70 ஆகும். களிறு, பிடி, வேழம், கோட்டுமா, ஒருத்தல், நன்மான் என்ற சொல்லாடலில் இவை குறிக்கப்படுகின்றன. விலங்குகளைப் பற்றிய செய்திகளில் யானைகளைப் பற்றியே செய்திகளே மிகுதியாகக் காணப்படுகின்றன. யானையின் செயல்கள் பெரும்பாலும் தலைவியுடன் ஒப்புமைப்படுத்திக் கூறுவதை நற்றிணையில் அறிய முடிகிறது. களிறு பிரிந்ததனால் பிடியானது தன் குட்டியுடன் வருந்தியிருக்கின்ற செயலினைக் கூறி, அதுபோல் தலைவன் பிரிந்திருப்பதனால் தலைவியும் வருந்துகிறாள் என்று அதோடு தொடர்;புப்படுத்திக் கூறுகின்ற முறையினை நற்றிணையில் காண முடிகிறது (நற்.85,114). இவை பெரும்பாலும் உவமையாகக் கூறப்படுகின்றன. யானையது வருத்தத்தை பின்வரும் பாடலால் அறியலாம்.

“பெருங்களிறு உழுவை அட்டென, இரும்பிடி
உயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது,
நெய்தற் பாசடை புரையும் அம்செவிப்          
பைதலம் குழவி தழீஇ, ஒய்யென
அரும்புண் உறுநரின் வருந்தி வைகும்  (நற்.47)

புலியை அஞ்சிய பிடியானை, அதனை உணராத தன் இளங்கன்றைப் பேணி நிற்றலைப் போலப் பிரிவால் தலைவிக்கு வரும் துயரத்திற்கு அஞ்சிய தோழி, அதனை அறியாதே களவு உறவில் திளைக்கும் தலைவியைப் பேணிக் காத்து நிற்கின்றாள் (நற்.85).

Continue Reading →

எழுத்து ஊடகங்களில் பெண் உடல்

 -முனைவர். த. விஜயலட்சுமி, துறைத்தலைவர், தமிழ்த்துறை, கேரளப்பல்கலைக்கழகம், காரியவட்டம், திருவனந்தபுரம்-695 581-பெண்ணியம் வேரூன்றிய இக்காலகட்டத்தில் பெண் எழுத்து, பெண் மொழி, பெண் உடல் மொழி போன்ற சொல்லாடல்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. இச்சொற்கள் இவற்றின் சொற்பொருளுக்கு அப்பால் சென்று பொருள் தந்து நிற்கின்றன. இக்கட்டுரையின் தலைப்பில் கூறப்பட்டுள்ள ‘பெண் உடல்’ என்ற சொல் அதுபோன்ற சொல்லைக் கடந்த பொருளில் இங்கு பயன்படுத்தப்படவில்லை. பௌதீகமான பெண்ணின் உடல் என்ற சாதாரணமான பொருளில்தான் கையாளப்படுகிறது. காலகாலமாக சமூகம் பெண்ணின் உடலை எவ்வாறு கண்டது என்பதையும், இன்றைய பெண்கள் பெண் உடலை எவ்வாறு காண்கிறார்கள் என்பதையும் எழுத்து ஊடகங்கள் வழி இக்கட்டுரை விளக்க முனைகிறது.

மனித உடல் பல பரிணாம வளர்ச்சிக்குப் பின் இன்றைய நிலையை அடைந்தது என்பது நாம் அறிந்ததே. வலிமையான இருகைகள் தான் மனிதனை விலங்குகளில் இருந்து மாறுபடுத்தி உழைக்கவும் செயல்களைச் செயல்படுத்தவும் உதவின என்பர். உடல் உழைப்பில் உணவைச் சேகரித்த காலகட்டத்தில் ஆண் உடல், பெண் உடல் என்று வேற்றுமைகள் இல்லாமல் இருந்தன. காமம் கூட கட்டுப்பாடற்ற ஒரு உடல் தேவையாகவும், ஆண், பெண் உடல் உறவு ஒரு இனக் கவர்ச்சியாக மட்டுமே இருந்தன. காம இச்சையை நிறைவு செய்யும் போது விபத்துக்களாக குழந்தைகள் உருவாயின. தாயின் பாதுகாப்பில் அவை வளர்ந்தன. விலங்குகளின் வாழ்க்கைக்கும் மனித வாழ்க்கைக்கும் இக்காரியங்களில் பெரும் வேறுபாடு ஒன்றும் இல்லை.

மனிதம் காமத்தை இனக்கவர்ச்சிக்கு அப்பால் ஒரு சுகமாக பொழுது போக்காக, ஒரு போதையாக என்று காணத் தொடங்கியதோ அன்றே மனித உடல் ஆண் உடல், பெண் உடல் என்ற வேறுபாட்டைப் பெற்றது. போதைப் பொருளாக காமத்தை கொள்ளும் ஒரே உயிரினம் மனிதம்தான். பிற அனைத்து உயிரினங்களும் காமம் ஒரு இனக்கவர்ச்சி, உடலின் தேவை, இனப்பெருக்கமுறை அவ்வளவிதான். காம இச்சை ஒரு போதையாக வெறியாக மாறிய போது, பெண் உடல் அதற்கான ஒரு கருவியாக மாறியது.

“கண்டு கேட்டு உற்று உண்டு உயிர்த்தல்
ஒண்டொடி மாட்டே உள”

என ஐம்புலனையும் நிறைவு செய்யும் ஒரே பொருளாக பென் உடல் சமூகத்தால் மதிப்பிடப்பட்டது. இதன் அடிப்படையில் பெண் ‘சுயம் இழக்கப்பட்டு’ பெண் உடல் என்ற பௌதீஇகப் பொருள் முன்னிலைப்படுத்தப்பட்டது.

பெண் உடல் வர்ணனைகள்
சங்க காலம் முதல் நமக்குக் கிடைக்கும் எழுத்திலக்கியங்களைக் கூர்ந்து கவனித்தால் அதில் பெண் உடல், பெண் உடல் உறுப்புகள் எவ்வாறு வர்ணிக்கப்பட்டுள்ளன என்று காணலாம். இதற்கு மாறாக ஆணின் புயம் அல்லது தோள் மட்டுமே வர்ணிக்கப்பட்டுள்ளன. இதற்கு இரு வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இவ்விலக்கியங்கள் ஆண்களால் படைக்கப்பட்டன என்பதும் ஆண்களால் ரசிக்கப்பட்டன என்பதுமாகும் அவை. சமீபத்தில் ஒருவர் சங்க இலக்கிய உடல் வர்ணனைகள் ஒரு வகையான பாலியல் கல்வி என்று தனது மேதாவித் தனத்தை நிறுவியுள்ளார். உண்மையில் இக்காரணங்களுக்கும் இலக்க்கிய பெண் உடல் வருணனைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பது திண்ணம்.

Continue Reading →