ஆய்வு: நன்னெறி காட்டும் சமுதாய நெறிகள்

- சு.ஜெனிபர்,  முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, பாரதிதாசன் பல்கலைக் கழகம்,  திருச்சி -24 -முன்னுரை
இடைக்கால நீதி இலக்கியங்களில் ஒன்று நன்னெறி.இந்நூலை இயற்றியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்.எளிய இனிய நன்மை தரும் 40 வெண்பாக்களால் நன்னெறிகளைக் கொண்ட நூலை இயற்றியவர்.இவரின் காலம் 17 ஆம் நூற்றாண்டு ஆகும்.இவர் காஞ்சி புரத்தில் வாழ்ந்து வந்த லிங்காயதர் வகுப்பைச் சார்ந்தவர்.தம் தந்தையின் ஆசிரியரான குருதேவரிடம் திருவண்ணாமலையில் அவர் இளமைக் கல்வியைப் பயின்றார்.தக்கோர் பலரிடம் இலக்கணம் கற்றவர்.இறுதியில் நல்லாற்றூர் எனும் பதியில் வாழ்ந்திருந்த போது அவர் தம் 32 ஆம் வயதில் சிவனடி சேர்ந்தார்.அந்த நல்லாற்றுரே பின்னர் துறைமங்கலம் என்று பெயர் பெற்று விளங்கிய காரணத்தால் அவர் துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் என வழங்கப்படுகிறார்.இவர் பலப்பல நூல்களை இயற்றியுள்ளார்.அவற்றுள் புகழ்மிக்கவை பிரபுலிங்கலீலை,சித்தாந்த சிகாமணி, நால்வர் நான்மணிமாலை,சீகாளத்திப்புராணத்தின்ஒருபகுதி,சோணசைலமாலை,திருச்செந்திலந்தாதி,திருவெங்கைக் கலம்பகம்,வேதாந்த சூடாமணி,திருக் கூவப்புராணம் முதலியனவாகும.; இவர் பல நூல்கள் இயற்றியிருப்பினும் நன்னெறியில் இடம்பெறும் சமுதாய நெறிகளை அறிய முற்படுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சமுதாயம் என்பதன் பொருள்
சமுதாயம் என்பதற்கு கௌரா தமிழ் அகராதி கூட்டம், சங்கம், பொதுவானது, மக்களின் திரள், பொருளின் திரள்,உடன்படிக்கை என்று பல்வேறு பொருள் விளக்கமளிக்கிறது.(ப.331)

அன்புடைமை
வள்ளுவர் அன்புடைமை என்ற அதிகாரத்தை தனி அதிகாரமாக வகுத்துள்ளார்.கிறித்துவ மதமும் உன்னை நீ அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய் என்கிறது.இவ்வுலகில் அன்பு இல்லாதவனுக்கு இடம்,பொருள்,ஏவல் முதலான வசதிகள் இருந்தும் அவனுக்கு என்ன பயன் உண்டாக்கும் என்கிறது இந்நூல்.இதனை,

இல்லானுக்கு அன்புஇங்கு இடம்பொருள் ஏவல்மற்று
எல்லாம் இருந்தும் அவற்கு என் செய்யும் – நல்லாய்   
மொழியிலார்க்கு ஏது முதுநூல் தெரியும்
விழியிலார்க்கு ஏது விளக்கு (நன்.15)

என்ற பாடலானது அன்புடையவராக இருக்க வேண்டும் என்ற கருத்தைப் புலப்படுகிறது.

இன்சொல்கூறல்
உலகத்தில் வாழும் எல்லா மக்களும் இனிய சொற்களையே பேச வேண்டும்.இன் சொல் பேசுவதே சிறந்தது .இனியவை கூறல் என்ற அதிகாரத்தை 10 ஆவது அதிகாரமாக வள்ளுவர் வகுத்திருப்பதற்கு காரணம் சமுதாயத்தில் வாழ்கின்ற மக்கள் இனிமையில்லாத சொற்களைப் பேசாமல் இருப்பதற்காகவே.இனிமையான சொல்லை கனிக்கும், இனிமையில்லாத சொல்லை காய்க்கும,; ஒப்பிட்டுக் கூறியிருப்பதை,

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று (100)

என்ற குறளின் வழி தெளிவுத்துள்ளார்.இக்கருத்துக்களுக்கு ஏற்ப நன்னெறியும் இனியசொற்களையே பேச வேண்டும் என்று கூறுகிறது.இதனை,

இன்சொலால் அன்றி இருநீர் வியன்உலகம்
வன்சொல் என்றும் மகிழாதே –பொன்செய்
அதிர்வளையாய் பொங்காது அழல்கதிரால் தண்என்
கதிர்வரவால் பொங்கும் கடல்

Continue Reading →

கவிதை: தொப்புள் கொடியும் முக்கணாம் கயிறும்.

- தம்பா (நோர்வே) -

“வா மகனே வா
உன் வருகையே
எமக்கு சுக்கிர திசையாகும்.~

“வேண்டாம் பெற்றவரே வேண்டாம்,
ஒன்றுவிட்ட அகவையை
மூலதனமாக்கி மூச்சிரைக்க வைக்காதீர்.”

“கந்து வட்டியும் காணா வட்டியும்
குலைந்து போகுது.
போட்டதை எடுத்ததுமில்லை.
பல்மடங்காகி பெருகியதுமில்லை.
வா மகனே வா”

” உயிர் ஒன்றும் பணமல்ல
முதலீடு செய்வதற்கு,
உணர்வுகள் ஒன்றும் பொருளல்ல
விற்பனைக்கு வைப்பதற்கு,
மகிழ்ச்சி ஒன்றும் கணக்கல்ல
லாப நாட்டம் பார்ப்பதற்கு.”

“ஊருக்கும்  உலகுக்கும்
தனயனின் வளச்சியை
பறைச்சாற்றும் மகிழ்வறிவாயோ?”

“உதயத்தில் உதிர்ந்த
லச்சோபலட்ச கணங்களில்
என்வாழ்வும் என்மகிழ்வும்
அறிந்த கணமேதுமுண்டோ?

Continue Reading →