நீசிந்திச்செல்லும்கண்ணீருக்காய்.. இன்னமும்உயிர்த்திருக்கிறேன்.. கல்லறைக்குள்நான் mk2117345@gmail.com
1. குமாரபுரம் ரயில்வே ஸ்டேசன்!
கு.அழகிரிசாமியின்
குமாரபுரம்
ரயில்வே ஸ்டேசனுக்குக்
காவிய குலுங்கலோடு
வந்து நின்றது
இரயில் வண்டி.
பிரதம பேச்சாளர் உரை:
‘அரங்கும் கூத்தும்’ – திரு.ஞானம் லம்பேட்
சிறப்புபேச்சாளர்கள் உரை:
‘மட்டக்களப்புக் கலைகள்’ – கலாநிதி இ.பாலசுந்தரம்
‘முல்லைத்தீவுக் கூத்துக்கள்’ – கலாநிதி பார்வதி கந்தசாமி
ஐயந்தெளிதல் அரங்கு
“புத்தகம் புதிது” – திரு.என்.கே.மகாலிங்கம்
நாள்: 30-12-2017
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
Unit 7, 5633, Finch avenue East,
Scarborough,
M1B 5k9 (Dr. Lambotharan’s Clinic – Basement)
பேசா மொழி தமிழ் ஸ்டுடியோ: தமிழ் ஸ்டுடியோ புத்தாண்டு கொண்டாட்டம். 31-12-2017, ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணி முதல் இரவு 1 மணி வரை.
பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
நன்கொடை : 250 ரூபாய். (கட்டாயமில்லை)
காலை 10 மணி: திரைக்கதை பயிற்சி: அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர்: ஸ்வர்ணவேல்
12:30 – 1:30 வரை உணவு இடைவேளை
மதியம் 2 மணி: எழுத்தாளர் & பத்திரிகையாளர் சமஸுடன் கலந்துரையாடல்
மாலை 4 மணி: ஒளிப்பதிவு கலந்துரையாடல்: ‘தீரன்’ ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியனுடன் ஒளிப்பதிவு குறித்து அதன் தொழில்நுட்பம் குறித்து கலந்துரையாடல்
மாலை 6 மணி: சமீபத்தில் வெளியான “ஒரு கிடாயின் கருணை மனு” திரையிடல் மற்றும் இயக்குனர் சுரேஷ் சங்கையாவுடன் கலந்துரையாடல்
இரவு 10 மணி முதல் அதிகாலை 1 மணி வரை: திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, இலக்கியம் குறித்து கலந்துரையாடல்: இயக்குனர் மிஷ்கினுடன் புத்தாண்டு கொண்டாட்டம்.
30-12-2017, சனிக்கிழமை, மாலை 5.30 மணிக்கு. பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
நண்பர்களே தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக தமிழ் ஸ்டுடியோ பல்வேறு துறை சார்ந்த கலைஞர்களுடன் கலந்துரையாடலை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் சனிக்கிழமை சென்னை சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் ICAF அமைப்பின் பொது செயலாளர் தங்கராஜ் அவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இந்தியாவிலேயே ஒரு பிலிம் கிளப் நடத்தும் ஒரே சர்வதேச திரைப்பட விழா சென்னை திரைப்பட விழாதான். தொடர்ந்து பதினைந்து ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் இந்த திரைப்பட விழா நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு விமர்சனங்களும் இந்த அமைப்பின் வைக்கபப்டுகிறது. சென்னை சர்வதேச திரைப்பட விழா தமிழ் சினிமாவிற்கு பங்காற்றியமை, சினிமா விழாக்களின் முக்கியத்துவம், விருதுகளின் அரசியல் உள்ளிட்டவை குறித்து தங்கராஜுடன் கலந்துரையாடலும். ஒரு மாபெரும் திரைப்பட விழாவை ஒரு வாரத்திற்கு முன்னர்தான் நடத்தி முடித்திருக்கிறார்கள். திரளாக கலந்துக்கொண்டு அவர்களுக்கு நன்றி சொல்வதோடு, உங்கள் கேள்விகளையும் முன்வைக்கலாம். அவசியம் வாருங்கள்.
முன்னுரை
சங்க காலச் சமூக மக்கள் தொடக்கத்தில் இனக்குழுச் சமூகமாக வாழ்ந்தனர். தங்களுக்கான ஐந்திணைப் பகுப்பில் அவரவர்களுக்கான வாழ்வுச் சூழலை மேற்கொண்டனர். ஆனால் வேளாண்மையின் செழிப்பும், வாணிபத்தின் வளர்ச்சியும் மேம்பட மெல்ல நிலவுடைமைச் சமூகம் தோற்றம் பெற்றது. இதன் விளைவாக அரசர்களும் நிலக்கிழார்களும் உருவாயினர். பெண்களையும் நிலத்தையும் உடைமைப் பொருள்களாகக் கருதினர். அதில் பெண் பண்பாட்டையும் குடும்ப அமைப்பையும் கட்டிக்காக்கும் பொறுப்புடையவளாக நியமிக்கப்பட்டாள்.
தமிழ்ச் சமூகம் அரசர்களும் நிலக்கிழார்களும் தலைமை ஏற்று வழி நடத்திய போதும் அடிமை முறையோ தீண்டாமை முறையோ வழக்கத்தில் இருந்ததாகத் தென்படவில்லை. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்ற நிலையிலேயே சமூக வாழ்வு சூழல் நிகழ்ந்ததை அறிய முடிகிறது. பேரரசர்களின் தோற்றத்திற்குப் பின்னரே போர்ச்சூழலில் பிறநாட்டின் வீரர்களை சிறைப்பிடித்தலும் பெண்ணைப் பொருளாக எண்ணி கொள்ளையிட்டு கொணர்தலும் நடந்தேறியது. இவ்வாறு கொள்ளையிட்டு கொணர்ந்தப் பெண்களே “கொண்டி மகளிர்” எனப்பட்டனர்.
ஆரியர்களின் நுழைவுக்கு பின்னர் இச்சூழல் தீவிரப்படுத்தப்பட்டது. தமிழக வரலாற்றில் இவர்களின் வருகை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. தமிழகச்சூழலில் பெண்கள் இரண்டாம் தரப்படுத்தப்பட்டதும் ஒதுக்கப்பட்டதும் இதன் பின் தான் அதிகரித்தது எனலாம்.
“கி.பி.3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவச் சாசனம் ஒன்றின்படி நிலத்தோடு அதனைச் சேர்ந்த ஆட்களும் தானமாக அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது”என்று ‘இந்தியாவில் வரலாறு’ எனும் நூல் (மாஸ்கோ 1979-பக்:194) கூறும் குறிப்பும் கவனிக்கத் தக்கது.
இன்னும் குறிப்பாக அடுத்த நாட்டுக் கூட்டத்தினருடன் சண்டையிட்டு, வெற்றி கொண்ட பிறகு அவர்தம் ஆடு, மாடு செல்வங்களைக் கொள்ளையடித்து வந்ததோடு அவர்தம் வீட்டு – நாட்டுப் பெண்களையும் அடிமைப் பெண்களாகப் பிடித்து வந்த செய்திகளும் வெகு சில (வென்றவர் பெருமை கூறும்) இலக்கியங்களில் காணக் கிடைக்கிறது.
பொன்னம்பி அவனிடம் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தான்.”நீ (அரசியல்)அமைப்பிலே வேலை செய்யாமல் வெளியிலே போய் பயிற்சி எடுக்கணும் என்று அவசரப்படுகிறாய்.உனக்குத் தெரியுமா, இங்கே(தளத்திலே) வேலை செய்வது தான் முக்கியமானது,ஒரு காலத்தில் உணர்வாய்!”என்றான். இதையெல்லாம் நின்று நிதானிக்கும் நிலையில் அவன் இருக்கவில்லை..
.மனோவும் ,சதிஸும் …கிராமத்திலிருந்து பயிற்சிற்குச் சென்ற பிறகு இவனுக்கு மன அலைகள் அடிப்பது அதிகமாகியிருந்தன.
.மனோ,அவனுடன் சிறு வயதிலிருந்து படித்த நல்ல நண்பன்.சதாசிவம் வாத்தியாரின் பல பிள்ளைகளில் ஒருத்தன். ரமேஸினுடைய அம்மாவும் அங்கே படிப்பிக்கிற சந்திரா ஆசிரியை தான். சதிஸ் கிராமத்தில் இருந்து வட்டுக்கோட்டையில் படித்திருக்கிறவன். மனோவிற்கு நண்பன். எனவே இவனுக்கும் பழக்கம் . பிறகு, வேற வேற பள்ளிக்கூடங்களிற்கு படிக்கப் போய் ….இப்ப காலமும் நிறைய மாறி… விட்டிருக்கிறது சதீஸ் பட்டப்படிப்புக்கு தெரிவாகி பல்கலைக்கழகத்தில் . படிக்கிறவன்.
முதல் நாள் அமைப்புத் தோழர்களான பொன்னம்பியும், ரகுவும் வந்திருந்தவர்களின் புனை பெயரின் கீழ் (விபரங்களை) சிறு குறிப்புக்களை திரட்டிக் கொண்டிருந்தார்கள். பொன்னம்பிக்கு இவனை ஏனோ பிடித்திருந்தது. நண்பனாகி …இந்த கேள்வியை எழுப்புகிறான்.
இவனுக்கு எப்படி ஒரு விடுதலை அமைப்பு இயங்கிறது என்பதே தெரியாதவன். ‘போராளிகள்’ ஆயுதம் தூக்கியவர்கள் எண்ணமே அவன் மனதில் இருக்கிறது. எனவே, விடுதலையைப்பற்றி தெரிவதற்காகவும் இங்கே வீட்டை விட்டு ஓடி வந்திருக்கிறான். இப்ப, விடுதலை விசயங்கள் தெரியாத மாதிரி….,அப்ப, படிக்கிற காலத்திலே விளையாட்டின் அவசியமும் அவனுக்கு தெரியாமல் இருந்திருக்கிறது. கிராமப் பள்ளிக்கூடம் என்பதால் மாற்றாந் தாயின் பிள்ளைகள் போன்ற புறக்கணிப்புக்கள் அதிகம், ஆசிரியர்கள் பற்றாக்குறைகள், சுகாதாரம்,கணிதம், விஞ்ஞானம்… என எடுக்கிறவரான லிங்கம் மாஸ்ரர் தமிழ்ப்பாடம் எடுக்கிறார் (இவர் பத்திரிகையில் எழுதுறவர் என்பதால்,அதிபர், ஒருமாதிரி அவரை பப்பாவில் ஏற்றி, மடக்கிப் பேசி… சாதித்து விட்டார்). உடற் பயிற்சிக்கென ஒரு ஆசிரியர் இல்லை. எனவே, அங்கே மற்றைய கிராமப் பள்ளிக்கூடங்களைப் போல கால்பந்து,கிரிகெட்(கொக் போலில் வேறு விளையாட வேண்டும்,நினைத்துப் பார்க்கவே வேண்டாம்),எல்லே.. என …விளையாட்டுக் குழுக்கள் (டீம்கள்)ஒன்றிரண்டு கூட எழவில்லை. இருந்திருந்தால் மாணவர்கள் அதில் பங்கு பற்றியிருப்பார்கள். இவற்றை விட சாரணர்,பொலிஸ், ஆமிக் கடேஸ் என அமைப்புகளும் இருக்கின்றன. கிராமங்கள் அவற்றைக் கனவில் தான் பார்க்க வேண்டும். இவற்றை விட இலக்கியக்குழுக்கள் என கலை விழாக்களை நடத்துறவையும் இருக்கின்றன. நகரத்தினரை விட கிராமத்தவர்களில் கதைப்புத்தகங்கள் வாசிக்கிற பழக்கம் குறையுறதுக்கும் இதுவும் காரணம்.